“இல்ல இல்ல... எனக்கு உங்க கவிதைகளை வாசிக்க ரொம்ப பிடிக்கும். அதனால உங்க கவிதைகளை நான் மேடையில் வாசிக்கிறேன். அந்த ஆப்பர்ச்சுனிட்டிய குடுங்க” என்றாள்.
“ஹேய் அப்படி எல்லாம் பண்ண முடியாதுடி. உன்னையே நீ ஏன் கட்டல்(கஷ்ட்டப்) படுத்திக்கிற? எதுவும் வேணாம்டி” என்றான் அழுத்தமாக.
“ம்ஹும்... உன் ஒரே ஒரு ஆசையையாவது நிறைவேற்றனும் செஞ்சா... என்னால முடியும்” என்று அவள் சொல்ல,
“சரி ஓகே.. நான் ப்ரபசர் கிட்ட கேட்டு அதுக்கான ஏற்பாட்டை கவனிக்கிறேன். சப்போஸ் அவரு ஒத்துக்கலன்னா நீ கவலை பட கூடாது” என்று சொன்னான்.
“இல்ல இல்ல” என்று தலையை ஆட்டினாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் பேராசிரியரிடம் பேசி கவிதை வாசிக்க சில நொடிகளை வாங்கிக் கொண்டான் தன்னவளுக்காக.
“ஆனா காதல் கவிதைகளை வாசிக்கக் கூடாது” என்று கண்டிஷன் போட்டார். தலையை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
அவனிடம் இருப்பது எல்லாமே அவனின் கவியின் மீது புனைந்த காதல் கவிதைகள் மட்டும் தான். யோசித்துக் கொண்டே வந்தான்.
“என்ன சொன்னாங்க செஞ்சா..” ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஓகே சொல்லிட்டாங்கடி ஆனா காதல் கவிதைகள் கூடாதம்” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.
“அச்சச்சோ உங்கக்கிட்ட இருக்கிறது எல்லாமே காதல் கவிதைகள் மட்டும் தானே” என்று அவள் பதற,
“டோன்ட் ஒரி... காதல் கவிதை எழுதுறவனுக்கு சமூக கவிதை எழுத தெரியாதா.. முயற்சி பண்ணி பார்க்கிறேன். இன்னும் நாட்கள் அதிகமா இருக்குல்ல” என்று சொன்னவனை நேசத்துடன் பார்த்தவள்,
“ரொம்ப கட்டல் படுத்துறனா செஞ்சா?” கேட்டாள்.
“ஹேய் உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்டி. இந்த கவிதை எழுத மாட்டனா? சிறப்பான கவிதையா எழுதிட்டு வரேன்டி... நீ எதையும் நினைச்சு வேதனை படாத” என்றவளை அன்றைக்கு வெளியே கூட்டி சென்று ரிலாக்ஸ் பண்ண வைத்தவன் கல்லூரி விடுதியில் விட்டான்.
சங்கவை கல்லூரி விடுதியில் தங்கி தான் படித்துக் கொண்டு இருந்தாள். செஞ்சன் வீட்டிலிருந்து வந்தான். இருவரும் கல்லூரி காலங்களில் சுற்றாத இடமே இல்லை. அந்த ஊர் சந்து பொந்து முதற்கொண்டு எல்லாமே இருவருக்கும் அத்துபடி.
கல்ஷுரல்ஸ் அன்று தேவைதையாக வந்தாள் சங்கவை. செஞ்சனுக்கு பிடித்த இளம் சிவப்பு வண்ண புடவையில் ப்ரீ ஹேர் விட்டு வெள்ளை நிற கற்கள் பதித்த அணிகலன்களில் கூடவே கண்ணுக்கு மை எழுதி அசத்தலாக வந்தாள்.
அவளது தோற்றத்தை கண்டு எல்லோருமே மெய் மறந்து போனார்கள். எப்பொழுதுமே முடியை இறுக்கி தான் பின்னல் போட்டு இருப்பாள். காதை ஒட்டிய ஒரு தங்க தோடு, கழுத்தில் சின்னதாய் ஒரு தங்க சங்கிலி. அது இருக்குமா இல்லையா என்று கூட தெரியாது. கண்ணுக்கு மட்டும் மை போட்டு இருப்பாள். மிகவும் எளிமையான குணம் கொண்டவள். அவளின் தோற்றமும் அப்படி தான் இருக்கும். சுடிதாரை தவிர வேறு எந்த உடையும் அணிய மாட்டாள். ஆனால் சாலை கூட இரண்டு பக்கமும் பின் பண்ணி இருப்பாள்.
ஆனால் இன்றைக்கு இந்த மாதிரி தோற்றத்தில் கண்டவுடன் அனைவருமே வாயை பிளந்தார்கள். சங்கவை மறுக்க மறுக்க செஞ்சடையன் அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கினான்.
எப்படி வர வேண்டும், எப்படி தலை வார வேண்டும் என எல்லாவற்றுக்கும் யூடியூபில் இருந்து லிங்க் எடுத்து குடுத்தான். அதை பார்த்து பார்த்து தயார் செய்துக் கொண்டாள் தன்னை தானே.
கிராமத்து பின்னணி கொண்டவள் அவள். அதனால் பெரிதாக எந்த நாகரீகமும் அவளுக்கு அறிமுகம் ஆகவில்லை. ஆனால் செஞ்சன் சிட்டியிலே வளர்ந்தவன். அவனுக்கு அவளை பிடிக்கும் எப்படி இருந்தாலும் பிடிக்கும். ஆனால் என்றாவது ஒரு நாள் அவளை அலங்காரம் செய்து வர சொல்லி இரசிப்பான்.
செஞ்சடையன் இரசனைக் காரன். அவனது இரசனை சங்கவையை பார்த்ததிலே நன்கு தெரிந்தது.
“டேய் இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல கெஸ்ட் எல்லாம் வரப் போறாங்க... சேர்க்கு கவர் போடாம இருக்கீங்க... புல்சிட்” மேடையில் கத்திக் கொண்டு இருந்தான் செஞ்சன்.
இவள் வருவதை அவன் கவனிக்கவே இல்லை. காலையில் கிளம்பிய உடனே அவனுக்கு புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பி விட்டாள். ஆனால் அது சிங்கிள் டிக்கிலே தான் இருந்தது.
அவனது வேலை பளு தெரிந்ததால் அவனுக்கு போன் போடவில்லை அவள். இல்லை என்றால் அவனே கிளம்பு நேரத்துக்கு முன்னாடி அவளை அழைத்து பேசிவிடுவான்.
இன்றைக்கு அழைக்காமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றம் பரவினாலும் எப்படியும் நேரா பார்க்கத்தானே போறாரு என்று எண்ணியவள் மனதுக்குள் எழுந்த மலர்ச்சியுடன் கல்லூரியில் காலை பதித்தாள்.
எப்பொழுதும் அழுது வடியும் சங்கவையா இது என்று எல்லோருமே திரும்பி பார்த்தார்கள். ஆனால் அவளது பார்வை என்னவோ செஞ்சனை தான் தேடியது. அவனது குரல் மேடையில் இருந்து வந்தது.
வேலை செய்த பரபரப்பில் அவன் வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தான். அவனது பின்னாடி போய் நிற்கலாமா என்று யோசனை வந்தது. ஆனால் எல்லா மாணவர்களும் வந்து அமர்ந்து விட்டார்கள். ஏன் சில ஆசிரியர்களும் கூட வந்து விட்டார்கள். அதனால் இனி மேடை ஏறுவது என்பது இயலாது என்று அறிந்துக் கொண்டவள், அடிட்டோரியத்தின் முன்னாடி இருந்த வரண்டாவில் காற்றாட நின்றுக் கொண்டாள்.
செஞ்சனின் கண்களில் தென்படும் பாராட்டுக்காக இவளின் நெஞ்சம் வெகு நேரமாக காத்துக் கொண்டே இருந்தது. சமூக கவிதையை அப்படியும் இப்படியுமாக உருட்டி புரட்டி எழுதி விட்டான்.
சிறுபாண்மை பெருபாண்மையை பற்றிய கவிதை அது. படித்து பார்த்த சங்கவைக்கு செஞ்சனின் திறமை மேல் அதிக மரியாதை வந்தது.
“உண்மையாவே செம்மையா இருக்கு செஞ்சா.. நீங்க நம்ம கல்லூரி மேகசீனுக்கு எழுதி போடுங்க.. வெறும் காதல் கவிதைகளில் மட்டும் போக்கஸ் பண்ணாம இது போல சமூக கவிதைகளையும் எழுதுங்க. உங்களுக்கு சொற்கள் அழகா வளைந்து குடுக்குது” என்று பாராட்டினாள்.
“ஹேய் நீ என்னை பெரிய கவிஞனா நினைச்சுக்காதடி... நானெல்லாம் அதுக்கு ஒர்த்தே இல்ல.. நீ பெர்பாம் பண்ணனும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் இந்த கவிதை எழுதினேன். இல்லன்னா நானாச்சும் இதெல்லாம் எழுதுறதாவது” என்று போய் விட்டான்.
அதை எண்ணி பார்த்தவளுக்கு அவனது காதலில் ஏகோபித்த பெருமை தான்.
“லவ் யூ செஞ்சா” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், ப்ரோக்ராம் ஆரம்பம் ஆக, உள்ளே வந்து அமர்ந்துக் கொண்டாள்.
ஒவ்வொரு டீமாய் பெர்பாம் செய்துக் கொண்டு இருந்தார்கள். செஞ்சனின் கண்கள் அடிக்கடி யாரையோ தேடியது. ஆனால் அவனது தேடுதலுக்கு உரிய நபரோ அவனது கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடினார்.
“எங்க போனா இவ. போன் பண்ணாலும் போனை எடுக்க மாட்டேங்குறா?” புலம்பியவன் விடாமல் தேடுதல் வேட்டை நடத்தினான்.
அடுத்தது கவிதை வாசிப்பு தான். ஆனால் அவளை காணோம்... நகத்தை கடிக்காத குறையாக ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிப் போனான்.
“தலைபடட்டுமே சிறுபாண்மை...” என்று குரல் ஸ்பீக்கரில் கேட்க அதுவரை கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தவனின் கண்கள் பட்டேன்று மேடையை பார்த்தது. பார்த்தவனின் கண்கள் அதிர்ந்துப் போனது. சுவாசம் ஒரு கணம் தடை பட்டு தான் போனது.
“தலைபடட்டுமே சிறுபாண்மை” என்று செஞ்சனை பார்த்துக் கொண்டே சங்கவை வாசித்தாள் அவன் எழுதிய கவிதையை.
“ஆரம்பம் மட்டுமே இறுதி முடிவாய்...
ஒவ்வொரு தொடக்கத்தின் போதும்
பெரும்பான்மையின் முடிவுகளிலே முடிய
தோற்றம் ஒரு காரணத்துக்காக தொடங்க
இறுதி பல காரணங்களை
உள்ளடக்கியே விடைபெறுகிறது...” என்று அந்த கவிதை நீண்டுக் கொண்டு போனது.
ஒரு முறை கூட அவளது பார்வை கீழே குனியவில்லை. அவன் எழுதி குடுத்த அந்த கவிதை அவளின் நெஞ்சில் புள்ளி கூட மாறாமல் பதிந்துப் போனது.
அவளது குரலும் தன்னையே பார்த்து அவள் கவிதை சொல்லும் விதமும் அவளின் தோற்றமும் செஞ்சனின் மூளையை மழுங்க செய்து விட்டது. அவனது கருவிழிகள் அங்கும் இங்கும் எங்குமே அசையவே இல்லை. பார்வை மொத்தமும் அவனின் காதலியிடம் மட்டுமே இருந்தது.
அவள் வாசித்து முடித்து அனைவரும் கைத்தட்ட,
“இந்த சமூக கவிதைக்கு பரிசும் கிடைத்து இருக்கிறது. இந்த கவிதைக்கு உரியவர் ஸ்டுடென்ட் ஹெட் செஞ்சடையன்” என்று கூறியவள்,
“மேடம் இது அவரோட கவிதைக்கு கிடைத்த பரிசு தொகை. அவருக்கு கிடைத்த அவார்ட்... நீங்களே அவர் கிட்ட குடுக்கணும்” என்று சீப் கெஸ்ட்டிடம் நீட்டினாள்.
வளர்ந்து வரும் இலக்கிய செம்மல் விருது. கூடவே ஐம்பது ஆயிரம் தொகை அவனது கவிதைக்கு கிடைத்து இருந்தது. கவிதையை அன்றைக்கே எழுதி முடித்தவன் அவளுக்கு போனில் அனுப்பி விட்டான்.
வாசித்து பார்த்தவளுக்கு மிகுந்த பொருள் நிறைந்த கவிதையாக பட உடனே அதை இலக்கிய சங்கத்துக்கு அனுப்பி விட்டாள்.
அவர்கள் இதை படித்து பார்த்து முறையாக தேர்வு செய்து, இலக்கிய விழாவுக்கு அழைத்தார்கள். விழா வேறு ஊரில் நடப்பதால் இந்த நேரம் செஞ்சனால் அங்க போக முடியாதே என்று எண்ணி உடல்நிலை சரியில்ல என்று சொல்லி மறுத்து விட்டவள், தன் முகவரிக்கு இரண்டையும் அனுப்பி விட சொன்னாள்.
அவர்களும் அனுப்பி விட்டு விட்டார்கள். இதோ அதை உரியவனின் கைகளில் சிறப்பு மிக்க தருணத்தில் மிகுந்த மரியாதையுடன் சேர்த்து விட்டாள். இதை செய்ய போகிறேன் என்று ப்ரின்சியிடம் முன் அனுமதியும் பெற்று இருந்தாள். அதனால் புதிதான எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
“மிஸ்டர் செஞ்சடையன்... ப்ளீஸ் கம் டூ த ஸ்டேஜ்” அவளது குரலிலே அவனை அழைத்தாள்.
அவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே மேடை ஏறியவன் சுற்றத்தை உணர்ந்து தன் விழிகளை கடினப்பட்டு அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டு கெஸ்ட்டை பார்த்து புன்னகைத்தான்.
அவனது கைகளில் வாழ்த்துடன் பரிசுடன் அவார்டையும் கொடுத்தார்கள். கல்லூரியே கைத்தட்டலில் அதிர்ந்துப் போனது. திரும்பி சங்கவையை பார்த்தான். விழிகளால் அவளை வர செய்தான்.
“இந்த பாராட்டு எனக்கு மட்டும் சொந்தமில்ல... மிஸ் சங்கவைக்கும் சொந்தமானது... நீங்களும் வாங்க” என்று சொல்லி இருவரும் சேர்ந்தே அதை வாங்கிக் கொண்டார்கள்.
கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்து இருந்த கேமராக்கள் இருவரையும் உள்வாங்கி படங்களாகாவும் வீடியோவாவாகவும் மாற்றிக் கொண்டது.
அந்த தருணம் இருவருக்கும் மறக்க முடியாத தருணமாக மாறியது. அவளுடன் சேர்ந்து கீழே இறங்கியவன்,
“கொஞ்சம் வெளில வாடி” என்று அடிக்குரலில் சொன்னான்.
“இப்போ வேணாம் செஞ்சா. எல்லோரடா பார்வையும் நம்ம மேல தான் இருக்கும். சோ ப்ளீஸ்..” என்று கெஞ்சியவளின் கெஞ்சல்களை கொஞ்சமும் மதிக்காமல் யாருக்கும் தெரியாமல் அவளின் முந்தானை மறைவில் அவளின் கையை பிடித்துக் கொண்டு வெளியேறினான்.
அவனது பிடிவாதத்தில் சிரிப்பு வந்தாலும், அவனது முகத்தில் இருந்த உணர்வில் அவளின் அடி மனதில் மின்னல் எழுந்தது.
நைஸ் ❣️
அவளைப் பார்த்து காதல் கவிதை எழுத ஆரம்பிச்சு அவளுக்காக சமூக கவிதை எழுதி பரிசும் பாராட்டும் 💚
செஞ்சன் கவி அழகான காதல் 💓
அட சங்கு, கலக்கர போ🤩🤩💐💐
சஞ்சு நீ ரொம்ப லக்கி மேன்🥰🥰🥰🥰🥰
Made for each other ஆ இருக்காங்க ரெண்டு பேரும்♥️♥️♥️♥️
காதல் கவிதைகள் படைத்தவன்
கல்லூரி போட்டிக்கு சமூக கவிதை படைக்க காதலியாய் காதலன் கவிதையை
காதலன் அறியாமல்
காதலுக்கு பொக்கிஷமாய் காதலாக
கவிதையை படித்து
காதலுக்கு பரிசை வாங்கி தர
காதலில் திளைத்த
காதலர்கள் பிரிந்த
காரணம் தான் என்னவோ