“நான் தொலைத்த நாட்கள் எல்லாம்
மறுபடியும் மலருமா?
எந்தன் உள்ளம் ஏங்குதே...
சொன்ன சோகம் கொஞ்சமே...
இந்த பாரம் போதுமே
வலிகள் கூடுதே...” என்று பாடல் ஒலிக்க அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான் ராசசிங்கன்.
ஏந்திழையாள் தான் அலைபேசியில் அந்த பாடலை தேடி கண்டு பிடித்து முழுமையாக கேட்டுக் கொண்டு இருந்தாள். அதை பார்த்தவுடன் ராசசிங்கனுக்கு கட்டுக் கடங்காமல் கோவம் வர பொலிறென்று அவளின் கன்னத்திலே அடித்தான். அதில் விக்கித்துப் போனவள் அதிர்ந்து விழிகள் கலங்க ஒரு கையால் கன்னத்தை பொத்திக் கொண்டு அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
“இது தான் கடைசி வார்னிங். இன்னொரு முறை என் முன்னாடி இந்த பாட்டை ப்ளே பண்ணுன தொலைச்சிடுவேன்” என்று கர்ஜித்தவன் எழுந்து போய் விட்டான்.
அதன் பிறகு அன்றைய நாள் முழுவதும் அவன் வீட்டுக்கே வரவில்லை. நிம்மதியாக இருந்தாலும் ஒரு பக்கம் ஏனோ அவளின் நெஞ்சு அவனை தேடியது.
வாசலை வாசலை பார்த்தாள். ம்ஹும் அவன் வரவே இல்லை. அவனது எண்ணுக்கு மிக தயக்கத்துடன் போன் பண்ணினாள். ரிங் போனதே தவிர அந்த பக்கம் யாரும் எடுக்க காணோம். பெருமூச்சு விட்டுட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். இரவு பொழுது வந்தாலும் அவன் மட்டும் வரவில்லை. அவனுக்காக காத்து இருந்தவள் அவன் வராமல் போக போர்வையை போத்திக் கொண்டு படுத்து விட்டாள். நல்ல தூக்கம்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்தாள்.
“ஹலோ மேடம்” என்று கதிரின் குரல் கேட்க,
“ம்ம்ம்” என்றாள். இவளுக்கு அவன் மீது கோவம். அதனால் அவனிடம் அவளால் இயல்பாக பேச முடியவில்லை.
“மேடம் கொஞ்சம் எமெர்ஜென்சி இங்க வர முடியுமா?” என்று கேட்டான்.
“நான் ஏன் வரணும்? யார் நீ?” என்று கேட்டாள் அடக்கப்பட்ட சினத்துடன். பின்ன அவளின் அண்ணன்களையே தூக்கப் பார்த்தானே சும்மாவா விடுவாள். அதை அப்படியே அவளின் பேச்சில் வெளிப்படுத்தினாள் ஏந்திழையாள்.
“மேடம் ப்ளீஸ் ரொம்ப எமர்ஜென்சி நீங்க வந்தா மட்டும் தான் கண்ட்ரோல் பண்ண முடியும்” என்று அவன் கலங்கும் குரலில் சொல்ல புருவம் சுறுக்கினாள்.
“அப்படி என்ன எமெர்ஜென்சி” என்று தன் கோவத்தை தள்ளி வைத்து விட்டு நிதானமாக கேட்டாள்.
கதிர் சொல்ல சொல்ல இவளுக்கு யாரோ நெஞ்சை போட்டு பிசைவது போல இருக்க,
“அட்ரெஸ்” என்றாள்.
“வாட்சப் பண்றேன் மேடம்” என்று அவளுக்கு முகவரியை அனுப்பி வைத்தான்.
கார் சாவியை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பி விட்டாள். இவளது எஸ்டேட்டை விட்டு மூன்று எஸ்டேட் தள்ளி தான் இருந்தது அந்த எஸ்டேட்..
ஆனாலும் அரைமணி நேரம் போக வேண்டி இருந்தது.
எஸ்டேட் உள்ளே நுழைந்து வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு வேகமாய் அந்த உள்ளே நுழைந்தாள். கதிர் வாசலிலே நின்று இருந்தான் தவிப்புடன்.
“மேடம் சார் ரொம்ப மோசமா இருக்காரு... ரொம்ப ட்ரக்ஸ் எடுத்து இருக்காரு. அதுவே அதிகம் தான். ஆனா தூக்கம் வரல இன்னும் வேணும்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைச்சுட்டு இருக்காரு... எப்பவும் இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாங்க. ஆனா இன்னைக்கு ரொம்ப அதிகமா ரியாக்ட் ஆகுறாரு.. கீர்த்தி மேடமும் இதுக்கு மேல டோஸ் குடுக்க முடியாது. அப்படி குடுத்தா இவரோட உயிருக்கு உத்திரவாதம் இல்லன்னு சொல்லிட்டு போயிட்டாங்க மேடம்” என்று கண்கள் கலங்க சொன்னான்.
“இதை எதுக்கு என்கிட்டே சொல்ற.. நல்ல டாக்டரா பார்த்து உன் பாஸை காட்டு. சீக்கிரம் தெளியும்” என்று பட்டென்று ஏந்திழையாள் சொல்ல, கதிர் அதிர்ந்துப் போனாள்.
“மேடம்” என்று அவன் நிர்கதியாய் நின்றான்.
“என்னை என்ன பாடு எல்லாம் படுத்தி வச்சாரு... இப்போ அனுபவிக்கட்டும்” என்று வாசலில் வந்து நின்ற ராசசிங்கனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் காரில் ஏறி வெளியே போய் விட்டாள்.
“நான் தான் சொன்னேன்ல டா... அவ எனக்காக வரமாட்டான்னு” என்று நிலை இல்லாமல் அவன் கீழே சரிய ஓடி வந்து தாங்கிக் கொண்டான் கதிர்.
“பாஸ்” என்று அவன் கலங்க,
“ப்ச் விடுடா” என்று அவனது கையை தட்டி விட்டு தட்டு தடுமாறி உள்ளேப் போனவன் மீண்டும் கால்கள் தடுமாற விழுந்து விட்டான் கீழே.
அவனை தூக்க வந்த கதிரை தடுத்து விட்டு,
“ஐ ஆம் ஸ்டெடி.. டோன்ட் டச்” என்று கட்டளையாக சொல்லி விட்டு எழ முயன்றான் ராசசிங்கன். ஆனால் அவனால் முடியவில்லை.
அப்பொழுது மென் விரல்கள் அவனது கையை பிடிக்க நிமிர்ந்து பார்த்தான். கண்கள் எல்லாம் போதையில் கலங்கி இருந்தது. ஆனாலும் அவளின் வாசத்தை உணர்ந்துக் கொண்டவன்,
“நீ தான் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனியே பிறகு எதுக்குடி வந்த?” என்று அழுத்தமாக படுத்துக் கொண்டே கேட்டான்.
“தெரியாம வந்துட்டேன். இனி வரமாட்டேன்” என்று சொல்லியவள் கதிரை ஒரு பார்வை பார்க்க, அவன் இன்னொரு புறம் வந்து பிடித்துக் கொண்டான்.
“என்னை எதுக்கு பிடிக்கிறீங்க... லீவ் மீ. அண்ட் டோன்ட் டச்” என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல் அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே கீழே காலை வைக்க முடியாமல் அத்தனை பொருட்களும் உடைந்து சிதறிப் போய் இருந்தது.
திரும்பி கதிரை பார்த்தாள்.
“வேற ரூம் போகலாம் மேடம்” என்றான்.
பெருமூச்சு விட்டவள் வேறு ஒரு அறையில் அவனை படுக்க வைத்து விட்டு விலக பார்க்க அவளின் முந்தானையை இறுகப் பற்றிக் கொண்டான். கதிர் தலையை நிமிர்த்தாமல் வெளியே போய் விட்டான்.
“ப்ச் என்ன இது” என்று கேட்டுக் கொண்டே அவனிடம் இருந்து சேலையை விலக்கிக் கொள்ளப் பார்க்க, அவன் விடவே இல்லை.
“ஐ வான்ட் டர்க்ஸ்” என்றான்.
“என்கிட்டே கேட்டா அதுக்கு நான் எங்க போறது...” முணுமுணுத்தவள், அவனுக்கு அருகில் அமர்ந்து தவித்துக் கொண்டு இருக்கும் அவனை தனியே விட மனமில்லாமல் அவனது தலையை கோதி விட்டாள்.
“ப்ச்” என்று அவளின் கையை தட்டி விட்டான்.
“ட்ரக்ஸ்” என்று அவளிடம் கையை நீட்டினான். ஏனோ சிறு பிள்ளை மிட்டாய்க்கு கை நீட்டுவது போல இருக்க கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
அவனை அப்படியே அள்ளி எடுத்து மார்பில் போட்டுக் கொள்ள எண்ணம் வர தன் எண்ணத்தை எண்ணி விதிர் விதிர்த்துப் போனாள்.
“உன்கிட்ட டர்க்ஸ் இருக்கு” என்று ராசசிங்கன் சொல்ல, “என்கிட்டே ஏது.. என்கிட்டே எதுவும் இல்லையே” என்று அவள் விழிக்க,
“இது தான்” என்று சொல்லி அவளின் மார்பை காட்ட அதிர்ந்துப் போனாள்.
“வாட்?” என்று அவள் அதிர,
“ம்ம்ம்” என்று அவளை அப்படியே படுக்கையில் தள்ளி அவள் மீது ஜம்மென்று படுத்துக் கொண்டான். அவளின் புடவையை விலக்கி அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவன் “உன் வாசம் நூறு கொக்கினுக்கு சமம்டி” என்று மூச்சை இழுத்து பிடித்துக் தனக்குள் சில நொடிகளை வைத்துக் கொண்டு பிறகு வெளி விட்டான்.. அப்படியே சில முறை செய்தவன் அதன் பிறகு தூங்கிப் போனான்.





