அவனுக்கு சொந்தமான வீட்டின் முன் நின்றது. “இது என்னுடைய உழைப்பில் நான் முதன்முதலாய் உனக்காக வாங்கிய வீடு உள்ளவா” என்று அவளை கை பிடித்து அழைத்து சென்றான்.
உள்ளே மனசு தீம் தீம் என்று முரசு அறிவிக்க அதை கட்டு படுத்திய படி அவனோடு உள்ளே சென்றாள்.
அவனுக்குரிய அறையில் அவளை அமர்த்தியவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். சந்தனம் குங்குமம் பூசி, தலையில் சரமாய் பூவை சூடி, அழகான மைசூர் பட்டில் இருந்தவளை காணுகையில் அவனுக்கு மூச்சு தாறு மாறாக ஏறி இறங்கியது.
அவனது பார்வையில் உடல் சிலிர்த்தாலும் சொல்ல முடியாத வார்த்தைக்குள் அடங்காத பயமும் சிறு படபடப்பும் எழ மூச்சு முட்டி போனது அவளுக்கு.
அவள் அருகில் கூட வராதவன் எதிரிலே நின்று அவளை இன்னும் அக்கு வேறு ஆணிவேராக பார்த்து தாறு மாறாக அவளின் மீது கண்களை ஒட்டி தன்னை தானே இன்னும் சோதனைக்கு உள்ளாக்கிகொண்டான்.
அவனது ஆளை தின்னும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று எழுந்தவள் வேகமாய் அவனிடமிருந்து தன்னை மறைக்கும் பொருட்டு சன்னளின் புறம் அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றாள்.
தன் கண் பார்வையில் இருந்து விலகி தனக்கு முதுகு காட்டி நின்றவளின் செயலில் கோவம் வந்தாலும் அவளின் முதுகையும் தன் கண்களால் உண்ண, தன் முதுகை துளைக்கும் பார்வையை திரும்பாமலே உணர்ந்தவள் சன்னல் கம்பியை இருக்க பற்றிக்கொண்டாள்.
அவனது பார்வையில் தன்னுள் சில உணர்வுகள் தூண்ட பட்டு இருக்க, உணர்வுகளின் பாதையை உணர்ந்தவளுக்கு “அய்யோ” என்று வந்தது.
விரலால் தீண்டாமல் தன்னை கொள்ளை இடும் இவனை என்ன செய்வது என்று திணறி தான் போனாள்.
இப்போ இவன் தன்னை தொட்டுவிடுவானோ என்ற படபடப்பிலே தன்னை வைத்திருப்பவனை கண்டு லேசாய் சினம் கூட பொங்கியது.
தொட்டு விட்டால் கூட தன் எதிர்ப்பை காட்டலாம். ஆனால் தொடாமல் தள்ளி நின்று நொடி நொடிக்கு அதிகமாக உணர்வுகளை கூட்டிட்க்கொண்டு இருப்பவனை என்ன செய்வது.
அவனது செயல் தன்னை அதிகம் சொத்தனை செய்வதை புரிந்து கொண்டவள் இனி இவன் முன்பு இருக்க கூடாது எண்ணி உப்பரிகைக்கு செல்ல முயன்றவளை பின்னோடு இறுக்கமாக தழுவினான் பிறைசூடன்.
அவனது இறுக்கத்தில் சொல்லாத அறியாத பல விஷயங்கள் அவளுக்கு புரிய அதன் வேகத்தில் சிக்கி தவித்து போனாள்.
“என்ன மாமா இது புதுசா..” என்று திணறி ஒரு வழியாக அவள் அவனிடமே கேட்க்க
“எதுடி புதுசு... நீ பிறந்ததுல இருந்து எனக்குன்னு நினைச்சி வாழ்ந்துகிட்டு இருக்கேன். உனக்கு என்னோட நேசம் புதுசா இருக்க” என்று கடுப்பாகி அவளது இடையே பிடித்து அழுத்தி கேட்க அவனது அழுத்தத்தில் முகம் சிவந்து போக
“மாமா ப்ளீஸ்”
“முடியவே முடியாது” என்று மேலும் அழுத்தத்தை கூட்டியவனை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் அவனின் கை மீது தன் கரத்தை பதித்து அவனது வேகத்தை கட்டு படுத்த முயல அதை செயல் படுத்த முடியாமல் காதோரம் குத்தும் மீசையில் தடுமாறி போனாள்.
“என்னங்க..” குரலே எழும்பாமல் அவனை கூப்பிட அவனோ அவளது மென்மையில் தொலைந்து போனான். இவ்வளவு நாள் இவள் சிறுமி என்று எண்ணி அருகில் கூட வராமல் விரதம் காத்தவனின் ஒட்டு மொத்த உணர்வும் வெடித்து கிளம்ப அவளை மேலும் தன்னோடு இறுக்கி கழுத்தில் முகம் புதைத்து தன் மீசையால் கோலம் போட்டு அவளின் உணர்வுகளை இன்னும் அதிகமாக தூண்டுகிறோம் என்று தெரியாமல் தூண்டி விட அவளது உடல் வெளிப்படையாக நடுக்கம் கொண்டது.
அவளது மேனியின் நடுக்கம் அவனை மேலும் இம்சிக்க வேகமாய் அவளை தன் புறம் திருப்பி துடித்துக்கொண்டு இருந்த அவளின் உதடுகளை வன்மையாக சிறை செய்தான்.
அவனது அந்த அதிரடியில் மலைத்து போய் கண்களை மூடிக்கொண்டாள்.
உதடுகள் அவளை ஒரு வகையில் இம்சை பண்ண, கூடவே அவனது கரங்களும் இடுப்பில் இருந்த புடவையை விலக்கிவிட்டு அவளின் வேற்று இடையை கரங்களை அழுத்தி பிடிக்க திக்கென்று ஆனது அவளுக்கு.
“மாமா” அவனது உதடுகளுக்குள்ளே முனக “ம்ம்” என்றானே தவிர அவளை விளக்கவே இல்லை. மூச்சு முட்டிய போதும் அவளை விடாமல் தன் கையனைப்புக்குள்ளே அவளை வைத்து மூச்சு வாங்க சில நிமிடங்களை கொடுத்தவன் மீண்டும் அவளிடம் சரணடைந்தான்.
அவனது தொடர் படை எடுப்பில் நிலை குலைந்து போனவளின் காதல் மனம் அவன் வசம் சென்று தன்னை கொடுக்க அதை உணர்ந்தவளுக்கு பயம் வந்து கவ்வ
“மாமா நான் உங்க கிட்ட பேசணும்”
“பேசலாம் ஆனா இப்போ இல்ல. நான் உங்கிட்ட கேட்டதை எடுத்துக்க போறேன்” என்று மேலும் அவளிடம் முன்னேற திகைத்து போனாள்.
“மாமா அதை பத்தி தான் பேசணும்” என்றாள்.
“ஏன் அதுல நீ கருத்து சொல்ல என்ன இருக்கு” என்று சுல்லேன்று கேட்டவனை கண்டு தலையிலே அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.
“நான் சொல்லமா வேற யாரு வந்து சொல்றது” என்று சற்று கோவமாகவே கேட்டவளின் தைரியத்தில் புருவம் சுருக்கியவன்
“என்னடி புதுசா எதுத்தேல்லாம் பேசுற..”
“அப்படி தான் பேசுவேன்” ஏற்னால் தெனாவட்டாக
“பேசுவடி நீ ஏன் பேச மாட்ட... அப்படியே அந்த அனுவை கல்யாணம் செய்து இருக்கணும். அப்போ தெரியும்.. உன்னை கட்டாய படுத்தி அத்தனை பேரையும் எதிர்த்து நின்னு உன்னை நிச்சயம் பன்னேன்ல என்னை சொல்லணும்” என்று கடுப்பானான் அவன்.
அவனது பேச்சை கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தவள் “அந்த அளவுக்கு நீங்க ஒன்னும் ஒர்த் கிடையாது. நானே சொன்னா கூட நீங்க என்னை விட மாட்டிங்க” என்றாள்.
“இதெல்லாம் மட்டும் நல்லா பேசுடி.. ஆனா பேச வேண்டிய நேரத்துல அமுக்கமா இரு” என்று கோவை பட்டான்.
“எப்படியும் நீங்க ஏதாவது தில்லுமுல்லு பண்ணி என்னை உங்க கிட்ட கொண்டு வந்துடுவீங்க, அப்படியே நீங்க எதுவும் செய்யலனாலும் என் அத்தை செய்வாங்க.. சோ நான் வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று அமைதியா இருந்தேன். அதுக்கு இப்படி ஒரு தண்டனையா.. இருங்க அத்தை கிட்டே சொல்றேன்” என்று அவள் முருக்கிகொள்ள அவளை காதலுடன் பார்த்தான்.
“அவ்வளவு நம்பிக்கையாடி என் மீது”
“ஆமாம்” என்றாள் புன்னகையுடன்.
தன்னிடமிருந்து விலகி நின்றவளை காதலுடன் நெருங்கியவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
“ஆரா...”
“ம்ம்ம்”
“நிஜமாவாடி”
“ம்ம்ம்”
“எப்போ இருந்துடி”
“நீங்க சொன்னீங்களே சின்ன வயசுல இருந்து.. நானும் அப்படி தான். எனக்கு சின்ன வயசுல இருந்து உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க நடை உடை பாவனையோடு என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்குவீங்களே அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தை கிட்ட நான் இல்லாத சமயம் என்ன சொல்றா உன் மருமவ என்று கேப்பிங்களே அந்த வார்த்தைக்காகவே மறைந்து நின்னு கேப்பேன் உங்க வார்த்தையை”
“அப்புறம் ஏண்டி உன்னை ஒரு சமயம் கூட வெளிப்படுத்திக்கவே இல்லை” என்றான் ஆற்றாமையாக
“ஏன் நீங்க மட்டும் ரொம்ப யோக்கியமா.. நீங்களும் தான் வெளிபடுத்திக்கவே இல்லை” என்றாள் பதிலுக்கு அவளும்
“அது நீ சின்ன பிள்ளைன்னு..” என்று இழுக்க
“பொய் சொல்லாதடா...” என்றாள் சட்டென்று
“என்னடி மரியாதை தேயுது..”
“காதலை வெளிபடுத்த தயங்கினவனுக்கு இந்த அளவு மரியாதை போதும்” என்று சொன்னவள் அவனுக்கு புது விதமாய் தெரிந்தாள்.
“இதை தாண்டி இத்தனை நாள் உன்கிட்ட எதிர் பார்த்தேன்... நான் எதிர் பார்த்த மாதிரி மேடம் செம்ம பாஸ்டா தான்டி இருக்கீங்க” என்றவன் அவளை லேசாய் விளக்கி நிறுத்தி அவளை ஆராய அவனது பார்வை உணர்த்திய செய்தியை படித்தவளுக்கு உள்ளங்கை வேர்க்க சட்டென்று அவனது கண்களை தன் கரம் கொண்டு மூடினாள்.
இரு கண்கள் சொல்லும் காதல் லீலைகளை
இதழ்கள் கொஞ்சம் பருகட்டுமே...
இனி பிரிவேது ..
இதயம் சொல்லும் வார்த்தைகளை
இனி நாம் இணைந்து கேட்போமே...
உன் காதல் சொல்ல தேவையில்லை என் காதல் புரிந்து கொள்ளுமே...
Aiy சூடன் காதல் 🙈🙈🙈🙈