பசியில் மயக்கமே வந்து விடும் போல இருந்தது தமிழுக்கு. அது போதாது என்று தேகம் சரியான ஓய்வு இல்லாமல் நடுக்கம் ஏற்பட கண்களை அழுந்த மூடி தன் மேல் இருந்தவனை உணர ஆரம்பித்தாள். ஆனால் அது அவளால் முடியவில்லை. அப்படியே நினைவு தப்பும் நிலையில் அவள் முகத்தில் சில்லென்ற நீர் பட்டது.
சட்டென்று விழிகளை திறந்து பார்த்தாள்.
“மயக்கம் போடாம போய் ஏதாவது சாப்பிட கொண்டு வர சொல்லு..” என்று இன்னொரு அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
தேர் வந்த பாதையாய் போன தன் நிலையை கண்டு விழிகளில் நீர் நிறைந்தது. துடைத்துக் கொண்டவள் குளிக்க போகும் முன்பு கீழே அடுப்படிக்கு போன் போட்டு இருவருக்கும் வேண்டிய உணவை எடுத்து வர சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவனது கருணை மனதை பார்த்து நெஞ்சம் கசந்துப் போனது. தாய் சொன்னதற்காக தன்னை போட்டு பாடாய் படுத்தி எடுக்கும் கணவனின் செயலில் முதல் நாளே மனம் விண்டுப் போனது.
தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திருமணம் ஆனால் முதல் ஒரு வருடத்திற்காகவாவது அன்னியோன்யமாக நகமும் சதையுமாக இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறாள். ஆனால் இங்கு முதல் நாள் கூட தன்னிடம் இளக்கமாக இல்லாமல் போன கணவனை எண்ணி மனம் வெதும்பி போனாள்.
“ஏன்?” என்ற கேள்வி மட்டுமே அவளுள் தேங்கி இருந்தது.
“ஒரு வேலை என்னை பிடிக்கலையா?.. இல்லையே எங்கயோ பார்த்து பிடிச்சு போனதுனால தானே இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்ததா சொன்னாங்க. பிறகு ஏன் இப்படி..” என்ற பொழுதே கதவு தட்டப் பட, வேகமாய் குளித்து விட்டு வெளியே வந்தாள்.
“எவ்வளவு நேரம்டி” முறைத்தவன் உள்ளே நுழைந்துக் கொண்டான்.
கொஞ்சம் தாமதம் ஆனதுக்கு கூடவா இப்படி கோவப்படுவாங்க... மிரண்டு போனாள். இவனது குணமே இப்படி தானா? இல்லை என்கிட்டே மட்டும் இப்படியா என்று புலம்பி தள்ளினாள்.
கண்ணாடி முன்பு மேக்கப் போட ஆரம்பிக்க,
“எப்போ பாரு மேக்கப் போடுறது தான் உன் வேலையா? வேற ஒண்ணுமே தெரியாதா உனக்கு” என்று கண்ணாடி முன்னாடி அமர்ந்து இருந்தவளை கதவு திறந்து கடுப்புடன் பார்த்தான் அகத்தியன்.
தமிழ் விக்கித்து போனாள்.
சட்டென்று எழுந்து நின்று அவனை பார்த்தாள்.
“இப்படி மரம் மாதிரி நிக்காம வந்து குளிக்க வை... ஒண்ணுத்துக்கும் லாய்க்கு இல்ல... எல்லாத்தையும் சொல்லி சொல்லி தான் செய்ய வேண்டி இருக்கு” என்று அவன் மேலும் திட்ட, முணுக்கென்று கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
“சாரி” என்றவள் கையில் இருந்த லிப்ஸ்டிக்கை அப்படியே போட்டுவிட்டு அவனோடு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
“உன்னை நீ அழகா வச்சுக்கணும் கண்ணு. முதல்ல நம்ம பேசுறதை விட நம்ம தோற்றம் தான் பேசணும். நீ உடுத்தும் ஆடை உனக்கு பொருத்தமா இருக்கணும். உன்னை கவர்ச்சியா காட்டுறதை விட கும்பிடுற மாதிரி இருக்கணும். உன் பிரெண்டு அதை சொன்னாளுங்க இதை சொன்னாளுங்க இதை சொன்னாளுங்கன்னு இடுப்பு தெரியிற மாதிரியும் நெஞ்சுக்குழி, தொப்புள்குழி தெரியிற மாதிரியும் உடை உடுத்த கூடாது. கண்ணியமான தோற்றத்துல தான் இருக்கணும். கொஞ்சமா மேக்கப் போட்டுக்க, அதுக்குன்னு அள்ளி பூசாத, எதுலையும் மிதமா இருக்குறது நல்லது. என்ன நான் சொல்றது புரியுதா தங்கம்?” என்று அவளுக்கு சொல்லி குடுத்தார் பாட்டி. அதை தான் அவளும் இன்று வரை கடைபிடித்துக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால் கணவன் சிறிதாய் செய்துக் கொண்ட ஒப்பனைக்கே மனதை புண் படும் படி பேசியது அவளை பெரிதாய் தாக்கியது. தன் உள்ளத்து வேதனையை உள்ளுக்குள் அழுத்திக் கொண்டு அவனை குளிக்க வைத்தாள்.
ஆனால் அவனை வெற்று மேனியாய் பார்ப்பது அவளுக்கு பெரும் கூச்சத்தை குடுக்க, தயங்கியபடியே அவனுக்கு சோப்பு போட்டு விட்டாள். அவளது மெதுவான செயலை கண்டு கடுப்பானவன்,
“ஏய் சோம்பேறி... சோப்பு கூட போட தெரியாதா? இப்படி தான் தடவிட்டு இருப்பியா..? அழுத்தி போடணும்னு தெரியாதா?” என்று அவன் முறைக்க, மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் எருமை மாட்டை தேய்த்து குளிக்க வைப்பது போல அவள் பரபரவென்று தேய்க்க அது தான் பிடித்ததோ என்னவோ அந்த முரட்டு உடலுக்கு.
அகத்தியன் எதுவும் சொல்லவில்லை. தமிழுக்கு தான் கை விரல்கள் எல்லாம் வலி எடுத்தது. அவனுக்கு அழுத்தி அழுத்தி தேய்த்து விட்டதில். அவனது தேகம் அந்த அளவு முரட்டு தனமாக இருந்தது.
பூ போன்ற பெண்ணவள் அவள். அதிர்ந்து நடக்க கூட மாட்டாள். ஆனால் அவளை கடுமையான சொற்களால் திட்டி, மனதை நோகடித்து, போதாதற்கு உடலை வேறு காயம் செய்து என அவளை சுழற்றி அடித்தான் ஒரே நாளில்.
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவள் அமைதியாக தான் இருந்தாள். அவள் பாட்டி சொன்ன அறிவுரைகள் அப்படி.
“குடும்பம் என்கிற கோட்பாட்டை ரொம்ப எளிதா உடைச்சு போட்டுட்டு போயிடலாம். ஆனா அதை மீண்டும் உருவாக்குறது ரொம்ப ரொம்ப கடினம். இந்த குடும்பம் என்கிற கூட்டை இப்ப எல்லாம் ரொம்ப சுலபமா உடைச்சு போட்டுட்டு போயிடுறாங்க... சிலரால் மட்டும் தான் இந்த குடும்பம் என்கிற அமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.. அதை நீயும் உயிர்ப்புடன் வச்சுகணும் கண்ணு. அதுக்கு பல தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கு. நீ செய்யணும்” என்று அவர் அறிவுறுத்தி இருக்க, அதை அப்படியே மனதில் போட்டு விதைத்துக் கொண்டாள் தமிழ்.
அதன் வெளிப்பாடு தான் கணவன் எவ்வளவு படுத்தி எடுத்தாலும் தாழ்ந்து போகிறாள். இனியும் இப்படி தான் இருப்பாள் போல..
கணவனை குளிக்க வைத்து விட்டு வெளியே வர,
“சட்டை எடுத்து வா” என்று அடுத்த வேலை சொன்னான். அதையும் செய்து வைத்து விட்டு நகர,
“பட்டன் யாரு போட்டு விடுவா? உங்க அப்பன் வருவானா அதை போட..” சுல்லேன்று அவன் கேட்க,
“இதுக்கு எதுக்கு அப்பாவை இழுக்குறீங்க... நீங்க சொல்லி குடுங்க நான் எல்லாத்தையும் செய்துடுறேன்” என்றவள் அவனுக்கு சட்டையை போட்டு விட்டு பட்டனையும் போட்டு விட்டாள்.
“அப்படி தான்டி பேசுவேன். உங்கப்பனை இல்லை உன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் பேசுவேன்.. அதுவும் குறிப்பா உன் ஆத்தாகாரியை” என்று அவன் பல்லைக் கடிக்க,
வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள் தமிழ். ஏனெனில் அவனை வைத்துக் கொண்டே தாய் பேசிய பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சமும் சரி இல்லையே. பிறகு எந்த கணவனுக்கும் கோவம் வர தானே செய்யும்.. எண்ணியவள் அமைதியாகிப் போனாள்.
“சாப்பாடு எடுத்து வை” என்றவன் ஜம்பமாக அமர்ந்து உண்ண, தமிழை ஒரு வார்த்தை சாப்பிட சொல்லி அகத்தியன் சொல்லவில்லை.
பசியோடு அவனுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தாள். அவன் எல்லாவற்றையும் ரசித்து ருசித்து சாப்பிட இங்கே இவளுக்கு பெருங்குடலை சிறுகுடல் தின்று விடும் நிலையில் இருந்தாள். ஆனாலும் நாகரீகமாக தன் பசியை அடக்கிக் கொண்டு அவனுக்கு எல்லா சவரட்னையும் செய்தாள்.
யூஎஸ் ல மாஸ்டர் டிகிரி செய்ததா சொன்னார்கள். ஆனால் அகத்தியன் வாயை திறந்தாலே லோக்கல் பாஷை தான் தெரிக்கிது.. மிருதுவாக நடத்தக் கூடிய காதலுடன் கை பிடித்து வாழ ஒரு கணவனை ஆசை பட்டாள் தமிழ். ஆனால் அவளுக்கு கிடைத்ததோ அதற்கு எதிர் பதம்.
நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. நடப்பதெல்லாம் மகிழ்வு தருவதுமில்லை...
அகத்தியன் உண்டு விட்டு எழ, அதன் பிறகே தமிழ் அமர்ந்து உண்டாள். நேற்றுக்கு முதல் நாள் உண்டது தான். அதன் பிறகு உண்டது எல்லாம் கால் வயிறு உணவு தான். அதனால் நன்றாகவே சாப்பிட்டாள்.
அவள் சாப்பிடுவதை பார்த்தவன், “நீ இவ்வளவு சாப்பிடுவியா? என்று கேட்டான். அவள் விக்கித்துப் போனாள்.
கண்ணெல்லாம் கலங்கி கொண்டு வந்து விட்டது அந்த நொடியில்.
“இப்படியே சாப்பிட்டுட்டு இருந்தா இன்னும் ரெண்டு மாசத்துல குண்டாயிடுவ. எனக்கு பெட்டே தேவை படாது போல” என்று விட்டு அவன் போன் பார்க்க ஆரம்பித்து விட, இவளுக்கு தொண்டை குழிக்குள் உணவு சிக்கிக் கொண்டது.
அடுத்த வாய் உணவை அவளால் எடுத்து வைக்கவே முடியவில்லை. அவ்வளவு நேரமிருந்த பசி கணவன் கேட்ட ஒற்றை கேள்வியில் அப்படியே அமுங்கி போய் விட்டது.
பணியாளர்களை வர செய்து அனைத்தையும் எடுத்துட்டு போக சொன்னவளுக்கு பாதி வயிறு கூட நிரம்பி இருக்க வில்லை.
குளிர்சாதன பெட்டியை எடுத்து ஜில்லென்ற நீரை பருகி தன் பசியை போக்கிக் கொண்டு வந்து அமர,
“இப்போ ஓகே தானே” என்று அவளிடம் கேட்டான் அகத்தியன்.
எதற்கு என்று புரியாமல் அவள் தலையை ஆட்ட, ரிமோட்டால் கதவை சாத்தியவன் அவளது உடைகளை கலைக்க சொன்னான்.
“இப்பவா?” என்று தமிழ் அதிர்ந்தாள்.
“வேற எப்ப மேடமுக்கு செய்யணும்?” நக்கலாக அவன் கேட்க வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவளே உடைகளை எல்லாம் கலைந்து படுக்கைக்கு வர அவளின் தேகம் எங்கும் அருவெறுப்பில் கூசி போனது. என்னவோ தொழில் பண்ற மாதிரி இருந்தது அவளுக்கு.
அதை அவனிடம் சொல்லவா முடியும். எது பேசினாலும் அகத்தாலம் பேசுபவனிடம் தன் உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் போர்வைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“ப்ச்... போர்வையை ரிமூவ் பண்ணு” என்றவன் அந்த வேலையை கூட செய்ய மாட்டேன் என்று நின்றான்.
அதையும் அவளே செய்ய உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மரணித்துப் போனாள் தமிழ்.
அவனுக்கு அவளுடைய மெல்லிய உணர்வுகளை பற்றி எல்லாம் கவலை இல்லை போல... அவள் மீது படர்ந்தவன் தன் வேலையை முடித்துக் கொண்டு விலகி படுத்துக் கொண்டான்.
கூடல் முடிந்த பிறகு கணவனால் கிடிக்கும் நெற்றி முத்தம் அவளுக்கு கிடைக்கவில்லை. ஏன் ஆசையின் மிகுதியால் வழங்கும் இதழ் முத்தம் கூட கிடைக்கவில்லை.
வெறும் வலி மட்டும் தான் கூடலில் கண்டால் தமிழ். விழியோரம் ஈரம் கசிந்தது. அதை கணவனுக்கு காட்டாமல் மீண்டும் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவனோடு இருப்பதை விட அந்த குளியல் அறைக்குள் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினாளோ என்னவோ... போய் பாத் டப்பில் மிதமான சுடுநீரில் படுத்து விட்டாள். அவள் கொண்ட காயங்களுக்கு அது இதமாக இருக்க கண்களை மூடிக் கொண்டாள்.
இரவெல்லாம் தூங்காத தூக்கம் இப்பொழுது வர அப்படியே தூங்கிப் போனாள்.
ஒருத்தி குளியல் அறைக்குள் போனாளே என்ன ஆனாள் என்று கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை அவன். போனை பார்த்துக் கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்து இருந்தான்.
அவனை பொறுத்தவரை தமிழ் இந்த அறையை விட்டு வெளியே போகக் கூடாது. அவ்வளவு தான். மத்தபடி இங்க எங்க வேண்டுமானாலும் இருக்கலாம் போல..
இரண்டு மணி நேரம் குளியல் தொட்டியில் நன்றாக தூங்கி எழுந்தாள். சுடுநீரில் இருந்ததால் நடுக்கம் எடுக்கவில்லை. ஆனால் உடம்பெல்லாம் ஊறி போய் விட்டது.
துண்டை வைத்து சுற்றிக் கொண்டவள் வெளியே வந்தாள். அகத்தியன் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் உடையை அணிந்துக் கொண்டு கீழே போக பார்க்க,
“நல்லா தூங்குனியா?” என்று கேட்டான். தமிழ் தலையை அசைக்க,
“அப்போ வந்து படு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
திக்கென்று வந்தது இவளுக்கு.
தொடரும்..
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே...
அடேய்...மீண்டும் மீண்டுமா😬😬😬😬😬
பாவம் டா அந்த புள்ள🥺🥺🥺🥺🥺