அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நீங்க அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் பல மடங்கு நீங்க வலியை அனுபவிப்பீங்க.. சொன்னா கேளுங்க அண்ணா” என்று எல்லோரையும் பார்த்து ஏந்திழையாள் சொல்ல,

“பரவயில்லை எவ்வளவு வலிச்சாலும் நாங்க தாங்கிக்குவோம். ஆனா உன்னை இவன் கிட்ட இருந்து கூட்டிட்டு போகாம விட மாட்டோம் இழை” என்று ஆக்கிரோஷமாக அவன் மீது பாய்ந்த யுகேஷ் கண் மண் தெரியாது அவனை போட்டு அடித்தான். சிங்கன் எதற்கும் அசையவே இல்லை அப்படியே பாறாங்கல்லை நட்டு வைத்தது போல இருந்தான். அவனது இதழ்களில் மட்டும் யாருமறியா சிறு முறுவல் முகிழ்த்து இருந்தது.

“அண்ணா ப்ளீஸ்... சொன்னா கேளுங்க அவரே இன்னைக்கு ஈவினிங் விடுறேன்னு சொன்னாரு.. நானே வந்து இருப்பேன். ஏன் அதுக்குள்ள இப்படி அவசரப்பட்டீங்க... இன்னும் பிரச்சனை பெரிதாக போகிறது” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“இதனால எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாங்க பார்த்துக்குறோம் இழை. நீ சும்மா இவனுக்கு பயந்துக்கிட்டு இருக்காத” என்ற வருணும் அவன் மீது பாய்ந்து அவனை கீழே தள்ளி விட்டு அவன் வயிற்றில் ஏறி அமர்ந்து முகத்தில் ஓங்கி ஓங்கி குத்தினான்.

இன்னொருத்தன் ராசசிங்கனின் காலை பிடித்து வளைத்தான். இன்னொருவன் அவனது வலக்கையை பிடித்து முறுக்கினான். இன்னொருவன் அவனது இடக்கையை பிடித்து ஓடித்தான்.

நால்வரும் தங்களின் தினவை அவன் ஒருவனிடம் காட்டிக் கொண்டு இருந்தார்கள். ராசசிங்கன் கொஞ்சம் கூட அசையவே இல்லை. அப்படியே கிடந்தான்.

“அய்யோ ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க...? முதல்ல நீங்க வெளியே போங்க” என்று கண்ணீருடன் கதறினாள் இழை.

சிங்கன் தலையை திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளுக்கு அதெல்லாம் கொஞ்சம் கூட உறைக்கவே இல்லை.

அவளை யாருமே கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவனை போட்டு அடித்துக் கொண்டு இருக்க,

இரவு உடைத்த கண்ணாடி கதவின் துண்டுகள் அங்கும் இங்கும் இருக்க அதில் ஒரு துண்டை எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்ட ஏந்திழையாள்,

“இப்ப நீங்க வரை விடலன்னா நான் இதை குத்திட்டு இங்கயே செத்து போயிடுவேன்” என்று அந்த வீடு அதிர கத்தினாள்.

“இழை” என்று எல்லோரும் அதிர்ந்துப் போனார்கள்.

அடித்த கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது.

“முதல்ல அவரை விட்டு எழுந்து இந்த பக்கம் வாங்க” என்று கண்ணீருடன் சொன்னவளை புரியாமல் அனைவரும் பார்த்தார்கள்.

“நீ என்ன லூசாடி” என்று வருண் அதட்ட,

“ஆமா நான் லூசு தான்... ஏற்கனவே ரெண்டு பேரு படுக்கையில் கிடக்குறது பத்தாதுன்னு நீங்களும் போய் படுக்கையில கிடங்க. வீட்டுல இருக்குற எல்லோம் கண்ணீரும் கம்பலையுமா இருக்கட்டும். அதுக்கு தானே நீங்க எல்லோரும் ஆசை படுறீங்க” என்று அவள் கத்த,

“இழை” என்று அவர்கள் நால்வரும் கத்த,

“நீங்க இந்த மனுசனை போட்டு அடிச்ச அடிக்கு அது தான் நடக்கும். நீங்க பேசுன பேச்சுக்கு தான் இவரு ரிவெஞ் எடுத்துட்டு இருக்காரு. அது போதாதுன்னு நீங்க அந்த ஆளை போட்டு அடி வெளுத்து எடுங்க.. அந்த ஆளு நம்ம குடும்பத்தோட சமாதி கட்டட்டும். அது தானே உங்களுக்கு எல்லாம் வேணும்” என்று கதறியாவளை பேச்சற்றுப் பார்த்தார்கள் எல்லோரும்.

“இப்படி எல்லாம் ஆகும்னு தான் நான் யாருக்கிட்டயும் சொல்லாம வந்தேன்.. ஆனா இப்போ அப்படியே ஆகிடுச்சு” என்று மடிந்து விழுந்தாள் சுவரோடு.

“இழை” என்று பதறிப்போன பாச மலர்கள் அவளிடம் விரைய,

“யாரும் கிட்ட வராதீங்க..” என்று கத்தினாள்.

“ப்ச் இழை” என்று அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டான் கார்த்திக்.

“நீ தானே பெரியவன். நீயே இப்படி அவசர படலமா ண்ணா” என்று அவள் கேட்க,

“உன்னை போய் எப்படி பாப்பா எங்களால நினைச்சுக் கூட பார்க்க முடியல. அது தான்” என்று அவன் ஆதங்கப் பட,

“எந்த களங்கம் வந்தாலும் என் ஒருத்தியோட முடிஞ்சு போய் இருக்கும்... இப்போ நீங்களும் உள்ளே நுழைஞ்சு உங்க வாழ்க்கையும் போயி.. ஏண்ணா” என்று கலங்கிப் போனாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்று நடாஷ் சொல்ல அவனை முறைத்தாள்.

“ஆனப்பிறகு வருத்தப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை நடாஷ்” என்றவள் எழுந்துக் கொண்டாள்.

“வா போகலாம்” என்று யுகேஷ் அவளின் கையை பிடிக்க, தன் கையை உதறிக் கொண்டவள்,

“நீங்க எல்லோரும் முதல்ல போங்க” என்றாள்.

“ஹேய் விளையாடாத பாப்பா” என்று சீறினான் கார்த்திக்.

“யாரும் இங்க விளையாடல... அவரே ஈவிங் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாரு. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வீட்டுக்கு வந்திடுவேன். அதுக்குள்ள நீங்க எதுவும் செய்து இன்னும் இருக்கிறதை பெருசு பண்ண வேணாம்” என்று அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

“இழை” என்று அவளை அடிக்க கை ஓங்கினான் அவளின் அண்ணன் யுகேஷ்.

“சொன்னா கேளுண்ணா” என்று அவள் மன்றாட,

“அடிக்க கூடாதுன்னு பார்க்கிறேன் இழை. அடிக்க வைச்சிடாத” என்றான் யுகேஷ்.

“நீ அடிச்சு கொன்னாலும் நான் வர மாட்டேன்” என்று கீழே அமர்ந்து விட்டாள்.

“ஏய் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா பாப்பா? நீ எந்த மாதிரியான இக்கட்டுல சிக்கி இருக்க தெரியுமா?” எரிந்து விழுந்தான் கார்த்திக்.

“தெரியாமலா இங்க இருந்து வரமாட்டேன்னு சொல்றேன்... அவரு நினைச்சா இந்த நிமிடமே என்ன வேணாலும் செய்வாருண்ணா ஏன் அதை புருஞ்சுக்க மாட்டிக்கிறீங்க” என்று கண்ணீர் வழிய கேட்டாள்.

“எங்களாலையும் பதிலுக்கு செய்ய முடியும் பாப்பா. நாங்களும் ஆம்பள தான்” என்று பல்லை கடித்தான் நடாஷ்.

“ப்ச்...” என்று சலித்தவள், “உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்...” என்று மருகியவள்,

“நான் இந்த வீட்டு வாசப்படி தாண்டினாலே அங்க அவனுங்க ரெண்டு பேரு உயிரும் ஊசலாடும் ண்ணா” என்று கலங்கினாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாப்பா... அங்க இருக்கிறது எல்லோருமே நம்ம ஆட்கள் தான்” என்றனர்.

“மண்ணாங்கட்டி” என்றவள், “நேத்திக்கு நீங்க அத்தனை பேர் அங்க மருத்துவமனையில இருக்கும் பொழுதே இவருக்கு நான் ஸ்காட்ச் ஊத்தி தர மறுத்ததுக்கு அவனுங்களுக்கு போய்க்கிட்டு இருந்த சுவாச குழாயை வெட்டி விட ஏற்பாடு நடந்தது. அது தெரியுமா உங்களுக்கு...” என்று அவள் வெடிக்கவும் திகைத்துப் போனார்கள் நால்வரும்.

திரும்பி ராசசிங்கனை நால்வரும் பார்த்தார்கள். அவன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் உதிரம் சொட்டிய முகத்தோடு தரையில் இரு கையையும் மடித்து வைத்து அதில் தலையை வைத்து இருந்தவன் கால் மேல் கால் போட்டு தோரணையாக ஆட்டிக் கொண்டு இருந்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:40 pm
Sowmya reacted
(@sowmya)
Active Member

Achoo pavam pulla vachu seirane 👊

Loading spinner

ReplyQuote
Posted : March 26, 2026 11:01 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top