“மண்ணாங்கட்டி” என்றவள், “நேத்திக்கு நீங்க அத்தனை பேர் அங்க மருத்துவமனையில இருக்கும் பொழுதே இவருக்கு நான் ஸ்காட்ச் ஊத்தி தர மறுத்ததுக்கு அவனுங்களுக்கு போய்க்கிட்டு இருந்த சுவாச குழாயை வெட்டி விட ஏற்பாடு நடந்தது. அது தெரியுமா உங்களுக்கு...” என்று அவள் வெடிக்கவும் திகைத்துப் போனார்கள் நால்வரும்.
திரும்பி ராசசிங்கனை நால்வரும் பார்த்தார்கள். அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் உதிரம் சொட்டிய முகத்தோடு தரையில் இரு கையையும் மடித்து வைத்து அதில் தலையை வைத்து இருந்தவன் கால் மேல் கால் போட்டு தோரணையாக ஆட்டிக் கொண்டு இருந்தான்.
“அதனால தான் சொல்றேன். நீங்க முதல்ல இங்க இருந்து போங்க. நான் பத்திரமா வீடு வந்து சேருவேன்...”
“பாப்பா இப்படியாப்படவனிடம் உன்னை எப்படி தனியா விட முடியும்... நாங்களும் உடன் இருக்கிறோம்” என்று அவர்கள் சொல்ல இவளுக்கு அய்யோ என்று வந்தது. பசி மயக்கம் வேற அவளால் நிற்க கூட முடியவில்லை. அவள் நினைவுடன் இருக்கும் பொழுதே அவர்களை பாதுகாத்து அனுப்பி விட்டால் தேவலாம் என்று இருந்தது.
ஆனால் அதற்கு தான் இந்த தடிமாடுகள் ஒத்து வரவே மாட்டேங்குதுங்களே புலம்பியவள்,
“ப்ளீஸ் இதுக்கு மேல எனக்கு பேச கூட தெம்பு இல்லை... சொன்னா கேளுங்க அண்ணா.. கார்த்திக் நீயே கூட்டிட்டு போண்ணா” என்று கையெடுத்து கும்பிட அதன் பிறகும் அங்கே இருக்க முடியாமல் மூவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான் கார்த்திக்.
“ஈவினிங் மட்டும் நீ வீட்டுக்கு வரலன்னா பிறகு நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் பாப்பா” என்று எச்சரித்து விட்டே சென்றான் கார்த்திக்.
அவர்கள் போன பிறகு தான் கீழே படுத்து இருந்தவனை பார்த்தாள்.
முகத்தில் அங்கும் இங்குமாய் காயங்கள். நெற்றியின் ஓரத்தில் லேசாக லேசாக கிழித்து வேறு இருந்தது. அவ்வளவு அடி அடிச்சும் அவன் அசையாமல் இருந்த நிலை இப்பொழுது உணர்ந்தவளுக்கு தொண்டை குழியில் நீர் வற்றிப் போனது.
வேகமாய் சுவரோரம் இருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து வந்து அவனுக்கு மருந்துப் போட ஆரம்பித்தாள். அவன் மறுக்கவே இல்லை.
நேற்றைக்கு தனக்கு மருந்து போட கூட விடாதவனின் காயங்களை விழுந்து விழுந்து கவனித்தாள். அவனை நெருங்கி அமர்ந்தவள் கீழே படுத்து இருந்தவனுக்கு குனிந்து மறந்துப் போட்டாள். அவள் குனிந்து மருந்து போட்டதில் அவளின் முன்னழகு அவனின் கண்களுக்கு விருந்தாக இரசித்துப் பார்த்தான்.
“ப்ளீஸ் எங்க அண்ணனுங்களை ஒன்னும் செய்துடாதீங்க. அவங்க அடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன். என் மேல உள்ள பாசத்துல உங்களை அடிச்சுட்டாங்க. பெரிய மனசு பண்ணி அவங்களை விட்டுடுங்க சார்” என்று அவனிடம் மன்றாடிக் கொண்டே அவன் காயங்களுக்கு வலிக்காமல் மருந்து போட்டாள்.
அவளது நெருக்கமும், பணிவிடையும், தொடுகையும் அவனை என்னவோ செய்தது. அவனது கண்கள் விடாமல் அவளின் முன்னழகை பருகிக் கொண்டு இருந்தது.
அவனிடம் எந்த எதிர்விளைவும் இல்லாமல் போக கண்களை நிமிர்த்தி அவனை பார்த்தாள். அவனின் பார்வை இடம் மாறி இருக்க எங்கே என்று பார்த்தாள்.
அவனின் கண் பார்வையை தொடர்ந்து இவளும் பார்வையை செலுத்த குப்பென்று வியர்த்துப் போனது... சட்டென்று சுடிதாரை மேலே இழுத்துக் கொண்டாள்.
“ப்ச் நல்லா தானே இருந்தது...” என்று உச்சு கொட்டினான். அவனது பேச்சை காதிலே வாங்காமல் அவள் மருந்து போட அவளது கையை தட்டி விட்டான். அவள் நிமிர்ந்து பார்க்க “முன்ன மாதிரி இருந்து போடு” என்றான் சட்டமாய்.
தவித்துப் போனாள். “ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,
“ஜஸ்ட் டூ யிட்” என்றான். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டது.
“நீங்க இப்படி செய்ய வைக்கிறதுக்கு பெயர் என்ன தெரியுமா?” என்று கேட்டாள்.
“அது தெரியாமலா உன்னை செய்ய சொல்றேன்” என்று நக்கல் பண்ணினான். அவள் அசையாமல் இருக்க,
“அப்போ ஒன்னு பண்ணு ட்ரசை புல்லா ரிமூவ் பண்ணிடு” என்றான் அலுங்காமல். கண்களில் கண்ணீர் முட்ட அவனை பார்த்தாள்.
“இந்த கண்ணகி லுக் எல்லாம் இங்க வேணாம். டு இட்” என்றான் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்.
“நீங்க மருந்தே போட்டுக்க வேணாம்” என்று அவனை விட்டு நகர்ந்து உட்கார்ந்து விட்டாள்.
“முடிவை நீ எடுக்காத நான் தான் எடுப்பேன். ஒழுங்கா வந்து மருந்து போடு. இல்ல உன் லவ் பிரதர்ஸ் ஒருத்தனும் வீடு போய் சேர மாட்டானுங்க” என்றான் எகத்தாளமாய். அவனது எகத்தாளத்தில் பத்திக் கொண்டு வந்தது. ஆனால் அதை அப்படியே அவனிடம் கொட்டி விட முடியாதே...
“ஏன் இப்படி எல்லாம் கொடுமை படுத்துறீங்க. ஏதோ தெரியாம ஒரு வாய் சொல் சொல்லிட்டாங்க. அதுக்கு இவ்வளவு பண்ணுவீங்களா? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? அவங்க பாவம் தானே” ஆற்றாமையில் பொங்கினாள்.
ராசசிங்கன் விழி உயர்த்தி ஒரு பார்வை பார்த்தான். பட்டென்று தன் பேச்சை குறைத்துக் கொண்டு மருந்துடன் அவனை நெருங்கினாள்.
விழி அசையாமல் அவளை பார்த்தான். அவனது கண்களை பார்க்காமல் அவனது காயங்களுக்கு மருந்துப் போட்டாள். ராசசிங்கன் எதுவும் சொல்லவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அவள் உண்டுக் கொண்டு இருந்த உணவு கேட்பாரற்று அப்படியே கிடந்தது. அவனும் போய் சாப்பிட சொல்லவில்லை. இவளும் அவனை விட்டு நகரவில்லை. இருவரும் அப்படியே இருந்தார்கள் வெகு நேரம்.
அவனின் தலைமாட்டிலே இவள் அமர்ந்து இருந்தாள். வெகு நேரம் கழித்தே கதிர் வந்தான். வந்தவன் தன் பாஸ் வெறும் தரையில் வெற்று மார்புடன் படுத்து இருப்பதை பார்த்து பதறிக்கொண்டு ஓடி வந்தான்.
அருகில் வந்த பிறகே அவனது காயங்கள் தெரிய வந்தது.
“பாஸ் என்ன பாஸ் இதெல்லாம்... யாரு உங்களை இப்படி பண்ணினது... யாருன்னு சொல்லுங்க இப்பவே அவங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுறேன்” என்று பரபரக்க அவனை நிமிர்ந்து முறைத்தாள் ஏந்திழையாள்.
அவளது பார்வையை உணர்ந்த கதிர் கேள்வியாய் தன் பாஸை பார்த்தான்.
“என்னாச்சு பாஸ் மேடம் முறைக்கிறாங்க...”
“பின்ன அவளோட குடும்பத்தை போட்டு தள்ளுறேன்னு சொன்ன உன்னை அவ பாசமாவா பார்ப்பா” என்றான் சிரிப்பை அடக்கிய குரலில். அவனது சிரிப்பையே அதிசயமாக பார்த்து வியந்தவன்,
“பாஸ் அப்போ உங்களை அடிச்சது” என்று அவன் கண்ணை விரிக்க,
“ம்ம்ம்” என்றான்.
“என்ன பதிலடி சார் குடுக்க போறீங்க?” என்று கேட்டான்.
“அவரே சும்மா இருந்தாலும் இந்த கொரங்கு சும்மா இருக்காது போல” என்று முணகினாள். அவள் பேசியது இருவருக்குமே நன்றாக கேட்டது.
“பாஸ்” என்றான் புகாராய்.
“விடுடா அவ சொல்றான்னு நீ இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத” என்றான்.
இருவரின் பேச்சையும் கேட்ட ஏந்திழையாள் அதிசமாய் பார்த்தாள். தனக்கு அறிமுகமான ராசசிங்கன் இவன் இல்லையே என்று...
அவளின் பார்வையை உணர்ந்தவன் என்ன என்பது போல கேட்டான் பார்வையாலே. ம்ஹும்... என்று தலையை ஆட்டியவள் கால்களை இறுக கட்டிக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.
இருவரும் கீழே அமர்ந்து இருப்பதை பார்த்து கதிரும் கீழே அமர்ந்துக் கொண்டான். “பாஸ் ஹாஸ்பிட்டல் போகலாமா?” தவித்தான். சிங்கன் அவனை எவ்வளவு அடித்து துரத்தினாலும், கீழ்த்தரமாக எவ்வளவு பேசினாலும் மானங்கெட்டு போய் கதிர் அவனிடமே தான் வேலையில் இருந்தான். இனிமேலும் இருப்பான்.





