விடியற்காலையில் அந்த பெரிய வீடு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அடுப்படியில் இருந்து சாமி அறை வரை ஒரே சீருடை அணிந்த பணியாளர்கள் அந்த வீட்டில் வசிக்கும் மனிதர்களுக்காக அடித்து பிடித்து பணி செய்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் வீட்டின் உரிமையாளர்களோ இன்னும் படுக்கையை விட்டு எழவில்லை. கண் விழித்தாலும் அவரவர் போனில் மூழ்கி போய் இருந்தார்கள்.
ஆனால் ஒரே ஒரு அறையில் மட்டும் தங்க கொலுசு சிணுங்கும் சத்தமும், தங்கம் மற்றும் வைர வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் இசையும் இடைவிடாமல் கேட்டது.
கூடவே பருவ பெண்ணின் கூச்சம் மிகுந்த சிணுங்கல்களும் இணைந்து கேட்டது.
“ப்ளீஸ்... விடிஞ்சிடுச்சுங்க.. போகணும்” என்று அந்தப்பெண் குரலே வராமல் ஆறடி ஆண் மகனிடம் கொஞ்ச,
“எனக்கு வேணும்டி” என்று முரட்டு தனமான ஆணின் குரல் பதில் கொடுத்தது. கூடவே அந்த பெண்ணின் உடலை வளைத்து தனக்கு கீழ் கொண்டு வந்து அவளின் கழுத்தில் வன்மையாக முகம் புதைத்தான்.
அதில் கூச்சம் கொண்டவள், “கூசுதுங்க” என்று உயிர் கரைந்தாள்.
“ம்ம்ம்” என்றானே தவிர அவளை விட்டு இம்மியும் நகரவில்லை. அவனின் ஆசைக்கு உடன் பட்டே ஆகவேண்டும் என்கிற நிலையில் இருந்தாள் அந்த பெண்.
அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் தாலி அவனுக்கு மிகவும் உறுத்தியதோ என்னவோ,
“ப்ச் இதை முதல்ல கழட்டுடி.. பட்டிக்காடு மாதிரி இதை ஒன்னு போட்டுட்டு சுத்துற” என்றான் எரிச்சலாக.
“ம்ஹும் அது மட்டும் முடியாது” என்றாள் தயக்கமாய்.
“இரவும் இதை தான் சொன்ன... இப்பவும் இதை தான் சொல்ற.. அப்போ என் ஆசை உனக்கு பெருசா தெரியலையாடி... இந்த மஞ்ச கயிறு தான் உனக்கு பெருசா தெரியுதா. அப்போ இந்த கயிறோடையே குடும்பம் நடத்திக்க. நான் போறேன்” என்று அவன் அவளை விட்டு எழுந்துக்கொள்ள, வேகமாய் அவனை பிடித்து தடுத்தவளின் விழிகள் கலங்கி இருந்தது.
“உங்களை தவிர எனக்கு வேற எதுவும் பெருசா தெரியலைங்க... நான் கழட்டிடுறேன்” என்றவள் திருமணம் ஆகி இன்னும் இருபத்தி நான்கு மணிநேரம் கூட முடிந்து இருக்கவில்லை. அதற்குள் அவள் கழுத்தில் தன் கைப்பட கட்டிய தாலியை கழட்ட வைத்தான் அகத்தியன். கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெண்களின் உயிராய் இருக்கும் தாலியை கழட்டி வைத்தாள் தமிழ்.
அதன் பிறகே அவளை நாடினான் தலைவன். தலைவனின் தேவையை மனம் கோணாமல் நிறைவேற்றினாள் தலைவி.
கூடல் முடிந்த உடன் அகத்தியன் விலகி படுக்க, மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் தமிழ்.
தமிழின் முழு பெயர் செந்தமிழ். தமிழின் மீது பற்று கொண்டு அவளின் தாத்தா அவளுக்கு அந்த பெயர் வைத்தார். ஆனால் அவளின் தகப்பனுக்கு தமிழ் மீது எல்லாம் பற்று இல்லை. தமிழ்நாட்டின் மீது தான் பற்று அதிகம்.
அரசியலில் இன்றியமையாத நிலையில் இருப்பவர் செல்லப்பா. இவர் தொழில்துறை அமைச்சர், தன் மகன் தயாளனுக்கு நிதி அமைச்சர் பதவியை வாங்கி குடுத்து இருக்கிறார்.
இப்பொழுது அவரின் மாப்பிள்ளை அகத்தியனுக்கு கல்வித்துறை அமைச்சர் பதவியை வாங்கி தர முயன்றுக் கொண்டு இருக்கிறார்.
அகத்தியன் மிகப்பெரிய ராஜ வம்சத்தை சேர்ந்தவன். நாடாளும் திறமை கொண்டவன் அவன். ஆனாலும் அவனுக்கு அரசியலில் எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால் மாமனார் பதவி வாங்கி தருகிறேன் என்று சொல்லும்பொழுது அலட்டிக் கொள்ளவில்லை.
அதையும் ஒரு கை பார்ப்போமே என்று எண்ணிவிட்டான் போல.
குளித்து விட்டு உள்ளேயே ட்ரசிங் ரூம் இருக்க அங்கேயே உடை மாற்றிக் கொண்டு வந்தாள் தமிழ். அகத்தியன் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.
அவனிடம் மனம் விட்டு பேச ஆசையாக இருந்தது. ஆனால் அவன் இப்பொழுது வரையிலும் பேச தயாராகவே இருக்கவில்லை. எப்பொழுதும் போனும் கையுமாகவே இருந்தான்.
பெருமூச்சு விட்டவள் கண்ணாடி முன்பு அமர்ந்து மிதமாக மேக்கப் போட ஆரம்பித்தாள். தலையை காய வைத்து சாமி கும்பிட கீழே வந்தாள். இது அவளின் வீடு தான். இன்னும் யாரும் எழுந்து வரவில்லை.
பெருமூச்சு விட்டவள் கண்மூடி சாமி கும்பிட்டாள். மனதுக்கு என்னவோ ஒரு மாதிரி சஞ்சலாமாகவே இருந்தது. அவளுக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை எல்லாம் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது கடவுளிடம் மட்டுமே சரண் அடைய தோன்றியது.
கழுத்தை வருடி தாலியை எடுத்து அதில் குங்குமத்தை வைத்தாள். நேற்றைக்கே அகத்தியனின் அன்னை சொல்லி இருந்தார்.
“வகிட்டுலயும் தாலியிலையும் குங்குமம் வச்சு பழகு மா” என்று. அதனால் குங்குமத்தை எடுத்து வைத்துக் கொண்டாள் சின்னதாக.
அவள் வெளியே வரவும் மெய்ட் அவளுக்கு காலை பானத்தை கொண்டு வந்து குடுக்க,
“தோட்டத்துல வச்சிடு” என்று தோட்டத்துக்கு சென்றாள். அழகாய் மெயின்டெயின் செய்து இருந்தது. அங்கிருந்த கள் இருக்கையில் கால் மேல் கால் போட்டு சூரிய உதயத்தை பார்த்தாள். எதிரில் பானத்தை வைத்து விட்டு போக, எடுத்து அருந்தினாள்.
காலையில் அவள் குடிப்பது ஸ்மூத்தி தான். ஆர அமர இரசித்து பருக அவளது போன் இசைத்தது.
தோழி தான் அழைத்து இருந்தாள். எடுத்து காதில் வைக்க,
“எல்லோரும் லைனில் இருக்கிறோம்டி” என்று கோரஸ் குரல் கேட்க சிரித்தாள்.
“என்ன காலையிலையே போன்” கேட்டாள்.
“இல்லடி நேத்திக்கு உனக்கு பர்ஸ்ட் நைட்ல... அது தான் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டோம்” என்று சொல்ல, ஒரு கணம் சிவந்துபோனாள் தமிழ்.
“ஹேய் சொல்லுடி.. மாப்பிள்ளை எப்படி ஓகே வா.. நைட் எல்லாம் வேலை செய்தாரா... இல்ல குப்பற படுத்து குறட்டை விட்டாரா?” என்று ஆரம்பித்து மிகவும் இண்டிமேட்டாக கேள்வி தொடுத்தார்கள். காதே கூசிப்போனது அவர்களின் கேள்விகளை கேட்டு.
“ஏன்டி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம இப்படி கேட்டு தொலையிறீங்க?” இவள் தான் முகம் சிவந்துப் போனாள்.
ஆனால் அவர்களுக்கு அப்படி எல்லாம் இல்லை...
“நீ வேலை வாங்குனியா? இல்ல அவர் உன்னை வேலை வாங்கினாரா?” என்று கேட்க,
“கடவுளே... ச்சீ நீங்க எல்லாம் பொண்ணுங்களே இல்லடி.. வெட்கம் கெட்டு போய் இருக்கீங்க... உங்களுக்குன்னு ஆள் வரும் பொழுது பார்க்கிறேன்” என்று அவள் முறைக்க,
“ஹேய் ஆல்ரெடி நாங்க எல்லாம் லிவிங் ரிலேஷன்ல தான் இருக்கோம். நீ தான் அதுக்கு எல்லாம் தயாராவே இல்லையே...” என்ற தோழிகள்,
“உன்னை மாதிரி நாங்க இருந்தா ரொம்ப கஷ்ட்டம். அந்த விசயத்துல டெமோ பார்த்துட்டு தான் கல்யாணமே” என்று சிரிக்க,
“ச்சீ.. நல்ல கொள்கைடி உங்க கொள்கை” தலையில் அடித்துக் கொண்டவளை பணியால் வந்து தாய் அழைப்பதாக சொல்ல,
“ஓகேடி.. ப்ரீ ஆகிட்டு அப்புறம் பேசுறேன்.. பாய்” என்று வைத்து விட்டு உள்ளே சென்றாள். தாமரையிடம் போய் நிற்க,
“இரவெல்லாம் ஓகே தானேடா. ரொம்ப ரகடா இல்லையே. ஆளு பார்க்க ஓங்கு தாங்கா இருக்காப்ல. அதனால உன்னை எதுவும் கட்டாயப் படுத்தலையே” என்று தாய் கேட்க,
“இல்லம்மா அதெல்லாம் எதுவும் இல்லை” என்று தாய் இவ்வளவு ஓப்பனாக பேசவும் கூச்சம் கொண்டவள் பாதியை உள்ளுக்குள்ளே முழுங்கி விட்டு, மீதியை தயங்கி பூசி மொளுகினாள்.
“ஏதாவது பெட் டார்ச்சர் பண்ணா பொறுத்துக்கணும்னு அவசியம் இல்ல தமிழ்... உனக்கு பிடிச்சா மட்டும் அவனோட பெட் ஷேர் பண்ணு. இல்லன்னா விட்டுடு” என்றவர் அவளை கூர்ந்து ஆராய்ந்தார்.
அவர் தன்னை கூர்ந்து ஆராய்வதை பார்த்தவளுக்கு சங்கடமாய் இருந்தது. ஆனாலும் அவரை விடுத்து அவளால் நகர முடியவில்லை.
அங்கும் இங்குமாய் அவளின் கழுத்திலும் கழுத்துக்கு கீழேயும் காயம் இருப்பதை பார்த்து புருவம் சுருக்கினார். அதோடு தமிழின் இதழ்கள் காயமாகி சிவந்து போய் இருந்தது.
மேக்கப் போட்டும் சில இடங்களில் அகத்தியனின் தடம் அப்படியே தெரிந்து தான் இருந்தது.
“என்ன ம்மா இதெல்லாம்?” என்று அவளின் கழுத்தை தொட வர, பட்டென்று ஓரடி பின்னுக்கு எடுத்து வைத்தவள் அவரை தன்னை தொட விடாமல் நகர்ந்துக் கொண்டாள்.
“தமிழ்” என்று அவர் அழுத்தமாக அழைக்க,
“ப்ளீஸ் ம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்லை...” என்றவள் தலையை கீழே குனிந்துக் கொண்டாள்.
“இது தான் நீ அவனோட குடும்பம் நடத்தின அழகா... பொண்ணுங்க எப்பவும் போல்டா இருக்கணும். அதை முதல்ல கத்துக்க. பெட்ல உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் நீ அவனோட படுக்கணும். உனக்கு கொஞ்சம் பிடிகலன்னாலும் அவனோட படுக்காத... இது நம்மளோட உரிமை. முதல்ல பெமினிசத்தை கத்துக்க.. நாளையில இருந்து கேள்ஸ் பவர் என்விராய்மென்ட் க்ளப்ல சேரு. மெம்பர்ஷிப் கார்ட் போடுறேன். உனக்கு நிறைய கத்து குடுக்க வேண்டியது இருக்கு” என்ற தாயை பாவமாக பார்த்தவள், சற்றே பார்வையை படி பக்கம் திருப்ப அங்கே வெற்று மார்புடன் கைகளை கட்டி மர கைப்பிடியில் சாய்ந்து நின்று இருந்தான் அகத்தியன்.
“நாம ஒன்னும் அவனுக்கு அடிமை இல்லை. அதை முதல்ல நீ நல்லா தெரிஞ்சுக்கோ.. உன் விருப்பத்துக்கு நேர் எதிரா எது நடந்தாலும் உடனே ரியாக்ட் பண்ணு. இல்லன்னா உன்னை அவன் கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டான். எப்பவுமே கேள்ஸ் பவர் தான் உசத்தியா இருக்கணும்” என்று தாமரை அறிவுரை கூற, அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த அகத்தியனை கண்டு எச்சில் விழுங்கியவள்,
“ம்மா என்றாள் தயக்கமாய்.
“நான் சொல்றது புரியுதா..? அதோட வாரத்துல எல்லா நாளும் பெட் ஷேர் பண்ணனும்னு அவசியம் இல்ல. அதே மாதிரி இவன் கிட்ட மட்டும் தான் ஷேர் பண்ணனும்னு இல்ல” என்று கழிசடையாக பேசியவரின் பேச்சில் முகம் சுளித்தவள்,
“ம்ம்மா” என்றாள் பதட்டமாக. ஏனெனில் அகத்தியன் தாமரை பேசுவதை ஒன்று கூட விடாமல் நிலைத்த பார்வையுடன் கேட்டுக் கொண்டு இருந்தான்.
இவளுக்கு பக்கென்று இருந்தது.
அவரை தடுக்க பார்த்தாள். ஆனால் தாமரை இன்னும் அளவு மீறி பேச,
“தமிழ்” என்றான் நிதான அழைப்புடன்.
திரும்பி தாமரையும் பார்த்தார் அவனை. அவரை பார்த்துக் கொண்டே,
“நான் குளிக்கணும் போய் சுடு தண்ணீர் ரெடி பண்ணு. அப்படியே பாத் டப்பை ரெடி பண்ணு... என்னவோ தெரியல காலையிலையே செம்ம மூடா இருக்கு...” என்று சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் தமிழ்.
இதென்ன இருவரும் ஏட்டிக்கு போட்டியாக நிக்கிறாங்க என்று பயந்துப் போனாள்.
அகத்தியன் வேண்டும் என்றே தான் தன் மாமியார் முன்பு அப்படி சொன்னான்.
“பெரிய பெமினிசம் பேச வந்துட்டா... வீட்டுல ஆயிரத்தெட்டு ஓட்டை. கல்யாணம் ஆனா அடுத்த நாளே மகளுக்கு பண்ற அட்வைசை பாரு... த்தூ தெறிக்க” என்று துப்பி விட்டு மனைவியை ஒரு முறை முறைக்க, அடித்து பிடித்து மாடி ஏறிவிட்டாள்.
அதோடு அவன் கேட்ட எல்லாவற்றையும் ரெடி செய்து வைத்தாள் தமிழ்.
அகத்தியனின் இந்த செயலை கண்டு பல்லை கடித்த தாமரை,
“சரியான காட்டானை மாப்பிள்ளையாக்கி அழகு பார்த்து இருக்கிறார் இந்த மனுசன்.. இந்த ஆளையே நான் மதிக்க மாட்டேன். இவனென்ன பிஸ்கோத்து” கருவிக் கொண்டவர்,
ஸ்டைலாக வெட்டி இருந்த பாப் கட்டை ஒரு சிலுப்பு சில்லுப்பியவர் மகளுக்கும் மருமகனுக்கும் டைவர்ஸ் வாங்கி குடுக்க போகும் சகுனி வேலையை அன்றைக்கே செய்ய ஆரம்பித்தார்.
தொடரும்..
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 💞
கணவனே கண்கண்ட தெய்வம் என அடங்கி போகும் மனைவி
கட்டிலில் ஆட்சி புரியும் கணவன்...
காதலாய் துவங்கும் தாம்பத்தியம் கடமையாய் துவங்கியது...
பொண்ணுக்கு அறிவுரை என ஃபெமினிசம் பேசும் அம்மா
மாமியாரை எதிர்த்து நிற்கும் மருமகன்
மருமகனுக்கு பதவி வாங்கி தர துடிக்கும் மாமனார்
நல்ல தொடக்கம்
அட ச்சைக் இது எல்லாம் அம்மாவா🤮🤮🤮🤮
பாவம் தமிழ், குடும்பத்தில் தப்பி பிறந்துட்டு போல.....
அக🤩🤩🤩🤩