செஞ்சனின் அம்மா மிகத் தீவிரத்துடன் இருப்பதை பார்த்த சங்கவைக்கு நெஞ்சில் கலவரம் உண்டானது.
அதுவும் செஞ்சனை பிளாக்மெயில் செய்வதை எல்லாம் அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவனை பிளாக்மெயில் செய்து அவளால் ஒரு காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஒன்று அல்லவா..
அது தெரியாமல் செஞ்சனின் அம்மாவும் பரவாசுவும் நிலையாக நிற்பதை பார்த்து மனம் கனத்து போனாள்.
காதலோ கல்யாணமோ இரண்டும் முழு மன விருப்பத்தோடு நிகழ்ந்தாக வேண்டும். அதில் ஏதாவது ஒன்று குறையாக இருந்தாலும் அந்த காதலும் சரி, அந்த கல்யாணமும் சரி சிறக்க வாய்ப்பே இல்லை.
அதை தெரிந்தும் இவர்கள் செஞ்சினை கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் முறையில்லை என்பதை புரிந்து கொண்டாள்.
அதை அவர்களுக்கு வலியுறுத்தவும் செய்ய, அவளது பேச்சை இவர்கள் இருவருமே கேட்கவில்லை. கூடவே அவளது குடும்பமும் செஞ்சனின் அம்மாவுக்கே துணையாக நின்றார்கள்.
சங்கவையால் இவர்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை அதனால் அமைதியாக இருந்து கொண்டாள்.
ஆனாலும் தன்னுடைய ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் கோரிக்கையாக வைத்தாள்.
எனக்கு செஞ்சினை கட்டிக்க முழு விருப்பம்.. ஆனா அவரு இந்த கல்யாணத்துக்கு முழு மனதோட முழு விருப்பத்தோட சம்மதம் சொன்னா மட்டுமே நான் இந்த கல்யாணத்தை செய்துக்குவேன்.
அப்படி இல்ல அப்படின்னா எந்த காலத்திலும் நான் கல்யாணம் செய்துக்கவே மாட்டேன் இது என்னோட கோரிக்கை. இதுக்கு நீங்க சரின்னு சொன்னா நான் இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிறேன். ஆனா செஞ்சனை எந்த விதத்திலும் நீங்க கட்டாயப்படுத்த கூடாது என்றாள் தெளிவாக.
அவளது தெளிவை கண்டு எல்லோருமே பல்லை கடித்தார்கள்.
நீ புரிஞ்சு தான் பேசுறியா சங்கவை… ஆத்திரமாக கேட்டார் செஞ்சனின் அம்மா.
அத்தை உங்களுக்கு தெரியாதது இல்ல உங்களை உங்க மகனை பற்றி. நான் புதுசா சொல்ல எதுவுமே இல்லை. அவரால எந்த கட்டாயத்தின் பேரிலும் அடிபணிய வைக்க முடியவே முடியாது. உங்க மரணத்தை நீங்க கையில எடுத்து அவரை கட்டாயப்படுத்துறது சரியும் கிடையாது.
நீங்க எங்களுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாலும் நாங்க ரெண்டு பேரும் முழு மனசா இல்லாம எங்களால் எப்பவும் ஒன்னு சேரவே முடியாது. பேரன் பேத்தி பாக்கணும்னு ஆசைப்படுற உங்களுக்கு அந்த வாய்ப்பு கடைசிவரை நாங்கள் தரப்போறதும் கிடையாது. என்றாள் அழுத்தமாக.
அவள் சொல்வதைக் கேட்டு விக்கித்து போனார்கள் அனைவரும்.
சங்கவை நீ பேசுறது கொஞ்சம் கூட சரியில்ல சங்கவியின் அம்மா அவளை அதட்டினார்.
பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா பாப்பா இப்படித்தான் உன்னை வளர்த்தமா நாங்க.. அவளின் அப்பாவும் கோபப்பட்டார்.
அப்பா கொஞ்சம் எங்க உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க முக்கியமா செஞ்சனோட உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க.. அவரு காரணம் இல்லாம எங்க காதல வேணான்னு சொல்லி இருக்க மாட்டாரு. ஏதோ ஒரு காரணம் இருக்கு. ஆனா அதை யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கிறாரு. சோ அவரை அவர் போக்கில் விடுறது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது. அதுதான் நான் சொல்றேன் என்றாள்.
இன்னும் எத்தனை நாளைக்கு நான் அவன அவன் போக்குலையே விடுறது என்று ஆதங்கமாக கேட்டார் செஞ்சனின் தாய்.
அதற்கு அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தலைகுனிந்து நின்றாள் சங்கவை.
அவளின் அருகில் வந்தவர் அவளின் கையை பற்றி கொண்டு,
செஞ்சனோட அப்பா இறந்ததிலிருந்து என்னோட உலகமே செஞ்சனா மாறிப் போயிட்டான். அவனுக்காகவே நான் இத்தனை வருஷமும் வாழ்ந்துட்டு இருக்கேன். அவனுக்கு ஒரு நல்லது என்னால பண்ணி பாக்க முடியலன்னு என் மனசு குத்துற குத்து எனக்கு மட்டும் தான் தெரியும்.. தனிமையில் நான் வாழுற கஷ்டம் யாருக்கும் தெரியாது சங்கவை..
கண்ணிறைய என் மகன் குழந்தை குட்டிகளோட பொண்டாட்டியோட சந்தோஷமா வாழ்றத நான் பாக்கணும்னு ஆசைப்படுறேன். நான் இன்னும் எத்தனை வருஷம் இருக்க போறேன்னு கூட எனக்கு தெரியாது. எத்தனையோ மரணங்கள் தூங்கிட்டு இருக்கும்போதே போயிடுது. என் உயிரும் அப்படி ஒரு நாள் போயிருச்சுனா என் புள்ளைக்கு என்னால ஒரு நல்லது செஞ்சு பார்க்க முடியல என்ற வருத்தத்துல என் ஆத்மா கூட நிம்மதியா போய் சேராது.. கண்கள் கலங்க அவர் சொல்ல மூச்சுடைத்துப் போனாள் சங்கவை.
இவரின் கோரிக்கையும் நியாயமாகவே பட்டது.
சரிங்க அத்தை பெரியவங்க நீங்க என்ன சொன்னாலும் என்ன செஞ்சாலும் நான் அதுக்கு கட்டுப்படுகிறேன் என்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் அவளால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.
அவளது சம்மதம் கிடைத்த உடனே அனைவரின் முகமும் வெளிச்சமாக பிரகாசித்தது.
இவளே சம்மதிச்சுட்டான்னா செஞ்சனை எப்படியாவது வளைச்சிடலாம் என்று எண்ணியவர் உடனடியாக தன் மகனுக்கு பரவாசு மூலமாக போனை போட்டார்.
என்னடா பரவசு இந்த டைம்ல கூப்பிட்டு இருக்க என்று நேரத்தை பார்த்தான் செஞ்சேன் மணி இரவு 7 ஆகி இருந்தது.
ஒன்னும் இல்ல மச்சான்… என்றவனுக்கு வார்த்தை தந்திஅடித்தது பின்ன அவனின் கோபம் அவனது நண்பன் அறியாதவனா.. செவில் மேலையே விட்டானா காது ஜவ்வு பிஞ்சுக்குமே என்று பயந்து வந்தது பரவாசுக்கு.
என்னடா போன் பண்ணிட்டு எதுவுமே பேச மாட்டேங்கற… ஊருக்கு தானே போயிருக்க அம்மா தங்கச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா அவங்கள பத்தி ஏதாவது சொல்லுடா.. என்றான் செஞ்சன்.
அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க மச்சான்… என்றவனுக்கு கை கால் உதறியது.
அப்புறம் என்னடா… ஏன் தயங்கி தயங்கி பேசிட்டு இருக்க..
இல்ல மச்சான் அது நம்ம அம்மாவ பாக்க வந்திருக்கேன் என்றான்.
இங்க இருந்து எதுக்குடா என் வீட்டுக்கு போன.. நெற்றியை நீவினான் செஞ்சன்.
உன் வீட்டுக்கு இல்ல மச்சான்… மேலும் தயங்கினான் பரவாசு.
அப்புறம் அம்மாவ வேற எங்க பார்த்த.. செஞ்சனின் உருவம் சுருங்கியது. பார்வை கூர்மையாகியது…
இங்க நம்ம ச… என்று பதறினான் பரவாசு.
டேய் இப்ப வந்தேன்னு வை.. வாய ஒடச்சிடுவேன் டா ஒழுங்கா மென்னு முழுங்காம அம்மா எங்க போயிருக்காங்க.. நீ எங்க போய் அம்மாவை பார்த்த எல்லாத்தையும் விளக்கமா சொல்லு… என்று பல்லை கடித்தான் செஞ்சேன்.
அது மச்சான் நான் அம்மாவ பாக்க நம்ம வீட்டுக்கு போயிருந்தேன். அம்மா அப்போ என்னைய கூட்டிட்டு சங்கவையோட வீட்டுக்கு வந்துட்டாங்க மச்சான். இப்போ நாங்க சங்கவையோட வீட்ல தான் இருக்கோம்… அதோட உனக்கும் சங்க வைக்கும் கல்யாணம் பேசி இருக்காங்க அம்மா.. நீ நாளைக்கு காலை ல இங்க இருக்கணும் அம்மா சொல்ல சொன்னாங்க சொல்லிட்டேன் மச்சான் பாய்.. காலைல சீக்கிரமா வந்துடு… படபடவென்று முழுவதுமாக கொட்டி போனை வைத்து விட்டான். செஞ்சுனுக்கு பேச வாய்ப்பே தரவில்லை.
வாய்ப்பு கொடுத்தா அவன் வண்ண வண்ணமாக திட்டி தீர்த்து விடுவானே அதைக் கேட்டால் அவனது காதுகளுக்கு உயிரே இருக்காது.. மொத்த உயிரையும் காது விட்டுவிடும் என பயந்து போய் போனை படக்கென்று வைத்து விட்டான். வைத்ததோடு மட்டுமல்லாமல் போனை சுவிட்ச் ஆபும் செய்து போட்டு விட்டான்.
என்னடா சொன்னான் என்று செஞ்சனின் தாய் கேட்க,
அவன் சொல்றதெல்லாம் கேட்க முடியாதும்மா கேட்டா என் காது ரெண்டும் பிஞ்சு கீழ விழுந்துரும். உங்க மகனோட வாய் அப்படியாப்பட்ட வாய். அதனால நான் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லிட்டு வச்சுட்டேன் என்றான்.
பரவாயில்லை அதுவும் கரெக்ட் தான். அவன் எப்படியும் அடிச்சு பிடிச்சிட்டு வருவான் இல்லையா என்றார்.
எனக்கு என்னமோ சந்தேகம் தான் மா என்றான் பரவாசு. என்ற நேரமே தாயின் போனுக்கு அழைத்தான் செஞ்சேன்.
நான் சொன்னேன் இல்லையா அவன் வரமாட்டான் இப்போ உங்களுக்கு தான் நாலு திட்டு விழப்போகுது எடுத்து பேசுங்க என்றான் கிண்டலாக.
டேய் நான் அவன பெத்தவடா என்கிட்டேயேவா… இப்ப நான் அவனை போடுற போடுல கதறிக்கிட்டு நாளைக்கு காலைல இங்க வந்து நிற்பான் பாரு என் மகன்.. என்று பெருமையாக சொல்லிக் கொண்டு போனை எடுத்து காதில் வைத்தார் அவர்.
மக்கும் ரொம்ப பெருமை பட்டுக்காதீங்க.. வண்டி வண்டியா வாங்கி கட்ட போறீங்க என்றான் அவன்.
அதையும் பார்ப்போம் என்றவர்,
அழுத்தமாக சொல்லு தம்பி என்றார் மகனிடம்.
அம்மா நீங்க எதையோ நினைச்சு என்னவோ பண்ணிட்டு இருக்கீங்க முதல்ல அங்க இருந்து கிளம்புங்க என்றான் கோபமாக எடுத்த எடுப்பிலே.
நான் எதையோ நினைக்கல தம்பி நீ நெனச்ச… அதை நான் நடத்தி காட்ட வந்திருக்கேன் என்றார் அவனுக்கு அம்மாவாக.
அம்மா என்று பல்லை கடித்தான்.
எவ்வளவு நாள் தான் தம்பி நான் பொறுமையா போறது. உன் விருப்பத்துக்கு உட்பட்டு மதிப்பு கொடுத்து இத்தனை நாள் நான் மௌனமாய் இருந்துட்டேன். ஆனா இனிமே என்னால மௌனமா இருக்க முடியாது. ஒன்னு நீ சங்கவையை கட்டு. இல்ல அப்படின்னா வேற ஏதாவது பொண்ண கல்யாணம் பண்ணு. ரெண்டும் முடியாது அப்படின்னா என்னை நீ இனி உயிரோட பார்க்க முடியாது என்றார் உறுதியாக.
என்னம்மா அங்க இருந்து பிளாக் மெயில் பண்றீங்களா பல்லை கடித்தான்.
என்னோட கோரிக்கை உனக்கு பிளாக்மெயில் தெரியுதா தம்பி ஆதங்கப்பட்டார்.
அம்மா எது பேசறதா இருந்தாலும் நம்ம வீட்ல வச்சு பேசிக்கலாம். முதல்ல நீங்க அந்த வீட்ல இருந்து கிளம்பி வெளிய வாங்க என்றான்.
என்னால முடியாது தம்பி ரெண்டுல ஒன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும். நாளைக்கு நீ கெளம்பி சங்கவையோட வீட்டுக்கு வர்ற. இங்க வச்சு பேசி எதா இருந்தாலும் முடிவு பண்ணிட்டு அப்புறமா நான் நம்ம வீட்டுக்கு வராதா இல்ல இப்படியே போறதா அப்படின்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். என்றார் மிக மிக கோபமாக.
ஏம்மா இப்படி பண்றீங்க இப்படி பண்றதுக்கு பேரு தான் பிளாக்மெயில். ஆனா நான் பிளாக்மெயில் பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கீங்க. தயவு செஞ்சு உங்க கால்ல வேணாலும் விழுறேன் நீங்க அந்த வீட்டை விட்டு வெளியில வாங்க.. என்றான்.
சரி தம்பி நான் இப்பவே இந்த வீட்டை விட்டு நான் கிளம்பி வரேன். ஆனா நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியா அதுக்கு பதில சொல்லு இந்த சங்கவியை மறந்துட்டு முழுசா உன்னால முடியுமா என்றார்.
அம்மா என் வாழ்க்கையில் ஒரு பொண்ணுன்னு இருந்தா என் மனைவியாவோ என் காதலியாவோ இருந்தா அது சங்கவை மட்டும் தான். அவள தவிர என்னால வேற யாரையும் நினைச்சு கூட பாக்க முடியாது. இது உங்களுக்கு நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் இதுக்கு மேல என்ன கம்பெல் பண்ணாதீங்க என்றான்.
அதனாலதான் தம்பி என் மருமக வீட்டுக்கு நான் வந்து இருக்கேன் என்றார் அவர் அதற்கும் மேலாக.
இப்படி பேசுபவரிடம் அவன் என்ன சொல்லுவான். சஞ்சனுக்கு மண்டை காய்ந்தது தன் தாயை எப்படி கையாள்வது என்றே அவனுக்கு புரியவில்லை.
வேறு வழியில்லாத நீண்ட வருடங்கள் கழித்து தன் காதலியின் எண்ணுக்கு அழைத்தான்.
காரணத்தை சொல்லாம இப்படி காதலிக்கு கால் பண்றது நியாயமா????
காரணமே இல்லாமல் காதல் இருந்தும் கல்யாணத்தை மறுக்கும் காதலன்... காதலனின் நிலையை உணர்ந்து காதலை தள்ளி நிற்கிறாள்....
கல்யாணத்திற்கு பெற்றவர்கள் கட்டாயப்படுத்தினாலும் காரணம் தெரியாமல் கண் விழி பிதுங்கும் குடும்பம்...
காரணத்தை சொல்ல காதலியை அழைக்கிறானோ அல்லது கல்யாணத்தை நிறுத்த சொல்லி கோரிக்கை வைக்கிறானோ???
Hey அம்மா rocks🔥🔥🔥🔥
சஞ்சு ஷாக்ஸ்🤣🤣🤣🤣🤣
சூப்பர் அம்மா....இவனை எல்லாம் இப்படி கூப்பிட்டா தான் வருவான்.....
இவளை என்ன சொல்லி குழப்பி விட போறான்னு தெரியலையே🙄🙄🙄🙄
சூப்பர் ம்மா... 👌👌👌இவனை எல்லாம் இப்படி லாக் பண்ணினா தான் உண்டு இல்லனா சைட் அடிச்சிட்டே காலத்தை ஓட்டிடுவான்... 🤦♀️🤦♀️🤦♀️