“சும்மா முழிக்காதடி... நான் என்ன செய்ய போறேன்னு உனக்கு தெரியும் தானே” என்று அவளின் கழுத்தோரம் இதழ் பதித்து கடித்து வைக்க வலி அவளுக்கு உயிர் போனது.
“ஏன் இப்படி என்னை சுத்தி வந்து சுத்தி வந்து டார்ச்சர் பண்றீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்?” என்று கண்களில் கண்ணீர் மின்ன கேட்டாள்.
“நிம்மதி தான் வேணும். தரியா?” என்று அவளின் கண்களை பார்த்துக் கொண்டே கேட்டவன் அவளின் ஒரு பக்க தோளில் உள்ள கயிறை இறக்கி விட பயந்துப் போனாள். அவன் கேட்டது அவளின் நெஞ்சில் கொஞ்சம் கூட பதியவே இல்லை.
அவன் செயல்கள் மட்டுமே அவள் நெஞ்சில் மிக ஆழமாக பதிந்துப் போனது. தன்னிடம் எல்லை மீறிக் கொண்டு இருப்பவனை தள்ளி விடப் பார்த்தும் முடியாமல் அவனின் தினவெடுத்த தோளிலே அடித்து வைத்தாள்.
ம்ஹும் அவன் அசையவே இல்லை... கடித்தும் வைத்தாள். ம்ஹும் அவனிடம் ஒரு மாற்றமும் இல்லை. கல்லு போலவே இருந்தான். இவளுக்கு தான் கையும் வாயும் வலித்தது.
“பொருக்கி விடுடா” என்று அவள் கதற அவன் அசையவே இல்லையே...
மிக மோசமாக அவளிடம் ராசசிங்கன் நடந்துக் கொள்ள ஒரு கட்டத்துக்கு மேல் அவளிடம் சக்தி இல்லை. அப்படியே அவள் தளர்ந்துப் போக ராசசிங்கனின் முகத்தில் கர்வ புன்னகை உதித்தது.
“ப்ளீஸ்” என்று முணகியவளின் முனகல்களில் கண்ணீர் தளும்பி வழிந்தது அவளது கடை கண்ணோரம். அதை தன் இதழ்களால் இரசித்து ருசித்தவன் “பெயினா இருக்கா?” என்று கேட்டான்.
அவள் உடையை கலைக்கவில்லை. ஆனால் அவளின் உடைக்கு மேலே அவன் செய்து வைத்த செயல்களை எல்லாம் ஏட்டில் எழுத முடியாத அளவுக்கு இருந்தது.
“கருணை காட்டுறீங்களா?” வெடுக்கென்று கேட்டாள். குரலில் அழுகை முட்டிக் கொண்டு இருந்தது.
அவளின் அழுத முகத்தை இடை விடாமல் பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ அவளை விட்டு விலகி படுத்துக் கொண்டான். அதற்காகவே காத்துக் கொண்டு இருந்தவளாய் வேகமாய் மாற்று உடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“புடவை” என்று மட்டும் அவன் ஹிண்ட் கொடுக்க ஆத்திரத்தில் அவனது தலையில் கல்லை போட்டு கொன்றுவிடலாம் என்று எண்ணினாள்.
ஆனால் அதை செய்ய இயலாதே என்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள் அவன் சொன்ன படியே புடவையை அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு இவன் விழிகளை திறந்துப் பார்க்க மெல்லிய சேரியில் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ் போட்டு அழகாக இருந்தாள்.
“எந்த உடை போட்டாலும் நல்லா தான்டி இருக்க” என்று கமென்ட் கொடுத்தான். அவள் முறைத்து விட்டு வெளியே போய் விட்டாள்.
குளிர் வாட்டி எடுக்க காபி ஆர் சூப் போட சொல்லி விட்டு சால்வையை எடுத்து பொத்திக் கொண்டு முன் கூடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
அறைக்கு உள்ளே போக பயமாக இருந்தது. அங்கு தான் கடோத்கஜன் இருக்கிறானே பிறகு எப்படி வாலண்டியராக அங்கே போவது... பெட்டர் இங்கேயே அமர்ந்து விடலாம் என்று எண்ணி இங்கேயே இருந்து விட்டாள்.
போனை எடுத்துப் பார்க்க ஏகப்பட்ட மிஸ்டு கால். யாரிடமும் பேச மனமில்லை. போனை வெறித்துப் பார்த்து விட்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
டிவியை போட்டு விட்டு அதில் லயித்து விட்டாள். சூடாக பானம் வர அதை அருந்தினாள். அவளின் அருகில் வெப்பம் படர நிமிர்ந்துப் பார்த்தாள். ராசசிங்கன் தான் வந்து அமர்ந்தான்.
பணிப்பெண்ணை ஒரு பார்வை பார்த்தாள். அடுத்த நொடியே அவனுக்கு சூப் வந்தது.
“ம்ம் விருந்தோம்பல் எல்லாம் பலாமா இருக்கு” என்று அவளையே கிண்டலடித்தான்.
“இங்க பாருங்க” என்று அவள் ஆரம்பிக்க,
“ஏய் இந்த அதிகாரம் செய்யிற வேலையெல்லாம் என்கிட்டே வேணாம். நான் ராசசிங்கன்டி” என்றான்.
“ப்ச் இந்த மனுஷன் கிட்ட பேச வந்தேன்ல என்னை தான் சொல்லணும்” என்று முனுமுனுத்துக் கொண்டவள் அதன் பிறகு அவனிடம் வாயை குடுக்கவே இல்லை.
சூப் குடித்து முடித்தவன், “கண்ணுக்கு அழகா புடவை கட்டிட்டு சால்வையை போர்த்தி இருக்க” என்று கேட்டுக் கொண்டே அவள் போர்த்தி இருந்த சால்வையை வெடுக்கென்று பிடுங்கினான்.
“அச்சோ குளிருது என்ன பண்றீங்க... குடுங்க” என்று அவனிடம் பிடுங்கப் பார்த்தாள்.
அவன் தன்னுடைய வெற்று மார்பை கட்டினான்.
இவள் திரும்பிக் கொண்டாள்.
“வேணாட்டி போடி” என்று விட்டு அவளின் தோளில் இவன் கையை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டான். நடு கூடத்தில் அவன் செய்த வேலையை கண்டு பதறிப் போனவள் வேலையாட்களை பார்த்தாள்.
அவர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று கண்கள் கலங்கியவளை ஆழ்ந்துப் பார்த்தாவன்,
“நீ தானே ரூமை விட்டு வெளில போன” என்று சொன்னான். அதில் விக்கித்துப் போனவள் வேகமாய் எழுந்து அறைக்குள் ஓடினாள்.
அவளை தொடர்ந்து இவனும் உள்ளே சென்று கதவை அழுத்தமாக மூடிக் கொண்டான். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கபடவே இல்லை.
மூடிய அறைக்குள் ஒரு போர்வையின் கூரையில் இருவரும் படுத்து இருந்தார்கள்.
அவளின் மார்பில் முகத்தை புதைத்து, இரு கையாளும் அவளின் இடையை வளைத்து பிடித்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் ராசசிங்கன். அவனை தள்ளி விடப் பார்த்தும் முடியாமல் தளர்ந்தவள் தானும் கண்களை மூடி தூங்கத் தொடங்கினாள்.
இருவரும் நன்றாக தூங்க ஆரம்பித்த பிறகு சிறிது நேரத்திலே ஏதோ சத்தம் கேட்க கண்களை முழித்துப் பார்த்தாள் ஏந்திழையாள். ராசசிங்கனின் போன் தான் அடித்தது.
இவனை உசுப்பி விட்டு பார்த்தாள். எழவே இல்லை. சரி நாமாவது எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தவள் பின் எடுத்து காதில் வைத்தாள்.
“ராஜா” என்று பெண் குரல் ஒன்று கேட்டது.
“நீ இன்னைக்கு ட்ரக்ஸ் எடுத்துக்கவே இல்லையே... எப்படி தூங்குவ” என்று அந்த குரலில் பதட்டம் தென்பட இங்கே இவளுக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது.
“இல்லங்க அவரு நல்லா தூங்குறாரு” என்றாள்.
“வாட்...?” என்று அந்த பக்கம் இருந்த பெண் அதிர்ந்துப் போனாள்.
“என்ன சொல்றீங்க...? உண்மையா தான் சொல்றீங்களா? ராஜா தூங்குறாரா? பொய் சொல்லாதீங்க” என்று அந்த பெண் மேலும் கேட்க,
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு. உண்மையாவே அவரு நல்லா தூங்கிட்டு இருக்காரு... நீங்க தான் தேவையில்லாம ட்ரக்ஸ் குடுத்து அவரை கெடுக்குறீங்க” என்று முறைத்து விட்டு ஏந்திழையாள் போனை வைத்து விட்டாள்.
“ம்ஹும் எல்லாம் செட்டு சேருதுங்க பாரு...” முணகியவள் அப்படியே ஒருக்கழித்து படுக்கப் பார்த்தாள். ஆனால் அவள் மீது இருந்த பாறாங்கல்லை நகர்த்த முடியாமல் நீட்டி நிமிர்ந்த வாக்கிலே படுத்து இருந்தாள். இவளுக்கு ஒரு பொட்டு கூட தூக்கமே வரவில்லை. கையில் இருந்த ராசசிங்கனின் போன் உறுத்த அதை எடுத்துப் பார்த்தாள்.
உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை. சில பல ஆப்கள் தான் இருந்தது. விளையாட ஒரு ஆப் கூட இல்லாததை கண்டு இவளே டவுன்லோட் செய்து விளையாட ஆரம்பித்தாள்.
இவ்வளவு உரிமை இவளுக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. தூக்கத்திலே அவளின் மார்பில் முகத்தை திருப்பி திருப்பி வைக்க துடித்துப் போனாள்.
“சரியான இம்சை” என்று நொந்துக் கொண்டவள் விளையாண்டுக் கொண்டே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் அவள் மீது இருந்து எழுந்தவன் அவளது கையில் தன் போனை பார்த்து கடுப்பானவன் காலையில் எழுந்தும் எழாததுமாக அவளை உலுக்கி எடுத்து விட்டான்.
“ஐயோ சாமி தெரியாத்தனமா எடுத்துட்டேன் ஆளை விடுங்க” என்று தெறித்து ஓடிவிட்டாள். அதன் பிறகு அவளை அவன் அருகிலே சேர்த்துக் கொள்ளவில்லை. மாலை மங்கிய உடன் அவளின் முந்தானை சேலையிலும் மாராப்பு சேலையிலும் சுருண்டுக் கொண்டான்.
இன்றைக்கு மழை அதிகம் இல்லாததால் அருகில் இருந்த எஸ்டேட் ஓனர் இவர்களை விருந்துக்கு அழைக்க இருவரும் கிளம்பி சென்றார்கள்.
இரவு முழுவதும் கவிழ்ந்து இருக்க, கேம்ப்பைர் பாரமாகி இருக்க ஒரு சின்ன மோடாவில் உயர்வகை மதுபானங்கள் நிரம்பி இருந்தது.
அவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க இங்கே இவர்கள் மட்டும் தானாம்.
அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள். முதலில் சிங்கன் வர மறுக்க,
“நீங்க சொல்றதுக்கு எல்லாம் தான் நான் கட்டுப்படுறேன் இல்ல... இந்த ஒன்னையாவது என்னை செய்ய விடுங்களேன். அவங்க பாவம். பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம தனியா இருக்காங்க... ஒரே ஒரு மணி நேரம் மட்டும் தான்...” என்று அவனின் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி அழைத்துக் கொண்டு போனாள் ஏந்திழையாள்.
ஆண்கள் இருவரும் ஸ்காட்ச் கிளாசை கையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருக்க பெண்கள் இருவரும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அவ்வபொழுது நெருப்பின் அனலை தொட்டு கன்னத்தில் வைத்துக் கொண்டார்கள்.
நெருப்பு அதிகமாக இருக்க போர்த்தி இருந்த சால்வையை எடுத்து விட்டாள் ஏந்திழையாள். அவளின் வனப்பு இப்பொழுது முற்றிலும் தெரிய விழிகளால் அவளை தொட்டுக் கொண்டே ராசசிங்கன் மதுவை விரும்பி அருந்தினான்.





