அடுத்த நாள் காலை அழகாக விடிய அனுவிற்கு மட்டும் சோதனையாய் இருந்தது. பிரகாஷிடம் இருந்து எழுந்தவள் குளித்து விட்டு அவனுக்கு பிடிக்காத சுடிதாரை எடுத்து போட்டுக்கொண்டு கதவை திறக்க முனைந்த சமயம் பிரகாஷால் இழுக்க பட்டு ஒரே இழுவையில் போய் படுக்கையில் விழுந்தாள்.
“என்ன பண்றீங்க” வேகமாய் அவன் அவளை நெருங்கும் முன் எழுந்து அமர்ந்தவளை ஆத்திரமாக பார்த்தவன் கொஞ்சமும் தாமதியாமல் அவளை அடக்கி பிடித்து அவளது உடைகளை உருவ ஆரம்பிக்க விடிந்த பொழுதில் கணவனின் செயல் கண்டு அச்சம் பெருகியது.
:என் பிரகாஷ் இப்படி மிருகம் மாதிரி நடந்துக்குற..”
“நானா மிருகம் மாதிரி நடந்துக்குறேன். நீ தான் என்னை செய்ய வைக்குற. நான் நேத்திக்கே என்ன சொன்னேன் உன்கிட்ட. ஒழுங்கா புடவை கட்டுன்னு சொன்னேன்ல. அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் உன் விருப்பம் போல நடந்துகிட்டா நான் என்ன செய்றது.
என் செயல்கள் எப்பவும் உன் செயலை வைத்து தான் இருக்கும் என்பதை மனதில் பதிய வை. போ போய் புடவை கட்டிக்கிட்டு வா” என்று அவளை விட அவன் முன் தான் இருந்த கோலம் அவளை குறுக செய்ய வேறு வழியில்லாமல் புடவையை கட்டிக்கொண்டு வந்தாள்.
“ம்ம் இப்போ தான் லட்ச்சனமா இருக்க. அப்படியே போய் காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றான் அதிகாரமாய்.
“எனக்கு காபி போடா தெரியாது”
“இன்னைக்கு ஒரு நாள் பரவாயில்லை. நாளையிலருந்து நீ தான் காபி போடணும். காபி மட்டும் இல்ல எனக்காக நீ தான் சிக்கனும்” என்று ஆடர் போட்டுவிட்டு குளிக்க சென்றான்.
அவனது கட்டளையில் உள்ளம் உளைக்கலாமாய் கொதித்தது. அதை அடக்கிய படி அவன் சொன்னதை செய்தாள். பின் காலை உணவை அவன் பரிமாற சொல்ல உருத்து அவனை பார்த்தாள்.
அவளது பார்வையை ஏறிட்டவன் “என்ன முரண்டு பண்ணிக்கிட்டு இருக்குற.. இதுக்கும் ஏதாவது வைத்தியம் செய்யனுமா.. அங்கேயாவது நான் மட்டும் தான். இங்க ஒட்டு மொத்த குடும்பமும் குழுமி இருக்கு.. பார்த்துக்க” என்று ரகசியமாய் அவளது காதில் சொன்னவனை கண்டு அவன் மீது இருக்க இருக்க வன்மம் பெருகிக்கொண்டே போனது.
அவனது மிரட்டலில் பரிமாறினாள். பின் அவளும் உண்டுவிட்டு மேலே வந்து கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
அவளது செய்கையில் புருவத்தை நெரித்தவன் “என்ன காலையிலே எங்க கிளம்பிட்டு இருக்க” கேட்டான்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் “என் அலுவலகத்துக்கு” என்றாள்.
“வாட்.. நான் எப்போ நீ போறதுக்கு பெர்மிசன் குடுத்தேன்”
“என்னது இதுக்கும் தடையா... என்னால வீட்டுக்குள்ளே அடைஞ்சி கிடக்க முடியாது. அது மட்டும் இல்லாம நிறுவனம் முழுவதும் என் வசம் தான். அதனால நான் கண்டிப்பா போய் தான் ஆகணும்.”
“ஏன் அண்ணி போக மாட்டாங்களா..”
“அவ என்ன உங்க அண்ணனை கல்யாணம் செய்து இருக்காளா வார்த்தைக்கு வார்த்தை அண்ணி போடுறீங்க” என்றால் சுல்லேன்று.
“கல்யாணம் செயாடினாலும் ஆரா எனக்கு அண்ணி தான். இனி எனக்கு முன்னாடி இந்த வீட்டு மருமகளை அவமான படுத்துற மாதிரி பேசுன பேசுறதுக்கு வாய் இருக்காது.” மிரட்டியவன்
“சொல்லு என் அண்ணி வர மாட்டாங்க”
“அவ..” என்று ஆரம்பித்தவள் கணவனது முறைப்பை கண்டு “உங்க அண்ணி கல்யாணத்துக்கு முன்னாடியே அவளது எல்லா பங்கையும் என் பேர்ல எழுதி வச்சுட்டா”
“நீ அடங்க மாடியாடி..”
“அது இருபத்தி நாலு வருஷ பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்குறேன்” என்று சரண் அடைந்தாள்.
“அதனால நீ அவங்களோட பங்கையும் பார்த்துகிட்டு இருக்க”
“ஆமா”
“இது தப்புன்னு உனக்கு தெரியலையா..”
“நான் ஒன்னும் அவ... உங்க அண்ணிகிட்ட கேக்கல.. அவங்களா தான் குடுத்தாங்க.”
“நீயும் எதுவும் சொல்லாம வாங்கிகிட்ட ரைட்.”
அவனது நக்கலில் தலை குனிந்தாள்.
“பாரு அண்ணி குடுத்ததையும், உன் பேரில் உள்ள நிறுவனத்தையும் நீ உன் அப்பாகிட்ட இப்போவே ஒப்படைக்கணும்” என்று விட்டு தன் வக்கீலுக்கு போன் செய்து உடனடியாக பத்திரத்தை தயார் செய்ய சொல்லி காலை பதினோரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர சொன்னான்.
அவனது வேகத்தில் முழுதாய் உடைந்து போனாள். அவள் எதை எல்லாம் தன் கவசம் என்று எண்ணி இருந்தாளோ அதை எல்லாம் அவளிடமிருந்து அவன் பறித்துக்கொண்டு இருக்கிறான்.
முதலில் அவளது திமிர். இப்போ அவளது நிறுவனம். முழு நேர அடிமையாய் அவன் தன்னை மாத்திக்கொண்டு இருப்பதை கைகட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.
பிற பொழுதில் வக்கீல் வர அனு கையெழுத்து போட்டு கொடுத்தாள். அதில் வள்ளிக்கும் சண்முகத்திற்க்கும் ஏக சந்தோஷம்.
ஆனால் ஆரா அனுவை தடுத்தாள்.
“என்ன காரியம் பண்ற அனு. இது நான் உனக்காக கொடுத்தது. நீ எதுக்கு அதை அவங்க கிட்ட கொடுக்குற..”
“அண்ணி என் பொண்டாட்டிக்கு சம்பாரிச்சி போடா என்னால முடியும் பொது அவ மூலியமா வர்ற காசு எனக்கு தேவை இல்லை. அண்ணன் எவ்வழியோ நானும் அப்படி தான்.” என்று கூறிவிட்டு அனு கையெழுத்து போட்ட பத்திரத்தை வள்ளியிடம் கொடுத்து விட்டு தன் மனைவியை கூட்டிக்கொண்டு மேலே வந்தான்.
அவனுக்கு தெரியும் அனு இப்போ என்ன நிலைமையில் இருப்பால் என்று. அதனால் அவளுக்கு தனிமை கொடுக்க எண்ணி மேலே அழைத்து வந்தான்.
அனுவிற்கு எல்லாமே தன்னை விட்டு போனது போல இருந்தது. அனால் பிரகாஷின் பேச்சு அவளை வேறு மாதிரி உணரவைத்தது. அதும் என் பொண்டாட்டி என்கிற அவனது உரிமையில் மனம் மெல்ல நெகிழ தான் செய்தது.
அவளது நெகிழ்வை புரிந்துக்கொண்டவன் தன்னை அவள் உணருமாறு தாம்பத்தியத்தில் ஈடு பட நேற்று இருந்த வேகம் அவனிடம் இல்லாமல் அனுவை கொண்டாடி தீர்க்க அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் முட்டியது.
“சாரி டா. நேத்தைக்கு நடந்துகிட்டதுக்கு.. இனி இப்படி நடந்துகொள்ள மாட்டேன்” என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டு அவளது தேவையை தீர்க்க அனுவின் மனதில் கணவனுடைய வார்த்தையும் செயலும் நிறைந்து போனது.
அவளுக்கே தெரியுமே அவள் நேற்று செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று. அதனால் பிரகாஷ் கொடுத்த வலிகளை ஏற்றுக்கொண்டாள்.
அதன் பிறகு பிரகாஷின் கட்டளை படியே அனு வாழ தொடங்க ஆரா அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஆனால் அனு அவளை விடாமல் தன் துணைக்கு அந்த வீட்டிலே வைத்துக்கொள்ள சண்முகமும் வள்ளியும் கொதித்து போனார்கள்.
“அவ என்ன உன் வீட்டு வேலை காரியா... அடிமை மாதிரி நடத்துற..” என்று ஆட
ஆரா அவர்களை கண்டிக்கும் பார்வை பார்த்து விட்டு சரி நான் இருக்கேன் என்று ஒப்புதல் கொடுத்தாள்.
அனு அவளை ஏளனமாய் பார்த்து “அப்படியே பிரைசூடனை கரெக்ட் பண்ணலாம் என்ற எண்ணம்மா” என்று வார்த்தையில் நெருப்பு வைக்க துடித்து போனாள்.
சட்டென்று அவளை ஏறிட்டு பார்த்தாள் ஆரா. “அது தான் உண்மையோ” என்று மேலும் அவளை நக்கல் பண்ண வெறுத்து போனது ஆராவுக்கு.
அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தன் பெற்றவர்களிடம் திரும்பி நான் கொஞ்ச நாள் இங்கவே இருக்கிறேன்” என்று சொல்ல பிறைசூடனும் சித்ராவும் மறுப்பு தெரிவித்தார்கள்.
“நீ இங்க இருக்க வேணாம்” என்று பிறைசூடன் அனுவை பார்த்த படி சொல்ல
“ஹ என்னை தாண்டி அவ உன் பேச்சை கேப்பாளா” என்று நக்கலாய் பார்த்தாள் அவள்.
அதை கண்ட ஆராவுக்கு உள்ளம் துடித்தது. மேலும் மேலும் அவனை அவளிடம் அவமான பட வைத்துக்கொண்டு இருக்கிறேனே என்று.
பிறைசூடன் கெஞ்சலாய் ஆராவை பார்த்தான். போய்டுடா இங்க இருந்தா இவ உன்னை கொத்தி கொத்தியே ஒன்னும் இல்லாம ஆக்கிடுவா”
“சரி தான் ஆனா அவளை அப்படியே விட மனசு இல்ல மாமா... அவளுக்கு எதுவுமே தெரியாது. இத்தனை வருசமா என்னோடே இருந்ததடா.. அவளுக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். அதனால கொஞ்ச நாள் இங்க இருக்கேன். பிறகு போய்டுறேன்” என்று கெஞ்சினாள்.
அவளது கெஞ்சலில் சினம் தான் வந்தது அவனுக்கு. பிறைசூடன் வெறும் பார்வையாளராய் மட்டுமே இருந்தான்.
முட்டி மோதி நல்லது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.
அதன் பிறகு அனுவின் ஆட்டம் அதிகமாய் போனது. பிறைசூடன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவளை எப்படியாவது தடுத்து நிறுத்தி வீட்டோடு போடா வேண்டும் என்று எண்ணிய செயல் அனைத்தும் படு தோல்வியில் முடிந்தது. அனுவின் செயல்களை பிறைசூடன் முறியடித்து ஆராவை கொஞ்ச நேரமாவது நிம்மதியாய் இருக்க வைத்தான்.
அந்த நிம்மதியும் ஆராவுக்கு கிடைக்க வில்லை.
மனதால் அதிகம் பாதிப்படைந்தவள்
மருந்தாய் பிரகாஷின் அன்பு
மாற்றுமா அனுவை
மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளும்
மங்கை ஆரா பொறுமை மாற்றுமா???
இவ பெரிய தியாகி ****
எனக்கு அவளோ ஆத்திரம் வருது....இப்படியுமா ஒருத்தி இருப்பா....