அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

பிரகாஷுக்கு குளிர் பானம் எடுத்துக்கொண்டு ஆரா அவனை சந்திக்க செல்ல அவளது வருகைக்காக காத்திருந்தான் பிரகாஷ்.

ஆரா பேசும் முன்பே “சாரி அண்ணி...” என்றான் மரியாதையாய்.

அவன் எதுக்கு சாரி சொல்கிறான் என்பது புரிய மென்னகை புரிந்தாள். அனுவின் ஆட்டத்தை பார்த்தும் அவளை ஒதுக்காமல் தாலிகட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டவனது செயலில் ஆராவுக்கு பெருத்த சந்தோஷம்.

பிரகாஷ் மட்டும் அனுவை உதறி தள்ளி இருந்தால் அவ்ளின்மான நிலை. யோசித்து பார்க்கவே அச்சமாய் இருந்தது. ஆனாலும் பிரகாஷ் சுயநலமாய் நடந்துக்கொண்டதுக்கு மன்னிப்பு கேட்க ஆரா சிரிப்புடன் அதை அங்கிகரித்தாள்.

“இதுல நீங்க மன்னிப்பு கேக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. அந்த இடத்துல அனுவை நீங்க விட்டு குடுத்து இருந்தா தான் எனக்கு வருத்தமாய் இருக்கும். நீங்க செஞ்சது எனக்கு ரொம்ப புடுச்சு இருந்தது. உங்க குணத்துக்கு எனது வணக்கம்” என்று சொன்னவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் பிரகாஷ்.

“ரொம்ப பெரிய மனசு வேணும் அண்ணி தனக்கு இளைத்த தவறை மன்னித்து அவர்களை ஏற்க்க. உங்களுக்கு அந்த குணம் இருக்கு. என்ன இதுல அண்ணன் தான் வேதனைக்கு ஆளாகிட்டான். அவனும் புரிந்து கொள்ளும் காலம் வரும். அதுவரை கத்து இருக்கணும் கொஞ்சம் பொறுமையுடன்” என்றவனை பார்த்து தலை சாய்த்து ஆமோதித்தவள்

“நான் வந்தது நடந்தை பத்தி பேச வரல அத்தான். அனுவை பத்தி பேச தான்” என்று முடிக்கும் முன்னவே

“இனி அவ என் பொண்டாட்டி. எல்லாவற்றையும் நான் பார்த்துக்குறேன் அண்ணி” உறுதி குடுத்தவனை பார்த்தவளுக்கு உள்ளம் நிறைந்து போனது.

அன்று இரவு சடங்குக்கு ஏற்பாடு செய்திருக்க ஆரா தான் அனுவை அலங்காரம் செய்ய வேணும் என்று அனு அடம் பிடிக்க வள்ளிக்கும் சித்ராவுக்கும் ஆராவின் நிலையை எண்ணி வருத்தமாய் இருந்தது.

ஆராவோ எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் அனுவை அழகாய் அலங்காரம் செய்தாள்.

“உனக்கும் கல்யாணம் நடந்து இருந்தா நீயும் இப்போ இப்படி அலங்கார தேரா இருந்து இருப்பல்ல..” என்று விஷம் போல கக்கினாள்.

அதில் ஒரு கணம் ஆராவின் கைகள் அப்படியே நின்றது. பின்  பதில் எதுவும் பேசாமல் அவளின் கூந்தலில் சரம் சரமாய் பூவை வைத்து அவளது அலங்காரத்தில் தன் கண்ணே பட்டு விடும் என்று மையை எடுத்து அவளின் காதுக்கு பின் வைத்து விட்டாள்.

அவளது செயலை பார்த்தவளுக்கு “ஆரா.... இதுல எல்லாம் உன்னை அடுச்சுக்கவே முடியாது” கேலி பண்ணி அவளை பரிகசிக்க

‘நீ என்ன வேணாலும் சொல்லிக்க’ என்று தன் வேலையில் கவனமாய் இருந்தாள்.

அனுவின் மீது வள்ளி பயங்கர கோவமாய் இருக்க அனுவை அவர் எட்டி கூட பார்க்க வில்லை. சித்ரா உடம்பு முடியாமல் இருந்ததால் அவரும் அனுவை பார்க்க வர வில்லை.

பால் சொம்பையும் ஆறா தான் குடுக்கணும் என்று சொல்ல வேறு வலி இல்லாமல் அனுவை பிரகாஷின் அறைக்கு அழைத்து சென்று பாலை அனுவின் கைகளில் கொடுத்து

“அனு இதுவரை நீ எப்படி வேணாலும் இருக்கலாம். ஆனா இப்போ அப்படி இல்ல உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. அதை எந்த நேரத்திலும் நீ தவற விட கூடாது. நான் எங்கயும் போக மாட்டேன் உன் கூட தான் இருப்பேன். அதனால நீ என்னை எப்போ வேணாலும் தண்டிச்சுக்கலாம். ஆனா இப்போ நீ உன் வாழ்க்கைக்கு தான் முதல்ல முக்கியத்துவம் கொடுக்கணும்.” என்று பேசியவளை ஆழ்ந்து பார்த்த அனு

வாய் விட்டு சிரித்தாள். அதில் ஆராவை கேலி பண்ணி சிரிக்கும் சுவையே இருக்க அனுவின் சிரிப்பை பொருட் படுத்தாமல் அவளை இழுத்து அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவள்

“பார்த்து கவனமா நடந்துக்க” என்று அறிவுரை சொல்லிவிட்டு நகர. அனு பிரகாஷின் அறைக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்தவள் அங்கு படுக்கலையில் அமர்ந்து இருந்தவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் அலங்காரத்தை கலைத்து பூவை வீசி அடித்துவிட்டு அவளின் பையை திறந்து பேன்ட் டாப்பை எடுத்து குளியல் அறைக்கு நுழைந்தாள்.

அவளது செயலை ஒன்று விடாமல் பார்த்துக்கொண்டு இருந்த பிரகாஷ் அனுவின் வருகைக்காக காத்து இருந்தான்.

அவள் வெளியே வர பிரகாஷ் அழுத்தமான குரலில் பாலை எடுத்து குடு” என்று ஆணையிட

“என் உனக்கு கை இல்லையா.. நீயா எடுத்து குடுச்சுக்கோ.. எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லியாடி படுக்கயில் இருந்த போர்வை தலையணையை எடுத்துக்கொண்டு சோபாவுக்கு செல்ல

“அனு” அழுத்தமாய் அவளை கூப்பிட அவனது அந்த அழுத்தம் அவளை இம்சை பண்ணினாலும் என்ன என்று கேட்க்காமல் சோபாவில் சென்று அமர அவள் அமருவதற்கு முன் வேகமாய் வந்து அவளை ஒரு இழுவையில் தனக்கு முன் கொண்டு வந்து நிப்பாட்டினான்.

அவனது வேகம் வலை லேசாய் பயம் காட்டியது.

“ என்ன” என்று அதிக்காரமாய் பேசியவளை கண்டு பல்லை கடித்தவன்

“நான் என்ன ரோட்டுல போறவனா. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற..”

“உனக்கு அந்த அளவு மரியாதை போதும்” என்ற போதே அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் பிரகாஷ்.

அவனது அரையில் திகைத்து போனவள் பின் சற்றே சுதாரித்து

“ஏய் யாரு மேல கை வைக்கிற... நான் அனுடா” என்று சொல்லி முடிக்கும் முன் மறுபடியும் அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டான்.

தொடர் தாக்குதலில் சற்றே மிரண்டவள் அதுவும் அவனது அடி அவளை நிலைகுலைய வைக்க பயத்துடன் அவனை பார்த்தாள்.

“என்ன நக்கலா.. ரெண்டடி விட்டதுக்கே ஒடுங்கி போய்ட்ட.. ஆமா யார கேட்டு நீ புடவை மாத்துன.. போ போய் புடவை கட்டி இந்த அறைகுக்குள்ள எப்படி வந்தியோ அப்பிடியே வா..” என்று சொன்னான்.

“முடியாது. என்னால உன் கூட வாழ முடியாது”

“வாழ முடியாதுன்னு சொல்றவள் எதுக்கு காலையில என் கையாள தாலி வாங்கிகிட்ட...”

அனுவால் பதில் பேச முடியவில்லை.

“போ போய் புடவை கட்டிட்டு வா... எனக்கு புடவை தான் பிடிக்கும்” என்றான் அழுத்தமாய்.

“மாட்டேன்” என்பது போல தலை அசைத்தவளை கண்டு “மாட்ட” என்று கேள்வி கெட்டவனை கண்டு உள்ளுக்குள் குளிர் சுரமே வந்து விடும் போல இருந்தது.

அப்பாவி என்று எண்ணியவன் இன்று ருத்ர மூர்த்தியாய் நிற்கிறான்.

“ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... எனக்கு எதுவும் வேணாம்” என்று தன் நிலையை விட்டு கெஞ்சியவளை கண்டு உள்ளம் இறுகி போனது பிரகாஷ்க்கு.

“இதை நீ எனக்கு நிச்சயம் பண்ணும் போதே யோசிச்சு இருக்கணும். இல்லையா காலையில அண்ணியை மிரட்டி அவனாக கல்யாணத்தை நிறுத்தி உன் கழுத்துல மட்டும் தாலி வாங்கிகிட்டியே அப்போவாவது யோசிச்சு இருக்கணும்”

“அதை விட்டுட்டு இப்போ வந்து வேணாம் முடியாது அப்படின்னா நான் விட்டுடுவேன்னு நினைச்சியா... கண்டிப்பா உன்னை விட மாட்டேன். சேதாரம் அதிகம் வேணாம்னு நினைச்சா நீயே பொய் புடவை கட்டி தூக்கி எருஞ்ச பூவை எடுத்து தலையள வச்சுகிட்டு பால் சொம்பை எடுத்து என் கைல குடு” என்று கர்ஜிக்க அனுவிற்கு சர்வாங்கமும் ஒடுங்கி போனது.

எதுவும் பேசாமல் அவிழ்த்து போட்ட புடவையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு சென்று அதை உடுத்தி தலையை பின்னி பூவை வைத்த போது அவளின் கண்கள் கலங்கி போனது.

பிறந்ததிலிருந்து இப்போது வரை யாரும் அவளை அடித்தது கிடையாது. ஆனால் இன்று திருமணம் முடிந்த அன்றே வாழ்நாள் பூரா கூட வரும் கணவன் கன்னத்தில் தன் சுவட்டை அழுத்தமாக பதிந்து வைத்திருந்ததை கண்டு பிரகாஷின் மீது வன்மம் பெருகினாலும் இப்போது அதை காட்ட கூட இயலாத நிலையில் தான் இருக்கிறோம் என்று கழிவிரக்கம் கொண்டாள்.

வெளியே வந்தவளை ஆராய்ச்சியாக பார்த்தான் பிரகாஷ். அவனது பார்வையில் அவளது நடை தள்ளாட இருந்தாலும் சமாளித்துக்கொண்டு மேஜை மீது இருந்த பால் சொம்பை எடுத்து பிரகாஷுக்கு கொடுக்க, அவள் கொடுத்ததை வாங்கி தன் எச்சில் பட குடித்தவன் அவளிடம் மீதம் இருந்த பாலை குடிக்க கொடுத்தான்.

அவனது எச்சில் அவளுக்கு அருவெறுப்பை கொடுக்க இருந்தாலும் அவனது முறைப்பில் அதை ஒதுக்கி வைத்து விட்டு கடகடவென்று மீதம் இருந்த பாலை காலி செய்தாள்.

அவள் பால் குடித்து முடித்த அடுத்த நொடி அறை முழுவதும் இருள் சூழ்ந்து போனது.

 

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 10:01 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

சபாஷ் சரியான அடி

பிரகாஷ் பிரமாதம்

பதுங்கி இருந்தது இப்படி

பாயத்தானோ.....

புலியாக  உறுமியவள்

பூனையாக மாறிவிட்டா.....

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 6:39 pm
(@gowri)
Estimable Member

இப்ப தான் எனக்கு குளு குளுனு இருக்கு.....

இவளுக்கு தேவை தான் இது

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 5:01 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top