“நாங்க ரொம்ப சீக்ரெட்டா வச்சு இருந்தோம். அதை உங்க கிட்ட ரிவில் பண்ணவும் மேடமுக்கு கோவம் வந்திடுச்சு. அது தான்” என்று சிரித்தான். ஆனால் அதற்கு நேர் மாறாக அவளின் கையை பற்றி கசக்கி வைத்தான்.
அதில் அவளுக்கு வலி உயிர் போனது. கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. “இப்போ உன் கண்ணு கலங்குனுச்சுன்னா உன் அண்ணனுங்க அத்தனை பேரையும் நீ ஹாஸ்பிட்டல்ல தான் பார்ப்ப” என்று அடிக்குரலில் தர்மனுக்கு கேட்காமல் உருமியவன் அவளது கையை இன்னும் அழுத்தி பிடித்துக் கொண்டான்.
அவனது அச்சுறுத்தலில் மனம் கலங்கிப் போனவள் கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு சிறிது நேரம் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.
“சிரிடி” என்று அவளின் காதோரம் சொல்ல விலுக்கென்று ஆனது. அவளை இக்கட்டில் நிறுத்தி அவனது காரியத்தை சாதித்துக் கொள்ள பார்ப்பவனின் சுயநலத்தை கண்டு வெறுத்துப் போனது.
ஆக இதற்கு தான் இந்த நகையும் கரிசனையுமா? என்று மனம் மேலும் துடித்தது. நேற்றைக்கு அவனின் மீது படர்ந்த மெல்லிய நேசக் கயிறு அப்படியே அறுந்துப் போனது போல இருந்தது.
“ச்சை ஏன் தான் தடுமாறினேனோ” தன்னையே வெறுத்துக் கொண்டாள் அந்த நிமிடம். அரக்கனிடம் நல்லதை பார்க்க முயன்ற தன் புத்தியை எதை கொண்டு அடிக்கலாம் என்று தேடினாள்.
இவனை இரசிக்க தொடங்கிய நொடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உள்ளுக்குளே வறண்டுப் போனாள் பெண்ணவள்.
“மிஸ்டர் ராசசிங்கன் நீங்க சொல்வது உண்மையா?” என்று அதிர்ந்துப் போனார் தர்மன்.
“உங்களுக்கு ஏன் ஐயம். இதோ இங்கயே இருக்கிறா இவக்கிட்டையே கேளுங்க” என்று ஏந்திழையாளை கை காட்டினான் அந்த நல்லவன்.
தர்மன் கேள்வியாக தலை குனிந்து அமர்ந்து இருப்பவளை பார்த்தார். அவள் தலை நிமிராமல் போக தன் காலால் அவளது காலை நசுக்கி எடுத்தான். அதில் இன்னும் வலி எடுக்க விம்மல் வெடிக்கப் பார்த்த உதடுகளை அழுத்திப் பிடித்து நிமிர்ந்து தன் எதிரில் இருந்த அந்த வயதானவரை பார்த்து சிரித்தாள்.
அவளது சிரிப்பில் இருந்த போலியை கண்டு பல்லைக் கடித்த ராசசிங்கன்,
“ஒழுங்கா காதலி போல ஆக்ட் பண்ணுடி” என்று அவளின் காதோரம் சரிந்து சொன்னான்.
அவனை நிமிர்ந்துப் பார்க்காமல், மேசை மீது இருந்த அவனின் முரட்டு கையின் மேல் தன் மெல்லிய கையை வைத்து பற்றிக் கொண்டவள்,
“ஆமாங்க சார்... நானும் ஐவரும் ரொம்ப நாளா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். இப்ப கூட இங்க எங்க எஸ்டேட்ல தான் ஒண்ணா தங்கி இருக்கிறோம்” என்று உள்ளுக்குள் மறுகிக் கொண்டே சொன்னாள்.
திருமணத்துக்கு முன்னாடி ஒரு ஆணுடன் தனித்து தங்கி இருப்பதை எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல கூசுவாள். இங்கே ஏந்திழையாளும் உள்ளுக்குள் கூசிக் கொண்டே அந்த சொற்களை சொன்னாள். திரும்பி ராசசிங்கன் அவளை ஒரு பார்வை பார்த்தான். அவனின் காதோடு எம்பி,
“இந்த ஹின்ட் உங்க பிசினேஸ்க்கு இன்னும் ஹெல்ப்பா இருக்கும் இல்லையா? அது தான் முன்கூட்டியே சொல்லிட்டேன். இங்க மட்டும் இல்ல இன்னும் எத்தனை மீடியாவுக்கு சொல்லணுமோ அத்தனை மீடியாவுக்கும் சொல்லிடுங்க” என்று குரல் கமற சொல்லி விட்டு தர்மனை பார்த்து போலியாக புன்னகைத்தாள்.
“தேவைப்பட்டா அதையும் செய்வேன். அதுக்கு உன்னோட பெர்மிஷன் எனக்கு தேவையே இல்லை” என்று புன்னகை மன்னனாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கர்ஜித்தான்.
இருவரும் காதோடு குசுகுசுவென்று பேசுவதை பார்த்த அவருக்கு நிறைவான புன்னகை ததும்பியது.
“சோ நீங்க கூடிய சீக்கிரம் வேல் க்ரூப்ஸோட மருமகன் இல்லையா?” என்று கேட்டார் அவர்..
“அதை இப்படியும் சொல்லலாம் வேல் க்ரூப்ஸோட ஒன் ஆப் த ஷேர் ஹோல்டர் மிஸ்டர் ராசசிங்கன்” என்று இறுமாப்புடன் சொன்னான்.
“ரைட்...” என்று சிரித்த தர்மன், “கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் மணக் கோலத்துல பார்க்கலாம்” என்று சொன்னவர்,
“அப்போ பேப்பர்ஸ்ல எல்லாம் சைன் பண்ணிடலாமா மிஸ்டர் சிங்கன்” என்று கேட்டார்.
“யா அப்கோர்ஸ்” என்று திரும்பி கதிரை பார்த்தான்.
அவனுக்கு வாயில் ஈ போகாதது ஒன்று தான் குறை. அந்த அளவுக்கு வாயை பிளந்து நின்று இருந்தான் அவன்.
“டேய்” என்று ஒரு அதட்டல் போட,
“எஸ் பாஸ்” என்று சொல்லி எடுத்து வந்த அத்தனை பேப்பர்சையும் மேசை மீது வைத்தான். கூடவே ரெஜிஸ்டர் ஆபிசரையும் அழைத்து வந்து இருந்ததால் அன்றே அந்த டீ பேக்டரி மொத்தமும் ராசசிங்கனின் கை வசம் ஆனது.
“சூப்பர் பாஸ்... நினைச்சதை நிறைவேத்தீட்டீங்க..” என்று மனம் நிறைந்த உவகையுடன் கதிர் அவனுக்கு கையை நீட்ட, அவனது கையை பற்றி குலுக்கியவன்,
“ராசசிங்கனாச்சே...” என்று ஏந்திழையாளை நக்கலாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையில் அவன் நினைச்சதை அடைய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என்கிற குறிப்பு இருக்க இவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல், “மேற்கண்ட பார்மாலிட்டிசை எல்லாம் பார்த்துக்க” என்று விட்டு ஏந்திழையாளிடம் விரல் அசைத்து விட்டு முன்னாடி செல்ல இவள் பதுமையாக அவனின் பின் சென்றாள்.
காரில் ஏறிய அடுத்த நிமிடம் சிங்கனிடம் எரிமலையாய் வெடித்தாள் ஏந்திழையாள்.
“ச்சே உங்களை மாதிரி சுயநலம் பிடித்த மனிதனை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு நான் என்ன பண்ணினேன். ஏன் என் வாழ்க்கையில இப்படி விளையாடுறீங்க... என்னை தயவு செய்து விட்டுடுங்க...” என்று வெடித்தவள்,
“இந்த கருமத்துக்கு தான் காலையிலையே இதெல்லாம் வாங்கி குடுத்தீங்களா?” என்று தன் கழுத்தில் உள்ள வைர நெக்லசை கழட்டி அவன் மீதே விட்டு எறிந்தாள்.
“ஏன் நீ என்ன நினச்ச? உன் அழகுல மயங்கி வாங்கி குடுத்தேன்னு நினைச்சியா?” என்று எள்ளலாக கேட்டான்.
அவன் அப்படி கேட்கவும் சுருக்கென்று ஆனது. அவள் அப்படி நினைக்கவில்லை என்றாலும் கிட்டத்தட்ட அப்படி தானே எண்ணினாள். தன்னை குறித்து தானே அசிங்கமாக உணர்ந்தாள் அந்த நொடியில்.
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அவமானப் பட்டாலும் ஏன் இப்படி தாயை கண்ட குழந்தையாய் அவனிடம் என் மனது ஓடுகிறது என்று மாய்ந்துப் போனாள்.
அதன் பிறகு அவனிடம் அவள் ஒரு சொல் கூட பேசவில்லை. வீடு வரவும் காரை விட்டு வேகமாய் உள்ளே ஓடிப் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.
படுக்கையில் விழுந்து குமுறி குமுறி அழுதாள். ஏன் அழுகிறாள், எதற்கு அழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கண்கள் சிவக்க, முகம் சிவக்க அழுது தீர்த்தாள்.
என்னவோ எதையோ எண்ணிவளுக்கு ஏமாற்றம் தான் விஞ்சி நின்றது போல ஒரு தோற்றம். தன்னையே நொந்துக் கொண்டவளுக்கு மனம் ஆறவே இல்லை.
இந்த சித்திரவதை எப்பொழுது தீரும் என கதறினாள். ஏன் தான் இவன் கண்ணில் நான் பட்டேனோ என்று மறுகிப் போனாள்.





