அழுத்தமாக கதவை மூடிக்கொண்டவனின் இதயம் பல மடங்கு இறுகிப்போய் கிடந்தது.
வெளியே அவனின் நண்பன் பரவாசு கதவை தட்டி தட்டி ஓய்ந்து போனான்.
கதவைத் திற செஞ்சன் நான் உன்கிட்ட பேசணும்.. என்று எவ்வளவோ கேட்டு பார்த்தும் செஞ்சன் கதவை திறக்கவே இல்லை.
உன் மனசுல நீ என்ன தாண்டா நெனச்சிட்டு இருக்க.. நீ ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கிட்டு இருக்க அது தெரியுதா உனக்கு என்று கேட்டான்.
அந்தப் பெண்ணோட காதலுக்கு நீ என்னதான்டா பதில் கொடுக்க போற. உன் மௌனம் மட்டும் தான் பதில்னா உன் கையாலேயே அந்த பொண்ண கொன்னு போட்டுட்டு. அந்த பொண்ணோட ஒவ்வொரு அணுவுளையும் நீ தான் நிறைச்சிருக்க. உன் மேல அந்த பொண்ணு அவ்ளோ காதலா இருக்கா…அவள ரெண்டா உடைச்சு பார்த்தா நீ மட்டும் தான் டா இருப்ப. ஆனா நீ அந்த பொண்ணுக்கு செய்யறது அத்தனையும் எவ்வளவு பெரிய துரோகம்னு தெரியுதா.. என்று விடாமல் கேட்டான் பரவாசு. அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
சங்கவையின் காதல் அறியாதவனா இந்த செஞ்சன். அவளது அடி முதல் பாதம் வரை அனைத்தையும் அறிந்தவன் தானே இந்த செஞ்சன்.
அவளது நெஞ்சில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது தெரியும். அதேபோல அவளது நெஞ்சம் முழுக்க முழுக்க தன்னை மட்டுமே சுமந்து இருக்கிறாள் என்பதையும் அறிந்தவன் ஆயிற்றே, அவனது கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது அது அவனது இயலாமையை சொன்னது. தன் ஒட்டுமொத்த கோபத்தையும் சுவரில் காட்டினான்.
தன் வலது கரத்தால் சுவற்றில் முட்டி முட்டி காயம் செய்து கொண்டான். மனதில் எழுந்த வலியை விட இது ஒன்றும் பெரிதாக அவனுக்கு தெரியவில்லை போல. தன் கோபத்தையும் இயலாமையையும் எங்கே போய் காட்டுவது இப்படித்தானே காட்டிக் கொள்ள முடியும் தனக்குள்ளே தன்னை மிகவும் வெறுத்துப் போனான் செஞ்சன்.
கதவை தட்டி தட்டி ஓய்ந்து போன பரவாசு அடுத்த நாள் சங்கவையை தேடி சென்றான். அவளிடம் அவளது பெற்றோரின் எண்ணை வாங்கிக் கொண்டவன் அவர்களை தொடர்பு கொண்டான்.
ஒருவேளை சங்கவியின் பெற்றோரால் கூட ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்று எண்ணியே அவர்களை தொடர்பு கொள்ள நினைத்தான். ஆனால் அவர்களிடம் பேசிய பிறகோ அவர்கள் படும் வேதனை கொஞ்ச நெஞ்சம் இல்லை என்று புரிந்து கொண்டான்.
நீங்க செஞ்சன் தம்பியோட நண்பன்களா என்று அவர்கள் பேசிய பேச்சே அவனை உருக்கியது.
ஒரு நாள் ரெண்டு பேரும் காதலிக்கிறதா வந்து சொன்னாங்க தம்பி. எனக்கு பெருசா எந்த மறுப்பும் இல்லை அதே மாதிரி என் பொண்டாட்டிக்கும் எந்த மறுப்பும் இல்லை. எங்க மகள் சந்தோஷம் தான் எங்க ரெண்டு பேருக்கும் முக்கியமா இருந்தது இப்ப வரையிலுமே என் மகள் விருப்பம் தான்.
அப்படி இருக்கும்போது தான் கல்யாணத்தை பத்தி பேசலாமே அப்படின்னு செஞ்சன் தம்பிக்கிட்ட நாங்க பேசணோம். அப்ப அந்த தம்பி சங்கவையோட படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னாரு.
சரின்னு நாங்களும் அதுக்கு சம்மதித்தோம். அதுக்கு பிறகு திடுதிப்புன்னு பாப்பா ஒரு நாள் போன் பண்ணா. போன் பண்ணி அப்பா காசு வேணும் அப்படின்னா. நானும் அனுப்பிவிட்டேன் ஏன்னு கேட்கும் போது தான் செஞ்சன் தம்பிக்கும் அவங்க அம்மாவுக்கும் விபத்து நடந்ததா சொன்னா. எங்களால அந்த நேரம் போக முடியல. ஏன்னா எங்க மூத்த பொண்ணு பிரசவ நேரத்துல இருந்தா. எப்ப வேணாலும் குழந்தை பிறக்கும்ன்ற நிலைமையில இருந்ததனால எங்களால இங்க இருந்து நகர முடியல. அப்பவும் இடையில ஒரு நாள் நான் மட்டும் போயி அவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு தான் வந்தேன். என்னால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அவ்ளோத்தையும் கொடுத்தேன் தம்பி.
ரெண்டு பேரும் பொழச்சி வந்தா போதும் என்ற நிலைமையில் தான் நான் இருந்தேன்.
நாங்களும் ஆஹா ஓஹோன்ற குடும்பம் லாம் இல்ல. வெறும் விவசாயம் தான். அதனால எவ்ளோ கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து இரண்டு பேத்தையும் காப்பாற்றினாள் என் பொண்ணு.
ரெண்டு பேரும் தேறி வர்ற வரையிலும் என் பொண்ணு அவங்க கூட தான் இருந்தா. நானும் அவளை வான்னு சொல்லல ஏன்னா அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வேற யாரும் துணை இல்லாததுனால என் பொண்ண அங்க விட்டுட்டு நான் மட்டும் ஊருக்கு வந்துட்டேன் என்றார் சங்கவையின் அப்பா.
அவரைத் தொடர்ந்து சங்கவியின் அம்மா,
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு உங்க ரெண்டு பேரும் குணமாயிட்டாங்கன்னுஇங்க ஊருக்கு வந்துட்டா. வந்ததுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு அந்த தம்பி வந்து நமக்குள்ள காதல் வேணாம் அப்படின்னு சொல்லிட்டு போயிடுச்சு.
அதுல இருந்து என் பொண்ணு நட பொணமா தான் இருக்கா. இன்ன வரையிலும் அவளுக்கு ஒரு நல்லது என்னால செஞ்சு வைக்க முடியல என்றார் ஆதங்கமாக.
நீங்க வேறொரு கல்யாணம் ஏற்பாடு பண்ணலையா? பரவாசு அவரிடம் கேட்டான்.
எங்க தம்பி ஒரே ஒருமுறை அப்படித்தான் ஏற்பாடு பண்ணேன். அதுல இருந்து பாப்பா என்கிட்ட சரியாவே பேசுறது இல்ல. ஊருக்கும் பெருசா வர்றது இல்ல. இந்த முறை தான் திருவிழாவுக்கு வாத்தான்னு சொல்லி இருக்கேன். பாப்பா வருதா இல்லையான்னு கூட தெரியல என்று பெருமூச்சு விட்டார்.
அவர்களிடம் பேசிய பிறகு அவர்களது பக்கமும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை புரிந்து கொண்டவனுக்கு செஞ்சனின் பக்கம் தான் ஏதோ காரணம் இருக்கிறது என்பது புரிந்து போனது.
ஒருவேளை விபத்து நடக்கும் போது படாத இடத்தில் பட்டு இருக்குமோ என்று அவனது சிந்தனை இருந்தது. அதை அவனிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியவன் அடுத்த நாள் இரவு நேரம் உண்டு கொண்டு இருந்த செஞ்சனிடம் வந்து நின்றான்.
செஞ்சன் அவனுக்கும் சாப்பாடு எடுத்து போட்டுவிட்டு தானும் உண்ண தொடங்கினான். செஞ்சனை பார்த்துக்கொண்டே அமர்ந்த பரவாசு உணவை உருட்டிக் கொண்டே,
ஏன் மச்சான் ஒருவேளை விபத்து நடந்ததுல படாத இடத்துல எதுவும் பட்டுடிச்சோ.. அதனாலதான் நீ இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியா.. உன்னால ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியாதோ… என்று சரமாரியாக கேள்வி தொடுக்க அப்போதுதான் உணவை வாயில் எடுத்து வைத்திருந்தான் செஞ்சன். அவனது சரம் மாதிரியான கேள்விகளாலும் அதுவும் அவன் சொன்ன படாத இடம் பட்டுவிட்டது என்பதிலும் புரை ஏறியது.
புரையேறியதில் வாயில் வைத்திருந்த உணவுகள் எல்லாமே எதிரில் இருந்த பரவாசுவின் முகத்திலே பட்டது..
செஞ்சன் பரவாசுவை முறைத்து பார்த்தான். அதில் கடுப்பான பரவாசு,
முறைக்க வேண்டியது நான்.. நீ தான்டா என் முகத்துல துப்பி வச்சிருக்க.. அப்போ நான் தானே உன்னை முறைக்கணும். நீ எதுக்குடா முறைக்கிற… என்று கேட்டுக் கொண்டே அருகில் இருந்த சிங்கிள் முகத்தை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான் அவனுக்கு எதிரில்.
நீ இப்படியே பேசிட்டு இருந்தா மூன்பாவது தெரியாமல் துப்பினேன் இப்போ தெரிஞ்சே உன்மூஞ்சிலேயே துப்புவேன்டா… என்று திட்டினான் செஞ்சேன்.
அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல்,
டேய் நான் வேணா ஒரு நல்ல டாக்டரா பார்க்கட்டுமா. இந்த பிரச்சனையை சரி பண்ணிடலாம்… என்று ஆதரவாக அவன் பேச, செஞ்சனுக்கோ ஏகத்துக்கும் கடுப்பேறியது.
இப்போ நீ மூடிகிட்டு திங்கலனா அடுத்து எதால அடிப்பேன்னு எனக்கு தெரியாதுடா. மரியாதையா வாய மூடிட்டு சாப்பிடு.. என்று திட்டினான். அவனது திட்டலை காதில் வாங்கிக் கொண்டே,
இல்ல மச்சான் நான் என்ன சொல்ல வர்றேன்னா… என்று பரவாசு ஆரம்பிக்க,
நீ எதையும் பேச வேண்டாம் மூடிட்டு தின்னு. இல்லனா எழுந்து போ.. ஒரு அதட்டல் போட்டு விட்டு உணவில் கவனம் ஆனால் செஞ்சன்.
அப்போ உனக்கு அந்தப் பிரச்சனை இல்லையா மச்சான் என்று பரவாசு மீண்டும் ஆரம்பிக்க,
செஞ்சன் கடுமையாக முறைத்தான் அவனை.
சரி சரி கூல்டவுன் கூல்வுடன் என்று தலையை குனிந்து கொண்டு உணவில் மட்டும் கவனம் செலுத்தினான் பரவாசு.
ஏன் செஞ்சேன் கல்யாணம் வேணாம்னு சொல்றான். அந்த பொண்ணு பாவம் ஆச்சே.. அந்த பொண்ண பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்கிறானே.. பாவம் அந்த பொண்ணு காதலனுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே நிக்க முடியாம தனிச்சு போய் நிக்குது. அந்தப் பெண்ணோட வேதனைகள் எனக்கே தெரியும் போது காதலிச்ச இவனுக்கு தெரியாதா.. தெரிஞ்சும் ஏன் இவன் இவ்வளவு மௌனம் காக்கிறான்.. செஞ்சன் அவ்வளவு சுயநலம் பிடித்தவனா? தனக்குள்ளே எழுந்த கேள்விகளுக்குள் மூழ்கி போனான்.
செஞ்சேன் எழுந்து போனது கூட கவனிக்கவில்லை.
அவனது சிந்தனை எங்கும் எப்படி தன் நண்பனையும் தன் நண்பனின் காதலியையும் சேர்த்து வைப்பது என்பதிலே முனைப்பாக இருந்தது.. அதனால் அவனை சுற்றி நடந்த எதுவும் அவனுக்கு தெரியாமல் போனது. அவனையே சுற்றி சுற்றி வந்த ஒரு பெண்ணும் அவனது கவனத்தில் பதியாமல் போனது..
அடுத்த நாள் காலையில் எப்பொழுதும் போல பேருந்தில் பரவாசுவோடு செஞ்சனும் சென்றான். அதே பேருந்தில் சங்கவையும் ஏறினாள். அவளை எப்பொழுதும் போல பின்னிருந்து பார்த்து இரசித்துக்கொண்டே இருந்தான் செஞ்சன். அவன் இந்த பேருந்தில் தான் இருக்கிறான் என்பது தெரிந்து கொண்டவளும் அவன் புறம் திரும்பவே இல்லை. அவள் திரும்பினால் அவன் அடுத்த நிமிடமே அந்த பேருந்தில் இருந்து இறங்கி விடுவான் என்பதை புரிந்து கொண்டவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் புறம் திரும்பாமல் அப்படியே நின்று இருந்தாள்.
அவள் திரும்பாமல் இருப்பது தனக்காகத்தான் என்று புரிந்து கொண்ட செஞ்சன் தன் மீசையை முறுக்கிக் கொண்டு அவளைத்தான் விடாது பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கொண்ட காதலின் ஆழத்தை அவன் அறியாதவனா.. அவள் கொண்ட காதலின் மீது அதிகமாக கர்வம் கொண்டான் செஞ்சன். அதனாலே மீசையை முறுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
தனக்காக தன் புறம் திரும்பாமல் நின்றவளின் காதலில் செஞ்சனின் மனம் உருகிப் போனது. அந்த நிகிழ்த் தன்மையோடு தன்னவளை விழி எடுக்காது ஆசையாக பார்த்தான்.
காசை பரசுரிடம் நீட்டி டிக்கெட்ட எடு என்றவன் விழிகள் மொத்தமும் சங்கவையிடம் தான் இருந்தது.
அதைப் பார்த்த பரவாசுக்கு அவ்வளவு கோவம் வந்தது. கல்யாணம் பண்ணிக்க மாட்டானாம், காதலை ஏத்துக்க மாட்டானாம் ஆனா வேற யாரையும் பார்க்க மாட்டானாம்.. அந்த பொண்ணையே தான் வச்ச கண்ணு வாங்காம பார்ப்பானாம்.. இவன் பைத்தியமா இல்ல இவன் கூட சுத்துற நாங்க எல்லாம் பைத்தியமா? என்று வாய்க்குள் முணகியவன் டிக்கெட் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, செஞ்சன் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,
கண்ணு வலிக்க போகுதுடா கொஞ்சமாச்சும் கண்ணை சிமிட்டு என்றான் கிண்டலாக.
என் கண்ணு எனக்கு வலிச்சா வலிச்சிட்டு போகுது.. நீ பொத்திக்கிட்டு நில்லு… என்று கடுப்படித்தான் செஞ்சன்.
ம்கூம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. முணகினான் பரவாசு.
சாருக்கு வேற எதுல குறைச்சலாம் பல்லைக் கடித்துக் கொண்டு செஞ்சன் கேட்டான்.
சாரே.. உங்களை ஒன்றுமே சொல்லல சாரே.. நான் பாட்டுக்கு புலம்பிக்கிட்டு வரேன்.. என்ற தலைக்கு மேலே கை எடுத்து கும்பிடு போட்டுவிட்டு அமைதியாக நின்று கொண்டான் பரவாசு..
அது… என்று ஒரு மிரட்டலோடு தன்னவளை விழியாற இரசித்துப் பார்த்தபடி வந்தான் செஞ்சன்…
கண்கள் நான்கிலும் கண்ணீர்
கண்ணுக்குள் ஏக்கத்தை விட
காதலே அதிகம்...
காதலுடன் காத்திருக்கும் காதலியின் நிலையோ காலம் சென்றதுதான் மிச்சம்
காதலன்
கைகூட வில்லையே....
காதலனோ மனதில் கண்ணீரோடு கரைந்தாலும்
காயம் ஏற்படுத்திக் கொண்டாலும்
காதலியை பார்ப்பதில் காதலன் தவறவில்லை...
காதல் இருந்தும் பிரிவேன் காரணம் சொல்லாமலே
காதலியை வதைப்பது ஏன்
காதலனே
காரணம் வேண்டாம்_ உன்
காதலை கொடு....
பிரிந்த காதலை சேர்த்து வைக்க
படாத பாடுபடும்
பரவாசு நட்பில் பாசமே...
பிரமாதம்
அவ வீட்டு பக்கமும் பிராப்ளம் இல்ல.....
இப்ப தெரிஞ்சிட்டு.....
அப்ப என்ன தான் டா பிராப்ளம் பரங்கி மண்டையா😤😤😤😤😤😤
கடுப்பேத்தரார் ரைட்டர்😬😬😬😬😬
@gowri நான் மனசுல திட்டினது நீங்க வெளியே சொல்லி திட்டிட்டீங்க 🤩🤩😂😂😂, ஒருவேளை கல்யாணம் பண்ண குடும்ப வாழ்க்கைக்கு செட்டாக மாட்டானோ அப்படி நினைச்சு முடிக்கறதுக் குள்ள பரவாசுவும் அதைக் கேட்டு இல்லன்னு முடிவு ஆயிடுச்சு அப்ப என்னவா இருக்கும்???👀🧐🤔🤧
@mrsbeena-loganathan அதே தான் எனக்கும் புரியல...
அவன் அம்மாக்கே தெரியாம அவன் மாமா ஏதும் torture தரார் போலவா இருக்கும்...
நம்ம மனசுல இருக்குறதை எல்லாம் பரசு கேட்கிறான் 🤣
எல்லாரையும் கடுப்பாக்கிட்டு அவ காதல்ல இவனுக்கு கர்வம் வேற 😬😬😬😬