அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைகளே 🥰 🥰
கிடைச்ச இடைவெளியில் கதை போட்டு இருக்கேன்.. அதனால் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே 💕💕
எல்லாவற்றையும் மறந்து கடந்துப் போன கசப்புகளை எல்லாம் துறந்து இருவரும் ஒருவரில் ஒருவர் உருகி கரைந்து கலந்துப் போனார்கள். காதல் கணவனின் மார்பில் துயில் கொண்டு இருந்த சங்கவைக்கு விழிப்பு தட்ட மெல்ல எழுந்துக் கொண்டாள். உடலில் மெல்லிய போர்வை மட்டுமே இருந்தது.
இரவு எழுந்து உடைமாற்ற செஞ்சன் அவளை அனுமதிக்கவே இல்லை. வெட்கத்துடன் தன் உடலை விட்டு நழுவிய போர்வையை இழுத்து மார்போடு அனைத்துக் கொண்டவள், எழ பார்க்க, அவளது அசைவில் கண் விழித்து விட்டான் செஞ்சன்.
“என்னடி அவசரம்... ஏன் எழுந்துக்கிட்ட... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன்” என்றவன் அவளை தன் மீது மீண்டும் இழுத்து போட்டுக் கொண்டான்.
“விடிஞ்சி போயிடுச்சுங்க...” என்று சிணுங்கினாள்.
“அதனால என்ன.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போய்க்கலாமே..”
“அத்தை கோயிலுக்கு போகலாம்னு சொன்னாங்க”
“சரி.. வா குளிச்சுட்டு கிளம்புவோம்” என்று அவன் அசால்ட்டாக சொல்ல, மிரண்டு போனாள் சங்கவை.
“விளையாடாதீங்க செஞ்சா... ரெண்டு பேரும் தனி தனியா குளிக்கலாம்”
“தனியா குளிக்கவா கல்யாணம் பண்ணுனேன்” முறைத்தான்.
“ப்ளீஸ்.. செஞ்சா” என்றவளின் நாணம் அவனுக்கு புரிய, சரி போ என்று அனுமதித்தான்.
இவள் குளித்து விட்டு வர, அரைகுறை உடையுடன் வந்தவளை கண் எடுக்காது பார்த்தவன்,
“நைஸ்” என்றான்.
“ப்ச்.. கேலி பண்ணாம போய் குளிங்க... ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று அவள் கிளம்ப ஆரம்பித்தாள்.
அதோடு படுக்கையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க,குளித்து விட்டு வந்தவன் அவளுக்கு உதவி செய்தான்.
“நான் பார்த்துக்குறேன் செஞ்சா”
“நானும் உதவி பண்றேண்டி” என்றவன் படுக்கையில் இருந்த அவளின் உடைந்துப் போன வளையல்களை எடுத்து மேசை மீது வைக்க,
“குப்பையில போடாம எதுக்கு அதை எடுத்து அங்க வைக்கிறீங்க”
“இது போக்கசம்டி” என்றவன் அதை பத்திராப்படுத்தினான்.
அவனது காதலில் எப்பொழுதும் போல நெகிழ்ந்தவள் அவனின் முதுகோடு வந்து சாய்ந்துக் கொண்டாள். சாய்ந்தவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் பின்னாடி கை விட்டு முன்புறமாக இழுத்துக் கொண்டவன், அவளின் நெற்றியில் நெற்றி முட்டி இதழ்களில் தன் இதழ்களை உரசினான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், மென்மையாக அவனின் இதழ்களை சிறை செய்துக் கொண்டாள். தடுமாறிய அவனது கைகளை எடுத்து தன் இடையில் கொடுத்தவள் அவனிடம் இன்னும் ஒன்றிப்போனாள்.
அவளது ஒன்றுதலில் மனம் நிறைந்தவன் தன் கைகளில் அப்படியே தூக்கிக்கொண்டான்.
இப்பொழுது இன்னும் வாகாக அவள் முத்தம் கொடுக்க மயங்கிப் போனான் செஞ்சன்.
“மயக்குறடி” என்றவன் அவளை தூக்கி படுக்கையில் போட பார்க்க,
“நோ செஞ்சா.. அத்தை நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க” என்றாள்.
“சரி தப்பிச்ச” என்றவன் அவளின் இதழ்களில் சற்றே அலுத்தமாக முத்தம் வைத்தான்.
அவனது வன்மையான இதழ் முத்தத்தில் அவளின் இதழ்கள் ஏகத்துக்கும் சிவந்துப் போனது. அவளின் முகமும் கூடவே சிவந்துப் போக, அதை இரசித்தபடி அவளுடன் கை கோர்த்து கீழே இறங்கினான்.
இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த வாசுகிக்கு மனம் குளிர்ந்துப் போனது...
“இந்த கண் கொள்ளா காட்சியை காண தானே இவ்வளவு நாளும் உயிரை கையில பிடிச்சுட்டு இருந்தேன்”
என்று கண்களை துடைத்துக் கொண்டார்.
அவரை ஆறுதலாக பற்றிக் கொண்டான் பரவாசு... தாயிடம் வந்த செஞ்சன் அவர் கலங்கி நிற்பதை பார்த்து தோளோடு அனைத்துக் கொண்டவன்,
“என்ன ம்மா இது? இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கீங்க” கண்டித்தான்.
“அட போடா உனக்கு ஒரு நல்லதை செய்து வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்” என்றவர், அவனின் கையை தட்டி விட்டுட்டு சங்கவையின் கைகளை பற்றிக் கொண்டு,
“நீ எங்க துயரத்தை போக்க வந்த தேவதை கண்ணா” என்று ஆதுரமாக அவளை கொஞ்ச, இங்கே ஒருவனின் வயிறு காந்தியது.
“ம்மா” என்று பொறாமையில் பொங்கினான்.
“போடா டேய் போடா” என்றவர் மகனை கண்டுக் கொள்ளாமல் தன் மருமகளை கொஞ்ச,
“என்ன மச்சான் காதுல இருந்து புகை வருது” நக்கல் பண்ணினான் பரவாசு.
திரும்பி அவனை முறைத்தான் செஞ்சன்.
“இல்ல மச்சான் உன் அம்மாவுக்கே சங்கவையை விட்டு தர மாடிக்கிறியே...” என்றான் அசடு வழிந்து.
“அவ அம்மாவுக்கே விட்டு தர மாட்டேன். ஏன் அவளுக்கே அவளை விட்டு தர மாட்டேன்... எங்க அம்மாவுக்கா விட்டு தருவேன்” என்றவன் தன் தாயிடம் இருந்து சங்கவையை கை பிடித்து இழுத்து தன் கையணைவில் வைத்துக் கொண்டான்.
“டேய் அவக்கிட்ட பேச விடுடா”
“எதா இருந்தாலும் இப்படியே பேசுங்க” என்றவனை முறைத்து பார்த்தார்.
“டேய் அவ என் மருமக..”
“ஆனா அவ என் பொண்டாட்டி. சோ எனக்கு தான் உரிமை அதிகம்”
“மண்ணாங்கட்டி... நான் இல்லன்னா நீ இந்நேரம் சிங்கிளா மரத்தை சுத்தி தான் டுயட் பாட்டிட்டு இருந்து இருப்ப”
“அதுக்காக எல்லாம் இவளை நீங்க கொஞ்ச அனுமதிக்க மாட்டேன். இவளை தரவும் மாட்டேன்” என்றான்.
“மானத்தை வாங்காதீங்க செஞ்சா” என்றாள் சங்கவை.
“ஏய் என் உரிமைக்கு போராடுறேன்டி” என்றவனை மூவரும் முறைத்துப் பார்த்தார்கள்.
அதன் பிறகு அனைவரும் கிளம்பி கோயிலுக்கு சென்றார்கள். மத்திய நேரம் சங்கவையின் அக்கா குடும்பம் இவர்களை மறுவீட்டு விருந்துக்கு அழைக்க வர,
தன் மாமியாரையும் கையோடு கூட்டிக்கொண்டு சென்றாள்.
“நான் எதுக்கு மா” என்றவரை தனித்து விட மனமில்லாமல்,
“உங்க மகனுக்கு துணையா வாங்க அத்தை” என்றாள்.
“விட்டா அவன் ஒரு ஊரையே வித்துட்டு வந்திடுவான்.. அவனுக்கு நான் துணையா?” என்று கேட்டவருக்கு சங்கவையின் மனம் பற்றி தான் தெரியுமே. அதனால் பெரிதாக எந்த மறுப்பும் சொல்லாமல் அவளோடு கிளம்பி விட்டார்.
மறுவீட்டு விருந்தை தடாபுடாலக செய்து இருந்தார்கள் சங்கவையின் வீட்டில். இரண்டு நாட்கள் தங்கி இருந்து விருந்தை அனைவரும் சிறப்பித்தவர்கள், அதே கையோடு சென்னைக்கு வந்து சங்கவையின் வீட்டில் செஞ்சனை குடி அமர்த்தி விட்டு சென்றார்கள்.
பரவாசு செஞ்சனின் வீட்டில் தாங்கிக்கொண்டான்.
செஞ்சன் தன் மனைவியின் வீட்டுக்கு வந்து விட்டான். அதோடு தன் மாமியாரை இருக்க வைக்க பார்த்தாள் சங்கவை. ஆனால் அவர் இளையவர்களுக்கு தொந்தரவு தரவேண்டாம் என்று எண்ணி,
“நீ விரைவா நல்ல சேதி சொல்லு... உன்கூடவே நிரந்தரமா வந்து தங்கிக்கிறேன்” என்று அன்பு மழை பொழிந்து விட்டு சென்றார்.
சங்கவையின் பெற்றவர்களுக்கு பெரும் நிம்மதி. எப்படியோ இருந்த மகளின் வாழ்க்கை இப்பொழுது சீர் பெற்று விட்டதே.. அதை எண்ணி மகிழ்ந்துப் போனார்கள். அதோடு சங்கவை வாக்கப்பட்டு சென்ற குடும்பமும் மிக நல்ல குடும்பமாயிற்றே . அதனால் வந்த நிம்மதி.
செஞ்சனுக்கு அவள் கண்ணம்மா என்றாள், அவனின் தாய்க்கு அவள் கண்ணா ஆயிற்றே... இப்படி ஒரு மாமியார் மருமகள் ஊரில் யாரும் கண்டது இல்லை. அப்படி ஒரு மாமியார் மருமகள் கூட்டணி அது.
அதை பார்த்து பல நேரம் செஞ்சனே பொறாமை பட்டு இருக்கிறான். ஆனாலும் உள்ளுக்குள் மகிழ்ந்துக் கொண்டான்.
ஒரு வாரம் விடுப்பு எடுத்து இருந்து தான் வேலைக்கு. நாளையில் இருந்து வேலைக்கு செல்ல வேண்டும். பெருமூச்சு விட்டவன்,
“வேலைக்கு போகனுமா?” என்று சங்கவையின் முந்தானையை பற்றி இழுத்தபடி கேட்டு அடுப்படியில் நின்றிருந்தான்.
அவனுக்காக சமைத்துக் கொண்டு இருந்தவள் அவனை பார்த்து,
“வேலை புருஷ லட்ச்சணம் மிஸ்டர் செஞ்சா..” என்று கேலி செய்தாள்.
“கேலி பண்ணாதடி.. உண்மையாவே உன்னை விட்டு என்னால பிரிஞ்சி இருக்க முடியல” என்று அவளின் முந்தானையை இழுத்து தன்னருகில் அவளை வர செய்தான்.
அவனிடம் வந்தவள், அவனது நெற்றி முடியை கலைத்து விட்டு,
“சின்ன பிள்ளை மாதிரி அடம் பண்றீங்க செஞ்சா..”
“நான் சின்ன பிள்ளை தான்டி... என் வயசு ஒரு வாரம் தான்” என்றான்.
“ஹாங்” என்று அவள் விழிக்க,
“ம்ம்ம்... உன்னை திருமணம் செய்த நாளின் கணக்கை சொல்றேன்டி” என்று அவளின் முகத்தோடு முகம் புதைத்துக் கொண்டான்.
“சேட்டை...” என்று சிரித்தவள்,
“எனக்கும் ஒரு படம் பெண்டிங் இருக்கு செஞ்சா... அதோட நாலு புது ப்ராஜெக்ட்டுக்கு கமிட் ஆகி இருக்கேன்.. அதுல ரெண்டு மெகா சீரியல்... சோ நானும் வேலைக்கு போய் ஆகணும்” என்றாள்.
“ப்ச்... இன்னும் முழுசா கூட உன்னை பார்த்து முடிக்கலடி” கடுப்படித்தான்.
அவனது பேச்சில் முகம் சிவந்தவள்,
“சீ என்ன செஞ்சா இப்படி பேசுறீங்க..?” நாணிப் போனாள்.
“பின்ன வேற எப்படிடி பேச சொல்ற.. இப்ப எனக்கு முழு உரிமை இருக்கு... எப்படி வேணாலும் பேசலாம்... எப்படி வேணாலும் நடந்துக்கலாம்” என்றவனின் கைகள் அவளின் இடையை இறுக்கிப் பிடித்தது.
அவனது செயல்களில் எல்லாம் பெண்ணவளுக்குள் தீப்பிடிக்கும் உணர்வுகள் அதிகரித்தது. சமையல் அறையையே படுக்கை அறையாக்கும் வித்தையை அவன் செய்ய, தவித்துப் போனாள் அவனின் கவி.
“செஞ்சா சமையல் பாதில நிக்கிது..” என்று அவள் மறுக்க,
“சமையல் முக்கியமா நான் முக்கியமாடி?” ஒரே கேள்வி தான். அவளை அவன் வசமாக்கிக் கொண்டான். அடுப்பை ஒற்றை கையால் அனைத்தவள், கணவனை இன்னொரு கையால் அணைத்துக் கொண்டாள்.
அவனை விட அவளுக்கு வேறு எதுவும் முக்கியம் இல்லை அல்லவா? அதனால் தன்னவனை அள்ளி சூடிக் கொண்டாள்.
அன்றைய பொழுது முற்றிலும் கூடலிலே கரைந்தது. ஏனெனில் அடுத்த நாளில் இருந்து எப்படியும் இருவருக்கும் நேரம் ஒத்து போகுமா என்று தெரியாது. அதனால் இன்றைய தினத்தை கொண்டாட எண்ணினார்கள்.
ஒருவரை ஒருவர் கொண்டாடி தீர்த்துக் கொண்டார்கள். அத்துமீறிய அவனது செயல்களையும் வரையறை இல்லாத செயல்களையும் முழுமையாக அங்கீகரித்தாள் சங்கவை.
அவளை பதில் கொடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணி அவளுக்கும் சற்றே வன்மையை கற்றுக் கொடுத்தான் செஞ்சான்.
“என்னையும் உங்களை போலவே மாத்துறீங்க செஞ்சா” நிறைவான பொழுதில் அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு அவள் புகார் செய்ய,
வாய் விட்டு சிரித்தான்.
“நீ அப்படி நடந்துக்கும் பொழுது எல்லாம் நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேனே கண்ணம்மா” என்று அவன் சொல்ல, அதன் பிறகு எங்கிருந்து அவனை புகார் படிப்பது.
அவனது ஆசைக்காக அவள் என்னவும் செய்வாள். இதை செய்ய மாட்டாளா? அவனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற தானே அவள்.
அதனால் அடுத்த முறை அவன் கோரிக்கை வைக்காமலே அவள் செய்து காட்ட செஞ்சனுக்கு காதலிலும் ஆசையிலும் கண்கள் மின்னியது.
“கண்ணம்மா” என்றான் மீதூரிய காதலில்.
“செஞ்சா...” என்று அவள் கரைய, அவளை அள்ளி அணைத்து தன் உயிரில் சேர்த்துக் கொண்டான் செஞ்சன். ஆனால் அடுத்த சில நாட்களிலே அவளை வேதனை தீயில் தள்ளி விடும் செயலையும் செய்து வைத்தான்.
அதை தாங்க முடியாமல் குற்றுயிரும் குலை உயிருமாகிப் போனாள் சங்கவை...
இந்த எபிக்கு ஒரு meme நியாபகம் வருது அதை fb la போடறேன் 🙈🙈🙈🙈🙈
என்னதான் டா....பிராப்ளம் இப்ப...
ஒரு வேளை குழந்தை வந்து, அதை வேணாம்னு சொல்ல போரானோ?????
அப்ப நீ சும்மா இருந்து இருக்கணும் டா பக்கி பயலே
கல்யாணம் முடிந்து
காதலில் கரையும்
காதலர்களே...
காரணம் இன்னும் சொல்லலையே பா.... 🤩🤩🤩🤩🤩
தாயிடம் கூட
தன்னவளை விட்டு தராத தீராத காதல் கொண்ட தலைவனே
தலைவியை நோகச் செய்யலாமா????
நைஸ் அப்டேட் 😍😍😍