“இன்னைக்கு அந்தி நேரம் அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வர சொல்லி சொல்லி இருக்கிறான் ண்ணா” என்று முகம் அழுகையில் சுறுங்க, பெரும் அவமானத்துடன் சொன்ன தங்கையை இழுத்து அணைத்துக் கொண்டான் யுகேஷ்.
“பாருடா இவனை.. என்ன தைரியம் இருந்தா நம்ம பெண்ணை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரசொல்லி சொல்லி இருப்பான். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே அவனை கண்டம் துண்டமா வெட்டி போட்டுட்டுடலாம்னு இருக்கு” என்று வருண் கொந்தளித்தான்.
“இது அவசரப்படுற நேரம் இல்லடா...” என்ற கார்த்திக்,
“வரலன்னா என்ன செய்வானாம் பாப்பா?” என்று கேட்டான்.
“அது பத்தி ஒன்னும் சொல்லல ண்ணா” என்றாள் அழுகையுடன்.
“ப்ச் நாங்க இருக்கோம்ல நீ எதுக்கும் கலங்காதடா” என்று கார்த்தி அவளை அணைத்துக் கொண்டான். உள்ளுக்குள் பெரும் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.
“எப்போ அங்க அப்ரூவல் கிடைக்குமாம்?” என்று ஏந்திழையாளின் பாஸ்போர்ட் விசாவை பற்றி கேட்டான்.
“இன்னும் ஒரு வாரத்துல கன்பாம் ஆகிடுமாம்டா அது வரை வெயிட் பண்ண சொல்லி சொல்லி இருக்காங்க” என்றான் யுகேஷ்.
“பாப்பா விசா கிடச்ச உடனே நீ என்ன பண்ற ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு ஜெர்மனுக்கு ஓடிர்ற... அந்த பாலாப்போனவன் கண்ணுல மட்டும் சிக்கவே கூடாது.” என்று எச்சரிக்கை செய்தான் கார்த்திக்.
வருணோ, “எனக்கு என்னவோ டவுட் தான்” என்றான். யுகேஷும் அதையே சொன்னான்.
“எனக்கும் பெருசா ஹோப்லாம் இல்ல. ஆனா புலி வாய்க்குள்ள சிக்குன மான் குட்டியை நாம மீட்டு தான் ஆகணும்” என்று சொன்னவனின் பேச்சை மற்ற இருவரும் ஆமோதித்தார்கள்.
அதற்கு ராசசிங்கன் விட வேண்டுமே...
ப்ளான் எல்லாம் நல்லா தன் இருக்கு... ஆனா இவர்களின் கருத்துக்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவன் ஆயிற்றே இந்த ராசசிங்கன்.
துணிகள் எல்லாம் எடுத்து முடித்து இருக்க அனைவரும் உணவு உண்ண ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு சென்றார்கள். ஏந்திழையாளால் ஒரு வாய் கூட வைக்க முடியவில்லை. நான்கு சுவருக்குள் நடந்த நிகழ்வே அவளின் கண் முன் வந்தது. அதுவும் ஆறு மணிக்கு அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வர சொல்லி சொல்லி இருந்தது நினைவுக்கு வர தன் கோல்ட் வாட்ச்சை திருப்பி பார்த்தாள்.
வைர முற்கள் பதித்த கடிகாரம் இரண்டு மணி என்று காட்ட உடல் லேசாக நடுங்க ஆரம்பித்தது. தன் குடும்பத்தார்கள் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள். ராசசிம்மன் சொன்னது நினைவுக்கு வர பெரும் அச்சம் அடி மனதில் சூழ்ந்தது.
ரெண்டு பேரை தூக்குறனோ இல்ல குடும்பத்தை தூக்குறனோ அது என் மூடை பொறுத்து என்றானே.. அப்பாக்களும் மாமாங்களும் அலுவலகத்தில் இருப்பார்களே... எப்படி அவர்களை வீட்டுக்கு வரச்சொல்லுவது என்று உள்ளுக்குள் அவள் கலங்கி இருக்க அதிரடியாய் அந்த விடுதிக்குள் அவளின் அப்பா பெரியப்பா சித்தப்பா மாமா என எல்லோருமே வந்து விட்டார்கள்.
அத்தனை பேரின் முகத்திலும் சஞ்சலமும் கலவரமும் சூழ்ந்து இருந்தது. ஆனால் அதை மற்றவர்களிடம் காட்ட முடியாதே... அதனால் இயல்பாக சம்மந்தி ஆட்களிடம் நலம் விசாரித்து விட்டு தன் குடும்பத்தார்களிடம் “சாப்பிட்டு முடுச்சாச்சுன்னா கிளம்பலாம்” என்றார்கள்.
அவர்கள் வரவும் மனதுக்குள் தெம்பாக உணர்ந்த இழையாள் அப்படியே மொத்த குடும்பத்தையும் தூக்கி கொண்டு போய் வீட்டில் சேர்த்து விட்டால் போதும் என்று எண்ணினாள்.
அவளின் எண்ணப்படியே ஒரு நண்டு சிண்டு விடாமல் அனைவரும் வீட்டுக்கு வந்து விட்டார்கள். அதன் பிறகு இழையாளை தனியே அலுவலக அறைக்கு கூட்டிக்கொண்டு போய் விசாரித்தார்கள் பெரியவர்கள்.
வீட்டு மூத்த பெண்களுக்கு கவலை. இன்னது என்று அவர்களுக்கு யாரும் சொல்லவில்லை. ஆனால் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. அதன் வீரியம் அவர்களுக்கு புரியவில்லை. ஏன் இளைய பெண்களுக்கு கூட யாரும் சொல்லவில்லை. ஆண்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.
“சொல்லுடா என்ன நடந்துச்சு?” என்று நிதானமாக பெரியப்பா கேட்க ஆதி முதல் அந்தம் வரை ஏந்திழையாள் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும் பொழுதே அவளால் தாங்க முடியவில்லை. அவன் முதல் சந்திப்பிலே புடவையை பிடித்து இழுத்தது. அவன் தன்னை விபச்சாரியாக பேசியது, இன்று புடவையை உருவியது, கெஸ்ட்ஹவுஸ்க்கு வர சொன்னது என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூனி குறுகி யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்க இயலாமல் சொன்னாள்.
அவள் பட்ட வேதனை எல்லாவற்றையும் பெரியவர்களிடம் கொட்டி விட்டாள். அதோடு ராசசிங்கனின் மிரட்டலையும் சொன்னாள். இதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த அனைவருக்கும் இரத்தம் சுண்டி போனது.
“அதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன் இந்த பய சகவாசம் வேணான்னு.. ஆனா நீங்க கேட்டீங்களா?” வேல்முருகன் தடுமாறிப் போனார். அவ்வளவு திடகாத்திரமான மனிதர் அவர். அவரே தடுமாறி போனதும் ஒரு கணம் எல்லோருமே பதறி விட்டார்கள்.
“அண்ணா...”
“அப்பா”
“பெரியப்பா”
“தாத்தா” என அவரை மொத்தமாக சூழ்ந்துக் கொண்டார்கள்.
“எனக்கு ஒன்னும் இல்லை... நான் கல்லு மாதிரி தான் இருக்கேன். ஆனா என் பேத்தியை எப்படி அந்த முரடனிடம் இருந்து காப்பது...” என்றவர் அவரின் அருகில் இருந்த இழையாளின் முகத்தை வேதனையுடன் வருடி விட்டார். அவர் அதிக வேதனை படுவதை தாங்க முடியாமல் அழுத முகத்தை அழுந்த துடைத்து விட்டு,
“எனக்கு ஒன்னும் இல்ல தாத்தா. நான் நல்லா தான் இருக்கேன். இன்னும் பத்து பதினைஞ்சு நாள்ல நான் சேபா வெளிநாட்டுக்கு போயிடுவேன். அதுக்கு பிறகு அவனால என்னை எதுவும் முடியாது. நீங்க கவலை படாதீங்க தாத்தா” என்றாள் தேறுதலாக.
அவளது சமாதானத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியாக சிரித்தார் வேல்முருகன்..
“எங்களுக்கு இது இப்படி ஆகும்னு தெரியாதுப்பா” என்றார் சுந்தரம்.
“தெரியணும் சுந்தரம்... தெரிஞ்சு வச்சுக்கணும்.. ஒரு தொழில்ல இருக்குறோம்னா நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். அதே போல தான் குடும்பத்துலயும். நாம நாலஞ்சு பொம்பளை பிள்ளையை வச்சு இருக்கோம்னா என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு வச்சு இருக்கணும். உங்களை குத்தம் சொல்றேன்னு தவறா நினைக்க வேணாம். ஆனா ஒருத்தார் நம்மளை அப்ரோச் பண்ணும் பொழுதே ஏன் எதுக்குன்ற கணிப்பு வேணும். அண்ணன் அன்னைக்கே உங்க எல்லோரையும் எச்சரிச்சார் இல்லையா?” என்று ஆதங்கப் பட்டார் வெங்கடேசன் தன் அண்ணின் வருத்தம் தாங்காமல்.
“நாங்க இப்படி எல்லாம் ஆகும்னும் இந்த அளவுக்கு போகும்னும் நினைக்கல சித்தப்பா” என்று வருத்தப்பட்டார் கண்ணன்.
“ஆமாம் சித்தப்பா.. நாங்க அப்போ அந்த கண்ணோட்டத்துல பார்க்கல” என்று சுந்தரமும் சொல்ல இளைய தலை முறைகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அப்பா தாத்தா நீங்க என்ன பேசுறீங்க எதை பத்தி பேசுறீங்கன்னே புரியல. எதா இருந்தாலும் உடைச்சு பேசுங்க. அப்போ தான் எங்களுக்கும் தெரியும்” என்று ஆதங்கமாய் கேட்டான் யுகேஷ்.
“இனி பேசி என்ன ஆகப் போகுது” என்று வேதனை பட்டார் வேல்முருகன்.
போன வாட்டி இந்த story போடும் போது மிஸ் பண்ணிட்டேன்.....
இப்ப கண்டிப்பா படிப்பேன்....
அடேய் இவன் என்ன இப்படி இருக்கான்?????
வேல்முருகன் இவளோ யோசிக்க காரணம் என்ன????
இவனை முன்னாடியே தெரியுமா?????இல்ல ஏதும் சொந்தமா?????
அவளை target பண்றது கூட அவளை நல்லா தெரிஞ்சி தான்னு தோணுது......





