இதமான நடைபயணம்... இது நாள் வரை அவள் மட்டுமே பயணித்த சாலையில் இன்று அவனோடு ஒரு நடை... அவனை பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை என்றாலும் இரு இதம் தோன்றியது அந்த நிமிடத்தில். அவளின் பார்வை மிக ரகசியமாக அவனின் மீது படிந்தது.
ஒரு நேரம் வெயில் காலத்தில் சுடும் கதிரவனாய் தெரிகிறான். ஒரு நேரம் குளிருக்கு ஏற்றார் போல அனலாய் சுடுகிறான். ஆக மொத்தம் அவன் ஒரே மாதிரி தான் இருக்கிறான். இவளுக்கு தான் பருவக் காலங்களாய் மனம் மாறிக் கொண்டே இருக்கிறது போலும். அதனாலே அவன் மீதான எண்ணம் துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது..
ராசசிங்கன் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவே இல்லை. அவன் அவனது போக்கிலே இருந்தான். ‘நான் சுடுபவன். எண்ணில் எதையும் தேடாதே.. நான் நானாக மட்டுமே...’ என்கிற நிலைபாடு கொண்டு உள்ளான்.
ஏந்திழையாள் எங்கோ பார்ப்பது போல அவனை பார்த்தாள். நேற்றிரவு தன்னில் சிறு மழலையாய் தஞ்சம் கொண்ட ஆண்மகனை விழிகளில் நிறுத்திப் பார்த்தாள். அவளின் பார்வையில் இருந்த மாறுபாட்டை அவளே உணர்ந்துக் கொண்டாள்.
பெருமூச்சு விட்டாள். இந்த மாற்றம் வேணாமே என்று அவளின் உள்மனமே அவளிடம் கெஞ்சியது. ஆனால் அவளது கண்கள் தஞ்சம் கொண்டதோ அவனிடம் மட்டுமே..
“நீங்க ஏன் என்னை விபச்சாரின்னு சொன்னீங்க?” பெருத்த அமைதியை கிழித்துக் கொண்டு பெண்ணவள் கேட்டாள். ஒரு நிமிடம் அமைதியை தொடர்ந்தவன்,
“என்னை உன் வீட்டு ஆளுங்க சொன்னாங்க. சோ நான் பதிலுக்கு சொன்னேன்” என்றான் விளக்கமாய். அவளுடன் பேச பிடிக்கவில்லை தான். ஆனால் அவனுக்கு அவளால் ஒரு காரியம் ஆக வேண்டி இருந்தது. அதனாலே அவளுடன் இயல்பாக போக முடிவெடுத்தான் ராசசிங்கன்.
“ஓ...! இல்லன்னா என்னை பார்த்து அந்த சொல் சொல்லி இருக்க மாட்டீங்களா?” என்று சற்று ஆர்வமுடன் கேட்டாள்.
“உறுதியா சொல்லி இருக்க மாட்டேன்” என்றான் அழுத்தமாய். அந்த நொடியில் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி குமிழ் தோன்றியது.
“நம்ம சந்திப்பு நல்ல விதமாகவே இருந்து இருக்கலாம் இல்ல...” என்று ஒரு எதிர்பார்ப்புடன் சொன்னாள். புருவம் சுறுங்க அவளை குனிந்துப் பார்த்தான். அவளும் அவனது முகத்தை தான் அண்ணாந்துப் பார்த்தாள்.
“ம்ம்” என்று மட்டும் சொன்னவன் அவளின் கையை விடவே இல்லை. அவனது முரட்டு கையோடு பின்னி இருந்த அவளின் கையில் மெல்லிய குறுகுறுப்பு ஓடியது.
அதன் பிறகு இருவரும் ஒரு சொல் கூட பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால் ஏந்திழையாளின் உள்ளம் மட்டும் அதிகமாக அவனுடன் பேசி மகிழ பேராசைக் கொண்டது. அது சாத்தியமில்லை என்பதால் தன் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாகிப் போனாள்.
நெடுந்தூரம் நடந்த பிறகு “திரும்பலாம்” என்றான் சிங்கன்.
“ம்ம்ம்” என்றவளுக்கு இன்னும் கொஞ்ச தூரம் இந்த பயணம் நீள வேண்டும் போல இருந்தது. அதை வெளிப்படையாக சொல்ல தோன்றாமல் அவனுடன் திரும்பி நடந்தாள்.
வீடு வந்த பிறகு ஏனோ அந்த ஏகாந்த நிலை மாறாதது போலவே உணர்ந்தாள். அவனுக்கு அவளே உணவு பரிமாற நிமிர்ந்து ஒரு பார்வை மட்டுமே பார்த்தான்.
“நீங்க தானே எல்லா வேலையையும் பழகிக்க சொன்னீங்க அது தான்” என்று விளக்கம் சொன்னவள் அவனுக்கு பரிமாறி விட்டு தானும் அவனுடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.
சிங்கன் எதையும் கண்டுக் கொள்ளவே இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருக்க ஆரம்பித்தான். இரவு எப்பொழுதும் போல அவளின் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அதற்கு முன்பு கதிரிடம் இருந்து போன் கால் வர,
“கொக்கின் வேணுமா சார்?” என்று கேட்டான்.
“நோ நீட்” என்று சொன்னவன்,
“நாளைக்கு அந்த டீ பேக்டரி டீலை பேசி முடிடா” என்றான்.
“சார் அந்த ஆளு உங்களுக்கு குடுக்க மாட்டானாம்” என்றான் கதிர்.
“ஏனாம்?” என்று இவன் குரல் உயர்த்த,
“அது” என்று அவன் பெரிதும் தடுமாறினான்.
“டேய் என்னன்னு முழுதா சொல்லு.. மென்னு முழுங்காத” பல்லைக் கடித்தான். அவனது கோவமான பேச்சில் போனை அலைபேசியை நொண்டிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.
கதிர் அந்த பக்கம் என்ன சொன்னானோ பட்டென்று சிரித்து விட்டான். “இது தானா... இதுக்கா இவ்வளவு பில்டப் குடுத்த நீ” என்று கதிரை முறைத்தவன்,
“நாளைக்கு மீட்டிங் ஏற்பாடு பண்ணிடு.. மத்ததை நான் பார்த்துக்குறேன். நாளைக்கு பேக்டரி பேப்பர்ஸ் என் கையில இருக்கணும் காட்டிட்” என்று முழங்க,
“சரிங்க சார்” என்று ஒப்புதல் கொடுத்தவனுக்கு ஒன்னும் புரியவில்லை.
“பாரம்பரியமான குடும்பம் கொண்டவர்களுக்கு தான் இந்த பேக்டரியை குடுப்பேன்னு சொன்னார் அந்த ஆளு. ஆனா நம்ம பாஸ்க்கு தான் அப்படி எந்த பின்னணியும் இல்லையே.. பிறகு எப்படி பேப்பர்ஸ் நம்ம கைக்கு வரும். ஒரு வேலை எப்பொழுதும் போல படியாத ஆட்களின் மீது கை நீட்டிடுவாரே அது போல இந்த ஆளையும் அடி வெளுத்து விடுவாரோ” என்று இவன் யோசிக்க,
“போனை கட் பண்ணிட்டு யோசிடா பரதேசி” என்று சிங்கன் கர்ஜிக்க, பதறியடித்துக் கொண்டு பேசியை கட் பண்ணி தூரத் தூக்கிப் போட்டான் கதிர்.
“இங்க நாம எதுக்கு வந்தோம்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று பத்திரகாளியாக மாறி இருந்தாள் கதிரின் மனைவி.
“அது இல்ல செல்லம்” என்று அவளை சமாதனம் செய்ய ஆரம்பிக்க, பட்டென்று அவனது கையை தட்டி விட்டாள்.
“பெருசா ஊட்டிக்கு கூட்டிட்டு போறேன். நாம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு சொல்லிட்டு நீங்க என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்க தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் கேட்டவளின் விழிகளில் நீர் நிறைந்துப் போனது.
“அது இல்ல செல்லம் பாஸ் தான்” என்று அவன் இழுக்க,
“பொழுதுக்கும் பாஸ் தானா? பிறகு என்னை எதுக்கு கட்டிக்கிட்டீங்க. உங்க பாஸையே கட்டிக் வேண்டியது தானே.. உனக்கு எதுக்கு கல்யாணம் குடும்பம்” என்று எகிறிக் கொண்டு வந்தாள். இவளிடம் பேசி ஆகாது என்று அறிந்தவன் விளக்கை அனைத்து விட்டு அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது தாவி படர்ந்துக் கொண்டான் கதிர்.
படுக்கையில் அவளை கொண்டாட ஆரம்பிக்க அமைதியாகிப் போனாள்.
இங்கே ஏந்திழையாள் வந்து படுக்க அவள் மீது ராசசிங்கன் வந்து படுத்துக் கொண்டான்.
“மூச்சு முட்டுது” என்றாள் கொஞ்சம் பிகுவாக.
“பழகிக்க” என்று மட்டும் சொன்னவன் அவள் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு படுத்து விட்டான். அசந்து தூங்கினான். அடுத்த நாள் காலையில் எழுந்தவளிடம் “ஒரு இடத்துக்கு போகணும் கிளம்பு” என்றவன் குளித்து உணவு உண்டு கிளம்பினான்.
எங்க எதுக்குன்னு தெரியாம அவளும் கிளம்பி வந்தாள். அவனது காரில் இருவரும் கிளம்பி சென்றார்கள். அவர்கள் அந்த பக்கம் நகர்ந்த உடன் வீட்டு தலைமை வேலையாள் தாத்தா வேல்முருகனுக்கு போன் போட்டான்.
“அய்யா” என்று அவர் ஆரம்பித்து இங்கு நடப்பதை எல்லாம் ஒன்று விடாமல் சொல்ல,
“ம்ம்ம்” என்று மட்டும் கேட்டுக் கொண்டார்.
“பேத்தியை கூட்டிட்டு போயிடுங்க அய்யா” என்று அவர் சொல்ல,
“எனக்கு தெரியும் நீ உன் வேலையை பாரு. நான் சொன்னது” என்று அதட்ட,
“என் உயிர் போனாலும் வேற யார்க்கிட்டயும் இதை எல்லாம் சொல்ல மாட்டேன் அய்யா” என்று பவ்யமாக சொன்னார் அவர்.
“ம்ம்ம்” என்று அதட்டி விட்டு வைத்து விட்டார். தங்க முலாம் போட்ட கண்ணாடியை கழட்டி கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டவர் தன் தனிப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து எல்லோருடனும் வந்து அமர்ந்துக் கொண்டார்.
Oh இப்ப இவளோட போன.....இவங்க வீட்டு மருமகன் அப்படின்னு பேரு ஆகிடும்.....அப்படியே இவனும் அந்த சொத்தை வாங்கிக்கலாம்.....
What a mind......
Ivanuku family venuma? ila property venuma? Onumey puriyamatinguthey🤔🤔





