அனு அடுத்த மாதமே கருவுற ஆராவை வேலைக்கு செல்ல விடாமல் செய்துவிட்டாள்.
பிறைசூடன் அவளை கொலைவெறியில் பார்க்க ப்ளீஸ் என்று கெஞ்சி சில பல வழிகளில் அவனை சமாதானம் செய்தாள் ஆரா.
அதன் பிறகு அனுவின் செயல்கள் ஒவ்வொன்றும் ஆராவை கொள்ளாமல் கொன்று புதைத்தது. செயல்கள் மட்டும் இல்லாமல் பேச்சும் விஷம் தடவியே வந்தது.
அத்தனையும் பொறுத்துக்கொண்டு அவளை கவனமாக பார்த்துக்கொண்டாள்.
அதை எல்லாம் எட்டியே இருந்து கவனித்துக்கொண்டு இருந்த பிரகாஷ்க்கு ப்ரஷேர் ஏறியது. ஆனாலும் அவளின் உடல் நலத்தை கணக்கிட்டு அனுவை எதுவும் சொல்ல முடியாமல் பொறுமை காத்தான்.
அன்றும் அப்படி தான் காலையில் அனுவிர்க்காக பழக்கம் இல்லாத வேலையை கைகளை சுட்டுக்கொண்டு சமைத்துக்கொண்டு இருந்த ஆராவை பார்த்து கண்கள் கலங்கியது சித்ராவுக்கு. ஆரா சின்ன தலை அசைப்பில் வேண்டாம் என்று சொல்லி வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அதை கூடத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த சூடானுக்கு இரத்தம் எல்லாம் கொத்தித்தது. இப்பவே போய் எல்லாவற்றையும் கொட்டிகவிழ்த்து விட்டு ஆராவை தன் கையணைப்பில் கொண்டு வந்து எங்காவது பறந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு நாடியும் துடிக்க, அதை செய்ய முதலில் தடை போடுவது ஆரா என்பதில் கண்கள் சிவந்து போனது அவனுக்கு.
சூடானுக்கு காபி கொண்டு போகும் வேலை சரியாக அனுவும், பிரகாஷும் கடைசி படியில் இறங்கி கொண்டு இருந்தார்கள். அதுவரை சும்மா இருந்தவள் ஆராவை கண்டவுடன் வேகமாக பிரகாஷின் கையை எடுத்து தன் இடை மீது வைத்துக்கொண்டு ஏளனமாக அவளை பார்த்த படி வர, அவளது அந்த செய்கை அங்கிருந்த அத்தனை பேருக்கும் அருவெறுப்பை கொடுத்தது.
ஆனால் ஆரா அவளை பார்த்து சின்ன சிரிப்பை சிந்தியவள் “கொஞ்ச நேரம் வயிற்றில் வெயில் படுமாறு தோட்டத்தில் உட்காரு அனு. நான் உனக்கு குடிக்க சத்து மாவு கஞ்சி எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி சென்றவளின் கன்னத்திலே ஒன்னு விட்டால் என்ன என்று தோன்றியது சூடானுக்கு.
அவனது ஆத்திரத்தை கண்டு அனு கேலியாக சிரிக்க, அது ஆராவின் மீது தான் இன்னும் கோவத்தை கிளப்பியது.
இவள் இப்படி அவளுக்கு சேவை செய்வதற்க்காவே பிறந்தவள் போல இருக்க பிறைசூடனின் காதல் மனம் பலமாய் அடிபட்டு போனது.
அதை புரிந்துகொண்டாலும் ஆராவால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த அளவு அனு அவளை படுத்தி வைத்தாள். சில நாட்கள் பிரைசூடனை கண்களால் பார்ப்பதற்கும் தடை விதித்தாள்.
அதையும் அவளது தற்போதைய நிலைக்காக பொறுத்துக்கொண்டாள். ஆனால் அதை பிரைசூடனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனுவின் முன்னிலே ஆராவை அழைத்து வெளியே கூட்டிக்கொண்டு சென்று அவளுக்கு சற்று நேரம் ஆதராவாய் இருந்தான். அதை அனுவால் பொறுத்தக்கொள்ள முடியவில்லை.
முன்னிலும் அதிகமாக அவளுக்கு ப்ரசெர் ஏறியது. அது அவளது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆகாது என்று மருத்துவர் கூற ஆரா பிரைசூடனை முழுவதுமாக தவிர்த்து விட்டாள். அவளது ஒதுக்கத்தை தாங்க முடியாமல் பிறைசூடன் உள்ளேயே நொறுங்கி போனான்.
அதோ இதோ என்று ஒருவழியாக அனுவிற்கு குழந்தை பிறந்துவிட முன்னிலும் அதிக வேலை இருந்தது ஆராவுக்கு. நிஜமான ஆயாவாகவே மாறினால் அவள்.
குழந்தைக்கு புண்ணியாதானம் செய்து பெயர் சூடும் விழா வைக்க
வள்ளியும் சண்முகமும் குழந்தையை எட்டி கூட பார்க்க வில்லை. ஆரா பெற்றவர்கள் சார்பில் குழந்தைக்கு செய்ய வேண்டியதை செய்ய ஆராவை முறைத்தாள் அனு.
“என்ன பிச்சை போடுறியா”
“அப்படி இல்லடா ப்ளீஸ் சபைல வச்சு ஏதும் பேசாதே.. பிறகு தனியா வச்சு எதா இருந்தாலும் பேசிக்கோ” என்று கெஞ்ச
“ஏற்கனவே அவங்க செய்றதுக்கு தான் நீ என் கிட்ட அனுபவிச்சுக்கிட்டு இருக்க, இப்போ செய்றதுக்கும் நீ தான் அனுபவிக்க போற” என்றால் வன்மமாய்.
“சரி நான் மனபூர்வமா ஏத்துக்குறேன். இப்போ கொஞ்சம் சிரியேன்” என்று போட்டு வைத்து விட்டு குழந்தைக்கு சீர் செய்தாள் ஆரா.
பிரகாஷ்க்கு ஆராவின் நிலை கஷ்டத்தை கொடுக்க பிரைசூடனிடம் பேச சென்றான்.
“எனக்கு புரியுது பிரகாஷ். இதுல என் கையையும் கட்டி போட்டு இருக்கா ஆரா லேசா ஒரு விரலை அசைத்தால் கூட போதும். ஆனா அவ தான் எதையும் செய்ய மாட்டேங்குறாளே. போகட்டும் எதுவரை அவ போறான்னு நாமும் பார்க்குறேன். இதுக்காக அனுவை எதுவும் சொல்லாத” என்ற அண்ணனை திகைத்து போய் பார்த்தான். தன் வாழ்க்கையை கெடுத்தவளை ஏதும் செய்ய வேண்டாம் என்று சொன்னவனின் உள்ளம் புரிந்து போக பெரு மூச்சு ஒன்று விட்டு “இது எல்லாத்துக்கும் விரைவாகவே தீர்வு கிடைக்கணும்” என்று எண்ணிக்கொண்டான்.
குழந்தை அனுவோடு ஒட்டுவதை விட ஆராவிடம் அதிகம் ஒட்டிக்கொண்டது. அதை பத்தி அனு அவ்வளவு ஒன்றும் கவலை கொண்டது கிடையாது.
ஆரா குழந்தையை கொஞ்சும் போதெல்லாம் ஒரு பார்வை பார்ப்பாளே தவிர வேறு எதுவும் சொல்வது இல்லை. பிரைசூடனிடமும் குழந்தை நன்கு ஒட்டிக்கொண்டது.
இருவரது தனிமைக்கும் குழந்தை மருந்தாய் இருக்க பிரகாஷ் பெரும்பாலும் பிரைசூடனிடம் விட்டுவிடுவான் குழந்தையை.
அனு அவனை முறைப்பாள். ஆனாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவாள்.
அவரவர் வரையில் எல்லாம் சரியாக போய் கொண்டு இருக்க “இதை இப்படியே விட கூடாதே” என்று அடுத்த வேலையை ஆரம்பித்தாள் அனு.
“மாமா என் தோழி ஒருத்தி வெளிநாட்டுல படுச்சுட்டு இப்போ இந்தியா வர போறா, அவளை நம்ம பிறைசூடன் மாமாவுக்கு கேக்கலாமே” என்று அபிப்ராயம் கேட்க்க
“முடிவு பண்ணிட்டு கேக்குறியா இல்ல அபிப்ராயம் கேக்குறியா” என்றான் பிரகாஷ் சுல்லேன்று.
“இதுல என்ன சந்தேகம் முடிவு பண்ணிட்டு தான் கேக்குறேன்” என்றாள் ஆராவையும் சூடானையும் பார்த்து.
அதில் ஆராவின் கண்கள் குளமாக சட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.
சூடன் இறுகி போய் அமர்ந்து இருந்தான்.
“என்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டிக்குறீங்க. அப்போ எல்லோருக்கும் சம்மதமா” என்று அடுத்து பேசியவளை எரிச்சலுடன் பார்த்தார்கள் அனைவரும்.
சூடன் கையிலிருந்த பேப்பரை விசிறி அடித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
“நீ அண்ணா கிட்ட அடிவாங்காம ஓய மாட்டடி” என்று திட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
கணபதியும் சென்றுவிட அனு அடுத்த திட்டத்துக்கு வழி வகுத்தாள்.
ஆனால் அதற்குள் ஆரா முந்திக்கொண்டாள். எல்லோரும் கூடி இருந்த கூடத்தில் சித்ராவையும் சர்க்கர நாற்காலியில் அமரவைத்துவிட்டு
“நான் என் வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்” என்று சொன்னவளை உருத்து விழித்தாள் அனு.
“நான் உன்னை போக சொல்லவே இல்லையே” என்றால் எகத்தாளமாக.
“உன் அனுமதியை நான் கேக்கவே இல்லை அனு” அவளது அந்த உதாசீனத்தில் பொங்கிவிட்டால் அவள்.
“ஏய்..” என்று ஆரம்பிக்கும்போதே
“அனு இதுக்கு மேல உன்னோட கூட வர என்னால முடியாது. உனக்குன்னு குடும்பம் வந்தாச்சு, குழந்தையும் பிறந்தாச்சு. இதுக்கு மேல நீ கையை அறுத்துகிட்டு சாவேன்னாலும் எனக்கொண்ணும் பிரச்சனையை இல்லை. உன் புருசனும், நீ பத்து மாசம் சுமந்து பெத்த பிள்ளையும் தான் அனாதையா தனியா நிக்கும். அதாவது ‘உன்னை போல’” என்று அதில் சற்று அழுத்தம் கொடுத்துவிட்டு
“நான் இனி என் பாதையில போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால நான் கிளம்பறேன்” என்றவள் கையில் பிடித்த பையோடு கிளம்பிவிட்டாள்.
அவள் நேரே சென்ற இடம் சாமிநாதனிடம் தான்.
“வாம்மா..” என்று அன்புடன் வரவேற்றார்.
“மாமா எனக்கு ஒரு வேலை வேணும். யாரையும் பார்க்க எனக்கு பிடிக்கல.. இங்க இருக்கவும் பிடிக்கல. கொஞ்ச நாள் தனியா இருக்கணும் போல இருக்கு” என்று கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவர் “சரி இன்னைக்கு மட்டும் இங்க இரு. நான் நாளைக்குள்ள ஏற்பாடு பண்றேன்” என்று அவளை அன்று அங்கவே தங்க சொல்லி அரவிந்த் மனைவியிடம் அவளை ஒப்படைக்க
கீதா அவளை நன்றாக பார்த்துக்கொண்டாள். அவள் அங்கு இருப்பதை கேள்வி பட்டு வள்ளியும் சண்முகமும் வந்து பார்க்க ஆரா யாரையும் பார்க்க விருப்ப படவில்லை. கீதாவின் மடியிலே தூங்கி போனாள்.
அவளது துன்பம் என்ன என்பது என்று தெரிந்த கீதாவும் அவளை எதுவும் கேட்காமல் தலை கோதி கொடுத்த படியே ஆதரவாய் இருந்தாள்.
இவள் இங்கு வந்த அடுத்த நிமிடம் பிறைசூடன் வந்தான். அவள் அவனை பார்க்க மறுக்க அவனா அவளது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பான்.
ஆரா பொறுத்தும் போவாள்
அதே சமயம் பொங்கியும் எழுவாள் ...
அனுவுக்கு சரியான முக்குடைப்பு...
👏🏻👏🏻👏🏻👏🏻🤩🤩🤩🤩
எல்லாம் சரி...இப்ப வரை உனக்கு ஆதரவா இருந்த சூடன் கேன பயலா என்ன????