அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளை மனம் போன போக்கில் திட்டிவிட்டு வெளியே வந்து பார்த்தான். அவளை காணவில்லை. மனதில் ஏதோ போல பயம் எழ அதை அடக்கிவிட்டு வேகமாய் தாயிடம் கூட சொல்லாமல் வயலுக்கு ஓடினான் பழமலை நாதன். அவனது உள்ளுணர்வு பொய்க்கவில்லை. கிணற்றை ஒட்டி நீர் இறைக்கும் ஏற்றத்தின் திட்டில் எதையோ பறிக்கொடுத்தவள் போல அமர்ந்து இருந்தாள் முகிலாம்பிகை.

“என்ன செத்து போக போறியா” விஷம் தடவிய வார்த்தையை வீசியவனை கண்டு எதுவும் பேசாமல் அசையா சிலை போல அப்படியே அமர்ந்து இருந்தாள். அவளது இந்த அலட்ச்சியம் கூட அவனை மேலும் கோவபடுத்தவே செய்தது.

“ஏய் என்னடி நினைத்துக்கிட்டு இருக்க என்ன பார்த்தா மனுசனாவே தெரியலையா.. உன் மாமன் பசனுங்கள பார்த்தா தான் உன் வாய் திறக்குமா... ஏன்னா நான் படிக்காதவன் அவனுங்களாம் படுச்சு பெரிய உத்தியோகத்துல இருக்கானுவ அதனால இங்க பல்லு காட்டி சிரிக்காம அவனுங்க கிட்ட பேசி சிருச்சா கழுத்துல தாலிக்கட்டி வசதியா வாழலாம்னு நினைத்துக்கிட்டு இருக்கியா..” என்று மேலும் அவன் பேச அதற்க்கு மேல் அவனது பேச்சை கேட்க பிடிக்காமல் அப்படியே கிணற்றில் சரிந்துவிட்டாள்.

அவளிடமிருந்து அத்தகைய செயலை எதிர் பார்க்காதவன் திகைத்து கூட நிர்க்காமல் “ஏய் நில்லுடி” ஏதோ அவள் நடந்து போய்கொண்டு இருப்பது போல அவளை நிற்க சொன்னவன் கொஞ்சமும் தாமதிக்காமல் பின்னோடு இவனும் கிணற்றில் விழுந்தான்.

விழுந்தவன் அவளை நாளா புறமும் தண்ணீரில் தேடி அலைய இவளோ கிணற்றின் அடி ஆழம் தொட்டுவிட்டு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்  படியோரம் வந்து அமர்ந்துக்கொண்டாள் முகிலாம்பிகை.

அது தெரியாமல் தண்ணீரில் அடித்து “கைல மாட்டுன இருக்குடி உனக்கு... என்னையவே பயமுறுத்தி பார்க்குறியா..” அவள் கிடைக்காமல் போனதில் ஆங்காரமாய் கத்திக்கொண்டு இருந்தான்.

அவனது தவிப்பை எந்த வித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் முகிலாம்பிகை.

ஏதோ ஒரு உந்துதலில் பழமலை திரும்பி பார்த்தான். அங்கே படிக்கட்டில் எந்த வித அசைவும் இன்றி அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளை கண்டு அவனுக்கு அப்பாடி யென்றெல்லாம் தோணவில்லை. இன்னும் இன்னும் கோவம் தான் வந்தது அவனுக்கு.. ஏனோ அவனை சீண்டிவிட்டதாகவே அவனுக்கு தோன்றியது.

வேகமாய் அவளை நெருங்கி வந்தான். அப்போதும் கூட அவள் அசையவில்லை.

“எதுக்குடி என்னை அலைகலிக்குற... இப்படியெல்லாம் செஞ்சா உன் மேல பரிதாப பட்டு நீ ரோசகாரி தான்னு நான் நினைப்பனா...” எகத்தாளம் பேசியவனை கண்டு எதுவும் பேசாமல் எழுந்து மேலே சென்றாள்.

“பதில் சொல்லிட்டு போடி”

திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை.

“என்ன உன் கண்ணு பதில் சொல்லுமா எனக்கு” என்று அதற்க்கும் அவன் கேலி பண்ண

மேலும் அவனை கூர்ந்து பார்த்தாளே தவிர பதில் எதுவும் பேசவில்லை. அவளது இந்த அலட்ச்சியம் அவனை மேலும் கோவபடுத்த வேகமாய் படியேறி வந்து அவளை மறித்து நின்றான்.

“ரொம்ப திமிரா இருக்குற மாதிரி இருக்கடி அது இந்த பழமலை நாதன் கிட்ட நடக்காது வால ஓட்ட நறுக்கி போட்டுடுவேன் பாத்துக்க...”

“அது நல்லாவே தெரியும்.. ரொம்ப சீக்கிரமா இந்த வீட்டை விட்டு போய்விடுவேன் கவலை படாதீங்க.. அதோட எனக்காக நீங்க எதுக்கு அலைகளிக்கணும்.. நான் செத்தே போனாலும் எனக்காக நீங்க அலட்டிக்க வேணாம்” என்று வார்த்தையை வீரியமாய் விட அவளை விட வீரியமாய்

“இப்போ தானே சொல்லி இருக்க நீ செத்து போகும் போதோ இல்ல செத்தே போனாலும் நான் அலட்டிக்க மாட்டேன் சரியா” என்று அழுத்தமாய் சொன்னவனை கண்டு

“ரொம்ப நன்றி” என்று விட்டு விலகி சென்றுவிட்டாள்.

போகும் அவளை பார்த்து நின்றவனுக்கு மனசு முழுக்க கோவம் தான் நிறைந்து இருந்தது. அதை தாண்டி வேறு எந்த உணர்வும் அவனுக்கு எழவில்லை.

வீடு வந்த முகிலாம்பிகைக்கு மனமெல்லாம் பாரமாய் இருந்தது... அத்தையிடம் கூட ஏனோ அவளுக்கு ஆறுதல் தேட தோன்றவில்லை.

ஏனெனில் அது அவனது அம்மா என்றே அவளுக்கு தோன்றியது. எப்பொழுதும் போல வீட்டு வேலையை இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்தாள். மூலையில் உட்கார்ந்து அழுதாள் காலத்துக்கும் அழுது கொண்டு தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற தன்னை தானே தேற்றிக்கொண்டு வேலையில் மூழ்கி போனாள்.

இரவு உணவை தயார் செய்து விட்டு அத்தைக்கும் அவனுக்கும் பரிமாறிவிட்டு பசியில்லை என்று தூங்க சென்றுவிட்டாள்.

அதை கவனித்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை பழமலை.

அடுத்த நாள் கோழி அடித்து குழம்பு வைக்க சொன்னான் அவளை பழிவாங்க.

அவனுக்கு அவளை ஏதாவது செய்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் தூக்கமே வராது..

“டேய் ரெண்டு நாளுக்கு முன்னாடி தானேடா ஒரு ஆட்டை வெட்டி குழம்பு வைக்க சொன்ன அதுக்குள்ள கோழிய வெட்ட சொல்ற” பருவதம் கத்த

“அதான் ரெண்டு நாள் ஆச்சே.. நாக்கு மதமதப்பா இருக்கு நீ செய்யாத  அவளை செய்ய சொல்லு மிளகு போட்டு வருக்க சொல்லு” என்று பின் பக்கம் தோட்டத்தில் பல்லு விளக்கியபடி சொன்னவனை கண்டு

“ம்கும் அது தான் குறைச்சல் ஏண்டா டேய் ஏண்டா இப்படி அவளை படுத்துற.. இன்னைக்கு அவ எதுவும் செய்ய மாட்டா சோலையம்மா தான் வைப்பா” என்று சொல்ல

“அப்போ நீயே அதை தின்னு” என்றவன் அங்கு மாட்டு தொழுவத்துக்கு தலையில் துண்டோடு இடுப்பில் சொருகிய சேலையோடு சாம்பிராணி புகை போட்டுக்கொண்டு இருந்தவளை கண்டு சொல்ல அதை உணர்ந்தும் அவனை கண்டுக்கொள்ளவில்லை முகிலாம்பிகை.

“திமர பத்தியா இவளுக்கு.. இருக்குடி ஒருநாள் என்கிட்டே மாட்டாமல போவ வா அப்போ வச்சுக்குறேன் உன்னை” என்று தனக்குள்ளே பேசியவன்

“ஒழுங்கா அவளை அம்மியில அரைச்சு வைக்க சொல்லு... இல்லையா இருக்குற எல்லா கோழியையும் வித்து புட்டு டவுனுக்கு போயி பிரியாணி சாப்புட்டுட்டு நம்மாளு பாக்கியராஜு படம் நாலு வேலையும் பார்த்துட்டு வருவேன் பார்த்துக்க.” என்று மிரட்ட

“ஏண்டா இப்படி தறுதலையா இருக்க.. உனக்கு புத்தி போகுது பாரு பாக்கிய ராசு படம் கேக்குதாக்கும். இரு உன்னை காவி கட்டி சந்நியாசம் வாங்க வைக்கிறேன்...” பருவதம் கொதிக்க

“அப்போ சரி சீக்கிரமா அதுக்கு ஏற்பாடு பண்ணு..” என்றவனின் கண்கள் முழுவதும் முகிலாம்பிகையிடமே இருந்தது.. அவன் பாக்கியராஜ் படம் என்றவுடனே சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டாள். அவன் பேசி அவள் சிரித்துவிட்டாள் அவ்வளவு தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவான்.

அதனால் அவனுக்கு முதுகு காண்பித்து நின்றவள் சத்தம் வராமல் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டாள். ஆனாலும் அவளது முதுகு லேசாய் குலுங்குவதை கண்டு காண்டானவன்

“ஏய் என்னடி பண்ற” அவளிடம் எகிறினான்.

அதானே நான் தானே உனக்கு இளிச்ச வாய்... முணுமுணுத்தவள் “கந்த சஷ்டி கவசம் சொல்றேன்” என்று “சஷ்டியை நோக்க சரவணா பவனார்” என்ற பாட்டை அவனது காதில் விழும்படியாவே பாட பார்த்துக்கொண்டு இருந்த பருவதத்துக்கு இதுங்க இப்பவே புருஷன் பொண்டாட்டியா தான் இருக்குற மாதிரி எனக்கு தெரியுது.. ஆனா அதை இந்த பய ஒத்துக்க மாட்டான். கடவுளே என்னோட மருமகளே எனக்கு மருமகளா வரணும்...என்று வேண்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு செல்ல தாயை ஒரு கணம் நோக்கியவன் பின் வேகமாய் முகிலாம்பிகையிடம் வந்தவன் வேகமாய் அவளது முகத்தை ஊன்றி பார்த்தான்.

அவனது பார்வையில் உள்ளம் பதற “என்ன” என்பதாய் புருவத்தை ஏற்றி கேட்டாள் சற்றே பின்னாள் நகர்ந்து.

“நேத்திக்கு நீ தள்ளி விட்டதுல பாருடி காயத்தை” என்று தன் வேற்று உடம்பின் இடுப்பில் இருந்த காயத்தை காண்பித்தான்.

அதை பார்த்தவளுக்கு அது எதுக்கான காயம் என்பது புரிய சற்று மிரண்டே அவனை பார்த்தாள்.

“மன்னிச்சுடுங்க...” கெஞ்ச

“முடியாது” என்பது போல தலை அசைத்தவன் அவளை நெருங்கி வர “ப்ளீஸ்” என்றபடியே அவனிடமிருந்து விலகி பின்னாலே நகர்ந்து சென்றாள். சரியாய் அவனது தோழனும் முரட்டு காளையுமான செவலையின் முதுகோடு ஒன்றி போக திடுக்கிட்டு பதறி மூச்சு வாங்கினாள்.

அவள் இன்று வரையிலும் செவலையின் அருகில் கூட சென்றது இல்லை. அவ்வளவு பயம் அவளுக்கு அதன் மீது. செவலையும் யாரிடமும் அடங்க மாட்டான்.. அவன் கட்டு படுவது பழமலைக்கு மட்டும் தான்.

பயத்தில் உமிழ் நீரை விழுங்க கூட முடியாமல் பயந்து நடுங்கி தன் எதிரில் நின்றிருந்த இளம் காளையிடம் கெஞ்சினாள்.

“ப்ளீஸ் மாமா...” என்ற படியே காளையை விட்டு முன்னால் நகர செவலையோ அவளின் முதுகோடு மேலும் நெருங்கி வந்து உரசி முகத்தை வேறு அவளின் முகத்திற்கு வெகு அருகில் கொண்டு வந்து அவளை மேலும் பயமுறுத்த நெஞ்சு கூடு காலியாகி போனது அவளுக்கு.

உச்ச கட்ட பயத்தில் கண்களை மூடி “மாமா” என்று சத்தமே இல்லாமல் வாயசைத்து கூப்பிட்டவளின் நடுக்கம் கண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு அவளை என்னென்னவோ செய்ய தோன்றியது.

மூச்சு காற்று படுமாறு அவளை நெருங்கியவன் அவள் முகத்தில் துளிர்த்த வியர்வையை பார்த்து ஊதிவிட்டவன் மெல்ல அவளின் காதோரம் “அப்போ நான் உன்னை தொடட்டுமா” என்று கேட்க அவளுக்கு ஐயோ என்று வந்தது..

ரெண்டு இம்சைகிட்டையும் மாட்டிக்கிட்டு நான் முழுச்சுக்கிட்டு இருக்கேன்.. கடவுளே இந்த இக்கட்டுல இருந்து என்னை காப்பாத்தேன்... வேண்டிய படியே லேசாய் பக்கவாட்டில் நகர பார்க்க செவலை தன் வாலை கொண்டு காற்றில் வீசி அவளுக்கு பயம் காட்டி தன் எஜமானனும் உற்ற தோழனுமானவனுக்கு உதவி செய்தது. பத்தாததுக்கு முதுகு புறத்தில் அது லேசாய் உரசி உரசி இன்னும் பயத்தை கூட்ட அந்த பயத்தில் வேறு வழியில்லாமல் பழமலையின் நெஞ்சில் ஒட்டிக்கொண்டாள் முகிலாம்பிகை.

அதன் பிறகு செவலை அவளை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அவ்விடத்தை விட்டு அகலாமல் பாதையை மறைத்த படி நின்றிருந்தான்.

பழமலை நாதனின் முகத்தில் வெற்றியின் சிரிப்பு தெரிய அவளின் காதோரம் குனிந்து ஏதோ சொல்ல வர அவன் விஷமமாக தான் சொல்லுவான் என்று தெரிந்து வைத்திருந்ததால் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் அவனது வாயை தன் கரத்தால் பொத்தியவள் தன்னை அவனோடு இன்னும் நெருக்கி அணைத்துக்கொண்டாள்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 12, 2025 10:33 am
(@gowri)
Estimable Member

முகி மைண்ட் வாய்ஸ்...இதுகளும் சதி பண்ணுதே😂😂😂😂😂

ஆன கிடைக்கற கேப் எல்லாம் நல்லா use பண்ணிக்கர மேன் நீ🤭🤭🤭🤭🤭

Loading spinner
ReplyQuote
Posted : April 12, 2025 5:30 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top