பழமலை நாதனின் முகத்தில் வெற்றியின் சிரிப்பு தெரிய அவளின் காதோரம் குனிந்து ஏதோ சொல்ல வர அவன் விஷமமாக தான் சொல்லுவான் என்று தெரிந்து வைத்திருந்ததால் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவனது வாயை தன் கரத்தால் பொத்தியவள் தன்னை அவனோடு இன்னும் நெருக்கி அணைத்துக்கொண்டாள்.
வெற்று நெஞ்சில் பதிந்த அவளது தேகத்தின் குளுமை அவனை இம்சிக்க அவளை சுற்றி கை போட்டவன் தன்னோடு இருக்கிக்கொண்டான். அவனது இறுக்கம் அவளுக்கு மேலும் பயத்தையே கூட்ட “ப்ளீஸ் மாமா” கெஞ்சினாள்.
அவளது அந்த பயம் அவள் மீது ஏதோ ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது பழமலைக்கு.. சாம்பிராணி வாசமும் அவளின் வாசமும் அவனது உணர்வுகளை தூண்டுவது போல் இருக்க இது சரிவராது என்று உணர்ந்து “தள்ளி போடி முதல்ல” என்று சூடாய் பேசி அவளை உதற
“போடா டேய்” என்று மனதுக்குள்ளே திட்டிவிட்டு, வேகமாய் விட்டால் போதும் டா சாமி என்ற கணக்காய் ஓடிவிட்டாள்.
அவளது அந்த ஓட்டத்தை பார்த்தவனுக்கு உல்லாசமாய் இருந்தது. பருவதம் கதிர் அறுப்பு செல்ல இவனோ எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடி அவளையே நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தான்.
அத்தை சொன்ன சாம்பாரை வைக்காமல் பழமலை கேட்ட நாட்டுகோழி குழம்பை செய்ய ஆரம்பித்தாள். அதுவும் விறகு அடுப்பிலே... வேண்டும் என்றே அவன் அடுப்பில் தான் சமைக்க வேண்டும் என்று சொல்ல முகம் சுழிக்காமல் விரகடுப்பிலே அவனுக்கு பிடித்தமான வகையில் செய்ய ஆரம்பித்தாள். சோலையிடம் சொல்லி கோழியை அடித்து சுத்தம் செய்து தர சொல்லிவிட்டு மீதம் இருக்கும் அரைக்கும் வேலையில் ஈடுபட்டு எல்லாவற்றையும் வறுத்து அம்மியில் அரைக்க போனவளை தடுத்து சோலை அரைக்க போக
“அவ தான் செய்யணும்” என்று அங்கு மர நிழலில் கட்டிலில் படுத்திருந்த படி சொன்னவனை கண்டு
“கை எரியும் யா.. புள்ள தாங்காது” கெஞ்ச
“எனக்கு அவ சமையல் தான் வேணும் சோலை.. அதுக்கு பிறகு அவ விருப்பம்” என்று சிறு பிள்ளையாய் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டவனை கண்டு “நான் சமாளிச்சுக்குறேன் சோலை நீ போய் மத்த வேலைய பாரு” என்று அவள் அம்மியில் அரைக்க ஆரம்பிக்க வேகமாய் அவளை பார்க்க வசதியாக எழுந்து அமர்ந்துக்கொண்டான்.
அவனது பார்வை அவளை இம்சிக்க விலகாத இடுப்பு புடவையை இழுத்து சரி செய்து தன் படபடப்பை மறைக்க பார்த்தாள். ஆனால் அவனுக்கு அது அவனை உதாசின படுத்துவது போல தெளிவாக தெரிய “மாட்டுனடி இன்னைக்கு” தனக்குள் கொக்கரித்துக்கொண்டான் பழமலை.
இவளும் என்னென்னவோ செய்து பார்த்தாள். ஆனால் அவனை அடக்க முடியவில்லை அவளால்.. சிறிது நேரத்தில் அவனது பார்வை அவளுக்கு பழகி போக அவனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. தன் வேளைகளில் முழுமையாக மூழ்கி போனாள். எப்படியும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இங்கு இருக்க முடியும். அதுவரை அவனோடு சுமுகமாகவே போக முடிவெடுத்திருந்தாள்..
ஆனால் அவன் விடுவான சுமுகமாக செல்ல.. அவனுக்கு ரணகளம் ஆகணும் அவளை எப்பவும்.. இப்போதும் அவளை சீண்டும் வழிகளை யோசித்துக்கொண்டு இருக்கிறான் பழமலை..
முகிலாம்பிகை நிலை அதோ கதி தான்.. மசாலா எல்லாவற்றையும் அறைத்து முடித்தவள் குழம்பு கூட்டி வைத்துக்கொண்டு இருந்த போது வேகமாய் அவளின் பின் புறமாய் வந்து நின்றான். அவன் அப்படி செய்வான் என்று தெரியாமல் திகைத்து போய் அவனை திரும்பி பார்க்க
“இல்ல எப்படியும் நீ இனிமே இங்க இருக்க போறது இல்ல.. உன் கை மனம் நல்லாவே இல்ல தான். ஆனா நீ சமைச்சி போட்டு என் நாக்க உனக்கு ஏத்தா போல மாறிடுச்சு.. அதான் எப்படி சமைக்குரன்னு பார்த்துக்கிட்டா பிறகு மத்தவங்களுக்கு சொல்லி தர வசதியா இருக்கும்ல அதான்” என்று அவளருகில் இருக்க சாக்கு கண்டு பிடித்து அதை அவளிடமும் சொல்ல அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.
“நான் சோலைக்கிட்ட எப்படி வைக்கிறதுன்னு சொல்லிட்டு போறேன்..” என்க
“ஓ அப்போ என் வீட்டுல நான் இங்க நிக்க கூடாதுன்னு சொல்ற இல்லையா..” என்று முறைத்தவனை கண்டு காண்டாகிப்போனாள்.
“இப்போ நான் சமைக்கிறதா இல்ல.. உங்க கிட்ட வாயடிக்கிட்டு இருக்குறதா” சற்றே சுல்லேன்று கேட்டவளை
“ஏய் என்னடி ரொம்ப தான் மிரட்டுற... ஒழுங்கா உப்பு காரம் போடாம இரு உன்னை உருச்சு உப்பு கண்டம் போட்டு வறுத்து சாப்பிடுறேன்” என்று சிலிர்த்தவனை கண்டு
“நீ எதை வேணா செய் இப்போ என்னை ஆள விடு” என்கிற கணக்காய் அவள் அடுப்பு புறம் திரும்பி குழம்பு கூட்டி வைக்க ஆரம்பித்தாள்.
அவள் செய்வதை பார்த்தானா இல்லை அவளை பார்த்தானா என்று அவனுக்கே தெரியாத ஒரு நிலையில் இருந்தான் பழமலை. சோலை அருகில் வர அப்போதும் நகராமல் இருந்தவனை கண்டு “இன்னும் என்ன வேணும்” என்று பட்டென்று கேட்டவளின் நூதன உணர்வை படிக்க தவறியவன்
“ஏய் என்னடி கொழுப்பா... நான் ஒன்னும் உன்னை உரசிக்கிட்டு நிக்கல தள்ளி தானே நிக்கிறேன். அதுவும் குழம்பு எப்படி வைக்கிரன்னு தானே பார்க்கிறேன்” என்று மேலும் அவளை காய..
தலையிலே அடித்துக்கொள்ளலாம் போல வந்தது முகிலாம்பிகைக்கு..
“ப்ளீஸ் எனக்கு அன்நீசியா இருக்கு”
“அப்படின்னா என்னடி” புரியாமல் அவளிடம் எகிறினான்.
“சுத்தம்” என்று முணுமுணுத்தவள் அது “டிச்டப்டா இருக்கு” ன்னு சொன்னேன்.
“ஏண்டி என் வீட்டுல இருந்துக்கிட்டே நீ என்னை டிச்டப்பும்ப்பியா எவ்வளவு ஏத்தமடி உனக்கு” என்று கண்கள் சிவக்க கோவபட்டவன் வேகமாய் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைக்க போக சட்டென்று அவனது கையை பிடித்தவள்
“நான் அப்படி சொல்லல... கொஞ்சமா தள்ளி நில்லுங்கன்றத தான் நான் அப்படி சொன்னேன்” சொன்னவளின் முகம் அடுப்பில் நின்றிருந்ததால் லேசாய் சிவந்து போய் இருக்க அது கூட அவனுக்கு தவறாய் பட்டது.
“என்னடி முகம் சிவந்து போற அளவுக்கு என் மேல கோவம் வருது.. உன் மாமன் காரன் வந்து போனதுக்கு பொறவு உன் போக்குல ஒரு திமுரு தனம் தெரியுதே..”
‘ஆமா நீ ரொம்ப கண்ட.. ஏண்டா டேய் ஏண்டா இப்படி படுத்துற’’
“என்ன கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டிக்கிட ஏத்தமாடி..”
‘பேசுனா ஏன் பேசுறான்னு கேளு.. பேசலைனா ஏன்டி திமிரான்னு திட்டு எந்த ஜென்மத்துல என்ன வரம் வாங்கிட்டு வந்தேன்னு தெரியல உன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன் நானு’
“தெரியும்டி எனக்கு என்ன உன் மாமன் காரன் சொல்லிக்குடுத்துட்டு போனானா..”
‘டேய் நீ எங்கடா அவங்க கிட்ட பேசவிட்ட என்னை..’ ஆத்திரமாய் வந்தது முகிலாம்பிகைக்கு.
“என்ன சொல்லிக்குடுத்துட்டு போனான் அவன்”
“ப்ச் மரியாதை குடுத்து பேசுங்க” என்றாள்.
“ஒ அவென் பெரிய இவேன்.. நாங்க அய்யா சாமின்னு மரியாதை குடுத்து கால்ல விழுந்து பேசனுமாக்கும்.. ஏய் இங்க பாருடி இந்த பழமலை யாருக்கும் மரியாதை குடுக்க மாட்டான்.. அதும் முக்கியமா உன் மாமன் காரனுக்கு நினைவு வச்சுக்க” என்று தலையை சிலுப்பியவனை கண்டு என்ன செய்வது என்று கடுப்பாய் வந்தது அவளுக்கு.
“என்னடி முறைப்பு...” மேலும் எகிற சரியாய் சோலை அருகில் வந்து “ம்மா என்ன செய்றது” என்று கேட்டு நிற்க பழமலை சற்று விலகி நின்றான். அவனை ஒரு பார்வை பார்த்தவள் பின் அவனை கண்டு கொள்ளாமல் அதை செய் இதை செய் என்று அவளுக்கு வேலை கொடுத்தவள் அடுப்பு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
மத்திய நேரத்துக்கு முன்பே வாசம் வயிற்றை தூண்டிவிட பழமலை “பசிக்குதுடி” என்க சோலை வாசற் படியில் நின்றபடியே எட்டி உள்ளே மணியை பார்க்க அது பன்னிரண்டு என்று காண்பிக்க பழமலைக்கு கோவம் வந்தது.
பசிக்கிதுன்னா சோத்தை போட வேண்டியது தானே அதென்ன மணியை பாக்குறது என்று.. லேசாய் முகம் கருக்க எழுந்து சென்றவனின் கரத்தை இழுத்து பிடித்து கட்டிலில் அமர சொன்ன முகிலாம்பிகை தட்டில் தான் சமைத்து வைத்த பதார்த்தத்தை பரி மாறி அவனுக்கு குடுக்க லேசாய் முறைப்பு வந்தது காரணமே இல்லாமல்.
தட்டை வாங்காமல் முறைத்தவனை கண்டு என்ன என்பது போல பார்த்தாள்.
“போடி” என்றவன் முகம் திருப்பிக்கொள்ள அவளுக்கு சிரிப்பு வந்தது. பின் சோலை கடைக்கு போய் கொஞ்சம் சோடா வாங்கிட்டு, அப்படியே வயகாட்டுக்கு போய் அத்தைக்கிட்ட இந்த சூப்பை குடுத்துட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்த பின்பே அவன் தட்டை வாங்கிக்கொண்டான்.
கட்டில் வசதி படாது என்று தரையில் பாய் விரித்து அவனை அமர செய்தவள் அவன் சாப்பிட சாப்பிட முகம் சுழிக்காமல் பரிமாறிக்கொண்டிருந்தாள்.
அவளை ஏறெடுத்து பார்க்க கூட நேரமில்லாமல் சமைத்து வைத்திருந்த கோழியோடு வெறித்தனமாக சண்டை போட்டுக்கொண்டு இருந்தான். வரமிளகாய் போட்டு குழம்பு வைத்தவள் மிளகு போட்டு கறி செய்து வைத்து இருந்தாள். இது பத்தாது என்று நெருப்பில் வாட்டி கிரில் சிக்கனுடன் பாப்கான் சிக்கன் செய்து வைக்க உணவு பிரியையான அவன் வெளுத்து வாங்கினான்.
அவளுடைய சமையல் கை பக்குவம் அவனை வெகுவாக வேரோடு அடித்து சாய்த்திருந்தாலும் வெளியே “உப்பு இல்ல டி.. கரி வேகவே இல்ல, என்ன சமைக்கிற நீ” என்று குறை பாடிக்கொண்டே சாப்பிட்டான்.
அவளுக்கு தெரியும் கறி பூவாட்டம் வெந்து இருக்கு என்று ஆனாலும் பாராட்ட மனம் இல்லாதவனை கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
“அதானே உனக்கு என்னை குறை சொல்லலன்னா தூக்கமே வராதே” நொடித்துக்கொண்டவள் வெளியே எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை. அவனை ஒரு வழியாய் கவனித்து அனுப்புவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.
இவனை என்னனு நினைக்கிறது ....
அவளை இவளோ படுத்தி எடுக்கும் போது வந்த கோவம் கூட சின்ன பிள்ளையாட்டம் பசிக்குதுன்னு கேட்கும் போது ரசிக்க தான் தோணுது