நெருப்பு அதிகமாக இருக்க போர்த்தி இருந்த சால்வையை எடுத்து விட்டாள் ஏந்திழையாள். அவளின் வனப்பு இப்பொழுது முற்றிலும் தெரிய விழிகளால் அவளை தொட்டுக் கொண்டே ராசசிங்கன் மதுவை விரும்பி அருந்தினான்.
அந்த அங்கிள் கித்தார் வாசிக்க அந்த ஆன்டி மென்மையான குரலில் ஆங்கில பாடலை பாட ஆரம்பித்தார். இருவரும் அதை இரசித்துப் பார்த்தார்கள்.
“யுவர் டேர்ன்” என்று இவர்கள் இருவரையும் நோக்கி அவர்கள் சொல்ல,
“நீங்க முதல்ல ஆரம்பிங்க” என்று ராசசிங்கனிடம் சொன்னாள்.
“இல்ல முதல்ல நீ. பிறகு நான்” என்றான் அவன் அழுத்தமாக. அதற்கு மேல் அவனை கோவப்படுத்தாமல் தானே தொடங்கினாள்.
“கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங் கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும் போது
வர்மன் போதைக் கொள்ள
முடியா ஓவியமும் நீ...”
என்ற பாடலை ஏந்திழையாள் பாட ராசசிங்கனை தவிர மற்ற இருவரும் கை தட்டினார்கள்.
“அது நீ தானே எங் கேர்ள்” என்று ஏந்திழையாளை காட்டி அங்கிள் சிரிக்க,
“ஓ...! அப்போ நான் இல்லையா?” குறும்பாக ஆன்டி கேட்க,
“நீ தான்டி செல்லாம்... சும்மா ஏந்திழையாள் மனசு கட்டல்(கஷ்ட்ட)ப்படக் கூடாதுன்னு சொன்னேன்” என்று அவர் மனைவியை சமாதனம் செய்ய, ஆன்டி வாய் விட்டு சிரித்தார்.
“காலேஜ் படிக்கும் பொழுது இப்படி தான் என் பிரெண்டை என் முன்னாடியே பாராட்டி என்கிட்டே திட்டு வாங்குவார். நான் இல்லதப்ப செய்து அவளை உசார் பண்ண தெரியாம மாட்டிக்குவார்” என்று சிரித்தார் அவர் மேலும்.
“ஏன் அங்கிள்.. ஆன்டியே இவ்வளவு சுதந்திரம் தரும் பொழுது நீங்க ஏன் அதை யூஸ் பண்ண மாட்டேன்றீங்க?” ஏந்திழையாள் கேட்டாள்.
“அவ சுதந்திரம் குடுக்கிறான்றதுக்காக நான் அதை தவறா அப்யூஸ் பண்ண கூடாது இல்லையா ஏந்திழையாள்?” என்று கேட்ட அங்கிளை வியந்துப் பார்த்தாள்.
“எங்க விழுந்தேன்னு இப்போ புரிஞ்சதா இழை?” என்று கேட்டு ஆன்டி சிரித்தார். இருவரையும் மனம் மகிழ பார்த்தாள்.
“ரெண்டு பேருடைய காதலும் சோ சிம்ப்ளி லவ். அண்டு வெரி பவர்புல் பாண்டிங்” என்று பாராட்டினாள்.
அவளின் பாராட்டுதலை அப்படியே ஏற்றுக் கொண்டவார்கள்.
“அதனால தான் எவ்வளவோ எதிர்ப்பு வந்தாலும் நாங்க கோர்த்து இருந்த கையை விடவே இல்லை இழை...” என்று கண்ணீர் மல்க ஆன்டி சொல்ல,
அவரை தன் தோளோடு அணைத்துக் கொண்டவ அங்கிள்,
“எங்க காதலுக்கு ரெண்டு பேர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.. போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு கல்யாணம் செய்துக்கிட்டு வெளிநாடு போயிட்டோம். பிள்ளைகளை எல்லாம் அங்கேயே செட்டில் பண்ணிட்டு இங்க வந்தோம். யாரும் எதுக்கல... இந்த ஊட்டில தான் எங்க காதல் ஆரம்பிச்சது.. அதனால இங்கேயே ஏங்க கடைசி காலம் போகணும்னு நினைச்சு இங்கயே செட்டில் ஆகிட்டோம். வருடா வருடம் பசங்க வந்து பார்த்துட்டு போவாங்க” என்றார்.
என்னவோ மனமெல்லாம் அதிக பாரமாகிப் போனது போல இருந்தது. பெரிய மௌனம் ஆட்கொள்ள,
“ஹேய் சில்... நாங்க ரெண்டு பேரும் பயங்கர ஹேப்பியா தான் இருக்கோம். எங்களுக்கு நாங்க இருக்கும் பொழுது வேற என்ன வேணும் சொல்லு...” என்று சிரித்தார்.
“ஆமா இழை எத்தனை சொந்தம் வந்தாலும் கட்டிய கணவன் மாதிரி எந்த சொந்தமும் இருக்காது.. என்னோட சோல் இவரு... தினமும் ஒரு கப் காபியோட கூடவே ஒரு முத்தத்தோட தான் எங்கள் காலை பொழுது ஆரம்பிக்கும். அதே போல இரவு அவரின் கையை பிடித்து வாக் போயிட்டு அப்படியே அவரோட நெஞ்சு மேல தூக்கத்துல ஒரு நாள் முடியும். இதை விட வேற என்ன மகிழ்ச்சி இருந்திடப் போகுது...” என்று சொல்லி அவளை இயல்புக்கு கொண்டு வந்தார்கள்.
“ஓவர் ஓவர்” என்று அங்கிள் சொல்லி எல்லோரையும் இயல்புக்கு வர வைத்து விட்டு,
“இப்போ உங்க டேர்ன் மிஸ்டர் ராசசிங்கன்” என்று சொல்ல கித்தாரை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டவன் பெரிதாக இசைக்காமல் டியூன் ட்யூன் என்று கம்பிகளை தொட்டு தொட்டு விட்டவன் பின் மெல்ல தன் முன்னே எரியும் நெருப்பினை பார்த்துக் கொண்டே,
“நான் தொலைத்த நாட்கள் எல்லாம்
மறுபடியும் மலருமா?
எந்தன் உள்ளம் ஏங்குதே...
சொன்ன சோகம் கொஞ்சமே...
இந்த பாரம் போதுமே
வலிகள் கூடுதே...” என்று அவன் பாட விக்கித்துப் போனாள் ஏந்திழையாள்.
ஏனோ கண்களில் இருந்து கண்ணீர் தளும்பி வழிந்தது. அதை அவனுக்கு காட்டாமல் கழுத்தை வளைத்துக் கொண்டாள். முன்பு அவர்களின் காதலில் ஒரு மாதிரி மனதை அழுத்தியது என்றால், இப்பொழுது இவனின் இந்த இறுக்கமான பாடலில் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
அப்படி என்ன வலி... அப்படி என்ன சோகம்... என்ற கேள்வி அவளுள் முகிழ்க்க ராசசிங்கனின் முகத்தை பார்த்தாள்.
எரியும் நெருப்பில் அவனது முகம் கற்பாறை போல இறுகி இருந்ததே தவிர வேறு எந்த உணர்வும் அதில் பிரதிபலிக்கவே இல்லை. அவனது கண்களை கூர்ந்துப் பார்த்தாள். அதுவும் உணர்வுகளை தொலைத்து விட்டு தான் இருந்தது.
அதுவரை இருந்த சகஜமான மன நிலை எல்லோருக்கும் போய் விட்டது.
“சிங்கன்” என்று அங்கிள் அழைக்க,
“வரேன்” என்று கித்தாரை வைத்து விட்டு ராசசிங்கன் எழுந்துக் கொண்டான். அவனை பற்றி இவளும் எழுந்துக் கொண்டவள் வெறுமென தலையை மட்டும் அசைத்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு வந்தாள்.
ராசசிங்கன் அப்படியே போய் படுக்கையில் விழ இவளும் உடை மாற்றாமல் அப்படியே அவனுக்கு அருகில் போய் படுத்து விட்டாள். இன்று அவள் தனித்து படுத்து இருக்கலாம். ஆனால் அவளின் மனம் அவன் பாடிய பாடலில் இருந்த கனத்தில் தேங்கி விட அவனுடன் படுத்துக் கொண்டாள்.
ஏனோ அவனை தனித்து விட அவளால் முடியவில்லை. நேற்றைக்கு அந்த பெண் போதையை பற்றி சொன்னாலே என்று யோசிக்க திரும்பி அவனை பார்த்தாள்.
கண்களை மூடி நிதாட்சயமாக படுத்து இருந்தான். அவனது முகத்தில் எதுவுமே தென்படவில்லை. ஆனால் உடல் சிறிதாக அசைந்தது. அவனது விரல்கள் இறுக்கமாக மூடி இருந்தது.
எதையோ அடக்கும் நிலை அவனிடம் இருக்க உள்ளுக்குள் பயந்துப் போனாள். ஏன் எதற்கு என்று தெரிந்தால் ஏதாவது செய்யலாம். எதுவுமே தெரியாமல் எப்படி என்று இவள் தவித்துப் போனாள்.
இரவு உணவு கூட உண்ணவில்லை. அவனை நெருங்கவும் பயமாக இருந்தது அவளுக்கு. சிறிது நேரம் அப்படியே இருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.
அவன் தேடிய தேடல் அவளோ என்னவோ. அவளையும் அறியாமல் அவனை தன்னில் இழுத்துக் கொண்டாள். தலையை நிமிர்த்தி பெண்ணவளை பார்த்தான்.
“கண்ணை மூடி படுங்க” என்று கண்ணிலே சைகை செய்து சொல்ல அவன் தலையை கீழே போடவே இல்லை. அவளின் கண்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ப்ச் சொன்னா சொல் பேச்சு கேட்கணும்” என்று சொல்லி அவனின் தலையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு தூங்கினாள்.
அவளின் மார்பில் இருந்து வரும் வாசத்தில் தன்னை மறந்தவன் தன் உணர்வுகளை அவளிடம் கொட்டி கவிழ்க்க முனையாமல் அவளிடம் அப்படியே படுத்து இருந்தான். நேற்றைக்கும் அவளிடம் முன் விளையாட்டில் ஈடு பட்டாலும் வேறு எதுவும் செய்யாமல் அவளின் நெஞ்சில் படுத்துக் கொண்டு தூங்கிப் போனான்.
இன்று அது கூட இல்லாமல் வெறுமென படுத்துக் கொண்டான். அவனது செயலில் அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வர ஆரம்பித்தது மங்கையவளுக்கு. இதமாகவே இரவு பொழுது நகர்ந்தது... தூக்கத்தில் கூட அவளை விட்டு அவன் நகராமல் இருந்தான்.
அவன் என்ன பாட்டு பாடினான் என்று அந்த பாடலை தேடி எடுத்து அதிகாலை அவள் அந்த பாடலை ஒலிக்க விட கண்கள் இரத்தமென சிவக்க அவளை விட்டு எழுந்து அமர்ந்தவன் அவளின் கன்னத்திலே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான் இராசசிங்கன்.





