“கண்ணான கண்ணே... உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது
என்று தண்ணீரை நானே ஊற்றினேன்..
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது
காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை
வான் போல் வாழ்கவே..” பாடல் வரிகள் வானொலியில் ஒலித்துக் கொண்டு இருந்தது. நெஞ்சம் இன்னும் கனத்துப் போனது.
கடந்து போனவைகளை விட்டு வெளியே வந்த சங்கவை இன்றைக்கு ஏன் செஞ்சனின் பெயரை சொன்னோம் என்று மறுகிப் போனாள்.
கவனத்தை வேலையில் வைக்க முடியாத அளவுக்கு தன் நெஞ்சில் நிரந்தரமாக குடி ஏறியவனை நோக முடியாமல் தன்னை நொந்துக் கொண்டாள் பெண்ணவள். அன்றைக்கு அவளால் மேற்கொண்டு வேலையே செய்ய முடியாமல் பாதியில் வந்ததை எண்ணி கடிந்துக் கொண்டவள், அடுத்த நாளில் இருந்து கவனமாக வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அதோடு இனி வேலை வேறு பர்சனல் வேறு திடமாக பிரித்துக் கொண்டாள். இதையும் அதையும் போட்டு குழப்பிக்க கூடாது எண்ணியவள் இரவில் அவனது குரலை கேட்டுக் கொண்டே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை இதமாக புலர்ந்தது. எப்பொழுதும் போல எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக உணவு தயாரித்து கிளம்பி வெளியே வந்தாள்.
“நூலகம் போகணுமே... புத்தகம் மாத்த வேண்டிய தேதி வந்திடுச்சு” என்று புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றாள்.
அவள் வருவதற்காகவே அந்த பேருந்தில் முன்னாடியே ஏறி இருந்தான் செஞ்சன். அவனோடு பரசுராமும் இருந்தான்.
“இன்னைக்காவது அந்த பெண்ணை சைட் அடிக்காம இருப்பியாடா”
“அது கொஞ்சம் கட்டல்(கஷ்ட்டம்)” தோளை குலுக்கினான்.
“உன் கூட சேர்ந்ததுக்கு என்னை எப்போ போலீஸ் ஸ்டேஷன்ல கம்பி என்ன வைக்க போறியோ தெரியலடா..”
“அவ்வளவு ஆசையாடா கம்பி என்ன?” நக்கல் பண்ணினான்.
“பின்ன உன்னோட சேர்ந்து இருக்கனே... அதுக்கெல்லாம் இப்பவே ஆசை பட்டு வச்சா தான் பின்னாடி அனுபவிக்கும் பொழுது பெருசா தெரியாது”
“குட் ஜாப்... இப்படியே எல்லாத்துக்கும் ஆசை பட்டு வை.. சீக்கிரமா உன்னை ரோட்டுல பிச்சை எடுக்கவும் வைக்க போறேன்” என்றான் கடுப்பாக.
“அதுல உனக்கு சந்தேகம் வேறையா ராஜா... உன் கூட சேர்ந்ததுக்கு சீக்கிரமே திருவோடும் ஏந்துவேன்” பரசு பல்லைக்கடித்தான்.
செஞ்சனோ அதை எல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாமல் கீழே குனிந்து சாலையை பார்த்தான். சற்று தூரத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தாள் சங்கவை. அந்த பேருந்து நிலையத்தில் நிறைய பெண்கள் ரகம் வாரியாக சிறு பிள்ளையில் இருந்து முதியவர்கள் வரை நின்று இருந்தார்கள். அத்தனை பேருக்கு மத்தியிலும் தன்னவளை தேடி கண்டு பிடித்தான். அவளை பார்த்த உடனே அவனது இதழ்களில் மெல்லிய முறுவல். மனதுக்குள் சட்டென்று ஒரு மின்னல் அடித்தது. பூ பூக்கும் உணர்வை தந்தாள். அவளை விட எத்தனையோ பெண்கள் அங்கே அழகாக இருந்தார்கள். ஆனால் இவனின் பார்வை என்னவோ அவளிடம் மட்டும் தான் இருந்தது.
வண்டி நின்றது. விரைவாக சிலர் இறங்கி போக, இன்னும் பலர் முண்டியடித்து ஏறினார்கள்.
“பாத கொலுசு பாட்டு பாடி வரும்.. பாடி வரும்”
என்று பாடல் ஒலிபரப்பாக சரியாக சங்கவை பேருந்தில் ஏறினாள். இன்றைக்கு என்ன கூட்டமோ தெரியவில்லை. நெருக்கி அடித்துக் கொண்டு இருந்தார்கள் மக்கள். ஓரமாக ஒதுங்க பார்த்தாள். ம்ஹும் முடியவில்லை. பேருந்தின் மையத்தில் சிக்கிக்கொண்டாள்.
அந்த கூட்டத்துக்கு நடுவிலும் செஞ்சன் தன் பெண்ணவளை பார்த்து இரசித்தான் விழி எடுக்காமல்.
கருப்பு வண்ண சாம்பல் நிறத்தில் புடவை.. காதுகளில் கருப்பும் சில்வருமாய் கலந்த பெரிய தோடு, கழுத்தில் அதே நிறத்தில் அதே வடிவமைப்பில் சின்னதாய் கழுத்தணி. நெற்றியில் மெரூன் நிறத்தில் வட்ட போட்டு, லிப்ஸ்டிக், கூந்தலை இன்றைக்கு வாரி கொண்டை போட்டு இருந்தாள். கண்ணுக்கு எழுதி இருந்த மை அவனை சுண்டி இழுத்தது.
“ப்பா உன் கண்ணு ஒன்னு போதுமடி என்னை இழுத்து சுருட்டிக் கொள்ள” என்று நெஞ்சை நீவிக் கொண்டான்.
“எதுக்குடா இப்படி அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்க... பேசாம நீ அந்த பொண்ணை போய் அப்ரோச் பண்ணு” என்றான் இவனது அலப்பறை தாங்காது.
“மூடிட்டு உன் வேலையை பாருடா” என்றவனின் விழிகள் சங்கவையையே மையம் கொண்டு இருந்தது.
சங்கவைக்கு எப்பொழுதும் தோன்றும் குறுகுறுப்பு உணர்வு இன்றைக்கும் தோன்ற, கழுத்தை வளைத்து தனக்கு பின்னால் தேடினாள். ம்ஹும் இன்றைக்கும் அவளுக்கு ஏமற்றம் தான் மிஞ்சியது.
எப்பொழுதும் போல திரும்பிக் கொண்டவள் வெளியே வேடிக்கை பார்த்தாள். கடந்துப் போகும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தவளின் விழியோரம் ஒரு உருவம் பட, சட்டென்று திரும்பி பார்த்தாள்.
அந்த நெடிய உருவம் கூட்டத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டது. முயன்று தேடி பார்த்தாள். ம்ஹும் யாரும் தென்படவில்லை.
அடுத்த நாள் வேறு பேருந்தில் வர முடிவு எடுத்துக் கொண்டாள். அதே போல அடுத்த நாள் வேறு பேருந்தில் வர, எப்பொழுதும் வரும் பேருந்தில் அவளை தேடி சளித்தவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.
“ஏன்டா?” பரசு பேருந்தில் இறங்கியபடி கேட்டான்.
“அவ வரல” என்றான்.
“டேய்... நீ என்ன விடலை பையனா? அவன் கூட இப்பல்லாம் இப்படி பேருந்து பேருந்தா அலையிறது இல்ல தெரியுமா? எல்லாம் வாட்சப் தான்” என்றான்.
அவனை சட்டை செய்யாமல் அடுத்த பேருந்தை எதிர் பார்த்து நின்றான் செஞ்சன்.
செஞ்சனின் பக்குவத்துக்கு இவன் இப்படி செய்யிறதை எல்லாம் பார்த்து மண்டை காய்ந்தான் பரசு.
“மச்சான் டேய்” என்று அவனை கலைக்க பார்க்க அவனோ அவனை சட்டை செய்யாமல் அடுத்து வந்த பேருந்தில் ஏறி உள்ளே பார்வை இட்டான். அதிலும் அவள் வராமல் போக கீழே இறங்கிவிட்டான்.
அவன் இறங்கவும் பேருந்து எடுக்கவும் சரியாக இருக்க பரசு ஓடும் பேருந்தில் இருந்து குதிக்க வேண்டியதாகிப் போனது.
அதோடு அடுத்த பேருந்தையும் அவன் சோதனை செய்ய, கடுப்பான பரவாசு அவனை பேருந்து நிலையத்தின் பின்னுக்கு இழுத்து சென்று அவனை அடிக்காத குறையாக,
“டேய் ஏன்டா இப்படி பைத்தியம் மாதிரி நடந்துக்குற? உனக்கு என்ன தான்டா ஆச்சு.. அந்த பொண்ணு தான் வேணும்னா அவக்கிட்ட உன் மனசை சொல்ல வேண்டியது தானே. அதை விட்டுட்டு இப்படி பைத்தியம் பிடிச்சு அலையிறியேடா” என்று அவனது சட்டையை பிடித்து கோவப்பட்டான்.
ஏனோ பரவாசுவால் செஞ்சனை இப்படி பார்க்க முடியவில்லை. அவன் பார்த்த செஞ்சன் மிகவும் கம்பீரமானவன். எதற்கும் அசையாதவன். கசங்காத அவனது உடை, டக் இன் பண்ணிய சட்டை, படிய வாரிய முடி.. ஆண்களுக்கே உரிய இறுக்கம் என அவனை கம்பீரமாக ஆளுமையாக பார்த்து விட்டு இப்போ இப்படி ஒரு பெண்ணுக்காக அலைவதை அவனால் காண முடியவில்லை.
தன் சட்டையை உலுக்கி கேட்டவனை செஞ்சன் கொஞ்சமும் சட்டை செய்யாமல், அடுத்து வந்த பேருந்தை நோக்கி சென்றான்.
“டேய் நான் உன் கிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன்” அவன் பின்னாடி குரல் குடுத்துக்கொண்டே ஓடினான் பரசு.
அந்த பேருந்திலும் ஏறி தேடினான். சங்கவை நின்றிருந்தாள். இரண்டு மூன்று பேருந்து போய் இருக்கவும் இதில் அதிகம் கூட்டமில்லை.
அதனால் அவள் நின்றிருப்பது நன்றாகவே தெரிந்தது. சட்டென்று உள்ளே நுழைந்து நின்றுக் கொண்டான். அவனோடு பின்னே வந்த பரசு அங்கே அந்த பெண் நிற்பதை பார்த்து ஏகத்துக்கும் கடுப்பு ஆனவன்,
“இந்த பொண்ணுக்காக தான் இவ்வளவு அலையிறியாடா. நீ அலையிறது அந்த பொண்ணுக்கு தெரியுமா?” ஆதங்கத்துடன் கேட்டான்.
செஞ்சனிடம் இருந்து எந்த பதிலுமே இல்லை. அவனது விழி பார்வைகள் மொத்தமும் சங்கவையிடம் தான் குவிந்து இருந்தது.
ஆனால் அவளோ எப்பொழுதும் போல வேடிக்கை பார்தடுக் கொண்டே வர, அதை பார்த்த பரவாசுக்கு பயங்கரமாக கோவம் வந்தது.
வேகமாய் செஞ்சனை தான்டி சங்கவையிடம் விரைந்தான்.
“ஹலோ மேடம்” என்று அவளை கலைக்க, அதுவரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செஞ்சன் அப்பொழுது தான் பரவாசு அவளிடம் போய் நின்று பேச்சு குடுப்பதையே பார்த்தான்.
“டேய் என்னடா பண்ற?” இங்கிருந்தபடியே பரவாசுவை அதட்டினான். ஆனால் பரவாசு அதற்குள் சங்கவையின் கவனத்தை கலைத்து அவனை பார்க்க வைத்து இருந்தான்.
“கூப்பிட்டீங்களா” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்றான் அழுத்தமாக. அவனது ஆட்டியூட்டை புரியாமல் பார்த்தாள். பின்ன முன்ன பின்ன தெரியாதவர்களிடம் இவ்வளவு கடுமை காட்டினால் புரியாது தானே முழிப்பார்கள்.
சங்கவையும் அப்படி தான் முழித்தாள்.
“எதுக்கு?” என்று கேட்டாள்.
“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க மேடம்? நீங்க என்ன பெரிய உலக அழகியா? உங்க பின்னாடியே நாய் மாதிரி என் நண்பன் அலையணுமா?” முடிக்கும் முன்பே அவனது சட்டையை இழுத்துக் கொண்டு தன் முகத்தை அவளுக்கு காட்டாமல் செஞ்சன் நடக்க,
“டேய் விடுடா என்னை... இவங்க கிட்ட நான் நியாயம் கேட்காம இந்த இடத்தை விட்டு வர மாட்டேன்” பரவாசு திமிர,
“இப்ப மட்டும் நீ வாயை மூடலன்னு வை. என் கையாள தான் உனக்கு சாவு” அடிக்குரலில் எச்சரித்தான் செஞ்சன்.
அவனது ஆறடி உயரமும் ஆளுமையான தோற்றமும் அவன் திரும்பி நின்றாலும் அவன் யாரென்று காட்டி குடுத்து விட்டது சங்கவைக்கு. விழிகளில் நீர் நிறைந்து விட்டது.
விழி எடுக்காமல் அவனை பார்த்தாள்.
“பொது இடத்துல இப்படி தான் ஒரு பெண்ணிடம் நடந்துக்குறதா?” என ஆளாளுக்கு குரல் கொடுக்க, செஞ்சனுக்கு ஆத்திரமாய் வந்தது.
“டேய் என்ன காரியம்டா பண்ணி வச்சு இருக்க?” பரசுவிடம் பாய்ந்தான்.
ஏனெனில் இது நாள் வரை அவளின் கண்களுக்கு படமால் தான் அவளை பின் தொடர்ந்து வந்தான். ஆனால் இன்றைக்கு மொத்தமாக போட்டு உடைத்து விட்டவனை எதை கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை.
சங்கவை, அடிக்குரலில் தன் நண்பனிடம் பேசிக்கொண்டு இருக்கும் செஞ்சனை இன்னும் ஆழ்ந்து பார்த்தாள். பெருமூச்சு வந்தது அவளுக்கு. ஆளாளுக்கு அவர்களை பேச ஆரம்பிக்க,
“இல்ல எனக்கு தெரிஞ்சவங்க தான். அவர்களை எதுவும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்” என்று அவள் கேட்டுக் கொள்ள,
பரவாசு அதிர்ந்துப் போனான்.
“மச்சான் என்ன தான்டா நடக்குது உங்களுக்குள்ள... இந்த பெண்ணை ஏற்கனவே உனக்கு தெரியுமா? யாரு அந்த பொண்ணு” செஞ்சனிடம் ஆத்திரமாக கேட்டான்.
செஞ்சன் நிமிர்ந்து சங்கவையை பார்த்தான். அவள் எல்லோரிடமும் சொல்லி விட்டு இவர்கள் புறம் திரும்பி பேருந்தில் நடுநாயகமாய் நின்று இருந்தவனை பார்த்தாள்.
இருவரும் சில நிமிடங்கள் அசையாமல் பார்த்துக் கொண்டு இருக்க பரவாசு திகைத்துப் போனான். ஏனெனில் இருவரின் விழிகளுக்குள்ளும் அவ்வளவு உணர்வுகள் பொங்கி பெருகி இருந்தது.
காதலைச் சொல்லி
கடந்து வந்தேன்
காணக் கூடாது என
கட்டளையிட்டான்
காதல் கொண்ட மனது
கலங்கி துடித்தாலும்
காதலன் வாக்கு
காதலுக்கு வேத வாக்கு...
காதலுடன் காத்திருக்க
கண்களில் இன்று
காதலன் அகப்பட
கண்கள் நான்கும்
காதலை தடை மீறி
கசிந்து
கொண்டிருந்தது...
காதலைச் சொல்லி
கடந்து வந்தேன்
காணக் கூடாது என
கட்டளையிட்டான்
காதல் கொண்ட மனது
கலங்கி துடித்தாலும்
காதலன் வாக்கு
காதலுக்கு வேத வாக்கு...
காதலுடன் காத்திருக்கும்
கண்களில் இன்று
காதலன் அகப்பட
கண்கள் நான்கும்
காதலை தடை மீறி
கசிந்து
கொண்டிருந்தது ....
அப்பாடி ஒரு வழியா பார்த்துட்டாங்க🥰🥰🥰
பரசு தான் பாவம்😂😂😂😂😂
சஞ்சு, இனியாட்டும் அவளை தவிக்க விடாதே டா....
பாவம் டா சங்கு🤧🤧🤧🤧🤧
கடுப்பாகுது செஞ்சன் பண்றதை பார்த்தா 🥶🥶🥶🥶
பரசு லூசு மாதிரி அவகிட்ட என்டா கோபப்பட்ட 🤣🤣🤣🤣🤣 எப்படியோ பல நாள் திருடனை காட்டிக் குடுத்துட்ட 🤣🤣🤣🤣🤣
கவி ரொம்ப பாவம் 😐😐😐
இப்போ கூட அவனுக்காக தான் பேசுறா 😣😣😣