அத்தியாயம் 20

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன் வயிற்றில் ஈரம் படர்வதை உணர்ந்து துடித்துப் போன சங்கவை,

“ஏன் செஞ்சா இப்படி இந்த சின்ன விசயத்துக்கு போய் இப்படி நடந்துக்குறீங்க? இவ்வளவு நாளா கோவத்துல இருந்தீங்க... இப்போ என்னடான்னா இப்படி அழுவுறீங்க... ப்ளீஸ் இந்த நாள் எவ்வளவு இனிமையான நாளா இருக்கணும்னு நீங்க சொல்லி இருக்கீங்க. ஆனா நீங்களே அதை கெடுக்கிற மாதிரி நடந்துக்கலாமா?” கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் சிவந்துப் போய் இருந்தது. அது காமத்தினால் அல்ல...

உச்ச படச்ச வேதனையினால் சிவந்து போய் இருந்தது.

“நீ ரொம்ப எளிதா சொல்லிட்ட கண்ணம்மா ஆனா என்னால அதை தாங்கிக்கவே முடியல... என் மனசு துடிக்கிற துடிப்பை உன்னால உணர முடியாது.. ஏன்னா உன் மனசு கல்லா போயி ரொம்ப நாள் ஆச்சு” என்று அவளை வலிக்க வைத்தான்.

“ஆமா என் மனசு கல்லு தான்..” என்றாள் சற்றே கடுப்பாக.

“ஆமான்டி இல்லன்னா எவளாவது இப்படி ஒரு காரியத்தை செய்வாளா?” என்று அவளின் மார்பின் மீது வந்து படுத்துக் கொண்டான்.

தன் நெஞ்சின் மீது வந்து படுத்தவனை இரு கையாளும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவள்,

“கோவத்தை விட்டுட்டு  முதல்ல என் முகத்தை பாருங்க செஞ்சா” என்று தன் விழிகளை பார்க்க வைத்தாள்.

“ஒன்னும் வேணாம் போடி”

“ப்ச் இப்படி பண்ணா எப்படி செஞ்சா” என்றவள் அவனது முகத்தை தன் கையால் பிடித்து உயர்த்தியவள் அவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள். அவளின் ஒற்றை முத்தத்தில் அவனின் நெஞ்சம் சற்றே ஆடி தான் போனது.

“என்னை மெல்ட் பண்ணாதடி” பல்லைக் கடித்தான்.

“நான் மெல்ட் பண்ணா நீங்க ஏன் மெல்ட் ஆகுறீங்க?” கேலியாக கேட்டாள்.

“ப்ச்..” என்று அவன் சலித்துக் கொள்ள,

“கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா...

இரண்டுமே ஒன்று தான் ஓஹோ..” என்று அவள் பாடினாள்.

“இந்த பாட்டு பாடாதடி...” பல்லைக் கடித்தான்.

கல்லூரி நாட்களில் அடிக்கடி அவளை பார்த்து இந்த பாட்டு தான் பாடுவான். இந்த பாட்டில் அப்படி என்ன தான் இருக்கிறதோ இந்த பாட்டை பாடினாலே செஞ்சன் அவன் வசம் தொலைந்து போய் விடுவான்.

அவனது பேச்சை காதிலே கேட்டுக் கொள்ளாமல்,

“ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்...”

“கவி சொன்னா சொல் பேச்சு கேளுடி..” என்ற பொழுதே அவனது குரல் மிகவும் உள்ளே சென்றது.

“யார் அந்த ரோஜா பூ..

என் கனவில் மெதுவாக

பூ வீசிப் போனாள்

அவள் யாரோ... ஓஹோ...” அவனை பார்த்துக் கொண்டே அவள் பாட அவள் மீது இருந்து எழுந்துக் கொண்டவன் தலையை இரண்டு கையாளும் பற்றி கவிழ்ந்துக் கொண்டான்.

பூவே மிக மென்மையாக இருக்கும்.. அந்த பூவை கூட மெதுவாக வீசி செல்கிறாள் என்று அந்த பாடலின் பொருள் வரும். அவ்வளவு மென்மையாக குணம் கொண்டவள் தான் சங்கவை.

அதனால தான் அவளுக்காக அந்த பாடலை அடிக்கடி அவன் பாடுவதே... அதோடு அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவனின் உள்ளம் கொள்ளை கொண்டு போவது போலவே தோன்றும்..

ஒவ்வொரு முறையும் தன் மனதை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் காதலிக்காக அவன் பாடும் பாடல் அது..

“உள்ளம் கொள்ளை போகுதே...

உன்னை கண்ட நாள் முதல்...

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே...”

அவனின் ஒட்டு மொத்த அன்பும் அவள் மீது மட்டும் அல்லவா குவித்து வைத்து இருக்கிறான். அவனின் அன்பு போதாமையில் நிறைந்துப் போன ஒன்று..

அவள் அவனை காதலிக்கும் அழகை பார்த்து அவனது அன்பு போதாமையில் நிறைந்துப் போனது. அவள் எவ்வளவு காதலை காட்டினாலும் அவனுக்கு அது போதாமை தான். இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு தனக்குள் பதுக்கி வைத்துக் கொள்ளும் கொள்கலன் அவன்.

அப்படி பட்டவனுக்கு அவனது காதலையே திருப்பி படித்தால் அவன் தாங்குவானா? அவனது நெஞ்சம் அவளின் காதலில் சல்லடையாகிப் போனது.

“எதுக்குடி இவ்வளவு காதலிக்கிற...?” தலையை பற்றிக் கொண்டவன் அவளை பார்த்து கேட்டான்.

“எனக்கு மட்டும் நீங்க மூச்சை அடைக்கிற அளவுக்கு காதலை குடுத்தா நான் மட்டும் என்ன பண்ணுவேன்... அது தான் திருப்பி குடுக்கிறேன்” என்றவள் அவனை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டாள்.

அவனது விழிகளை பார்த்தவள் அதில் கரை காணாத அளவு காதல் கொட்டி கிடப்பதை பார்த்தவள் அவனின் இரு விழிகளிலும் முத்தம் வைத்தாள்.

அப்படியே நகர்ந்து அவனது மூக்கில் முத்தம் வைத்தாள்.

பின் நிமிர்ந்து அவனது விழிகளை பார்த்தாள். அவள் எவ்வளவு முத்தம் வைத்தாலும் இன்னும் வேண்டும் என்ற பார்வை அவன் பார்க்க, சின்ன சிரிப்புடன் அவனின் இதழ்களில் தன் இதழ்களை புதைத்தாள்.

அதோடு எட்டி விளக்கையும் அணைத்தாள் சங்கவை. அவளின் செயல்களை  எங்கே அவன் கவனித்தான். அவளின் இதழ் முத்தங்களில் முழுதாக மூழ்கிப் போனான் செஞ்சன்.

அவனது கைகளை எடுத்து தன் இடையில் கொடுத்தவள் தானே முதல் படியை எடுத்து வைத்தாள். அவன் முரண்டு பிடிக்க,

“இது என் செஞ்சாவோட ஆசை... உங்க கோவத்தை எல்லாம்  இன்னைக்கு ஒரு நாள் மூட்டை கட்டி வச்சுட்டு எல்லாத்தையும் மறந்துட்டு என்னை மட்டும் பாருங்க செஞ்சா ப்ளீஸ்” என்றவள், அவனது முகத்தோடு முகம் வைத்து கொஞ்சினாள்.

“ஆனா...” என்று அவன் ஆரம்பிக்க, பட்டென்று அவனின் இதழ்களை சற்றே அழுத்தத்துடன் கவ்விக் கொண்டாள்.

அந்த குறிப்பில் மேற்கொண்டு பேசாதே என்ற பொருள் நிறைந்து இருந்தது.

அவளின் எண்ணங்களை புரிந்துக் கொண்டவன் அவளை கீழே படுக்கையில் தள்ளி அவனின் மடியில் இருந்து எழுந்துக் கொண்டவன் அவளை விட்டு விலகினான்.

“செஞ்சா” என்று அவள் மனம் கலங்க அழைக்க,

“ஒரே ஒரு நிமிடம்டி” என்றவன் எங்கோ எதையோத் தேடி எடுத்தவன் இருள் நிறைந்து இருந்த அறையில் சின்ன சின்னதாய் மெழுகு திரிகளை ஏற்றி வைக்க ஆரம்பித்தான்.

“செஞ்சா..” என்று அவள் விழிகள் ஒளிர,

“டூ மினிட்ஸ் கவி டியர்” என்றவன் வண்ண வண்ண வாசனை முழுகுகளை ஒளிர விட்டவன், குட்டி குளிர்சாதன பெட்டியில் இருந்த ரோஜா இதழ்களை எடுத்து படுக்கையிலும் தரையிலும் அவள் மீதும் தூவி விட்டவன், முழுமையாக முதலிரவுக்கு தயாரானான்.

அவன் செய்த ஏற்பாட்டை பார்த்து முகம் சிவந்தவள்,

“எல்லாமே முன் ஏற்பாடா செய்து வச்சுட்டு  தான் என்னை  உட்கார வைத்து கவிதை சொன்னீங்களா?” செல்லமாக முறைத்தாள்.

“பின்ன எடுத்த உடனே பாய்ஞ்சா நீ மிரண்டு போயிடுவியே..” என்று அவனுக்குரிய நக்கலுடன் சொன்னான்.

“ஆளு செம்ம விவரம் தான்” இரசனையாக அவனை கேலி செய்தாள்.

“இன்னும் போக போக தெரியும்டி” என்றவன் அவனது சட்டையை கழட்ட ஆரம்பிக்க, அதுவரை இருந்த கேலி கிண்டல் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்தது  பெண்ணவளுக்கு. முகத்தை மூடிக் கொண்டாள் இரு கரங்களாலும்.

“என்ன அம்மணி இவ்வளவு நேரம் பேசுனீங்க... இப்போ என்ன ஆச்சு?” நக்கல் செய்தவன் வெற்று மார்புடன் பெண்ணவளை நெருங்கினான்.

அவனது கேலியில் இன்னும் நாணம் வர வேகமாய் படுக்கையில் அவனுக்கு முதுகு காட்டி தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் முதுகோடு நெருங்கிப் படுத்தவன் மெல்லமாக அவளை திருப்பி தன்னை பார்க்க வைத்தான் செஞ்சன்.

மூடிய இமைகளை பிரித்து அவனது முகத்தை பார்த்தாள் சங்கவை. அவனின் கண்களில் இருந்த அதீத காதலும் தாபமும் கண்டு மூச்சடைத்துப் போனவள் அவனின் தோளோடு சாய்ந்துக் கொண்டாள்.

“பயமா இருக்கா கவி?”

அதில் அவனை நிமிர்ந்ந்து பார்த்தவள் ம்ஹும்... என்று தலையை ஆட்டினாள்.

“எதா இருந்தாலும் சொல்லுடா” என்றவனின் காதலில் இதழ் பிரித்து, “உங்களை ஹேப்பியா வச்கிக்குவன்னான்னு பயமா இருக்கு செஞ்சா” என்றாள்.

அதிலே அவளது காதல் கொட்டி கிடக்க,

“உன்னை தவிர என்னை வேற யாராலடி மகிழ்ச்சியா வச்சுக்க முடியும்...” அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி சொன்னவன்,

“லவ் யூ கண்ணம்மா” என்றான்.

“நானும் லவ் யூ செஞ்சா” என்ற நேரம் அவளின் இதழ்களை மிக மென்மையாக கவ்வி கவி படிக்க ஆரம்பித்தான்.

அவனது மென்மையான அணுகுமுறையில் மனம் தொலைந்துப் போனாள் பெண்ணவள்.

அவளுக்கு வலிக்காமல் பூவை தீண்டும் தென்றலாய் அவளை அவன் நாட  அவனது தொடுகையில் மெல்ல மெல்ல தன் சுயத்தை இழந்தாள்.

கால் விரல்களில் அவன் வைத்த முத்தம் அவளை உச்சி வரை கூசி சிலிர்க்க வைத்தது. அடர்ந்த மீசை கொண்டு அவளை உரசி செல்லும் ஒவ்வொரு நொடியும் பெண்ணவளுக்குள் பலகோடி மின்னல்கள் ஒருங்கே எழச் செய்தது.

அவனின் பின்னந்தலையை பற்றி அத்துமீறாமல் இருக்க செய்ய, அவளின் காதோடு தன் கோரிக்கையை வைத்தான் செஞ்சன்.

அவனது கோரிக்கையில் முகம் சிவந்தவள் சுற்றி எறிந்த மெழுகு திரியின் ஒளியில் தேவதையாக தெரிந்தாள்.

அவளின் ஒளி நிறைந்த முகத்தில் அடங்காமல் முத்தம் வைத்தவன் மெல்ல மெல்ல கீழிறங்கினான். அவனை கீழிறங்க விடாமல் அவனை பற்றிக் கொள்ள பாத்தாள் சங்கவை.

அவளை ஏமாற்றி விட்டு அவளின் மார்பில் முகம் புதைத்தவன் அவளின் நறுமணத்தை நுகர ஆரம்பிக்க கூச்சம் கொண்டு அவனை இழுத்து தன் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.

அவளின் கழுத்துக்கு வந்தவன் அவளது உணர்வுகளை மெல்ல மெல்ல வசமிழக்க வைக்க, அவள் முற்றிலும் அவன் வசமாகிப்போனாள்.

அடுத்து என்ன நடந்தது என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் அவனிடமே மயங்கி இருந்தாள் சங்கவை. அவளின் மயக்கத்தை தனக்குள் எடுத்துக் கொண்டவன் சிறிது சிறிதாய் அவளை முற்றிலும் சிதறடிக்க ஆரம்பித்தான்.

அவனது விரல்கள் அவளுடம்பில் ஓவியம் வரைய ஆரம்பிக்க கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். அதற்கும் விடாதவன் தன்னையே பார்க்க வைத்து அவளுக்கு தண்டனை கொடுக்க காதல் அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து மோகம் முற்றிலும் உருவெடுக்க ஆரம்பித்தது.

சேராத கனவு கை சேர்ந்த இன்பத்தில் இருவரும் மோகத்திலும் தாபத்திலும் ஒருவரை ஒருவர் நாடி இரவை பகலாக்கிக் கொண்டு  இருந்தார்கள்.

Loading spinner
Quote
Topic starter Posted : April 11, 2025 10:27 am
(@gowri)
Estimable Member

இதிலும் நீங்க ஏதும் சொல்லவே இல்ல ரைட்டர்🙄🙄🙄🙄

Aww செஞ்சு 🙈

Loading spinner
ReplyQuote
Posted : April 11, 2025 12:36 pm
(@mathy)
Eminent Member

அவ டொனேட் பண்ணினது தான் காரணமா 🤔

நைஸ் அப்டேட் 🧡💚

Loading spinner
ReplyQuote
Posted : April 11, 2025 5:58 pm
(@mrsbeena-loganathan)
Trusted Member

காரணத்தை சொல்லாமலே காதலோடும் காமத்தோடும் கலந்து விட்டனர்..... 🤩🤩🤩🤩

Loading spinner
ReplyQuote
Posted : April 11, 2025 8:00 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top