“நல்லா தூங்குனியா?” என்று கேட்டான். தமிழ் தலையை அசைக்க,
“அப்போ வந்து படு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
திக்கென்று வந்தது இவளுக்கு.
தமிழ் தன் காதில் விழுந்தது சரி தானா என்று திகைத்துப் போனாள்.
“எது சொன்னாலும் இப்படி திரு திருன்னு முழிக்காம முதல்ல போய் சொன்னதை செய்டி.. சரியான கூமுட்டையை என் தலையில கட்டி வச்சு இருக்கான் அமைச்சன்” என்று முறைத்தவன் தலையை அழுந்த கோதி கொண்டு எதையோ யோசித்தான்.
அவனது பேச்சில் உள்ளம் பட்டுப் போனது. அவளை இப்படி கூமுட்டை என்றெல்லாம் யாரும் திட்டியதே இல்லை. எவ்வளவு இழிவு படுத்தா முடியுமோ அந்த அளவுக்கு அவனை இழிவு படுத்தினான் அகத்தியன். அவனிடம் மேற்கொண்டு கடும் சொற்களை கேட்க விரும்பாமல் படுக்கையில் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வந்தவன் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான்.
“எப்போ பிரீயட்ஸ் டேட்?” என்று கேட்டான்.
அவள் நாளை சொல்ல, “ஓகே” என்றவன்,
“ரெகுலரா இர்ரெகுலரா?”
“ரெகுலர் தான்” என்றாள். அதன் பிறகு அவள் மீதிருந்து எழுந்துக் கொள்ளவே இல்லை. அவனது தேவை முழுவதையும் தீர்த்துக் கொண்ட பிறகு, “சீக்கிரமா பிள்ளை உண்டாகிடு. இல்லன்னா உன்னை ரொம்ப காயப்படுத்துவேன்” என்று சொன்னான். அவள் மேலும் திகைத்து போனாள்.
“ஹாங்” என்றாள்.
“சரியான மக்கு மட சாம்பிராணி” வாய்க்குள் முணகியவன் அவளை விடாமல் புசித்தான். ஒருவழியாக அடுத்த நாள் காலையில் தான் வெளி உலகையே பார்த்தாள் தமிழ்.
அப்படி வந்த மகளை தாய் தாமரை முறைத்து பார்த்தார். அவரது பார்வையில் இவளுக்கு பயம் வர தலையை கீழே குனிந்துக் கொண்டாள்.
“ஏய் அறிவில்ல.. உனக்கு எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் அவன் கூட வலுக்கட்டாயமா படுக்காத, அவனோட இச்சைக்கு பலியாடு ஆகாதன்னு. நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு... புது சுகம் கண்ட உடனே அவனோட ... ” என்று அவர் முடிக்கும் முன்பே,
“அம்மா” என்று அலறிவிட்டாள் தமிழ்.
“ப்ச்.. போ போய் உன்னை கண்ணாடியில பாரு.. நீ அவனோட இருந்த லட்ச்சனத்தை. வந்துட்டா பெருசா... குடும்பம் நடத்த சொல்லி குடுத்தா கத்துக்கமா மக்கு மாதிரி இருந்துட்டு என்கிட்டே வாய் பேசுறா..? ஒண்ணுத்துக்கும் உதவாத செருப்பு” என்று அவளை திட்டி விட்டு வெளியே கிளம்பி விட்டார்.
இது வரை மகளை அப்படி பேசாத தாய் இன்றைக்கு தன்னோ செருப்போடு ஒப்பிட்டு வீசுவதை கேட்ட தமிழுக்கு இன்னும் மனம் புண்ணாய் போனது. “நான் எதுக்குமே உதவ மாட்டனா?” அவளுள் மிக எளிதாக தாழ்வுமனப்பான்மை ஒட்டிக் கொண்டது.
அதற்கு ஏற்றார் போல தான் அகத்தியனும் அவளை பேசி வைத்தான்.
“முட்டாள், கூமுட்டை, வாடி கட்டுன முட்டாள், அறிவில்ல, ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லை, நீ எல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா இருக்க, ஒண்ணுமே தெரியல, நல்லா மேக்கப் போட்டு புருசனை கைக்குள்ள போட்டுக்க பார்க்குறியா? படிச்சு இருக்கியா? இல்ல காசுகுடுத்து டிகிரி வாங்குனியா” ன்னு பல பேச்சுக்கள்.
இதெல்லாம் கூட ஓரளவு கேட்டுக் கொள்வாள்,
“உடம்பு வலிக்கிது இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் குடுங்க” என்று தமிழ் தப்பி தவறி கேட்டு விட்டால் அவ்வளவு தான்.
“ஏன் உன் அம்மா என் கூட படுக்க வேணான்னு சொன்னுச்சா, இல்ல வேற ஒருத்தனை செட் பண்ணி குடுத்துதுச்சா?” விச ஊசியாய் அவளை குத்தி குத்தி எடுத்தான்.
இப்படி ஒரு பேச்சை கேட்ட பிறகு எங்கிருந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது. அமைத்தியாய் போய் படுக்கையில் படுத்துக் கொள்வாள்.
பாட்டி சொன்ன சொல் தான் அவளது காதில் விழுந்துக் கொண்டே இருந்தது.
“அமைதியா போ பாப்பா... பொறுத்தார் பூமி ஆள்வார். கேட்டு இருக்கல்ல. நீ உன் பொறுமையாள தான் எல்லோரையும் ஜெயிக்கணும்” என்று அவர் சொல்லி இருக்க தன்னை காயப்படுத்தும் கணவனை பொறுத்துப் போனாள். அசிங்கப்படுத்தும் தாயையும் பொறுத்துப் போனாள்.
தோழிகளிடம் கூட பகிர முடியாத அளவுக்கு அவளின் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக சென்றது.
திருமணம் ஆகி மூன்றாவது நாள், அகத்தியன் தமிழை நெருங்க,
“பாட்டி குல தெய்வ கோயிலுக்கு போறதுன்னால இன்னைக்கு இரவு சுத்தமா இருக்க சொன்னாங்க ங்க” குரலே வராமல் அவள் சொல்ல,
அவளை முறைத்து பார்த்தவன்,
“ஏன்டி உனக்கு தான் அறிவு இல்லன்னா உன் கிழவிக்கு அறிவு இல்லையா? இப்ப தானே கல்யாணம் ஆகி இருக்கு... அதுக்குள்ள கோயிலுக்கு போகணும்னு சொல்லுது. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லு...” என்றவன் வலுக்கட்டாயமாக அவளை சேர்ந்தான்.
“சாமி விசயம் ங்க... ப்ளீஸ்” என்று அவள் தடுமாற,
“உனக்கு முதல் சாமியே நான் தான். என்னை முதல்ல கும்பிடுடி. பிறகு மத்த சாமியை கும்பிடலாம்” எகத்தாளம் பேசினான்.
அவனது பேச்சில் இன்னும் புண் பட்டு போனவள் அதன் பிறகு வாயையே திறக்கவில்லை.
அடுத்த நாள் பாட்டியிடம் அவள் வந்து விசயத்தை சொல்ல,
“இந்த ஆம்பளைங்களே இப்படி தான்... எது எதுல அவங்க உரிமையை காட்டுறதுன்னு விவஸ்த்தை கிடையாது” என்று சிரித்தார்.
“என்ன பாட்டி சொல்றீங்க?”
“ஆமாம் பாப்பா... என்னை விட உனக்கு சாமி முக்கியமா போயிடுச்சான்னு பொஸசிவ்ல பொங்குவாங்க. உன் புருசனும் அந்த ரகம் தான்” என்றார்.
தமிழுக்கு ஒரு வேலை இது உண்மையா இருக்குமோ என்று தோன்றியது. அதனால் அன்றைக்கு இரவு அவனிடம் பேச எண்ணினாள்.
விளக்கை அனைத்து விட்டு அவளிடம் வந்தான் அகத்தியன். விளக்கை அனைத்தாலே அடுத்து அவளை தான் அணைப்பான் என்று புரிந்தவளுக்கு,
“ஏங்க நாம கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?” என்று ஆசையாக விடிவிளக்கின் ஒளியில் அவனது முகத்தை பார்த்தாள்.
அதை கேட்டவனின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.
“ஓ.. மேடம்க்கு பேசணுமா? பேசலாமே...” என்று நக்கலுடன் அவளுக்கு அருகில் அமர்ந்தவன்,
“ஆமா இந்த வார சென்செக்ஸ் நிலவரம் என்ன? ஏதோ அந்த கம்பெனி சேர்ஷ் டவுன் ஆகிடுச்சாமே.. ஆனா போன வாரம் வரைக்கும் மார்கெட்ல அது தான் டாப் லெவல்ல இருந்ததா சொல்றாங்க... உனக்கு அதை பத்தி எதுவும் ஐடியா இருக்கா?” என்று சீரியஸாக அவன் கேட்க தமிழ் முழி பிதுங்கி போனாள்.
அவளுக்கு சென்செக்ஸ் மட்டும் தான் தெரியும்... அதுல உள்ள நிலவரம் கலவரம் பத்தி எல்லாம் தெரியாது. அவள் தெரியாத பார்வை பார்த்ததில்,
“சரி அந்த டாபிக் வேண்டாம் விடு” என்று பெரிய மனசு பண்ணியவன்,
“ஆமா நம்ம இந்திய மணிக்கும் டாலருக்கும் எவ்வளவு ரூப்பீஸ் வித்யாசம், எதனால நம்ம இந்த மணி வேல்யூ இவ்வளவு கம்மியா இருக்கு” என்று அவன் மேலும் கேட்க, தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவள் படித்தது எல்லாம் இங்க்லீஷ் லிட்ரேச்சர். ஒன்லி நாவல்ஸ், போயெம், கிராமர் இது மட்டும் தான். ஆனால் இவன் கேட்கும் கேள்விகள் எல்லாமே ஒவுட் ஆப் சிலபஸ்.
அவள் பாவமாய் அவனை பார்க்க,
“அப்போ இதுவும் தெரிலையா? சரி விடு.. நாம இந்திய பொருளாதரத்தை அலசி பார்க்கலாம்” என்று அவன் ஆரம்பிக்க,
“இல்ல எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது..” என்றாள் தலையை குனிந்துக் கொண்டு. அவளை ஏளனமாக பார்த்தவன்,
“ஒண்ணுமே தெரியல... மக்கு மட சாம்பிரானியா இருக்க... அப்புறம் எதுக்குடி பேசலாம்னு கூப்பிட்ட... நான் உன்னை மாதிரி வடிகட்டுன முட்டாளை பார்த்ததே இல்ல... எதுவும் தெரியாது... ஆனா மேக்கப் மட்டும் போட்டு நல்லா புருசனை கைக்குள்ள போட்டுக்க மட்டும் தெரியும் இல்ல...” என்று அவள் போட்டு இருந்த மேக்கப்பை சுட்டி கட்டினான்.
அவள் வேண்டாம் என்று தான் சொன்னாள். ஆனால் பாட்டி தான் மாலை நேரமே தலையில் நிறைய பூவை வைத்து விட்டு, “புருசனோட கண்ணுக்கு லட்ச்சனமா இருக்கணும் கண்ணு.. அப்போ தான் புருசன் உன்னை சுத்தி சுத்தி வருவான்” என்று சொல்ல அவரை தடுக்க முடியவில்லை.
“கொஞ்சம் கூட ஜெனரல் நாலேட்ஜே இல்ல.. ஆனா ஆம்பலையை எப்படி மயக்குறதுன்னு நல்லா கத்து வச்சு இருக்க.. அது தானே தாமரை பொண்ணா கொக்கா... ஆத்தாவை போல தானே பொண்ணும் இருப்பா. உங்க அம்மா உன்னை நல்லா தான் ட்ரைன் பண்ணி இருக்கு” என்று எகத்தாலம் பேசியவன் அவளை நாட, அவனுக்கு இசைந்து கொடுத்தவள் தன் கண்ணீரை அவனுக்கு காட்டாமல் தலையணையில் புதைத்துக் கொண்டாள்.
அகத்தியனோடு அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் பெரும் அவமானம் மட்டும் தான். உயிரை சுட்டு பொசுக்கும் வார்த்தை குவியல்கள் தான். இப்படி எல்லாம் கட்டிய மனைவியை பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று அவன் மூலம் அனுபவத்தில் அறிந்துக் கொண்டாள்.
தமிழ் வாயை திறந்தாலே ஏட்டிக்கு போட்டியாக தான் பதில் சொல்வான். அதுவும் அவளை எவ்வளவு இன்சல் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு இன்சல் செய்வான்.
ஆரம்பத்தில் அறைக்குள் மட்டும் பேசியவன், நாட்கள் போக போக அவளின் வீட்டு ஆட்கள் முன்னிலையிலும் அவளை அசிங்கப்படுத்தினான்.
விக்கித்துப் போனாள் தமிழ். தாமரை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. தந்தையோ சுத்தம். அண்ணன் காரன் அதற்கு மேல். தாத்தாவும் பாட்டியும் தான் நிலை குலைந்துப் போனார்கள்.
“கண்ணு என்ன மாப்பிள்ளை ஒரு மாதிரி பேசுறாரு...” அதிர்ச்சியுடன் தனிமையில் விசாரித்த பெரியவர்களிடம்,
புன்னகையுடன் “அதெல்லாம் சும்மா தாத்தா... அவருக்கும் எனக்கும் ஒரு பெட் பாட்டி. அதுல அவர் ஜெயிக்க தான் இப்படி எல்லாம் பண்றாரு..”
“என்ன பெட் தங்கம்” ஆர்வத்துடன் கேட்டார் பாட்டி.
“அதுவா எல்லோர் முன்னிலையிலும் என்னை திட்ட முடியுமான்னு நான் அவர் கிட்ட பெட் கட்டினேன். அது தான் இப்படி பேசுறாரு. அதோட அப்பா கோவப்படுவாரா இல்ல அம்மா முதல்ல கொவப்படுவாங்களான்னு பார்க்க தான். ஒரு வாரம் இந்த விளையாட்டு தொடரும் தாத்தா” என்று கண் சிமிட்டி தமிழ் சொல்ல,
“அப்படியா? அப்ப சரி. ஆனாலும் இந்த விளையாட்ட இந்த ஒரு வாரத்தோட நிறுத்திக்கோங்க. பார்க்கவே நல்லா இல்ல” என்றார்கள் இருவரும். தலையை ஆட்டி விட்டு வந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை துடைத்துக் கொண்டே வர, அகத்தியன் உதட்டை வளைத்து ஏளனமாய் ஒற்றை புருவத்தை உயர்த்தி,
“நல்லா சமாளிக்கிற போல” அவளை கடந்து சென்று விட்டான். அடுத்து தொடர்ந்த அத்தனை நாட்களும் அவளை மேலும் மேலும் காயப்படுத்தி ரணப்படுத்தி ருசி கண்டான் அகத்தியன்.
“ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க?” என்று பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டாள்.
அகத்தியன் வாயையே திறக்கவில்லை. அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் போய் விட்டான். அவனிடம் எந்த பதிலும் வாங்க முடியவில்லை அவளால். அவள் ஆசையாக எண்ணி இருந்த கல்யாண வாழ்க்கை அவளை முற்றிலும் ஏமாற்றி போட்டது. கல்யாண வாழ்கையே கருகி போனது போல ஆனது.
பக்கி பயலே😬😬😬😬😬
இந்த பாட்டியை 🤦🤦🤦🤦🤦, என்னமா இப்படி பிள்ளையை வளர்த்து வெச்சி இருக்காங்க 😤😤😤😤😤
ஏன்னு கேட்டத்துக்கு பதில் இல்ல இவன் கிட்ட ..
அப்ப இவ அம்மா, அப்பா நாலா ஏதும் affect ஆகி இருப்பானோ?????