அவளிடம் ஒரு மௌனம்...
“ம்ம்ம்” என்று ராசசிங்கன் உறும,
அதில் உள்ளுக்குள் அமிழ்ந்து இருந்த கோவம் முகிழ்த்துக் கொண்டு வெடிக்க, “உங்களால தான்” என்றாள் பட்டென்று.
அவன் பார்வை அவள் மீது கூர்மையாக கோவமாக படிந்தது. விழிகளில் அனல் பறந்தது. அந்த சீற்றத்தில் தலையை குனிந்துக் கொண்டவளின் விழிகளில் ஈரம் கசிந்தது.
“உங்களால மட்டும் தான்” என்று பிசிறிய குரலுடன் சொன்னவள்,
“ஓரிரவு உங்க கூட இருந்ததுல வீட்டுல என்னை பெத்தவங்களே சந்தேகப் படுறாங்க... பெத்தவங்களே சந்தேகப் படும் பொழுது என்னால எப்படி அங்க இருக்க முடியும். அது தான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.
அவன் இதழ்கள் ஏளனமாக வளைந்தது. அதை பார்த்தவளுக்கு மனம் துணுக்குற்றது.
“அது தானே என் வலியை பற்றி புரிஞ்சா தான் நீங்க என்னை விட்டு இருந்து இருப்பீங்களே... போயும் போயும் உங்கக்கிட்ட சொன்னேன் பாருங்க என்னை சொல்லணும்..” என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன். ப்ளீஸ் இங்கயும் வந்து என்னை தொல்லை பண்ணாதீங்க...” என்றவளை கூர்ந்து பார்த்தவன்,
தன் போனை எடுத்து கதிருக்கு அழைத்தான்.
“பாஸ்..” என்று அவன் அந்த பக்கம் எடுக்க,
“யுகேஷ் ரொம்ப ஓவரா துல்லிட்டு இருக்கான்ல...” என்று இவளை பார்த்துக் கொண்டே அவனிடம் கேட்டான்.
“ஆமாம் பாஸ்.. நம்மோட கெமிக்கல் பேக்டரியை ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கான்” என்றான்.
“ம்ம்ம்” என்று இவன் சொல்ல,
“நம்ம வேலையை காண்பிக்கலமா பாஸ்” கதிர் துடிப்பாய் இருக்க கண்டு ஏந்திழையாளுக்கு பத்திக் கொண்டு வந்தது.
ராசசிங்கன் லவுட் ஸ்பீக்கர் போட்டு பேச தெளிவாக கேட்டது இவளுக்கு.
“நோ” என்று அலறினாள்.
“ப்ளீஸ் அண்ணனை ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“ரைட்” என்று சொன்னவன், கதிரிடம், “அந்த கார்த்திக்” என்று கேட்டான்.
“அவன் நம்ம புட் பேக்டரியை மூணு நாளுக்கு சீல் வைக்க பார்த்தான் பாஸ்” என்றான்.
“சோ நீ அவனை நம்ம கஸ்டடிக்கு எடுத்துடு. நான் வந்து என்ன ஏதுன்னு பார்க்கிறேன்” என்றான் சிங்கன்.
“அய்யோ ப்ளீஸ்... ஏன் இப்படி பண்றீங்க?” என்று படுக்கையை விட்டு எழுந்தவள் அவனிடம் ஓடி வந்தாள். ஓடி வரும் பொழுது அவளின் வனப்புகளை இரசித்துப் பார்த்தவனின் இதழ்களில் வன்ம புன்னகை எழுந்தது.
அவனது புன்னகையில் ஏந்திழையாளுக்கு அடி நெஞ்சு வரை பயம் அப்பிக் கொண்டது.





