சட்டென்று ஒரு வித ஏக்கமும் கோவமும் எழுந்தது.. அதை ஒத்தி வைத்து விட்டு எழுந்து பின் பக்கம் இருந்த தோட்டத்துக்கு சென்றாள். கால் வலிக்கும் வரை அங்கு நடை பழகியவள் வெளியே வந்து அடுத்த சிப்ட்டை மாற்றி விட பணத்தை எண்ணி முடித்து பெண்களை வீட்டுக்கு அனுப்பியவள் அடுத்த முறையில் இருந்த ஆண்களுக்கு சில அறிவுரைகளை சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
உப்பு சப்பு இல்லாத தன் வாழ்க்கையை எண்ணி பார்த்தவளுக்கு மனதின் பல இடங்களை சல்லடையாக்கிய நினைவு எழுந்து அவளை அலைகழித்தது...
பெரு மூச்சு விட்டு அதிலிருந்து விலகியவள் இரவு உணவை சமைக்க முனைந்த பொது அருகில் இருந்த சிறார்கள் அவளை தேடி வர அவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு சிரித்து நேரம் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு உணவு உண்டு விட்டு படுக்கைக்கு சென்றாள்.
அடுத்த நாளய பொழுது எவ்வாறு கழியும் என்று எந்த யோசனையும் இல்லாமல் தன் வழக்கங்களை செய்து விட்டு தனக்கு மட்டுமே ரகசியமான சில கனவுகளில் தொலைந்து போனாள்.
அடுத்த நாள் விடிய எப்பொழுதும் செய்வதை செய்துவிட்டு பங்கிற்கு சென்றாள். கணக்கு வழக்குகளை சரி பார்த்தவள் பேங்கிற்கு சென்று பணத்தை டெப்பாசிட் செய்துவிட்டு திரும்பி வந்து மரத்தின் நிழலில் வண்டியை நிருத்தியவளின் கண்களில் விழுந்தது அந்த ஆடி கார்..
யாரோடது இது... பெட்ரோலோ டிசலோ போட வேண்டும் என்றாள் அங்கு தானே நிறுத்த வேண்டும் இங்கே எதுக்கு அதுவம் மாமா நிறுத்தும் இடத்தில் முதலாளி இடம் என்று இது இங்கிருக்கும் எல்லோருக்குமே தெரியுமே...
பிறகு எப்படி இவர்களை நிறுத்த அனுமதித்தார்கள். என்று யோசித்த படியே பவானியை கண்களிலே சுட்டி கேட்க
அவளோ ஓனர் என்று சொல்ல
“மாமாவ மாமா வர்றதா இருந்தா முன்னாடியே சொல்லுவாங்களே இப்போது என்ன திடீர் என்று” எண்ணிய படியே உள்ளே சென்றாள்.
அந்த கட்டிடம் ஐந்து அறையை கொண்டு இருந்தது... முன் அரை வரவேற்ப்பு அறையாகவும் அங்கு தான் ஆரா அமர்ந்து வேலை செய்வாள். அவளுக்கு என்று தனி அரை ஒன்று, வேலை செய்பவர்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் இருந்தது... அது மட்டும் இல்லாமல் ஓனருக்கு என்று தனியாக ஒரு அரை இருந்தது...
யோசித்திபடியே உள்ளே நுழைந்தவளுக்கு கலவையான குரல் கேட்க
“யாராய் இருக்கும்” என்று ஓனரின் அறைக்கு சென்று பார்க்க அங்கே அவளுடைய மாமாவின் மகன் அரவிந்தும் கூடவே அவனுடைய தோழன்களும் இருந்தார்கள்.
இவளை பார்த்து “ஹேய் வா ஆராதனா எப்படி இருக்க” என்று அரவிந்த் நலம் விசாரித்தான் அன்புடன்.
“ம்ம் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..”
“ம்ம் பைன்..” என்றவன் “இது என்னுடைய நண்பர்கள்... ப்ளீஸ் அப்பாகிட்டயும் உன் அண்ணிகிட்டயும் போட்டு குடுத்துடாத.. என்று பீர் பாட்டிலை காண்பித்து சொல்ல
அறிமுக படுத்திய இளைங்கர்களை ஏறெடுத்து பாராதவள் அவன் கையில் இருந்தை பார்த்து இவள் முறைத்தாள்...
“ப்ளீஸ் பேபி... நான் உன் அண்ணன் தானே..
“ஆமாண்டா அண்ணனா இருக்கிறவன் தங்கச்சிகிட்ட காட்ட வேண்டியதை தான் காட்டி அனுமதி கேக்குற பாரு” என்று அவனை கடிய
“ப்ளீஸ் உன் பன்னிக்கு சாரி அண்ணிக்கு தெருஞ்சா என்னை வீட்டுலையே சேர்க்க மாட்டா.. ஒரு நண்பன் தான் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று கேட்டான். அதான் நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.... அவனுக்கு கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்... நான் அப்பா கிட்ட கேட்டுட்டேன்... உன் வீட்டுக்கு மேல இருக்குற ரூமை அவனுக்கு குடு பேபி... கூடவே எங்களை இங்க சரக்கடிக்க அனுமதி குடு..” என்று கெஞ்ச
“இது வேறயா..” என்று முறைக்க
“அவன் உன்னை தொந்தரவே பண்ண மாட்டான்... உன்னை போல தான் அவனும்... அவனுக்கு சில பல ப்ராப்ளம்.. கூடவே ஒரு பாட்டியை ஏற்பாடு பண்ணு.. அவனுக்கு குழந்தை வேறு இருக்கு..” என்று கெஞ்ச
“அண்ணா...”
“ப்ளீஸ் பேபி அவன் ரொம்ப அடி பட்டு வந்திருக்கான்... கூடாவே அவனுக்கு சமைத்தும் குடு” என்று மேலும் அவளை கேட்க
“உன்னை கொல்ல போறேன் பாரு” கொலை வெறியில் கத்தினாள் ஆரா.
“கொன்னாலும் பரவால இன்னைக்கு இரவு அவன் இங்க வருவான்... சோ ப்ளீஸ் எல்லா ஏற்பாடும் செய்து குடு பேபி..”
“எல்லாமே பண்ணி தொலைக்குறேன். ஆனா இங்க தண்ணி அடிக்க கூடாது.. ஓடு வயல் வரப்புக்கு” என்றாள்.
“ம்ஹும் இங்க தோட்டாத்துல அடுச்சா செம்மையா இருக்கும் பேபி.. கொஞ்சம் கண்சிடர் பண்ணேன்..”
“வயலுக்கு போறியா இல்லை மாமாவுக்கு போன் போடவா” என்று போனை எடுக்க
“சரி சரி நாங்க போயிடுறோம்” என்று கூறியவன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு காரில் ஏற்றி விட்டு ஆராவிடம் வந்து
“கொஞ்சம் கவனாமாய் பார்த்துக்கடா அவனை... கூடவே அவனை உன் எடு பிடிக்காக வச்சுக்க... ஆனா அவன், அவன் வேலைய செய்யட்டும். பல நிறுவனங்களுக்கு அவன் சொந்த காரன். அதனால பாதி நேரம் அவன் சிஸ்டம் ல தான் இருப்பான். கொஞ்சம் பார்த்துக்க” என்று சொல்ல
அழகான மென் சிரிப்பை சிந்தியவள் அவனை பார்த்து “நான் பார்த்துக்குறேன் நீ கவலை படதா” என்று உறுதி கொடுக்க நிம்மதியுடன் அவன் சரக்கடிக்க சற்று தூரத்தில் இருந்த அவர்களின் வயலுக்கு சென்றான்.
மாலை நேர வேலைகளையும் முடித்துக்கொண்டு வீடுக்கு வந்தவள் மேல் தளம் சென்று அங்கு சுத்தம் செய்து வீட்டை துடைத்து விட்டு எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவளின் காதில் கதவை தட்டும் சத்தம் கேட்க தான் இருக்கும் நிலையை கண்டு வேகமாய் ஓடிப்போய் புடவையை கட்டிக்கொண்டு கதவை திறந்தாள்.
“எவ்வளவு நேரம் கதவை தட்டுறது..” என்று எரிந்து விழுந்த படி நிமிர்ந்து கதவை திறந்தவளை முறைக்க
ஆராவுக்கு மூச்சு முட்டி போனது...
“என்ன வழிவிடும் எண்ணம் இல்லையா..” என்று முறைத்த படியே அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன் நேராக படிகளில் ஏறி அவனது போர்சனுக்கு சென்று விட்டான்..
“இ... இவன்... இவனுக்கு.. எ.. என்னை யார் என்று தெரியவில்லையா” அதிர்ந்து நின்றாள். “டேய் அண்ணா நீ சொன்ன ஆளு இவன் தானாடா... உன்னை... நீ கண்ணுல மாட்டு... என்ன பண்றேன்னு பாரு... ரெண்டும் கூட்டு களவாணிங்க” கறுவிக்கொண்டாள்.
குழந்தை அழும் சத்தத்தில் நினைவு கலைந்தவள் வேக வேகமாய் பாலை ஆற்றிக்கொண்டு மேலே சென்றாள்.
அங்கு குழந்தையின் பால் புட்டியில் இருந்த வீணா போன பாலை வைத்துக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தவனை கண்டு நெஞ்சம் வேதனையில் விழ
அதை ஒதுக்கி விட்டு பால் புட்டியை அவனிடமிருந்து அதை பிடுங்கி கழுவி புதிய பாலை அதில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.
அவளின் செயல்களை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் குழந்தைக்கு புகட்ட, குழந்தையோ அதை குடிக்காமல் தள்ளி விட ஆராவுக்கு தாள முடியாமல் போனது..
அவனிடமிருந்து குழந்தையை வாங்கி தானே புகட்ட ஆரம்பித்தாள்.
அவளது மடியில் படுத்த குழந்தை குசியோடு காலை ஆட்டிக்கொண்டு பாலை குடிக்க நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவளது பார்வையில் இருந்த ஏளனம் அவனது கோவத்தை சீண்டி விட
“சரி தான் போடி..” என்று விட்டு குளியல் அறைக்கு சென்று குளித்து விட்டு வெறும் துண்டோடு வர ஆராவின் முகம் சிவந்து போனது...
“ஏன் இதுக்கு முன்னாடி என்னை இப்படி பார்த்ததே இல்லையா..” என்று அவன் அவளை நக்கல் பண்ண
பதிலுக்கு இவள் முறைத்து பார்த்தாள்.
“என்னடி பார்வை...”
“டி போடாதீங்க அந்த உரிமை உங்களுக்கு கிடையாது” என்றாள் சுல்லேன்று...
“ஏன் நான் இதுக்கு முன்னாடி உன்னை டி போட்டு கூப்பிட்டது இல்லையாடி.. இல்ல உன்னை தொட்டது இல்லையாடி” என்றான் தெனாவட்டாய்..
“உங்க கிட்ட போய் சொன்னனே..” என்று திரும்பி அமர்ந்து கொண்டாள்.
“அது தானே நீ என் கிட்ட எந்த விசயத்தை தான் சொல்லி இருக்கிற... இதை சொல்ல” என்று அவன் பொடி வைத்து பேச...
இவள் அவனை முறைத்தாள்.
“என்ன பார்வை உண்மைய தானே சொன்னேன்...” என்றவன் அவளின் முன்பே உடைகளை மாற்ற முனைய இவள் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.
கண்ணை மூடிக்கிறதும் திறந்து வைத்திருப்பதும் உன் விருப்பம் என்பது போல தன் பாட்டுக்கு அவன் செயல் பட அவளுக்கு ஐயோ என்று வந்தது...
அதானே உங்களை திருத்த முடியுமா என்று முனகி கொண்டாள்.
பின் குழந்தைக்கு பசியாற்றியவள் கீழே படுக்கையில் படுக்க வைத்து தன் ஆசை தீர குழந்தையை கொஞ்சியவளுக்கு கண்கள் கலங்கியது. எல்லோரையும் விட்டுட்டு வந்தவளால் குழந்தையை மட்டும் விட முடியாமல் திணறி தான் போனாள்.
ஏனெனில் பிறந்ததிலிருந்து ம்ஹும் வயிற்றில் இருக்கும் போதே குழந்தையை கவனித்துக்கொண்டவள் அல்லவா அவள்.
நாலு மாதம் எப்படி தான் இந்த பிஞ்சை விட்டு இருந்தேனோ... மனம் நிறைய குழந்தையை அள்ளி எடுத்து தன் மார்பின் மீது போட்டு தன் சூட்டை கொடுக்க குழந்தையும் சமத்தாய் அவளது கையணைப்பில் உறக்கம் கொண்டது.
“சாப்பாடு அங்க வந்து சாப்பிடுறீங்களா... இல்ல இங்க எடுத்துட்டு வரவா” என்றாள்.
“ம்ம் கீழ வரேன்” என்றவன் குழந்தையை தூக்கிக்கொண்டு அவளோடு கீழே இறங்கினான்.
அவனுக்கு பிடித்த விடத்தில் தோசை வார்த்தவள் சட்னி அரைத்து பரி மாற
‘எவ்வளவு நாள் ஆச்சுடி உன் கையாள சாப்பிட்டு’ என்று பெரு மூச்சு விட்டான். ‘இப்படி ஒரு நாள் வரவே வராதோ என்று ஏங்கி போய் கிடந்தேன்... ஆனா உன்னை விட அந்த கடவுளுக்கு நல்ல மனசு போலடி... பிரிந்த நாலு மாசத்துலயே உன்னை என் கிட்ட மறுபடியும் கொண்டு வந்து சேர்த்துட்டார்.’ எண்ணியவனின் மனதில் தங்களின் பிரிவுக்கான காரணத்தை நினைவு கூர்ந்தது...
அடுத்த நிமிட நேர
அதியசம் தான் போல
அண்ணனின் வேண்டுதலில்
அவள் உதவிக் கரம் நீட்ட
அவர்கள் விட்ட கதை
அதை தொடரும் விதமாக
அமைந்து இருக்கிறது ....
அப்ப இதுங்க ரெண்டும் கணவன் மனைவிய என்ன????
அடிப்பாவி....குழந்தையை ஏன் டி விட்டு வந்த?????