தாமரை சொல்லியதில் தலைவலி வர, அவருக்கு பதிலாக ஒன்றும் சொல்லாமல் தாத்தா பாட்டியிடம் வந்து அமர்ந்துக் கொண்டாள் தமிழ். அவளை மடியில் படுக்க வைத்த பாட்டி செல்லம்மா “அவ பேசுறதை கணக்குல எடுத்துக்காத கண்ணு.. அவ ஒரு வீணா போனவ... தானும் திருத்தமா வாழ மாட்டா. மத்தவங்களையும் வாழ விட மாட்டா” என்றவர் அவளை விழிமூடி தூங்க வைத்தார்.
தமிழ் அசந்து தூங்குவதை பார்த்த செல்லம்மாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் அலைஅலையாய் வந்தது.
தமிழ் பிறந்து பதினாறாவது நாள் கனகாவுக்கு காரியம் செய்த அடுத்த நாள் தாமரை தமிழை தங்களோடு கூட்டிக்கொண்டு போக வந்து இருந்தார்.
அவளை தனியா விடமாட்டோம் என்று பாட்டி செல்லம்மாவும் தாத்தா மருதகாளையும் பட்டணத்துக்கு வந்து விட்டார்கள்.
அவர்கள் இப்படி உடன் வருவார்கள் என்று எண்ணியிராத தாமாரை கொஞ்சம் முரண்டு பிடித்தார். ஆனால் செல்லப்பா “உன் சுதந்திரத்துக்கு எந்த தடையும் விதிக்க மாட்டாங்க” என்று சொல்லி வாக்கு குடுக்கவும் தான் அவர்களை வீட்டிலே விட்டார் தாமரை.
இல்லை என்றால் அன்றைக்கே இரு முதியவர்களையும் அடிச்சு விரட்டி இருப்பார். அன்றிலிருந்து தமிழை தங்களின் கட்டுப்பாட்டுகுள்ளயே தான் வைத்து இருந்தார்கள் பெரியவர்கள்.
தமிழை எங்காவது வெளியே அழைத்து போக தாமரை நினைத்தாலும் உடன் இவர்களும் போவார்கள். அதனால் எரிச்சல் ஆனா தாமரை அவளை பெரிதாக எங்கும் அழைத்து செல்லவில்லை. ஆனால் அடிக்கடி தன் மேல்நாட்டு கலாச்சாரத்தை அவளிடம் திணிக்க முயன்றுக் கொண்டே இருப்பார்.
கிடைக்கும் நேரமெல்லாம் அவளை தன் வலையில் வீழ்த்த நினைத்தார். ஆனால் பெரியவர்கள் அதற்கு விடவே இல்லை. கட்டுப்பாடு கலாச்சாரம் என்றே வளர்த்து விட்டார்கள் தமிழை.
அதோடு தாமரைக்கு இன்னொரு பயமும் இருந்தது. தமிழை அதிகம் நெருங்க நினைத்தால் எங்கே தன் தலையில் பிள்ளை வளர்பை சுமத்தி விடுவார்களோ என்று தள்ளியே இருந்தார்.
தயாளனை வளர்த்தது கூட கனகா தான். கனாகவிடம் பிள்ளையை குடுத்து விட்டு இவர் ஜாலியாக செல்லப்பாவுடன் ஊர் சுற்ற கிளம்பி விடுவார். தயாளனை பொறுப்பாக கண்ணும் கருத்துமாக வளர்த்தது என்னவோ கனகா தான்.
ஆனால் எல்லாம் மூன்று வருடம் மட்டும் தான். அதன் பிறகு செல்லப்பாவை அவருக்கு கட்டி குடுத்து கிராமத்துக்கு துரத்தி விட்டுட்டார் தாமரை.
அதை எல்லாம் எண்ணி பார்த்த பெரியவர்களுக்கு மனம் கனத்துப் போனது.
தமிழின் தலையை வருடி கொடுத்தவர்களின் முன்பு ஒரு நிழல் ஆட தலையை தூக்கி பார்த்தார்கள்.
அகத்தியன் நின்று இருந்தான்.
“வாங்க... வாங்க மாப்பிள்ளை” என்று பெரியவர்கள் இருவரும் அவனை வரவேற்க,
அவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அழுத்தமாக பார்த்தான்.
“பாப்பா அசதியில தூங்கிடுச்சு... இதோ எழுப்புறோம்” என்று செல்லம்மா தமிழை உசுப்பி விட “இன்னும் கொஞ்ச நேரம் பாட்டி” என்று அவரின் முந்தானையை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு தூங்க,
“அடியேய் மாப்பிள்ளை வந்து இருக்காருடி.. முதல்ல எழுந்திரி. அவருக்கு என்ன வேணும்ன்றதை போய் கவனி” என்று சொல்ல,
“எது கணவன் இங்கயா?” என்று பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள், அங்கே கணவன் நிற்பதை பார்த்து வேகமாய் மணியை பார்த்தாள். கீழ் வந்து அறை மணிநேரம் ஆகி இருப்பதை காட்டியது.
“அய்யய்யோ... பத்து நிமிடத்துல வர சொல்லி சொன்னாரே. இப்போ அறை மணி நேரம் ஆகிடுச்சே.. என்ன சொல்ல போறாரோ...” என்று எச்சில் விழுங்கினாள் பயத்தில்.
அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன், விருட்டென்று மேலே அவளின் அறைக்கு போய் விட்டான்.
“மாப்பிள்ளை ரொம்ப கறார் போல” என்று மருதகாளை சொல்ல,
“உங்களை மாதிரின்னு சொல்லுங்க” என்று அவரின் இடையில் இடித்தார் பாட்டி.
“நான் தான் பெட்டி பாம்பா உன் மடியில சுருண்டு கிடக்குறனே செல்லம்” என்று அவர் வழிய,
“அய்ய... அதெல்லாம் இப்ப தானே.. கல்யாணம் கட்டுன புதுசுல என்ன முறுக்கு முறுக்குனீங்க” தாவாங்கட்டையை தோளில் இடித்து ஒரு சிலுப்பு சிலுப்பினார் செல்லம்மா.
“அதெல்லாம் அந்த காலம்டி” என்று அவரின் முந்தானையை பிடிக்க வர,
“பேத்திய பக்கத்துல வச்சுக்கிட்டு என்ன காரியம்யா பண்ற?” பதறிப்போனார் பாட்டி.
“பேத்தி அப்பவே அவ புருசன் பின்னாடி போயிட்டா” என்று வழிந்தார் கொஞ்சமும் கூச்சமில்லமால்.
“ம்கும்.. இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை” என்றவருக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. அதோடு தன் பேத்தி வாழ்க்கையை பற்றிய கவலையும் நீங்கிப் போனது.
“பரவாயில்லை... பேத்தியை விட்டுட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டிக்கிறாரு. என் பேத்தி குடுத்து வச்சவ” என்று பாட்டி பேத்தி போன திசையை வழித்து நெட்டி முறித்தார்.
“நான் கூட மாப்பிள்ளை ரொம்ப முறுக்கா இருக்காரே... எப்படி பேத்தி மகிழ்ச்சியா இருப்பான்னு நினைச்சேன் செல்லம். ஆனா பரவாயில்ல... பேத்தி பேரனை முடிஞ்சு வச்சுக்கிட்டா போல” தாத்தாவும் சொல்ல,
“ஆமாங்க... எப்படியோ பேத்தி மகிழ்ச்சியா இருந்தா அதை விட நமக்கு வேற என்ன வேண்டும்” என்று இருவரும் மகிழ்ந்துப் போனார்கள். அதற்கு நேர்மாறாய் தான் தங்களின் பேத்தி வாழ்க்கை அமைந்து இருக்கிறது என்று தெரியாமல் கனவில் இருந்தார்கள் மூத்தவர்கள் இருவரும்.
இங்கே கணவனின் பின்னாடி வந்த தமிழுக்கு தாமரையின் குரல் செவியில் விழ பக்கென்று ஆனது.
“ஏன் ஒரு நிமிடம் கூட அவளை விட்டு பிரிஞ்சி இருக்க முடியலையோ உன்னால... ஏற்கனவே அவ அறையை விட்டு வெளில வர்றதே இல்லை. அப்படியே வந்தாலும் இப்படியா வெளிப்படையா அவளை அறைக்குள்ள கூட்டிட்டு போறது. இந்த வீட்டுல பெரியவங்க எல்லாம் இருக்காங்க. இந்த மாதிரி கூத்து கட்டுனா எப்படி? இப்படி தான் அநாகரிகமா நடந்துக்குறதா?” அகத்தியனிடம் நியாயத்தை கேட்டுக் கொண்டு இருந்தார் தாமரை.
அவரை ஏளனமாக பார்த்த அகத்தியன் வாயை திறக்காமல் இடது கையை மட்டும் நீட்டினான்.
அவன் எதற்கு கை நீட்டுகிறான் என்று புரியாமல் தாமரை பார்க்க, அவன் நீட்டிய கைக்குள் வந்து நின்றாள் தமிழ். அதை கொஞ்சமும் எதிர் பார்க்காத தாமரை திகைத்துப் பார்க்க,
தமிழை வளைத்து பிடித்தவன் அவளே எதிர்பாரா சமயம் தன் கைகளுக்குள் அவளை தூக்கிக்கொண்டு மாடி ஏறினான். தமிழ் பதறி போய் கீழே இறங்க பார்க்க,
“கீழ இறங்குன இப்போ இந்த நிமிடம் உன் கழுத்துல இருக்குற தாலியை கழட்டி எறிஞ்சிடுவேன்” என்று அவளின் காதில் முணுமுணுக்க,
ஆடாது அசையாது அவனது கையில் இருந்தாள் தமிழ். அதை இரசனையுடன் பார்த்தவன் அவளை கொஞ்சமும் சிரமம் இல்லாமல் மாடிக்கு தூக்கிச் சென்றான்.
போகும் இருவரையும் விழி சிவக்க பார்த்து நின்றார் தாமரை. தன் கண் முன்னாடி தமிழ் வாழும் வாழ்க்கையை அவரால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னவோ உள்ளுக்குள் ஒரு சிறு நெருப்பு பொறாமை தீயை கொளுத்தி போட்டு செல்ல, அது அதிவேகமாக பற்றி எரிந்ததில் வெந்து நொந்து போனார்.
அதனாலே தமிழுக்கு தேவையில்லாத அறிவுரைகளை சொன்னார். கூடவே மாப்பிள்ளையாய் வந்த அகத்தியனை மேலும் மேலும் அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அப்படி இருந்தும் அகத்தியன் எதற்கும் கோவப்பட்டது போல தெரியவில்லை. ஏன் அவரை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. அது அவருக்கு இன்னும் புகைச்சலை கொடுக்க எப்படியாவது இருவரையும் பிரிக்க சதி செய்ய ஆரம்பித்தார்.
ஆனால் அகத்தியன் அத்தனையும் உடைத்து எறிவான் என்று தெரியாமல் தன் வலையை வீசிக்கொண்டு இருக்கிறார் தாமரை. பார்க்கலாம் அவர் எவ்வளவு தூரம் செல்கிறார் என்று.
மேலே அறைக்கு தூக்கிக் கொண்டு வந்த தன் மனைவியை படுக்கையில் கிடத்தியவன் அவளை படுக்கை பாவையாக மாற்ற துடித்துப் போனாள் தமிழ்.
அங்கு தாமரையிடம் காட்டாத கோவத்தை எல்லாம் இங்கே இவளிடம் காட்ட முற்றிலும் நிலை குழைந்துப் போனாள்.
“வி...ர... தம் வி...ரதம் இருக்க சொன்னாங்க” என்றாள் தயங்கி தயங்கி.
“எதுக்கு” என்பது போல அவளின் மார்பில் இருந்து தலையை தூக்கி பார்த்தான். அவளையும் அறியாமல் அவன் செய்கை அத்தனையும் அவளுக்கு புரிய தொடங்கி இருந்தது. அவனது பார்வையும் புரிந்துப் போனது.
அதனால் அவனது பார்வைக்கு இவள் வாய் மொழியாக பதில் சொன்னாள்.
“நாளைக்கு காலையில போகணும்னு பாட்டி சொன்னாங்க” என்றாள்.
“காலையில தானே... இப்ப இல்லல்ல” என்றவன் அவளுக்குள் மூழ்கிப் போனான் அகத்தியன். அவனை தடுக்க பார்த்தும் தடுக்க முடியாமல் போனது.
“எனக்கு உங்க கூட பேசணும்” என்றாள் கூடல் முடிந்த பிறகு.
அவன் அதை காதிலே வாங்கிக் கொள்ளாமல் எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
“ஒருவேளை நாம சொன்னது காதுல விழலையா?” என்று எண்ணினாள்.
அதனாலவன் வரும் வரை காத்திருந்தவள் அவன் வந்த பிறகு மீண்டும் பேசினாள். ஆனால் அவன் கொஞ்சமும் அவளை கண்டு கொள்ளவேயில்லை.
“ஏன் என்னை இப்படி அவாயிட் பண்ணிட்டே இருக்கீங்க.. இப்படி ஒதுக்கி வைக்கிறதுக்கு எதுக்கு என்னை கல்யாணம் செய்யணும்?” சற்றே ஆவேசத்துடன் கேட்டாள்.
கதவை திறந்துக் கொண்டு வெளியே போனவன் தமிழ் பேசிய பேச்சில் கதவை அழுந்த மூடிவிட்டு அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையில் பயம் வந்தாலும் அவனிடம் நேருக்கு நேராக நின்றாள்.
“லுக்...” என்றவன்,
“உன் வெளித்தோற்றம் பிடிச்சு போய் தான் கல்யாணம் பண்ணேன். ஆனாநீ இப்படி சாக்கடையா இருப்பன்னு நான் நினைச்சி பார்க்கல...” என்று அவளின் தலையில் இடியை இறக்கினான்.
“சாக்கடையா நானா?” அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள்.
“இதுல பாரு” என்று சொன்னவன், தன் போனை அவளிடம் தூக்கி போட்டான்.
அதில் அவள் பப்புக்கு போய் குடித்து குத்தாட்டம் போட்டு பல ஆண் நண்பர்களோடு இருந்த புகைப்படம் வீடியோ என இருக்கக்கண்டாள்.
“என்னங்க” என்று அவள் மறுக்க வரும் முன்பே,
“என்ன சொல்ல போற? இது நான் இல்ல... இது எல்லாமே போர்ஜரி.. மார்பிங்னு சொல்ல போற அது தானே” நக்கலாக அவளை பார்த்தவன்,
“எனக்கு போய் சொன்னா பிடிக்காது...” அவளை எச்சரித்தவன், “இதை விட அசிங்கமா உன்னை பத்தி ஒரு விசயம் என் காதுக்கு வந்தது...” என்று அவளை அருவெறுப்புடன் பார்த்தவன்,
“உன் கிட்ட பேசவே எனக்கு விருப்பம் இல்லை... அதனால சீக்கிரமா ஒரு பிள்ளையை பெத்து குடு” என்று அவன் வெளியே போய் விட்டான். போகும் முன்பு அவளை அடிப்பட்டது போல கதவை அடித்து சாத்தி விட்டு போக விக்கித்துப் போனாள்.
“நான் என்ன பிள்ளை பெக்கிற மிசினா?” என்று அவளின் மனம் கேள்வி எழுப்பினாலும் தன் கணவனின் அருவெறுப்பான பார்வையில் அவளுக்கு தலைவலி இன்னும் அதிகம் ஆகியது.
இது என்ன புது டுவிஸ்ட்.?????
அவ மறுக்களையே????ஏன்????
இது அவளா என்ன????