Notifications
Clear all

அத்தியாயம் 37

 
Admin
(@ramya-devi)
Member Admin

தேனாண்டளுக்கு குப்பென்று வியர்த்தது. ‘என்னது இது முடிஞ்சி போச்சுன்னு தூக்கி ஏறக்கட்டுன விசயம் எல்லாம் ஒவ்வொன்னா மூட்டையை பிச்சுக்கிட்டு விழுற மாதிரி வந்து விழுது... என்ன தான் நடந்துக்கிட்டு இருக்கு இங்க... என் முன்னாடி நிக்க கூட தகுதி இல்லாதவல்லாம் எனக்கு நேரா நெஞ்சை நிமிர்த்தி என்கிட்டையே பேரம் பேசிட்டு இருக்கா’ என்று ஆத்திரத்தில் கண்கள் சிவந்துப் போனார்.

“இதுக்கு தான் மேடம் சொன்னேன்... ஒரேடியா எனக்கு ஐம்பது கோடி குடுத்துடுங்க. உங்களுக்கு சிரமமே இல்லாம வேலையை கச்சிதமா நான் செய்யிறேன். உங்க பேரு எங்கயும் அடிபடாம நான் பார்த்துக்குறேன். நீங்க வெளில இருந்து ஆளை ஏற்பாடு செய்யணும். ஆனா எனக்கு அந்த சிரமம் எல்லாம் எதுவும் இல்லை. வீட்டுலையே எதுல வேணாலும் விசம் கலந்துடலாம்.. யாருக்கும் எந்த சந்தேகமும் வராது” என்று கலா சொல்ல,

“ஆமாம்மா நமக்கு ஏன் தலைவலி... காசை விட்டெறிஞ்சா போதும். நமக்கு ஆக வேண்டியது வேலை மட்டும் தான். அதை யார் செஞ்சா என்ன?” என்ற லட்சுமியை யோசனையாக பார்த்தார் ஆண்டாளு.

“ம்ம்மா ரொம்ப யோசிக்காத... ஐம்பது கோடி தானே... குடுத்துடலாம். நமக்கு பிரச்சனை இல்லாம இருந்தா போதாதா?” சீதாவும் சொல்ல ஆண்டாளால் மறுக்க முடியவில்லை. “சரி... கணக்கச்சிதமா வேலையை முடிக்கணும். சொதப்பிடக் கூடாது” என்றார் அவர் எச்சரிக்கையாக.

“கவலையை விடுங்க. அதை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க அட்வான்ஸ் தொகையா முப்பது கோடியை முதல்ல குடுத்திடுங்க. பிறகு காரியம் முடிஞ்ச பிறகு இருபது கோடியை வாங்கிறோம்” என்றாள் சிவா.

கலா மற்றும் சிவாவின் முகத்தில் அவ்வளவு பேராசை தென்பட்டது. காசு பணம் துட்டு மணி மணி என்பது போல பணத்தாசை பிடித்து அலைந்தார்கள். வேறு வழியில்லாது அவர்களின் பேராசைக்கு ஒத்துப் போனார் தேனாண்டாள்.

“பிஏவை எடுத்துட்டு வர சொல்றேன்” என்று தேனாண்டாள் அவரின் பிஏவுக்கு போனை போட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வர சொன்னவரின் கண்கள் வராளியையும் அவளது பிள்ளையையும் தேடியது.

இருவரும் கண்ணில் அகப்படாமல் போக நெற்றி சுருக்கியவர், “எங்க உன் பொண்ணு... அவளோட பிள்ளையையும் காணோம்” என்று ஆண்டாளு கலாவிடம் கேட்க,

“இங்க தான் எங்கையாவது இருப்பா. இதைவிட்டு எங்க போயிருக்கப் போறா.. அது தான் நீங்க அடிச்சி வேற போட்டுட்டீங்களே இங்க தான் எங்காவது இழுத்துக்கிட்டு இருப்பா” சொல்லிக் கொண்டே எல்லா இடமும் தேடினார். சிவாவும் தேடினாள். ஆனால் எங்கும் அவள் இல்லாமல் போக ஐந்து பேரின் முகமும் ஆத்திரத்தில் சிவந்துப் போனது.

“நல்ல நேரம் கைக்குடுக்கும் பொழுது அதை பற்றிக்கலன்னா தரித்திரம் தான் வரும். இப்ப தான் அந்த நல்லநேரம் தோணி துவங்கி வருது. அதுக்குள்ள இவ இப்படி பண்றாளே...” என்று ஆத்திரத்தில் புலம்பிக் கொண்டே வராளியை அக்கம் பக்கம் வந்து தேட வீட்டின் எல்லா மூலையிலும் இண்டு இடுக்கு விடாமல் லட்சுமி சீதா சிவா மூவரும் தேடினார்கள்.

தேனாண்டாளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. “கைக்கு அருகில் இருந்தவளை அப்பவே என்ன ஏதுன்னு கேட்காம குரல்வளையை பிடித்து நசுக்கி போட்டு இருந்து இருக்கணும். இல்லன்னா அந்த நாயி இப்படி தப்பி ஓடி இருக்குமா? எதுக்காக வீட்டை விட்டு ஓடிப்போனா? குழந்தையை காப்பாத்தவா? இல்ல இதை சமூக வலைதளத்தில் போட்டு யாருக்கும் தெரியாமல் இருக்கும் ரகசியத்தை அம்பலப்படுத்தவா?” தாறுமாறாக யோசனை ஓடியது அவருக்கு. பாதுகாப்புக்கு இருக்கும் ஆட்களை ஏவிவிட்டார்.

“இந்த சுற்று வட்டாரத்தில் யார் கையிலயும் பிள்ளையோட இருந்தா தூக்கிட்டு வந்திடுங்கடா” என்று கட்டளை போட்டவருக்கு மனம்கொஞ்சம் கூட ஆறவே இல்லை. கையருகில் இருந்தவளை கை நழுவ விட்டுட்டனே என்று தன்னையே கடுப்படித்துக் கொண்டார்.

நேற்றிரிவு வீட்டில் இருந்த அனைவரையும் வரசொல்லி உதயாதிபன் பேசினான்.

“எனக்கு பொண்ணு பார்ப்பதை நிறுத்திடுங்க... இதுக்கு மேலையும் யாரும் எனக்காக அலைந்து திரிந்து பொண்ணு பார்க்க வேணாம். ஏற்கனவே செய்தி தாள் ஊடகம் என எல்லாத்திலும் முதல் கல்யாண போட்டோ வந்திடுச்சு. அதனால நான் அவளோடயே வாழ்ந்துக்குறேன்” என்று சொன்னான்.

“அதெப்படி முடியும்? அதெல்லாம் முடியாது... எங்கயோ இருந்து வந்தவ இந்த வீட்டை ஆளாறதா? முடியவே முடியாது. அது நான் உயிரோட இருக்குறவரை சம்மதிக்க மாட்டேன்..” என்று தேனாண்டாள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரே அப்படி எனில் அவரது இரண்டு மகள்களும் அதற்கு மேல்..

“அதெல்லாம் ஒரு கல்யாணமா... நைட்டு யாருக்கும் தெரியாம திருட்டு தனமா தாலி கட்டிக்கிட்டா அதுக்கு பேரு கல்யாணமா? அதெல்லாம் முடியாது. இதை நாங்க கல்யானமாவே ஒத்துக்க மாட்டோம்” என்று நின்றார்கள்.

“உங்க யாரையும் நான் ஒத்துக்க சொல்லல. வாழப்போறது நான். நான் முடிவு பண்ணா போதும்” என்று அவன்  சொல்ல,

“அவ உன்னை மதிக்காம காசு பணம் தான் வேணும்னு போனவ... அவளை மறுபடியும் இந்த வீட்டுல கொண்டு வந்து வைக்க நாங்க அனுமதிக்க மாட்டோம்” தேனாண்டாள் விடாப்படியாக நின்றார். அவரை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“அவ காசுக்காக என்னை விட்டு போகல. நீங்க எல்லோரும் சேர்ந்து அடிச்சு துரத்தி இருக்கீங்க. அதனால தான் அவ இந்த வீட்டை விட்டு போயிருக்கா. அது எனக்கு நல்லாவே தெரியும். மறுபடியும் எங்க ரெண்டு பேருக்குள்ளையும் விளையாட நினைக்காதீங்க... நான் முடிவு எடுத்துட்டேன் வராளி தான் என்னோட மனைவி. நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழறதா நான் முடிவு பண்ணிட்டேன்” தீர்க்கமாக அவன் சொல்ல தங்களின் குட்டு எல்லாம் வெளிப்பட்டதில் மௌனமானார்கள்.

ஆனால் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டு இருந்தார்கள். “எப்படி எங்களை மீறி நீ வாழப்போறன்னு நாங்க பார்த்திடுறோம்” என்று கருவினார்கள்.

அவன் ஏற்கனவே வாழ ஆரம்பித்து விட்டான் என்று பாவம் அவர்கள் அறியவில்லை. வெறும் காலில் சாலையில் ஓடி வந்தவளுக்கு கண்முன் எதுவும் தெரியவில்லை. பெரிய லாரி அவளை நோக்கி வரவது கூட தெரியவில்லை. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

தால்லாடிப் போனாள். ஆனால் மகனை மட்டும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள். “கடவுளே எப்படியாவது என் மகனை அவர்கிட்ட சேர்த்துடனும். அதுவரை எனக்கு மயக்கம் வராம பார்த்துக்கோ” என்று கடவுளிடம் கெஞ்சியவள் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். அவளின் போதாத காலமோ என்னவோ ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை.

காரணம் அவளின் தலையில் வழிந்துக் கொண்டு இருந்த உதிரம். தேவையில்லாத பிரச்சனையில் சிக்க யாரும் முன் வருவது இல்லையே. எல்லோரும் ஒதிங்கிப் போக தானே நினைக்கிறார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 15, 2026 10:31 am
Sowmya reacted
(@sowmya)
Active Member

Thalaivare sikiraama vaa pa....

un pondati pullaiya rescue panra ...

Thenandalu nee lam oru ladies ah cha... ithutha panathasai pudicha pei nu patha,

Indha varali pulla family mothamu enna jandusney theriyalaye🤦‍♀️

 

Loading spinner

ReplyQuote
Posted : March 21, 2026 6:16 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top