அத்தியாயம் 40

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஹலோ என்ன ரொம்ப தான் மிரட்டுறீங்க... என்னை சுத்தி பார்த்தீங்கள்ள என் அண்ணனுங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு.. அவங்களை மீறி உங்களால என்னை எதுவும் செய்ய முடியாது” என்று கொஞ்சம் கர்வமாகவே சொன்னாள்.

“ம்ஹும்” என்றவன் ஒரு இதழ் வளைவை மட்டும் கொடுத்து விட்டு வேல் முருகனின் அருகே சென்று காதோரம் என்னவோ சொன்னான்.

“அவர் மேலே லேபிட் சைட் கார்னர்” என்றார்.

“தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு ஏந்திழையாளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் போக “ஆமா தாத்தா ஏன் என் அறையை அவர் கிட்ட சொன்னாரு... எதுக்கு” என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே,

வேல்முருகன்,

“சிங்கனுக்கு உன் அறையை காட்டும்மா” என்று சொல்ல “வாட்?” என்று அதிர்ந்துப் போனாள்.

“தாத்தா” என்று அவள் திகைக்க,

“போம்மா போய் காட்டிட்டு வா” என்று அவளை வற்புறுத்த, வேறு வழியில்லாது உள்ளுக்குள் புலம்பியபடி அவனை பின் தொடர்ந்தாள்.

அறையின் உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் கதவை அழுந்த சாற்றி மூடி தாழிட்டவன்,

“கீழ என்னவோ சொன்னியே... அதை மறுபடியும் ஒரு முறை சொல்லு” என்றான் அதிகாரமாய்.

“நானா கீழையா ஒன்னுமே சொல்லலையே..” என்று அவள் பம்ம,

“ஏய் கேடிடி நீ” என்று அவளின் இடையை அவன் வளைத்துப் பிடிக்க பதறிப் போனாள்.

“அச்சோ என்ன பண்றீங்க?” விழிகள் விரிய அவனை மேவிய அச்சத்துடன் பார்த்தாள்.

“என் கல்யாணத்துல எந்த குறையும் இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி விட்டு அவளின் கழுத்தை ஒற்றை கையால் பிடித்தவன் அவளின் முகம் நோக்கி குனிந்தான்.

ராசசிங்கனின் முகம் அவளை நோக்கி வர ஏந்திழையாளின் விரிந்த விழிகள் இன்னும் அதிகமாக விரிந்தது. ஒரு நொடியில் நெஞ்சமெல்லாம் அடைத்து விடுவது போல ஒரு உணர்வு.

“ப்ளீஸ்” என்று அவனை அவள் தவிர்க்கப் பார்க்க,

“நோ ஐ வான்ட்” என்று முணுமுணுதத்தவன் அவளின் இதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டான். ஹக் என்று அவள் துள்ளி துடித்தாள். அதை இரசனையுடன் உணர்ந்துக் கொண்டவன் இன்னும் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தான்.

மீள முடியாத ஆழக்குழியில் ஈர்க்கும் ஈர்ப்பு விசை போல அவனின் முத்தத்தில் அதி வேகமாக ஈர்த்துக் கொண்டாள்.

“என்ன இது?” என்று அவள் தடுமாற அவளை மேலும் தடுமாற வைத்தான் ராசசிங்கன். இடையை வளைத்துப் பிடித்தவன் அவளின் புடவைக்குள் கை விட்டு தன்னோடு இன்னும் இறுக்கமாக இழுத்துக் கொண்டான்.

வெற்று இடையில் அவனது முரட்டு கை பட விக்கித்துப் போனாள். அவளை இன்னும் அதிர்வடையவே செய்தான் ராசசிங்கன்.

“ப்ளீஸ்” என்கிற அவளின் கோரிக்கைகள் எல்லாம் புயலில் சிக்கிய கொடி போல காணமல் போனது. அவனது ஒவ்வொரு தொடுகையிலும் இவள் பூப்போல மலர அவளை கண்டு அவளே திகைத்து தான் போனாள்.

“இதெல்லாம் வேண்டாமே” என்று அவளின் உள்ளம் தடுமாறியது.. ஆனால் அவளின் உடல் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

அவளின் இதழ்களை சுவைத்தவனுக்கு எப்பொழுதும் போல அவளின் மீது கட்டுக் கடங்காத மயக்கம் வர தாங்க முடியாமல் அவளின் கழுத்தில் முகத்தை புதைத்தவன் சற்றே அவனின் முகத்தை கீழே இறக்கினான்.

“ப்ளீஸ்” என்று அவனுக்கு தடை போட பார்த்தவளின் எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்தவன் பெண்ணவளை பெரும் சுழலுக்குள் இழுத்துக் கொண்டான்.

“ம்மா” என்று தனக்குள் வெடிக்கும் உணர்வுகளை கண்டு பயந்துப் போனாள் முதல் முறையாக.

“இதெல்லாம் வேணாமே” என்று அவள் இதழ்கள் உளறியது. அதை செவி மடுக்கும் நிலையில் அவன் இல்லை. போதை பொருளை உபயோகிக்கும் மன நிலையில் இருந்தான் அவன்.

அத்து மீறி அவளின் தேய(க)த்தில் பயணம் செய்ய ஆரம்பித்தான்.

“உன் நோண்ணனுங்கலால என்னை எதையும் செய்ய முடியாதுடி...” என்று அவளின் காதோரம் சரிந்து சொன்னவன் வன்முறையாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

அதில் அதிர்ந்துப் போனாள். “நான் சொன்னதுக்காக தான் இப்படி எல்லாம் செய்யிறீங்களா?” என்று தன் மீது படர்ந்து இருந்தவனை அவள் தள்ளி விட்டு கேட்டாள்.

“ஏன் உன் மேல உள்ள மோகத்துல மயக்கத்துல இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்னு நினைச்சியா?” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் அவமானமாக உணர்ந்தவள் தன் கலைந்து இருந்த உடைகளை சரி செய்ய ஆரம்பித்தாள் உள்ளத்து வேதனையுடன்.

அதை தடுத்தவன், “அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று கேட்டவன் அவளை அலேக்காக தூக்கி கட்டிலுக்கு கொண்டு சென்றான். அதில் அவள் மிரண்டு போய் பார்க்க,

“கொக்கின் வேணும் போல இருக்குடி” என்று அவன் சொல்லி விட அதன் பிறகு அவளிடம் எந்த மறுப்பும் எழவில்லை.

அதை உணர்ந்தவனாய் “ஏன்?” என்று அவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் அவனை பார்க்காமல் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அதில் அவளை உணர்ந்தானோ என்னவோ அவளை பெரிதும் படுத்தாமல் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான். எல்லாமே சிறிது நேரம் தான்.

“கல்யாணத்துக்கு பிறகும் இதே மாதிரி இருப்பேன்னு எதிர் பார்க்காதடி.. அப்போ எல்லாவற்றையும் நீ தாங்கி தான் ஆகணும்... காரணம் எதுவும் சொல்லாத” என்று அறிவுறுத்தி விட்டு கிளம்பி விட்டான்.

வீட்டில் யாரும் எடுத்து செய்யாத கல்யாண வேலைகளை எல்லாம் ராசசிங்கன் அனுப்பிய ஆட்கள் மிக சுறுசுறுப்பாக செய்ய ஆரம்பித்தார்கள். வீடே கல்யாண களையில் மின்னியது. அதை கடுப்புடன் பார்த்தார்கள் குடும்பத்து ஆட்கள்.

எதிலும் கலந்துக் கொள்ளாத தன் குடும்பத்து ஆட்களை சொல்லொண்ணாத உணர்வுடன் ஏந்திழையாள் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வீடே பரபரப்பாகிக் கொண்டு இருந்தது. விடிந்தால் திருமணம். பெண்ணவளின் நெஞ்சுக்குள் ஆயிரம் ஏக்கங்கள். தாயை விட்டு பிரிய வேண்டும். பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு போக வேண்டும். கூடப் பிறந்தவர்களை விட்டு பிரிய வேண்டும்.

இதுவரை தன்னது என்று இருந்த அனைத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு செல்ல வேண்டிய நிலை.

எல்லாவற்றிலும் இருந்தும் முற்றும் துறந்த முனிவன் போல துறந்து செல்ல வேண்டும் பிறந்த வீட்டில் இருந்து. அதை எல்லாம் எண்ணியவளுக்கு மனம் வலித்தது.

பெரியவர்கள் முதற்கொண்டு சிறியவர்கள் வரை யாரின் முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்வே இல்லை. தனக்கும் அந்த மகிழ்வு இல்லை தான். ஆனால் வாழ்க்கை இது தானே என்று உணர்ந்து அனைத்தையும் ஏற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருந்ததால் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தன் உள்ளத்தையும் மாற்றிக்கொள்ள துணிந்து விட்டாள்.

ஆனால் அவளின் மாற்றத்தை அந்த குடும்பத்தில் இருந்த யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் மாறிவிட்டாள் என்று அவளின் மீது கோவமும் கொண்டார்கள்.

அவர்களின் கோவம் நியாயமானது என்று அவளும் ஒதுங்கியே இருந்தாள். கல்யாண பரபரப்பு அவளிடம் எதுவுமே இல்லை. ஆனால் அன்று மாலையே அவளுக்கு உரிய அனைத்தும் ராசசிங்கன் மூலமாக வந்து சேர்ந்தது.

கண்ணை பறிக்கும் வைர கற்கள் பதித்த மெலிதான வேலை பாடு கொண்ட சிவப்பு புடவை... அதற்கு உரிய அனைத்து வைர ஆர்னமேண்ட்சும் பியூட்டிஷியன் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து விட்டு மிதமான ஒப்பனையில் அவளை தயார் செய்தார்கள் வரவேற்புக்கு.

சும்மாவே ஏந்திழையாள் அவ்வளவு அழகு... இப்பொழுது சொல்லவே வேணாம்... கொள்ளை அழகாக அவள் மின்னினாள்... அதுவும் அவள் அணிந்து இருந்த வைரம் ஒவ்வொன்றும் நல்ல தேர்ந்தெடுத்த உயர் வகை வைரங்கள்.

பார்ப்பவர்களின் கண்களை பறித்து விடுவது போல அந்த அளவுக்கு சொலி சொலி என்று சொலித்தது. இரவில் மின்னும் விண்மீன் போல மின்னியது.

அவளின் வனப்பு அதில் அதிகம் கூடி தெரிந்தது... திருமணத்துக்கு கூடி இருந்தவர்கள் எல்லோரும் ஏந்திழையாளையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 10, 2026 11:42 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top