“மூணு நாளும் உங்களோட தான் இருக்கேன். ஆனா ஒரு நாள் கூட என் கழுத்துக்கு கீழ பார்க்கல... இவ்வளவு தனிமை இருந்தும் அதை பயன் படுத்திக்கவும் இல்லை. ஆனா இதே இது ஊர்ல அத்தனை பேரின் மத்தியிலும் என்னை என்னென்னவோ பேசுனீங்க. செய்தீங்க... இதுல நீங்க யாரு சிங்கன்?” என்று அவனிடம் துணிந்து அவள் கேள்வி கேட்டாள்.
“நீ கேட்டா நான் சொல்லணுமா?” என்கிற தோரணையில் அவளை பார்த்து ஒரு ஏளன சிரிப்பு சிரித்தவன் கடந்து போய் விட்டான்.
அதில் அவமானமாக உணர்ந்தாலும் அவன் மீது ஏதோ ஒரு எண்ணம் மறுபடியும் பசளையாக படர ஆரம்பித்தது. ச்சை எத்தனை முறை அவன் கிட்ட வாங்கினாலும் உனக்கு மட்டும் புத்தி வரவே மாட்டிக்கிதே... கடிந்துக் கொண்டவள் அவனுக்கு உண்டான காலை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
ராசசிங்கனுக்கு உண்டான காலை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அப்போது திடுதிப்பென்று அன்று மாலை அவன் பேசியது நினைவுக்கு வந்தது.
“பதிலுக்கு பதில். உன் குடும்பம் என்னை பேசியது. அதனால் நான் உன்னை பேசினேன்” என்றானே.. ஒருவேளை இது கூட அது மாதிரி எதுவும் இருக்குமோ என்று அவளின் மூளை ஆராய்ச்சி செய்தது.
காரணமே இன்றி தன்னை இப்படி இவன் சொல்ல மாட்டான் என்று அவன் மீது நம்பிக்கை வர வேகமாய் தன் தாத்தாவுக்கு போனை போட்டாள்.
“தாத்தா” என்று இவள் ஆரம்பிக்க,
“இப்ப தான் என் ஞாபகம் வந்ததா இழை?” என்று குரல் கமற கேட்டார்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை தாத்தா” என்று சங்கடப் பட்டவள்,
“ராசசிங்கனை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா?” கேட்டாள்.
வேல்முருகன் எதுவுமே பேசவில்லை. அவரின் மௌனமே அவருக்கு எல்லாமும் தெரியும் என்று பறை சாற்ற விழிகளில் கண்ணீர் தேங்கியது ஏந்திழையாளுக்கு.
“தாத்தா” என்றாள் குரல் கமற,
“ம்ம்ம்” என்றார் அவர்.
“அப்போ இங்க என்னோட ராசசிங்கன் இருப்பதும் உங்களுக்கு தெரியும் தானே” என்று மனமுடைந்துப் போய் கேட்டாள்.
வேல்முருகன் பதிலே பேசவில்லை.
“ஆல்ரைட்...” என்று தன்னை திடப்படுத்திக் கொண்டவள்,
“உங்களுக்கும் அந்த ராசசிங்கனுக்கும் என்ன சம்மந்தம்? ஆதி முதல் அந்தம் வரை எல்லாமும் எனக்கு தெரியணும்.. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மக்கு மாதிரி நான் இருக்கேன். என்னால இப்படி இருக்க முடியல... எல்லோரும் என்னை யூஸ் பண்ணிக்கிற மாதிரி இருக்கு... இன்க்ளூடிங் நீங்க கூட... சோ ப்ளீஸ் தாத்தா எனக்கு அவரை பற்றி எல்லாமும் சொல்லுங்க” என்று அவள் அடமாய் நிற்க வேல் முருகன் ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றையும் சொன்னார்.
ஆனால் ஏந்திழையாள் ராசசிங்கனின் கெஸ்ட்ஹவுசில் ஒரு நாள் இருந்த பொழுது வேல்முருகனும் ராசசின்கனும் பேசியதை மட்டும் மறைத்து விட்டு மற்ற அனைத்தையும் சொன்னார்.
அவர்களது நிறுவனத்தில் பங்கு கேட்டு வந்ததும் தர முடியாது என்று மறுத்ததும், இவளை கல்யாணம் பண்ணிக்க கேட்டதும், அதற்கு அவளது தந்தையும் மாமனுங்களும் அவனை பேசிய விதத்தையும் அதை தொடர்ந்து அவளிடம் அவன் வம்பு இழுத்ததையும் என எல்லாவற்றையும் சொன்னார்.
அதை கேட்டவளுக்கு ராசசிங்கன் மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்தது.
பங்கு கேட்டு வந்தவனை நாகரீகமான முறையில் திருப்பி அனுப்பி இருக்கணும். அதை விட்டுட்டு இது பாரம்பரியமான குடும்பம் சொத்து. இதை வீட்டு ஆளுங்களை தவிர வேறு யாருக்கும் கை மாத்தி விட மாட்டோம் என்று குடும்பத்தை உள்ளே இழுத்து விட்டுவிட்டார்கள்.
அவனும் சரி அப்போ உங்க பெண்ணை குடுங்க நானும் இந்த குடும்பத்துல ஒருத்தனா மாறிடுறேன் என்று இயல்பாக கேட்க அதற்கு நாகரீகமா மறுத்து இருக்கலாம்.
அதை விட்டுட்டு அவனது நடத்தையை களங்கப் படுத்தி பேசி எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி விட்டுட்டு இன்னைக்கு அவன் ரிவெஞ் எடுக்கிறான். பெருமூச்சு விட்டவள் போனை வைத்து விட்டாள் எதுவும் பேசாமல்.
நடந்த எல்லா விசயத்தையும் கோர்த்துப் பார்த்தவளுக்கு ஏனோ ராசசிங்கன் மீது எந்த கோவமும் வரவே இல்லை. அவளது அறையில் பேசியை பார்த்துக் கொண்டு இருந்தவனின் முன்னாடி போய் நின்றவள்,
“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டீங்களா?” என்று கேட்டாள். அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.
“ப்ளீஸ் சொல்லுங்க?” என்று கேட்டாள்.
“இப்போ எதுக்கு தேவை இல்லாத விசயத்தை எல்லாம் பேசிட்டு விடு” என்று அவன் எழுந்துப் போக பார்க்க அவளின் வழியை மறைத்துக் கொண்டு நின்றாள்.
“ப்ச் என்னடி வேணும் உனக்கு?” கடுப்பாய் அவளை முறைத்தான்.
“சொத்துக்காக என்னை பெண் கேட்டீங்களா? இல்லை என்னக்காக பெண் கேட்டீங்களா?” என்று அவள் பிடிவாதமாக கேட்டாள்.
அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன் அவளை கடந்துப் போக பார்க்க,
“ப்ளீஸ் சிங்கன் எனக்கு பதில் வேணும்... நீங்க இங்க என்னோட ஒரே வீட்டுல இருக்கிறது தெரிஞ்சும் என் தாத்தா கொஞ்சம் கூட பதறாம இருக்காருன்னா கண்டிப்பா உங்க ப்ரப்போசலை என் தாத்தா ஏத்துக்கிட்டாருன்னு தான் பொருள்(அர்த்தம்)” என்றவளை கூர்ந்துப் பார்த்தவன் பின் நிதானமாக சோபாவில் போய் அமர்ந்தான்.
அவளுக்கும் கையை காண்பித்தான்.
“என்ன தெரியணும் உனக்கு?” என்று கேட்டான்.
“எல்லாமே தெரியணும்” என்றாள்.
“உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிடாங்க போதுமா...?”
“அதனால தான் தர்மன் சார் கிட்ட பியான்ஷின்னு அறிமுகம் செய்து வைத்தீங்களா?”
“எஸ்” என்று மட்டும் சொன்னான் அழுத்தமாக.
அதன் பிறகு என்ன பேசுவது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளது கல்யாணத்தை அவளது விருப்பமே இல்லாமல், என் அவளது ஒப்புதலே இல்லாமல் அவளின் கண்ணை மறைத்து எல்லோரும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்களை கரித்துக் கொண்டு வந்தது.
“எனக்கு இந்த ப்ரப்போசல் வேணாம்” என்றாள் திடமாய்.
“ஏன்” என்பது போல ஒரு பார்வை மட்டுமே அவனிடம் இருந்து வந்தது.
“எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை. சோ இதை இதுக்கு மேல வரல விட வேண்டாம்” என்றாள்.
“உன் விருப்பத்தை நான் கேட்கவே இல்லையே...” தோள்களை குலுக்கினான் மிக அலட்சியமாக..
“அதனால தான் இந்த கல்யாணம் வேணான்னு சொல்றேன். என்னால உங்க கூட வாழ முடியாது.. இவ்வளவு அரகன்ட்டா இருக்கிற உங்க கூட எப்படி வாழ முடியும். கல்யாணம் கட்டிக் போற பொண்ணுக்கு கூட தெரியாம கல்யாணம் பேசி வச்சுட்டு அவக் கூடவே வந்து தங்கி இருக்கீங்க பாருங்க... இதை விட உங்க குணத்தை வேறு எப்படி புரிஞ்சுக்குறது. எனக்கும் உங்களுக்கும் எந்த காலத்துக்கும் செட்டே ஆகாது. சோ லீவிட்” என்று அவள் போக அதுவரை பொறுமையாக இருந்தவன் கல்யாணம் வேணாம் என்று சொன்னவுடன் எரிமலையாக கொதித்து எழுந்தான்.
“ஹேய்” என்று போனவளின் கையை இறுகப் பிடித்து தன் எதிரில் நிப்பாட்டியவன்,
“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க... ஹாங் தொலைச்சு புடுவேன்” என்று கண்கள் சிவக்க ஆத்திரத்தில் கத்தியவனின் தோற்றத்தில் அடிவயிறு வரை பயம் தொற்றிக் கொண்டது அவளுக்கு.
“ப்ளீஸ் என்னை விட்டுடு..” என்று கெஞ்சினாள்.
“விடுறதுக்கு இது ஒன்னும் விளையாட்டு காரியம் இல்லை...” என்று பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவளின் முகத்திலே விட்டு எறிந்தான்.
என்ன அது என்று அவள் பார்க்க அவர்களின் கல்யாண பத்திரிக்கை தான் அது. அதை எடுத்து பார்த்தவளின் காலில் நிலம் நழுவியது...
“நோ...” என்று அவள் அலற,
“இனி நீ என்னோட தான். தப்பிக்கணும்னு நினைக்காத... தொலைச்சு கட்டிடுவேன்.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்கு பிறகு மொத்தமா நீ எனக்கு மட்டும் தான்” என்று அவளிடம் எச்சரித்து விட்டு வெளியே போய் விட்டான்.





