பிரைசூடனுக்கு அனுவை பிடிக்காததால் அவளோடு வந்தது தெரிந்தால் கண்டிப்பானோ என்று பயந்து ஆராவும் சொல்லவில்லை.
பிறைசூடன் கலைநயமாக சில சுடிதாரை எடுத்துக்கொடுத்தான். எல்லாமே அழகாய் இருந்தது. அவனே பணம் செலுத்தி விட்டு அவளை கையோடு கூட்டி செல்ல
“இல்ல மாமா நானே பாக்குறேன்” என்று சொல்ல அதை சிறிதும் சட்டை செயாமல் அவளை தன்னோடு அழைத்து சென்றான்.
கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஆகியது அவர்கள் துணி எடுக்க. அதனால் அனு சென்றிருப்பல் இந்நேரம் என்று எண்ணினாள். ஆனாலும் அவளை தேடினாள் ஆரா. அவள் கண்ணில் எங்கும் தென்பட வில்லை.
சரி எதுக்கும் இருக்கட்டும் என்று எண்ணி அவளுக்கு ஒரு குறுந்தகவலை மட்டும் அனுப்பி வைத்தாள். “நான் வீட்டுக்கு போறேன்” என்று.
அனுவோ எங்கும் செல்லாமல் இருவருடைய நடவடிக்கையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவர்களது நெருக்கம் அவளை தீயில் குளித்து வெந்நீரில் புரட்டி போட்டது போல இருந்தது.
பிறைசூடன் நேரே வீட்டுக்கு செல்லாமல் அவளை உணவு உன்ன அழைத்து சென்றான். இருவரும் உணவை உண்டுவிட்டு தனியாக இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து அவளுடனே அமர்ந்து அவள் எச்சில் பட்டதை எந்த விகல்ப்பமும் ஆரா அறியாமல் உண்டான். அவனுக்கு தான் தெள்ளதெளிவாய் புரிந்து இருந்ததே.
அவன் மனம் ஆராவை நாடுகிறது என்று. ஆனால் தன் ஆர்வத்தை ஆராவின் படிப்பை நினைவில் கொண்டு அவளிடம் எதையும் காண்பித்துக்கொள்ள வில்லை.
பின் தொடர்ந்து வந்த அனுவிற்கு அவனது செயலில் இருந்த காதல் புரிந்து போனது.
பிறைசூடனின் காதல் ஆராவுக்கு கிடைக்க கூடாது என்று அப்போதே திட்டம் போட்டாள்.
ஒரு வழியாய் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தார்கள். பிறைசூடன் ஆராவை இறக்கி விட்டுட்டு தன் இல்லத்துக்கு திரும்ப, அனு உள்ளே நுழைந்த ஆராவை வன்மத்துடனும் குரோதத்துடனும் பார்த்தாள்.
ஆசையாய் ஆரா சூடன் வாங்கி கொடுத்த துணிகளை அலமாரியில் வைத்து விட்டு தன் வேலைகளை செய்தால். அப்போது எதுவும் செய்யாமல் விட்டு விட்டாள் அனு.
பொங்கல் அன்றைக்கு பிறைசூடன் எடுத்து கொடுத்த துணியை அணியலாம் என்று எண்ணி அவன் எடுத்து குடுத்த துணியை எடுத்து உடுத்த ஆராம்பிக்க அந்த துணி சல்லடை சல்லடையாக துணி முழுவதும் அவ்வளவு ஓட்டை. பார்த்தவளின் நெஞ்சம் அழுகையில் குழுங்கியது.
இதுக்கு காரணம் யார் என்று நன்றாக தெரியும் என்பதால் ஆரா எதுவும் அவளிடம் கேட்கவில்லை.
அவ்வளவு வன்மமா என் மீது. என்று கவலை வேறு பிறந்தது அவளுக்கு.
பொங்கல் அன்று பிறைசூடன் அவனின் வீட்டிற்கு ஆராவை கூட்டி செல்வதற்காக வந்தவன் அவள் வேறு உடை போட்டு இருப்பதை கண்டு மனம் சுணங்கினாலும் வேறு எதுவும் கேட்டகவில்லை. அவனது மௌனமே அவளுக்கு புரிந்தது அவன் கோவமாய் இருப்பதை. ஆனால் அதை விட துணி இருந்த கோலத்தை சொல்லி அனுவின் மீது இன்னும் கோவத்தை வரவைக்க வேண்டாம் என்று அவனிடமிருந்து மறைத்துவிட்டாள்.
ஒரு துணி விசயத்திலே அனுவின் அணுகுமுறை இப்படி இருக்கையில் மொத்தமாய் அதுவும் அவளே வாய் திறந்து கேட்டு பிரைசூடனை திருமணம் செய்ய கேட்டு இருக்கிறாள். கேட்டும அதை கிடைக்காமல் செய்த பிரைசூடனையும் தன்னையும் சும்மா விடுவாளா.. கண்டிப்பா எதாவது செய்வாள் என்று எண்ணி இருந்தாள் ஆரா.
ஆனால் அனு எந்த மாதிரியும் தன் கோவத்தை வெளிபடுத்தாமல் அழுத்தமாய் இருந்ததை கண்டு ஆராவின் மனம் ஒவ்வொரு கணமும் படபடத்து பயந்துகொண்டு இருந்தாள்.
திருமணம் செய்வதற்கு தேவையான பொருட்கள், உடைகள் என்று எல்லாருமே ஒன்றாய் கூடி இரு ஜோடிகளுக்கும் எடுத்தார்கள். அப்போதெல்லாம் ஒன்னும் செய்யா வில்லை அனு.
ஆனால் அப்போது செய்யாமல் விட்ட வில்ல தனத்தை திருமண நாளன்று தன் கோர முகத்தை காட்டினாள் அனு.
சபையில் உற்றவர்கள் பெற்றவர்கள் வேண்டியவர்கள், நண்பர்கள் என்று சுற்றமும் நட்பும் சூழ வந்து இருந்த மனிதர்களின் முன் தன் சாணக்கிய தனத்தை காட்டினாள்.
நாளை திருமணம் என்னும் வேலையில் இன்று பெண் அழைப்புக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து இருந்தார்கள். பெண்கள் இருவரும் தங்களை அழகுற அலங்கரித்து தங்களது அறையில் காத்திருந்தார்கள். பின் அவர்களை வள்ளி வந்து அழைக்க இரு பெண்களும் கீழே சென்றார்கள்.
சாமி அறைக்கு சென்று விளக்கேத்தி சாமி கும்பிட சொல்ல அனு முன்னாள் சென்றாள் ஆராவை முந்திக்கொண்டு. ஆரா அவளது வேகத்தில் பின் தங்கினாள்.
அனு சாமி கும்பிட்டு வெளியே வரும்போது ஆரா உள்ளே போக முனைய அவளை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அவளுக்கு முன் சென்று தனி காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ஆரா அதன் பிறகு சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது சரியாக பிறைசூடனின் கார் வந்து நின்றது. எல்லோரும் என்ன ஏது என்று பார்க்க பிறைசூடன் காரில் இருந்து இறங்கி ஆராவை தன் கைகளில் தூக்கிக்கொண்டு காரில் ஏற்றிவிட்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.
அவனது அந்த செய்கை பெரியவர்களை சற்றே சங்கட படுத்தினாலும் அவனை தாண்டி எதுவும் செய்ய முடியாமல் அமைதி காத்தனர்.
பிறைசூடனின் செயலை கண்ட அனுவுக்கு பத்திக்கொண்டு வந்தது. தான் வாழ வேண்டிய வாழ்க்கையை ஆரா வாழ்ந்து கொண்டு இருப்பதை காண காண எரிச்சல் மேலும் அதிகரித்தது.
போதாதற்கு அவள் அம்மாவுடைய சொந்தங்கள் வேறு அவளை ஏற்றி விட்டுக்கொண்டு இருக்க தான் எடுத்த முடிவு மிகவும் சரியே என்று பொல்லாத திட்டத்தை இன்னும் நுணுக்கமாக செயல் படுத்த முடிவெடுத்தாள்.
அவளது செயலை பிறைசூடன் முறியடிப்பானா இல்லையா என்று பொறுத்திருந்து தான் காண வேண்டும்..
அன்றைய இரவு பொழுது மணமக்களுக்கு வரவேற்ப்பு வைக்க நான்கு ஜோடிகளும் மேடையில் நின்றார்கள். ஆராவும் சூடனும் மகிழ்வுடன் நிற்க, அனுவும் பிரகாஷும் எந்த வித மகிழ்வும் இன்றி எனக்கு என்ன என்பது போல நின்றிருந்தார்கள்.
சித்ராவுக்கு மனம் எங்கும் ஏதோ சொல்லாத வலி எழுந்தது. ஏன் என்று காரணம் புரியவில்லை. கடவுளே எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது. என் மக்களுக்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்று அந்த தாய் உள்ளம் வேண்டியது.
என்ன வேண்டினாலும் அவரின் படபடப்பு நிற்க வில்லை. கடவுள் இறக்கத்துடன் தன்னை பார்த்துக்கொண்டு இருப்பதை பாவம் அவர் அறியவில்லை.
அன்றைய இரவு பொழுது அழகாக முடிய சற்றே கோரத்துடன் எழுந்தது அடுத்த நாள் சூரியன்.
மண அலங்காரம் முடிய அய்யர் பெண்களை வர சொல்ல இருவரும் சபையை வணங்கி முகுர்த்த புடவையை வாங்கிக்கொண்டு சென்று அழகான கூர புடவையில் வந்து தங்களின் இணை அருகில் அமர இருந்த நேரம் அனு அமராமல் ஏதோ பேச ஆரம்பிக்க அவள் அமராமல் தான் எவ்வாறு அமர்வது என்று தயங்கிக்கொண்டு ஆராவும் நிற்க ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்த அனு தன கைகளில் நீட்டி இருந்த குறுவாளை காண்பித்தாள் சபையினரின் முன்.
மணபெண் கைகளில் இருந்த கத்தியை கண்டு சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள
“என்னமா இது விளையாட்டு.. கத்தியை முதலில் கீழே போடு” என்று பல குரல்கள் எழ எதற்கும் செவி சாய்க்காமல்
“இப்போ இந்த மேடையில எனக்கு மட்டும் தான் அதாவது எனக்கும் பிரகாஷ்க்கு மட்டும் தான் திருமணம் நடக்கணும்... அதை மீறி” என்று ஆராவை பார்த்து “இன்னொரு கல்யாணம் இங்கே நடந்தது என்றால் என்னை பிணமா தான் பார்பீங்க” என்று கத்தியை தன் கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்ள தயாராய் இருந்தவளை கண்டு உயிர் துடித்தது ஆராவுக்கு.
இவளுக்கு நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு இப்படி என்னை ஒவ்வொரு நாளும் சித்தரவதை பண்ணுகிறாள் என்று ஆற்றாமையாக வந்தது. குனிந்து பிரைசூடனை பார்த்தாள் ஆரா... அவனது கண்கள் நெருப்பு கங்கு போல அவ்வளவு உக்கிரத்துடன் அனுவை முறைத்துக்கொண்டு இருந்தது.
சித்ரா எது நடக்க கூடாதுன்னு இப்போது வரை பயந்து கொண்டு இருந்தாரோ அது நடந்துக்கொண்டு இருப்பதை பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது.
தடையில்லாமல்
திருமணம் வரை வந்து
திருமணத்தில் தடையாய்
தன் கழுத்தில் கத்தி வைத்து
திருமணத்தை நிறுத்த
திட்டம் போட்டு இருக்கிறாள் அனு.....
அடிப்பாவி அனு😬😬😬😬😬
கல்யாணம் நடக்களையா என்ன???
அப்ப அந்த குழந்தை????
nice