அத்தியாயம் 21

 
Admin
(@ramya-devi)
Member Admin

இருவரின் பேச்சையும் கேட்ட ஏந்திழையாள் அதிசமாய் பார்த்தாள். தனக்கு அறிமுகமான ராசசிங்கன் இவன் இல்லையே என்று...

அவளின் பார்வையை உணர்ந்தவன் என்ன என்பது போல கேட்டான் பார்வையாலே. ம்ஹும்... என்று தலையை ஆட்டியவள் கால்களை இறுக கட்டிக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.

இருவரும் கீழே அமர்ந்து இருப்பதை பார்த்து கதிரும் கீழே அமர்ந்துக் கொண்டான். “பாஸ் ஹாஸ்பிட்டல் போகலாமா?” தவித்தான். சிங்கன் அவனை எவ்வளவு அடித்து துரத்தினாலும், கீழ்த்தரமாக எவ்வளவு பேசினாலும்  மானங்கெட்டு போய் கதிர் அவனிடமே தான் வேலையில் இருந்தான். இனிமேலும் இருப்பான்.

அதென்னவோ சிங்கன் மீது அவ்வளவு பாசம். இல்லை என்றால் சம்பளத்துக்கு வந்த ஆளாக இருந்து இருந்தால் இந்நேரத்துக்கு துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி இருந்து இருப்பான்.

நூலிழையில் ஒரு பாசம் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அதை டெவலப்பே செய்ய விடாமல் சிங்கன் பார்த்துக் கொண்டான். ஆனால் அதை டெவலப் எல்லாம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இது நூலிழை பாசம் இல்லை. நல்ல துரு பிடிக்காத எக்கினால் செயப்பட்ட பாசம் என்று ஒவ்வொரு முறையும் கதிர் நிரூபித்துக் கொண்டே இருந்தான்.

“எம்பிபிஸ் மேடம் மருந்து போட்டுட்டாங்க” என்றான் கேலியாய். தலையை தூக்கி சிங்கனை முறைத்து விட்டு மறுபடியும் தலையை குனிந்துக் கொண்டாள் ஏந்திழையாள்.

“பாஸ்” என்றான் கண்களை விரித்து. இன்றைக்கு அவனது பாஸ் புது விதமாக தெரிவது போல இருந்தது இவனுக்கு. தன் முட்டை கண்ணை விரித்து அவனை பார்த்தான் கதிர்.

“ப்ச் ஆராய்ச்சி பண்ணாம போய் வேலையை பாரு மேன். இன்னைக்கு நான் ரெஸ்ட்” என்றான்.

“வாட்...?” அதிர்ந்தவன் பட்டென்று தன் நெஞ்சை பிடித்துக் கொண்டான்.

“பாஸ் வாழ்க்கையில நீங்க இன்னைக்கு தான் ரெஸ்ட் எடுத்து இருக்கீங்க...” என்று சொல்லி கண்ணை விரித்தான்.

“டேய் இப்ப நீ போகல... என்கிட்ட வாங்குவ..” எரிந்து விழுந்தான் சிங்கன்.

“என்னவோ நடக்குது பாஸ். ஆனா இது ரொம்ப நல்லா இருக்கு... உங்களை இப்படி பார்க்க ரொம்ப ரொம்ப அதை விட நல்லா இருக்கு” என்று சொன்னவனின் முதுகில் அருகில் இருந்த ஜாரை எடுத்து வீசினான் ராசசிங்கன்.

“இப்போ நீ வாங்கப் போற...” என்று பல்லைக் கடித்தான்.

“மை பாஸ் பேக் டூ பார்ம்” என்றவன் ஓடியே விட்டான்.

ராசசிங்கன் அப்படியே படுத்து இருந்தான். அவனின் மனதினுள் சில எண்ண அலைகள்... அதை அலைய விட்டு அதன் பின்னாடியே தன் புத்தியை போக விட்டவன் நிச்சந்தையாக வெறும் தரையில் கிடந்தான். அவனின் அருகில் சிலை போல இவளும் அமர்ந்து இருந்தாள்.

அவளின் கண்கள் மணியை பார்த்து பார்த்து மீண்டது. மாலை நேரம் நெருங்கியது. நீண்ட பெரும் அமைதியை கலைத்து விட்டு,

“நான் போகவா?” என்று கேட்டாள். சிங்கன் எதுவமே பேசவில்லை. மூடிய கண்கள் மூடியபடியே இருந்தது.

“உங்க கிட்ட தான். நான் போகட்டுமா?” என்று கேட்டாள்.

“ப்ச்... கொஞ்சம் அமைதியா இருடி” என்று எரிந்து விழுந்தான்.

“நீங்க தானே சொன்னீங்க ஈவினிங் விட்டுடுறேன்னு இப்போ இப்படி பண்றீங்க” என்று புகார் படித்தாள்.

“இப்ப நீ வாயை மூடல... போன உன் நொண்ணனுங்க வாய் மேலையே நாலு போட சொல்லுவேன்” என்று சிடுசிடுத்தான்.

அவனது ஏகாந்த நிலை கலைவதில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை. எனவே அமைதியாக இருக்க சொன்னான் அவளை.

“இவனோட பெரும் தொல்லையா போச்சு.. பேசாம அண்ணனுங்க கூப்பிடும் பொழுதே போய் இருக்கலாம்.. குளிக்கல... ஒன்னும் பண்ணல...” என்று முகத்தை சுழித்தாள்.

“இப்ப நீ என்கிட்டே வாங்க போற...” என்று அதட்டல் தொனியில் பேச அதன் பிறகு அவள் வாயையே திறக்கவில்லை. மனம் முழுக்க மருத்துவமனையில் அடிபட்டு இருந்தவர்களின் மீது இருந்தது... காலையில் இருந்து இவன் படுத்தி வைத்த பாட்டில் அவர்களின் நினைவே இல்லாமல் இருந்தவள் இப்பொழுது அவன் கொஞ்சம் அவளை ப்ரீயாக விடவும் அவளது எண்ணங்கள் அவர்களை நோக்கி சென்றது.

“என்னால தான் இல்லை” என்று கண்ணீர் வழிந்தது. அவள் அழுகையை பார்த்தும் அவன் அசையவே இல்லை. அப்படியே கிடந்தான். மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ஆரம்பித்தாள்.

“ப்ளீஸ் அண்ணனுங்க ரொம்ப கோவக் காரணுங்க.. நானா வீட்டுக்கு போகட்டுமா?” என்று கேட்டாள்.

திரும்பி நெருப்பு உமிழும் ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான் அவளுக்கு சர்வமும் அடங்கி விட்டது. இவ்வளவு நேரம் அவனிடம் சற்றே ஒரு இளக்கம் இருந்தது...

ஆனால் அது இப்பொழுது காணமல் போய் இருப்பதை உணர்ந்து உட்கார்ந்த வாக்கிலே பின்னால் போய் சுவரோடு ஒன்றிக் கொண்டாள். ஏனெனில் ராசசிங்கனின் பார்வை வீரியம் அந்த மாதிரி இருந்தது.

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவர்களோ கையில் கட்டி இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் பாதையை பார்ப்பதுமாக இருந்தார்கள். சுற்றி இருந்த தாய் தந்தையர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கமாய் அப்படியே இருந்தார்கள்.

“டேய் ஏதாவது சொல்லி தொலைங்கடா... மனுசனோட வேதனை புரியாம... நேத்திக்கு போன பொண்ணு இன்னும் வீடு வந்து சேரல... என் பிள்ளைக்கு என்ன ஆச்சோ... ஏது ஆச்சோன்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிறோம்” என்று கதறினார்கள்.

“ம்மா நீங்க வேற தனியா படுத்தாதீங்க” என்று எரிந்து விழுந்தான் யுகேஷ்.

“ஆமான்டா எங்க மேல உங்க கோவத்தை காட்டுங்க.. ஏன்னா நாங்க தானே உங்க எல்லோருக்கும் தொக்கா போயிட்டோம். வயசு பிள்ளையை காணோம்னு நாங்க தான்டா உயிர் போக துடிச்சுக்கிட்டு இருக்கோம்” என்று பெரியம்மா ஒப்பாரி வைக்க,

“ம்ம்மா” என்று அதட்டினான் கார்த்திக்.

“எங்களையே அதட்டுங்கடா... ஒரு தடிமாட்டு பய நம்ம பெண்ணை தூக்கிட்டு போய் வச்சு இருக்கான் அவனை கேட்க துப்பு இல்லை இப்ப தான் எங்களை வந்து அடக்குறான்...” என்று சின்ன அத்தை ஒரு பக்கம் மூக்கை சிந்த தலையை பிடித்துக் கொண்டார்கள் மகன்கள்.

பாட்டிகள் ஒரு பக்கம் மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தார்கள்.

தந்தைமார்கள் தங்களின் பிள்ளைகளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க வேல் முருகனும் வெங்கடேசனும் செய்வதறியாது ஒரு பக்கம் அமர்ந்து இருந்தார்கள்.

பேரன்மார்கள் வந்த உடனே இந்த பக்கம் ராசசிங்கனுக்கு போன் போட்டார்கள் இருவரும். ஆனால் அவன் போனே எடுக்கவில்லை.

அவனது பியேவுக்கு போன் போட்டு கேட்டார்கள். “பாஸ் என்ன முடிவு எடுத்து இருக்காருன்னு தெரியல. அவருட்டையே கேட்டுக்கோங்க” என்று வைத்து விட்டான். தள்ளாடிப் போனார் வேல்முருகன்.

“கொஞ்சம் பார்த்துக்க தம்பி... நான் வந்திடுறேன்” என்று தனியாக காரை எடுத்துக் கொண்டு போனார்.

“அண்ணா நானும் வரேன்” என்று சொன்னவரை தடுத்து விட்டு தான் மட்டுமாக யாருடைய கவனத்தையும் கலைக்காமல் ராசசிங்கனின் கெஸ்ட்ஹவுஸ் நோக்கி சென்றார்.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த மனிதரை கண்டு வேகமாய் ஓடிப்போனாள் ஏந்திழையாள். ராசசிங்கன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான். அவனிடம் வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

மீண்டும் தலையை கையில் வைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

தன் பேத்தியை கண்களால் அளந்து ஆரத்தழுவிக் கொண்டவருக்கு அவளின் நெற்றி காயம் கண்டு கலங்கிப் போனார். “தங்கம்” என்று தன் மேல் துண்டால் அவளின் காயத்தை துடைத்து விட துடித்துப் போனாள்.

“ஸ்ஸ்ஸ்... வலிக்கிது தாத்தா” என்று அவள் சன்னமாக அலற, ராசசிங்கன் கண்களை அழுந்த மூடிக் கொண்டான். அவனது காயத்துக்கு மருந்துப் போட்டவள் அவளின் காயத்திற்கு மருந்து போடாதது அவனுக்கு நினைவு வந்தது. இதழ்களை பிதுக்கிக் கொண்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:42 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top