அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

பிரைசூடனும் அரவிந்தும் நெருங்கிய நண்பர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக யாருக்கும் சொல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே வந்த ஆராதனாவுக்கு முழு பாதுகாப்பும் கொடுத்து பாதுகாத்து வருவது அரவிந்தனின் தந்தை சாமிநாதன்.

அரவிந்தனுக்கு கூட பிறக்காத தங்கை ஆராதனா. அவளின் வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளிலும் கூட இருந்து பார்த்தவன் அவன்.

அவள் மிகவும் துயரப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்கு வரும்போது சிறிதும் யோசியாமல் அப்பாவும் மகனும் அவளுக்கு ஆதரவு கொடுத்து அவள் விருப்ப படி தனிமையில் அவளை வசிக்க விட்டார்கள்.

எவ்வளவு தனிமை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கொடுத்து வாரத்துக்கு இரண்டு நாள் அவளை வந்து பார்த்து கொள்ளுவார்கள்.. கூடவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

கொஞ்ச நாள் அவளை தனியே விட்டவர்கள் அதற்க்கு மேல் அவளை அப்படியே விட மனம் இல்லாமல் பிறை சூடானுக்கு மட்டும் உரிய தகவலை சொல்ல அவன் நிதானமாய் வந்து சேர்ந்தான் அவளிடம்.

பிறைசூடானின் அத்தை பெண் தான் ஆராதனா. ஆராதனாவின் தந்தைக்கு இரு தாரம். முதல் தாரத்து மகள் அனு.. அனுவின் தாய் அவள் ஒரு வயது அவரும் முன்னே இறந்து விட ஆராதனாவின் தாய் வள்ளியை இரண்டாம் தாரமாக மணம்முடித்தார் சண்முகம்.

மனம் முடித்த கையுடனே ஆரா பிறந்துவிட அனு அவளை பாசத்துடன் தான் ஆரம்பத்தில் பார்த்துக்கொண்டாள். ஆனால் சில பல உறவுகள் அவளின் மனதில் விசத்தை பரப்ப வள்ளியை வெறுக்காமல் ஆராவிடமிருந்து பிரித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்.

ஆராவுக்கு தாயில்லாமல் செய்ய ஆரம்பித்தாள் அந்த சகுனி.. கூடவே வள்ளியின் அண்ணன் மகன்களான பிரகாசையும் பிரைசூடனையும் அனு ஆராவின் புறம் போகவிடாமல் அவளை பற்றி தப்பும் தவறுமாக சொல்லிவைத்து அவளை எல்லோரிடமும் இருந்து ஒதுக்கி வைத்தாள்.

ஆனால் யார் தடுத்த போதும் பிறை சூடன் மட்டும் ஆராவின் தோழனாக அவளின் தனிமையை போக்கும் நல்ல நண்பனாக உறவினனாக இருந்தான்.

சண்முகம் தன் தாயின் கட்டாயத்தின் பேரில் முதல் திருமணத்தை முடிக்க காதல் கொண்ட வள்ளியின் திருமணம் பின்னுக்கு தள்ளி போனது. அடுத்த ஒரு வருடத்தில் அனுவின் தாய் மரணத்தை தழுவ காதல் கொண்ட இரு மனமும் காதலில் திளைத்து போனது.

பிரிந்து இருந்த காதல் அதன் பிறகு ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆராவுக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. கூடவே அனுவின் செட்டையும் அதிகரித்து போனது.

மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற கணக்கு இங்கு தவறாகி போய் ஆசையும் மோகமும் ஆயுள் வரை என்றாகிப்போனது.

பொழுதுக்கும் உல்லாசமாய் இருந்தார்கள் இருவரும்... அல்ல அல்ல குறையாத பணம். கூடவே எண்ணிலடங்கா சொத்து என்று செல்வ செழிப்பிலே முக்குளித்த சண்முகத்திற்க்கும் வள்ளிக்கும் பணம் பெரிய விசயமாக தெரியாமல் இருந்தது.

இருவரும் பிறப்பிலே செல்லவ செழிப்பில் இருந்தது அவர்களின் பொறுப்பில்லா தனத்துக்கு அடி கோலியது.

அனுவை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத வள்ளி அவள் காட்டிய போலியான அம்மா பாசத்தில் சற்றே நெகிழ்ந்து தான் போனாள்.

அதனால் ஆரா சற்றே பின்னுக்கு தள்ளி போனாள். அவளை கூட இருந்து கருத்தாய் பார்த்துக்கொண்டது பிறைசூடனின் தாய் பவித்த்ரா தான்.

அனுவின் சேட்டையை புரிந்து கொண்ட அவர் ஆராவை காய பட விடாமல் ஓரளவு பார்த்துக்கொண்டார். ஆனால் காலம் அவரை பலிவாங்கி படுத்த படுக்கயாக்கிவிட்டது.

அதும் சரியாய் அவள் கல்லூரி காலத்தில். பிரைசூடனும் வணிகம் படிக்க வெளிநாடு சென்றிருக்க உயிராய் இருந்த அத்தையும் படுக்கையில் விழ துணைக்கு யாரும் இல்லாமல் அனுவின் அதிரடியை எதிர்க்க முடியாமல் திணறி போனாள்.

அவளின் அட்டகாசம் அதிகமாய் போக வேறு வழி இல்லாமல் ஆரா விடுதியில் தங்கி படிக்க போறதாக அறிவித்து விட்டு

ஏன் எதற்கு என்று கேட்ட தாய் தந்தையரை சிறிதும் மதிக்காமல் கிளம்பி போய்விட்டாள்.

கல்லூரி காலம் சற்றே சொல்லிக்கொள்ளும் படி இருந்தது. அதற்க்கு தோதான நண்பர்கள் அவளுக்கு வாய்க்க அவள் அனுபவிக்காத சில பல விஷயங்கள் முழு சுதந்தரத்துடன் செய்ய ஆரம்பித்தாள்.

அதில் ஓட்டுனர் பயிற்சி, கணிணி பயிற்சி, சமையல் பயிற்சி, தைய்யல் என்று எதையும் மிச்சம் வைக்காமல் ஓரளவு அடிப்படை தேவைகளை யாரையும் எதிர்க்கொல்லாமல் தானே செய்ய கற்றுக்கொண்டாள்.

முழுதாய் ஐந்து வருடம் கல்லூரி விடுதியிலே கழித்தவளை அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு அவளை நலம் விசாரித்துக்கொண்டான் பிறைசூடன்.

நேரில் வந்து நலம் விசாரிக்க இவள் மறுத்து விட கோவம் வந்தாலும் “உன் விருப்பம்” என்று ஒதுங்கி கொண்டான் அவன்.

கல்லூரி முடிந்த பிறகு கால்கள் கணக்க வீட்டின் உள் அடிஎடுத்து வைத்தாள். அதன் பிறகு தான் அனுவின் ஆட்டம் இன்னும் அதிகரித்தது.

எவ்வளவோ பொறுமையாக போய் பார்த்தாலும் தொடர்ந்து  சீண்டிக்கொண்டே இருப்பவளை என்ன செய்வது என்று பெரும் தலைவலியாய் போனது ஆராவுக்கு.

ஆராவை பொறுத்தவரை அனுவின் வன்மத்திற்கு தன் தாய் தந்தையின் உல்லாசமே காரணம் என்று எண்ணி இருந்தாள். அதனாலே அனுவின் ஆட்டத்திற்கு பதில் அடி கொடுக்காமல் இவ்வளவு நாள் ஒதுங்கியே இருந்தாள்.

இவ்வளவு நாள் ஒதுங்கி போனவளுக்கு முதுகெலும்பு இல்லை என்று எண்ணி இருந்த அனுவுக்கு அவளை இன்னும் வருத்தி பார்க்க முடிவெடுத்தாள்.

ஆரா வறுத்த பட்டு கண்ணீர் விடும் போதெல்லாம் பிறைசூடன் துணையாய் இருந்து அவளுக்கு ஆதரவு கொடுத்து ஆறுதல் படுத்தினான்.

அவனும் இப்போது ஆராவின் மீது கோவம் கொண்டு உள்ளதால் ஆரா தன்னந்தனியாக அனுவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்தது.

அதுவும் தன் வாழ்க்கையே பறிபோகும் நிலை..

சண்முகமும் வள்ளியும் அன்று எந்த சுற்றுலாவும் போகாமல் அதிசயமாய் வீட்டில் இருந்தார்கள். அதை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தாள் அனு.

“அப்பா அம்மா நான் பிறைசூடனை காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்கிறான். எனக்கும் அவனுக்கும் கல்யாணம் செய்து வைங்க” என்று தன் எதிர் புறம் அமர்ந்து இருந்த ஆராவை கூர்மையாக பார்த்த படி சொன்னாள். அதை கேட்டு விலுக்கென்று தூக்கிவாரி போட்டது ஆராவுக்கு.

“இது தாண்டி எனக்கு வேணும்” என்று வன்மமாய் நினைத்தவள் முகத்தை சிரியசாகா வைத்துக்கொண்டு கேட்டவளின் விண்ணப்பத்தை கேட்டு உள்ளம் விண்டு போனது ஆராவுக்கு.

அனு சொன்ன விஷயத்தை கேட்டு பெற்றவர்கள் இருவருக்கும் சந்தோசமாய் இருந்தது.

“நானே எங்க அண்ணன் குடும்பத்துல உங்க ரெண்டு பேத்துல யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு நினைச்சேன் அனு.. இப்போ அது உன் மூலமா நடக்க போகுது. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் உடனே என் அண்ணா கிட்ட பேசுறேன்.” என்று பரபரப்பா பேசும் தன் தாயை விரக்த்தியாக பார்த்தாள் ஆரா...

ஆராவின் விரக்தியில் அனு சந்தோஷம் கொண்டாள்.

பிறைசூடனின் தந்தை கணபதிக்கு பல வியாபாரம் இருந்தது. அதை கட்டி காப்பாத்த அதன் பின்னே ஓடிக்கொண்டு இருந்தார். தங்கை வந்து சம்மந்தம் பேச பணம் பணத்தோடு சேரட்டும் என்று அவரும் மனங்களை பற்றி யோசிக்காமல் காசை வைத்தே திருமணத்தை முடிக்க எண்ணினார்.

ஆனால் கணபதியின் மனைவி சித்ராவுக்கு பணத்தின் மீது நாட்டம் கிடையாது. முதலில் அனுவை அவர் வேறு மாதிரி பார்க்கவில்லை. ஆனால் அவளின் நடவடிக்கை அவளின் மீது வெறுப்பை கொண்டு வந்தது. அவளை திருத்த பார்த்தவர் பின் அவளின் முரட்டு பிடிவாதத்தில் இவள் அனுபவித்து தான் திருந்த வேண்டும் என்று அவளை விட்டுவிட்டார். ஆனால் முழுவதும் அப்படியே விடாமல் அவ்வப்போது ஒரு குட்டு வைப்பதுமாக இருந்தார்.

அனுவிர்ற்கு நேர் பதம் ஆரா.. அவளின் பக்குவமான குணம் சித்ராவை பெரிதும் கவர்ந்தது. அவளின் சொல் பேச்சு குணம் அவரை கவர நல்லது எது கேட்டது எது என்று முழுமையாக எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தார்.

அண்ணன் தங்கை இருவரின் வீடும் அருகருகே என்றதால் ஆராவை முழுவதுமாக வளர்த்தது சித்ரா தான். அவளே பிரைசூடனுக்கு மனைவியாக வர வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால் அதை பிள்ளைகளிடம் அவர் வெளிபடுத்திக்கொல்வது இல்லை. பிறைசூடனிடம் மட்டும் ஆராவை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி சொல்லுவார்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 9:45 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

அப்பா சரி இலலை

அம்மா இறந்து விட்டார்

அம்மாவாக வந்தவர்

அப்பாவுடன் சுற்ற

அனுவின் தனிமை

ஆராவின் மேல் வன்மை

ஆறுதலாய் பிறைசூடன்

அதுவும் தள்ளி போக

ஆள் துயரில் ஆரா....

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 12:05 pm
(@gowri)
Estimable Member

அச்சோ பாவம் ஆரா🤧🤧🤧🤧

எங்க இருந்து தான் இப்படி பிரச்சனை எல்லாம் வருமோ தெரில...

அடியே அனு🤬🤬🤬🤬

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 4:03 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top