அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதை தடுக்கும் விதமாய் “இன்னொரு தோசை வைக்கவா” என்று அவள் கேட்க்க

“நானும் அப்போ பிடுச்சு பார்த்துகிட்டு இருக்கேன்... என்னடி ஏதோ மொட்டையா கூப்பிடுற, பேசுற.. என்ன நினைச்சுகிட்டு இருக்க” சுல்லேன்று அவன் கோவ பட 

தன் தவறு புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளாமல் “அந்த உரிமை எனக்கு இன்னும் வரல..” என்றாள்.

“ஓ வரமா தான் இப்படி என்னை விழுந்து விழுந்து கவனிக்கிறியா..”

“இது அரவிந்த் அண்ணன் சொன்னதுக்காக மட்டும் தான் மத்த படி உங்களுக்காக நான் எதுவும் செய்ய வில்லை” என்றாள் வெடுக்கென்று.

“பார்ரா... ஓ அப்போ உன் கிட்ட யாரு வந்தாலும் நீ இப்படி தான் கவனிப்ப” என்று அவன் வேறு விதமாக பேச.

அதில் கோவம் கொண்டவள் தோசை கரண்டியாலே பட்டென்று அவன் கையில் ஒன்று போட்டாள்.

“தெரியுது இல்ல பிறகு என்னடி...”

“ஆனா நீங்க என் சொந்தமில்லை. நான் உங்களை சொந்தம் கொண்டாடினா உங்க கொழுந்தியாளுக்கு பிடிக்காது மிஸ்டர்... கூடவே என்னை உங்களுக்கு சுத்தமா பிடிக்காது. பிறகு என்ன” என்றாள் கண்கள் கலங்க அதை மறைத்து ஏளனமாக..

“இப்போ எதுக்குடி தேவை இல்லாம பேசுற...”

“உங்களுக்கும் எனக்கும் இடையில இருக்கிறது உங்க கொழுந்தியாள் தான்றது மறந்து போயிடுச்சா பிறை சூடன். அது பிடிக்காம தானே என்னை தள்ளிவச்சி பார்வையாள கூட உங்களை பார்த்துக்கொள்ள முடியாம என்னை தண்டுச்சீங்க, உங்க வெருப்புனால நான் நாலு மாசம் இந்த ஊர்ல வந்து இருக்கேன்” என்றாள் கோவமாக

“யாரோ சொன்னாங்கன்னு நீ என்னை தள்ளிவச்சி அவங்க முன்னாடி வேடிக்கை பொருளா இருக்க வச்சியே எனக்கு எப்படிடி இருந்து இருக்கும். அவ என் கிட்ட இருந்து உன்னை ஒவ்வொரு சமயமும் பிருச்சி வச்சி “இப்போ என்ன செய்வ” என்று பார்ப்பாளே அப்போ என்னோட உணர்வுகள் என்ன பாடு பட்டு இருக்கும்னு  நீ கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா.. சொல்லுடி.

உனக்கு உன்னோட வாக்கு முக்கியம்னா.. எனக்கு நீ தாண்டி முக்கியம். நீ மட்டும் தாண்டி முக்கியம். எனக்கு நீ வேணும்னு நான் நினைக்கிறது தப்பா”

“அதெப்புடி தப்பாய் போகும்” என்று எண்ணியவள் வாய் விட்டு சொல்லவில்லை.

“இத பத்தி நாம பேச வேணாம் பிறைசூடன்”

அவள் அவனது பேரை சொல்லும் போது உள்ளுக்குள் என்னவோ பண்ண அதை ரசித்து கொண்டவன் வெளியே

“என்னடி பேரை சொல்ற..”

“நீங்க தானே மொட்டையா சொல்றேன்னு சொன்னீங்க அதான் பேர் சொன்னேன்”

“ம்ஹும் ஆனா இதுக்கு முன்னாடி என்னை வேறு ஏதோ சொல்லி கூப்பிட்டதா நினைவு” என்றான்.

“அதெல்லாம் வெறும் கடந்த கால நினைவுகள் என்பதை நினைவில் கொண்டால் நல்லது” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.

அவளது உதாசீனத்தில் கோவம் கொண்டவன் பட்டென்று தட்டை வீசி அடித்து விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டான்.

அவனது கோவத்தில் உள்ளத்தில் சொல்லோன்னாத வலி எழ அதை அடக்கிக்கொண்டு உண்ணாமல் தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தாள்.

விழி ஓரத்தில் கண்ணீர் வழிய அதை போக்கும் பொருட்டு குழந்தை வீரிட்டு அழ, மேலும் தன் சோகத்தில் உழலாமல் விரைந்து மாடிக்கு சென்றாள்.

அங்கே அழும் குழந்தையை தோளில் போட்டு தட்டிய படி நடந்து கொண்டு இருந்தான்.

அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவனிடமிருந்து குழந்தையை பறிக்க எள்ளளவு கூட அசையாமல் இருந்தான் பிறைசூடன்.

“குடுங்க” என்று அதிராமல் கேட்க

“நீ யாரு இவன் என் குழந்தை.. எனக்கு மட்டுமே சொந்தமான குழந்தை.. சம்மந்தம் இல்லாம ஏன் நீ இங்க வர.. நான் வயசு பையன் அதனால இனி இங்க வராத” என்று அவளை தள்ளி வைக்க அடி பட்டு போனாள்.

ஆனால் குழந்தை அவளது வருகையை உணர்ந்தாளோ என்னவோ திரும்பி அவளை பார்த்தாள்.

பார்த்தவுடன் தன் தந்தையிடமிருந்து திமிறிக்கொண்டு அவளிடம் தாவ பிறைசூடனோ குழந்தையை அழுத்தி பிடிக்க பார்க்கவே மனது பாராமாய் போனது...

“அவள தூங்க வச்சுட்டு போயிடுரனே... ப்ளீஸ்..” கெஞ்ச

“இந்த நாலு மாசமா நான் தான் இவளை தூங்க வைக்குறேன் ஆரா... அப்பவும் அழ தான் செய்தா... அப்போவெல்லாம் நீ கூட இல்லையே” என்றான் வேதனையாக

“சூடா ப்ளீஸ்.. என்னை பலவீனம் ஆக்க பார்க்குறீங்க”

“ம்ஹும் நான் தான் பலவீன பட்டு போயிட்டேன். நீ உன் இடத்துல முன்னிருந்ததை விட ரெண்டு மடங்கு உறுதியா இருக்குற.. நானோ என் அன்போ உன் கண்ணுக்கு தெரியாம போய்டுச்சு...

நீ போனா நான் என்னாவேன்னு நினைச்சு கூட பார்க்காம இருந்துட்ட.. கோவத்துல ஏதோ சொல்லிட்டேன்.

தப்பு தான். ஆனா அதுக்காக இப்படி வந்து இங்க உக்கார்ந்துக்குவன்னு நான் நினைக்கலடி. இப்போ கூட நான் தான் உன்னை தேடி வந்தேன் நீ இல்ல... அப்படி இருந்தும் நீ என்னை ஏற்க்க மறுக்குற.. பரவாயில்ல”

“எத்தனையோ உறவுகள் இருந்தும் இல்லாமல் போய்டுச்சு... அதுல நீயும் இல்லாம போயிட்டன்னு நினைச்சுக்குறேன்” என்றவன் அவளை வெளியே தள்ளி கதவை சாத்தியவன் மனம் கசங்க குழந்தையின் அழுகையை போக்க முடியாமல் தவித்து போனான்.

எதுக்கு இவ்வளவு வேதனை எங்கள் இருவருக்கும்.. யார் தவறு செய்தது.. யாரோ ஒருவரின் சுய நலத்துக்காக அவர்களின் பகைக்காக எங்களை எங்கள் உறவை பந்தாடுவது நியாமே இல்லை..

ஆனால் உறவுகளுக்குள்ளே ஏற்படும் பூசல்களுக்கு எங்கிருந்து தீர்வு காண்பது... பெரியவர்கள் இருந்தால் ஏதாவது செய்வார்கள். இங்கே அதுவும் கிடையாது..

பெரியவர்களே சுயநலமாய் இருந்தாள் என்ன செய்வது. 

குழந்தை அழுது அழுது ஓய்ந்து போய் தூங்கி விட அவளை தொட்டிலில் போட்டுவிட்டு கதவை திறந்தான். ஆரா போய் இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில்.

அவனது நம்பிக்கையை பொய்யாக்காமல் அவள் சுவரோரம் சாய்ந்து அமர்ந்து விசும்பிக்கொண்டு இருந்தாள்.

“ம்ம் போதும் உள்ள வா” என்றான்.

“ஒன்னும் தேவை இல்லை” என்று வெடுக்கென்று பேசியவள் இன்னும் தலையை தன் கால்களுக்குள் புதைத்துக்கொண்டாள்.

“ஆரா உள்ள வா.. ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன். வாங்கி கட்டிக்காத..” என்றான்.

“ஒன்னும் தேவை இல்ல போடா” என்றாள் கண்ணீருடன்.

“நீயா வரியா இல்ல நான் தூக்கிட்டு போகட்டுமா” என்று அவன் அவளை கேளாமல் காரியத்தில் இறங்கி இருந்தான்.

அது தாங்க தூக்கிட்டு உள்ளே போய்ட்டான். எமகாத பய...

“விடு விடுங்கன்னு சொல்றேன்ல விடுங்க” என்று அவன் கைகளில் இருந்த படி அவள் துள்ள அவளை துள்ள விடாமல் அடக்கி பிடித்தவன் அவளை அடக்கும் பொருட்டு கொஞ்சமும் யோசிக்காமல் தன் முகத்தை அவளின் முகத்தின் மீது புதைத்து தன் மூச்சு காத்தால் அவளை சிதறடிக்க தொடங்க அவளது போராட்டம் லேசாய் மட்டு பட்டது...

அவளது அந்த உணர்வை உணர்ந்தவன் அங்கிருந்த கட்டிலில் அவளை சரித்து விட்டு அவள் மீது படர அவனது மொத்த பாரத்தையும் தன்னுள் வாங்கியவள் வேகமாய் அவனிடமிருந்து விலக பார்த்தாள்.

அவளது போராட்டத்தை கண்டு தானே விலகினான்.

“ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க” என்றாள் கோவமாய்.

“நீ எனக்கு உரிமை பட்டவ அதனால் நான் அப்படி தான் நடந்துக்குவேன்” என்றான் திமிராய்.

அவனது திமிரை பார்த்தவளுக்கு ஆத்திரமாய் வந்தது..

கட்டிலை சுட்டி காட்டி “இப்படி என் கிட்ட நடந்துக்க உங்க கொழுந்தியாள் அனுமதி குடுத்துட்டாங்களா” என்றாள் ஏளனமாய்.

அவளது அந்த வார்த்தையிலும் ஏளனத்திலும் உள்ளம் கொதித்து போனவன் அவளது முடியை கொத்தாக பற்றி

“என்னடி சொன்ன..” என்று கர்ஜிக்க

“நான் ஒன்னும் இல்லாததை சொல்லலையே” என்றாள் அவனது பிடி வலியை கொடுத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்

“திமுருடி உனக்கு... என்னை எந்த கட்டு பாடும் கட்டு படுத்தாது, எந்த கட்டு பாட்டுக்கும் நான் அடங்கி போறவனும் கிடையாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். நீ தான் உன்னால தான் நான் எல்லாத்தையும் பொறுத்து போயிட்டு இருக்கேன். இருந்தும் நீ இப்படி பேசுறன்ன உன்னை என்ன பண்ணலாம்.. அதுவும் என் தன்மானத்தை சீண்டி வேற விட்டு இருக்குற... இப்பவே உன் கிட்ட என் ஆளுமையை காட்டவா... இல்ல..” என்று அவன் இழுக்க

அதில் உடல் நடுங்கி போனவள் “வேணாம் மாமா... நான் தெரியாம ஏதோ ஒரு கோவத்துல அப்படி பேசிட்டேன்.. இனி அப்படி பேச மாட்டேன் சாரி..” என்றாள் அவனது உறுதியான உடல் மொழியாய பார்த்து..

“இனி பேச மாட்ட சரி ஆனா இப்போ பேசுனியே.. அதுக்கு தண்டனை ஏதும் வேணாம்” என்று அவளை ஆத்திரமாக ஆழ்ந்து பார்த்து கூற அவனது பார்வையில் தெரிந்த உக்கிரம் அவளது முதுகு தண்டை சில்லிட வைத்தது..

“ம்ஹும் வேணாம் மாமா ப்ளீஸ்... இந்த ஒரு முறை மட்டும்” என்ற போதே அவளது தலை முடியில் இருந்த அவனது கரம் இன்னும் இறுக்கத்தை கூட்ட விழிகள் கலங்கி விடுமோ என்று அஞ்சினால் ஆரா..

அவளது கண்ணீர் துளி சூடனின் கோவத்தையும் வேகத்தையும்  குறைக்கும் ஆயுதம்..

ஆனால் அதை அவள் சிந்த அவன் அனுமதித்தது கிடையாது..

“உன் கண்ணுல இருந்து கண்ணு தண்ணீ வந்தா நான் உன் நெஞ்சுல இருக்கேன்றது பொய்யின்னு அர்த்தம்” என்று சொல்லி இருந்தான்.

அதனால் எப்போதும் ஆரா எவ்வளவு துன்பம் வந்தாலும் கண்ணீர் சிந்தியதே கிடையாது... சூடன் வர விட்டதும் கிடையாது..

ஆனால் இன்றைய நிலையில் எல்லாமே தலை கீழாக மாறி போனதே... யாரை நொந்து கொள்வது... தன்னையே குற்றம் சொல்வதா.. இல்லை இந்த நிலைக்கு தள்ளிய விதியை சொல்வதா இல்லை எதிரில் நிற்கும் இவனை குற்றம் சொல்வதா... இவ்வளவு அன்பை என் மேல் வைத்ததனால் தானே இருவருக்கும் இந்த நிலை.

வேதனையுடன் அவனை பார்த்தாள். அவளின் பார்வையில் வெளிப்பட்ட உணர்வுகளை படித்தவனுக்கு உள்ளம் உருகி போனது. அவளிடமிருந்து தன் கைகளை விலக்கிக்கொண்டு படுக்கையில் சென்று அமர்ந்தான்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 9:42 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

நமக்குள் பிரச்சனை இல்லை

நம்மை வைத்து

நமக்கு நடுவில்

நமக்கே தெரியாமல் வந்தவள்

நம்மை பிரித்து விட்டது...

நம்பந்தம் பிரியும் பந்தமா??

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 11:52 am
(@gowri)
Estimable Member

கொழுந்தியா அப்படினா யாரு?????

ஆரா தங்கச்சியா என்ன????

அவ ஏன் அனுமதிக்கணும்?????

பிறை சூடன்.....இந்த பேரும் நல்லா இருக்கு ரைட்டர்

Loading spinner
ReplyQuote
Posted : March 27, 2025 11:18 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top