என்ன பார்க்குறீங்க... உங்களால தான் உங்க பொண்ணு என் கிட்ட கஷ்ட பட்டா.. என் அம்மா இடத்துல இருக்க உங்களை எப்படி பழிவாங்குரதுன்னு எனக்கு தெரியல, ஆராவ பழிவாங்குனா உங்களை வாங்குறது போல நினைச்சுகிட்டு அவளை ரொம்ப கொடுமை படுத்துனேன். ஆனா இவ என்னை காட்டி கொடுக்காம தாய் போல பார்த்துகிட்டா...
அப்பாவும் என் மனசு மாரல.. இவ கல்யாணத்தை நிறுத்துனா நீங்க துடிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா அப்போ கூட நீங்க கொஞ்சம் கூட துடிக்காம உங்க சுகத்தை மட்டும் தான் பார்த்துகிட்டீங்க.. உண்மையான தாய்னா இந்நேரம் என் கிட்ட வந்து கெஞ்சி என்ன பண்ணா என் பிள்ளையோட கல்யானத்தை நடத்தி வைப்பன்னு கேட்டு இருப்பாங்க. ஆனா இங்க...
அது கூட பரவால, இந்த வீட்டுல இவளை எவ்வளவு சிமத்துக்கு ஆளாக்குனேன். அப்பவாவது வந்து ஏதாவது செஞ்சீங்களா. ம்ஹும் அப்பவும் யாருக்கோ வந்தது போல இருந்திட்டு இப்போ வந்து கேக்குறீங்க.
மனசு உடைஞ்சு இந்த வீட்டை விட்டு வெளியே போனாலே அப்போ உங்களையா தேடி வந்தா அவ. அந்த ஒரு விசயதுலையே நீங்க பெத்தவங்களா தொத்து போய்டீங்க. எனக்கு அம்மாவா இவ இருந்தா.. இப்போ அவளுக்கு அம்மாவா நான் இருக்கேன். இவளுக்கு வேற யாரும் வேணாம். நீங்க இல்லாமலே நான் ஜாம் ஜாம்னு இவ கல்யாணத்தை நடத்தி வைப்பேன்.
நீங்க வந்து என் கிட்ட உங்க நீங்க பெத்த பொண்ணுக்காக வந்து பேசுவீங்கன்னு இத்தனை நாளா காத்துகிட்டு இருந்தேன். இடையில ஒரு பொன்னை வேற பெரிய அத்தன்னுக்காக பார்த்து வச்சு இருக்குறதா சொன்னேன்.
அதை கேட்டாவாது நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க வரவே இல்ல. அதனால உங்களுக்கும் இந்த கல்யாணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இது அனு அவ தங்கச்சிக்கு ஏற்பாடு செய்த கல்யாணம்.” என்று கெத்தாய் சொன்னவளை இருக்க அணைத்துக்கொண்டான் பிரகாஷ்.
அதில் சண்முகமும் வள்ளியும் கூனி குறுகி நின்றார்கள். சில பெற்றவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள். தங்களது சந்தோஷம் மட்டுமே குறி என்று... ஆனால் பல பேர் குழந்தைகளை தாண்டி தான் எதுவும் என்று கட்பாட்டோடு ஒற்றை அறையில் பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களும் பெற்றவர்கள் தான். இவர்களுக்கும் ஆசா பாசம் எல்லாம் இருக்கு தான்.
அனுவின் பேச்சை கேட்ட ஆராவுக்கு விழிகள் நனைய நிமர்ந்து அவளை பார்த்தாள்.
“என்ன பார்க்குற... உனக்கு மட்டும் தான் எனக்கு அம்மாவா இருக்க தெரியுமா... எனக்கும் தெரியும். ரொம்ப ஈசியா செத்து பொண்ணு சொல்லிட்டு போய்ட்ட” என்றாள் விழிகள் கலங்க அனு.
“இல்லடி அது..”
“எது இல்ல.. அதை கூட மன்னிச்சுடுவேன். ஆனா நாலு மாசம் என்னை விட்டுட்டு முழுசா இருந்துட்டீல்ல” என்று கண்நீர் பெருக கேட்டவளை தாவி வந்து இறுக அணைத்துக்கொண்டாள் ஆரா.
“எனக்கு அடிக்க, முறைக்க, திட்ட, பேசுறதுக்கு எதுக்குனாலும் நீ வேணும்ன்றதை மறந்து போயடீல்ல... நீ இல்லாம நான் எப்படி தெரியுமா கஷ்ட பட்டேன். போடி இனி என் கூட பேசாத” என்று ஆராவை அடிக்க
அவளது அடியை வாங்கிக்கொண்டவள் மேலும் தன்னோடு அணைத்துக்கொண்டாள் ஆரா.
பார்த்துக்கொண்டு இருந்த பிறைசூடனுக்கு அனுவின் மனநிலை நன்கு புரிய “ஆகா இப்போ இவ தாலிகட்ட விடுவாளா மாட்டாளா” என்ற சந்தேகம் வந்தது.
“எங்க வந்து இதுங்க பாச செடி வளர்குதுங்க பாரு” என்று அவன் அவன் வேலைக்காக புலம்பினான்.
அவனை ரொம்ப சோதிக்காமல் ஆராவை முழு மனதுடன் பிறைசூடனின் அருகில் அமர வைத்தாள் அனு.
எல்லோரின் ஆசீர்வாதத்துடனும் ஆராவின் கைகளை பிடித்தான் பிறைசூடன்.
மனமெல்லாம் நிறைந்து போனது சித்ராவுக்கு. இருவரையும் கண்கள் நிறைய பார்த்து உள்ளம் பூரித்தார். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விளக்கேற்றி வழிபட செய்து பால் பழம் கொடுத்து ஓய்வெடுக்க விட்டார்கள்.
ஆரா தன் அறையில் இருக்க திருட்டு தனமாய் உள்ளே நுழைந்தான் பிறைசூடன்.
“அச்சோ இங்க எதுக்கு வந்தீங்க... வெளிய போங்க மாமா..” பதட்டமாய் கதவை பார்த்துக்கொண்டே சொல்ல
“நான் வெளிய போகனுமா” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ம் ஆமாம்”
“அப்போ நான் கேக்குறதை குடு போறேன்.”
“டீல் பேசுற நேரமா மாமா இது.யாராவது பார்த்தா மானம் போய்டும். போங்க மாமா..”
“ஏண்டி ஒரு மனுசன ஒன்னரை வருசமா கிட்டக்கவே சேர்த்துக்காம வலுக்கட்டாயமா பட்னி போட்டுட்டு வசனமா பேசுற.. உன்னை” என்றவன் கொஞ்சமும் யோசியாமல் அங்கிருந்த கட்டிலில் அவளை தள்ளி தானும் அவள் மேல் படர்ந்து தடையாய் இருந்த புடவையை விளக்கிய சமயம் வெளியே கடவை தட்டினார்கள்.
அதில் ஆரா கிளுக்கி சிரிக்க
“சிரிக்கிற.. வாடி நைட்டுக்கு யாரு வந்து என் கிட்ட காப்பாத்துராங்கன்னு நானும் பார்க்குறேன்” கருவியவன் அழுத்தமாய் வன்மையாய் அவளது இதழ்களை தீண்டி அவளின் சுவையை சுவைத்துவிட்டு நிதானமாகவே அங்கிருந்து விளகிசென்றான்.
அவனது அடாவடியில் மனதை பறிகொடுத்தவள் எழுந்து சென்று கதவை திறந்தாள்.
அதன் பிறகு அவளை யாரும் தனியாக விடவில்லை. மாலை மங்கி இரவு வர, அனு அவளை சீண்டிக்கொண்டே அழகாக தயார் செய்தாள்.
அனுவின் இந்த மாற்றத்தில் நெகிழ்ந்தவள் அவளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அனுவின் விழிகளில் நீர் நிறைந்தது.
“என்னைக்கும் தீர்க்க சுமங்கலியா நீடூழி வாழனும் ஆராதனா” என்று அவளை தன்னோடு அணைத்துக்கொண்டு வாழ்த்தினாள்.
பின் சித்ராவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அனு ஆராவை பிறைசூடனின் அறைக்கு அழைத்து சென்று அவளது கன்னத்தில் முத்தம் இட்டு “அத்தான் மனசு கோணாம நடந்துக்கடி ஆள் தி பெஸ்ட்”. என்று கூறி ஆராவை உள்ளே அனுப்பிவைத்தாள்.
வெளியே வந்த அனுவை தன் கைகளில் அள்ளிக்கொண்டான் பிரகாஷ்.
“என் பொண்டாட்டிய இப்போ தான் எனக்கு இன்னும் அதிகமா பிடுச்சு இருக்கு” என்று சொல்லி அவனது முறை படி அவளை கொஞ்சினான்.
உள்ளே நுழைந்த ஆராவை தன் கண்களால் கொள்ளையிட்டவன் அதற்க்கு மேல் தாங்காது விளக்கை அணைத்துவிட்டு அவளை அனைத்து இத்தனை வருட தனிமையை போக்கிக்கொண்டு அவளோடு ஒன்று கலந்தான்.
அவனது வேகத்தை தாங்காமல் சுருண்டவளை அப்படியே விடாமல் இன்னும் வதைக்க “மாமா” என்றால் கெஞ்சலாய்.
“முடியவே முடியாது.. எனக்கு இப்போ இந்த நிமிஷம் நீ வேணும்” என்று முரட்டு தனமாய் அவளிடம் நடந்துக்கொள்ள அவனது ஆசை புரிய முக சிவப்புடன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்.
விடிய விடிய கதை சொன்னவனை முறைத்து பார்த்தாள். “விடுஞ்சு போச்சு இப்பவாவது விடுங்க..”
“முடியவே முடியாது.. இன்னும் ஒரு மாசத்துக்கு கதவே திறக்க கூடாது” என்று விலகி இருந்தவளை தனக்கு நெருக்கமாக கொண்டு வந்து அதிரடியில் இறங்க அவனது வேகத்தில் மூச்சு முட்டி போனது ஆராவுக்கு.
“ஆரா” என்கிற அவனது சிருங்கார அழைப்பு அந்த அறையை நிறைக்க அதற்கு ஈடாய் அவளது கொலுசொலி சத்தமும் வளையொலி சத்தமும் மெட்டிசைத்தது.
இரு மனங்களின் நீண்ட நாள் தவிப்புக்கு அந்த சங்கமம் அருமருந்தாய் அமைய காலங்கள் கடந்து இரு உள்ளமும் உறவில் திளைத்து அன்பில் உறைந்து உயிரில் கலந்து போனது.
==
அன்றைய அதிகாலை பொழுதில் தன் படுக்கையில் துளாவிகொண்டு இருந்தான் தன் மனைவியை. ஆனால் அவள் தான் கிடைக்காமல் போனாள்.
“ப்ச்.. காலையில எங்க போனா..” எரிச்சலுடன் கண்களை திறக்க பிடிக்காமல் அப்படியே படுத்து இருந்தான் பிறைசூடன்.
அப்போது அவனுக்கு பிடித்த மணம் அவனது நாசியில் நுகர்ந்து அவனை கிளர்ச்சி அடைய செய்ய அது என்ன என்பதை அறிந்துக்கொண்டவனுக்கு “இருக்குடி உனக்கு இன்னைக்கு கச்சேரி” முனகிக்கொண்டவன் சாதுவாய் படுத்து இருந்தான்.
“என்னங்க.. சீக்கிரம் எழுந்துக்கோங்க. இன்னைக்கு கீதா அண்ணியோட தங்கைக்கு வளைகாப்பு நாம் போகணும்” என்று அவனை உலுக்கினாள் ஆரா.
அவனோ அதை சட்டை செயாமல் அவளை ஆராய்ந்து கொண்டு இருந்தான் பாதி கண்களில்.
குளித்து முடித்து அழகிய சீபான் புடவையில் மல்லிகை சரம் ரெண்டு வைத்து பூஜை செய்ததற்கான அடையாளமாய் திருநீரை நேற்றியில் அணிந்து இருந்தாள். வகிட்டில் குங்குமம் மிளிர மையிட்ட கண் அவனை போதை கொள்ள வைத்தது. ஒற்றையாய் விட்ட மாராப்பு வேடரு அவனை உசுப்பேத்திவிட மூச்சு வாங்கியது அவனுக்கு.
“பையன்கள கூட கிளப்பி விட்டுட்டேன். நீங்க மட்டும் தான் குளிக்காம இருக்கீங்க எழுந்து குளிங்க” என்று அவனை விடு ஜன்னலை திறக்க சென்றாள். ஜன்னலை திறக்கும் முன் பூனை பாதம் வைத்து அவளை பின்னோடு அலேக்காக தூக்கிக்கொண்டு உள்ளே இருந்த இன்னொரு அறைக்கு தூக்கி சென்று அவள் மறுக்க மறுக்க அவளை தனக்குள் வாங்கியவன் அவளை விட மனமில்லாமல் அவளிடமே சரணடைந்து கிடந்தான்.
இண்டர்காம் அடிக்க ஆரா சற்றே எம்பி அதை எடுத்தாள்.
“ஆரா இன்னும் என்னடி பண்ற.. எல்லாரும் கிளம்பியாச்சு.” அனு சத்தம் போட தான் இருக்கும் நிலையை குனிந்து பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. தன் நிலை அவனுக்கு வசதியாகி போக பிறைசூடன் அவளை விட்டு இம்மியும் விலகாமல் இருக்கிகொண்டான்.
அதில் எழுந்த வலியை அடைக்கிக்கொண்டு “அனு நீ எல்லாரையும் கொட்டிட்டு முன்னாடி போடி.. நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்” என்றாள் சிரமாமாய்.
“ம்கும் இன்னைக்கும் அத்தான் விடலயாக்கும்.. நல்ல வந்து சேர்ந்தீங்க” தலையில் அடித்துக்கொண்டே அவள் வைத்துவிட போலியாய் பிரைசூடனை முறைத்து பார்த்தாள் ஆரா.
“என்னவாண்டி உன் அக்காவுக்கு” என்று அவன் வம்பிளுக்க
“அவளை வம்பிளுக்காட்டி உங்களுக்கு தூக்கமே வரதே..”
“ஆமாண்டி தூக்கம் வரல.. வா” என்று இரு அர்த்தத்தில பேச...
அவனோடு வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டாள் ஆராதானா...
கொஞ்சலும் மிஞ்சளுமாக இருவரின் அன்புக்கு சாட்ச்சியாய் இரு பைய்யன்கள் பிறந்து சிறப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் பிறைசூடனும்... அந்த சூடனை ஆராதனை செய்வதற்காவே பிறப்பெடுத்திருக்கிறாள் ஆராதனாவும்..
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது இன்புற்று வாழ வேண்டும்...
வாழ்க வளமுடன்...
நன்றி...
வணக்கம்...
தாயில்லாத கொடுமை
தந்தைக்கு திருமணம் இரண்டு
தாயாக வந்தவரும்
தாங்கிட வில்லை
தனிமையின் துயரில்
தங்கையை துன்புறுத்த
தங்கையும் துயர் தாங்கி
தாயாக அக்காவை தாங்க
தடைகள் நீங்கி
திருமணம் நடந்து.....
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐🤩👍🏻
பிரகாஷ் ❤️🩹அனு , அகங்காரத்தை அடக்கி ஆளும் காதல்
பிறைசூடன் ❤️ஆரா அன்பு மிகுதியில் அடிபணிந்து ஆட்சி புரியும் காதல்
பிரமாதம்💕💖💘💐💐💐💐✍🏻
ஹ்ம்ம்....என்னமோ போங்க ரைட்டர் நல்லது பண்ணிட்டீங்க கடைசில.....