“பாஸ் மேடம் வீட்டுக்கு தான் வந்து இருக்காங்க.. லீவ் ஹர்...” என்றான்.
“ம்ம்” என்றானே தவிர அவன் அவளை விடவே இல்லை.
“ஐ திங்.. பாஸ்க்கு போதை தெளிஞ்சா தான் போக முடியும்னு நினைக்கிறேன்” என்றான்.
“வாட்?” என்று அதிர்ந்துப் போனாள். அதுவரை இவனது பிடியிலா “நோ” என்று அலறினாள்.
“வேற ஆப்ஷன் இல்ல மேம்” என்று சொல்லி விட்டு அவன் அவனது அறைக்கு போய் விட்டான்.
“ப்ச்... இதுக்கு பேசாம நான் வீட்டுக்குள்ளயே இருந்து இருப்பேன். எல்லாம் என் தலை எழுத்து” என்று சொன்னவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.
தலை ஒரு புறம் விண் விண்ணென்று வலிக்க, நேற்றிலிந்து இப்பொழுது வரை அலைக்கழித்துக் கொண்டு இருந்த நிகழ்வுகள், அதனால் ஏற்பட்ட மன உழைச்சல்கள் வீரியமான உணர்வுகள் என எல்லாமும் சேர்ந்து அவளை படுத்தி எடுத்தது.
கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. பசி மயக்கம் வேறு... தன் மீது துஞ்சிக்கொண்டு இருந்தவனை நழுவாமல் இருக்க அவனது பின்னந்தலையை பற்றிக் கொண்டவள் அப்படியே பின் இருக்கயில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவ்வளவு களைப்பாக இருந்தது.
ராசசிங்கனோ இன்னும் சொகுசாக அவள் மீது படுத்துக் கொண்டான். அவனுக்கு போதையை மீறி உறக்கம் வர ஆரம்பித்தது. அவள் மீது இருந்து வரும் சுகந்தமான மணத்தால் கிறங்கிப் போய் எந்த அப்பழுக்கும் இல்லாமல் தூங்கிப் போனான் நிம்மதியாக.
விடிந்த பிறகும் இருவரும் அப்படியே தான் கிடந்தார்கள். அவள் பின்னால் சாய்ந்து இருக்க, இவனோ அவள் மீது பாதி உடலை போட்டு சீட்டில் கால் நீட்டி படுத்து இருந்தான். கதிர் அதிகாலையிலே எழுந்து வந்து பார்த்தான். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க கண்டு மீண்டும் போய் படுத்து விட்டான்.
அவனது பாஸ் தூங்கும் வரை தான் இவனுக்கு தூக்கம். அதன் பிறகு அவனோடு பின்னால் அலையவே இவனுக்கு நேரம் சரியாக இருக்கும். அதனால் இந்த நேரத்தை வீண் பண்ணாமல் நன்றாக தூங்கினான்.
விடிந்து வெகு நேரம் ஆகிய பிறகே கண்களை திறந்தான் ராசசிங்கன். முகத்தில் என்னவோ மெத்து மெத்து என்று இருக்க அந்த சுகம் இன்னும் வேணும் போல இருக்க தன் முகத்தை அங்கேயே வைத்து தேய்த்துக் கொண்டான்.
அதில் தூக்கம் கலைந்தவள் தன் மீது இருந்துக் கொண்டு அவன் செய்யும் செயலின் வீரியம் புரிய வேகமாய் அவனை தன் மீது இருந்து தள்ளிவிடப் பார்த்தாள். அவள் கண் விழிக்கவும் தான் எதன் மீது இருக்கிறோம் என்று நன்றாக புரிய இன்னும் அலுத்தமாக தன் முகத்தை அவளிடம் புதைத்துக் கொண்டான் அரக்கன்.
“ப்ச் என்ன பண்றீங்க.. விடுங்க” என்று அவனை விலக்கப் பார்க்க,
“நேத்தைக்கு என்ன பண்ணின” என்று தீயாய் கேட்டான். அதில் பக்கென்று வர,
“ஒன்னும் பண்ணலையே” என்று மழுப்பினாள்.
“ஏன்டி கஞ்சா அடிச்சா இவன் எல்லாத்தையும் மறந்திடுவான்னு நினைச்சியா?” என்று அவளை முறைத்தவன்,
“கதிர்” என்று கத்தினான். அவனது கத்தலில் காது சவ்வு கிழிந்தது இவளுக்கு. கதிர் அரக்க பறக்க ஓடி வந்தான்.
“சார்”
அவனது கலைந்த தோற்றத்தை பார்த்து முறைத்தவன்,
“உன் டியூட்டி டைம்ல இப்படி தான் வந்து நிற்பியா? மேனேர்ஸ் இல்ல...” என்று இவன் பாட்டுக்க அலற ஆரம்பிக்க கதிர் பாவமாய் நின்றான்.
“போய் பிரெஷ் ஆகிட்டு வா.. வந்து வச்சுக்குறேன் உன்னை” என்று பல்லைக் கடித்தவன், ஒற்றை கையால் பெண்ணவளை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“ப்ளீஸ் விடுங்க சார்... நான் போகணும். அது தான் நேத்து முழுக்க வச்சு செய்தீங்கள்ள. என்னை விட்டுடுங்களேன்” என்று அவள் கெஞ்ச கெஞ்ச மாடிக்கு தூக்கிக் கொண்டு போனவன் படுக்கையில் அவளை வீசி விட்டு அவளின் மீது கவிழ்ந்துக் கொண்டான்.
அவனது பாரத்தை தாங்க முடியாமல் அவள் நெளிய,
“ஒழுங்கா இருந்தா இன்னைக்கு ஈவினிங் உன்னை விட்டுடுவேன். இல்ல ஒரு வாரம் ஆனாலும் விட மாட்டேன்டி” என்று அவன் சொல்ல அதன் பிறகு அவள் அசைவாளா என்ன? பொம்மை போல அப்படியே கிடந்தாள்.
“கையை எடுத்து என்னை கட்டி பிடி” என்றான்.
“ஹாங்” என்று அவள் விழிக்க, அவளின் நெஞ்சில் இருந்து தலையை தூக்கி அவளை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையில் அரண்டவள் பட்டென்று தன்னோடு சேர்த்து அவனை பிடித்துக் கொண்டாள்.
“ம்ம்ம்” என்று சொல்லியவன் அப்படியே படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இவளுக்கு தான் இயற்கை உபாதை, பசி என எல்லா உணவும் எழுந்தது...
சிறிது நேரம் பார்த்தவள் கட்டுப் படுத்தா முடியாமல் அவனது தோளை சுரண்டினாள்.
“ப்ச் என்னடி?” என்று முறைத்தான்.
“பசிக்கிது” என்றாள்.
“நான் என்ன உன் புருசனா... உரிமையா பசிக்கிதுன்னு கேக்குற.. உன்னை கொடுமை படுத்த தூக்கிட்டு வந்து இருக்கேன். நாள் நேரம் பட்டினியா கிட செத்துட மாட்ட” என்றவன் அவள் மீது மீண்டும் படுத்துக் கொண்டான். ஆனால் அவனது கை கதிருக்கு மெசேஜ் போட்டது.
அடுத்த அறை மணி நேரத்தில் உணவு வந்து விட,
“போய் சாப்பிடு” என்று அவள் மீது இருந்து எழுந்துக் கொண்டான்.
“நாலு நேரம் சாப்பிடமா இருந்தா செத்துட மாட்டேன்” என்று சொன்னவள் எழுந்து அங்கிருந்த பாத்ரூமுக்கு போயிட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
“எனக்கென்ன வந்துச்சு... கிட பட்டினியா” என்றவன் மருதாணி போல அவளிடம் அப்பிக் கொண்டான். ஒரு அரைமணி நேரம் கடந்து இருக்கும். அவனது பாரத்தை தாங்க முடியவில்லை. ஏசி ஓடிய பொழுதும் அவளுக்கு வியர்த்தது. சாப்பிடவில்லை என்றால் அவளுக்கு கைகாலெல்லாம் வெடவெடவென்று ஆடும். அதோடு குப்பென்று வியர்த்து விடும்.
இப்பொழுதும் அதே போல ஆக,
“என்னடி நசநசன்னு இருக்க” என்று எரிந்து விழுந்தான். அவளின் கண்களில் பசி மயக்கம் அப்பட்டமாய் தெரிய,
“ம்கும் இந்த ரோசதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..” திட்டியவன்,
“போய் தின்னுட்டு வா” என்றான்.
“வேணாம்” என்று அவள் வீம்பு பிடிக்க,
“இப்போ நீ போகலன்னா உன்னை என்னவேனாலும் செய்வேன்டி” மிரட்டினான்.
அவள் அசையாமல் போகவும் வேகமாய் அவளின் டாப்ஸை தூக்க பட்டென்று அவனது கையை தட்டி விட்டவள் வேகமாய் அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள்.
“கிராதகன்.. ஒரு நிமிடம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டிக்கிறானே” என்று முணகிக் கொண்டே உணவு மேசையில் பரத்தி வைத்து இருந்த உணவை தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு நவநாகரிகமாக உண்ண ஆரம்பித்தாள்.
அவள் நாசுக்காக உண்ணும் அழகை மேலிருந்து பார்த்தவனின் காதில் கதவு உடை படும் சத்தம் கேட்டது.
கதிர் அலுவலக வேலையாக வெளியே போய் விட இவனே வந்து கதவை திறந்தான். ஏந்திழையாள் உணவில் மட்டுமே கவனம் வைத்து இருந்தாள்.
கதவு திறந்த அடுத்த நொடி ஏந்திழையாளின் தமையன்மார்கள் ராசசிங்கனை தள்ளி விட்டுட்டு உள்ளே நுழைந்தார்கள். ராசசிங்கன் ஓரமாய் கதவில் சாய்ந்துக் கைகளை கட்டிக்கொண்டு உள்ளே போகிறவன்களை அழுத்தமான பார்வை பார்த்துக் கொண்டு நின்றான்.
வீட்டினுள் திபு திபுவென்று ஆட்கள் வரும் சத்தம் கேட்க திகைத்து திரும்பி பார்த்தவள், அங்கே அவளது அண்ணன் மார்கள் மாமன் மார்கள் வந்து இருக்க வேகமாய் உணவு மேசையில் இருந்து எழுந்து அவர்களை நோக்கி ஓடினாள். ஆனால் அதற்குள் புயல் வேகத்தில் இருவருக்கும் நடுவே வந்து நின்றான் சிங்கன்.
“ராசசிங்கன் மரியாதையா நகர்ந்துடு இல்லன்னா நடக்குறதே வேற” என்று யுகேஷ் அவனது நெஞ்சில் கையை வைத்து தள்ள பார்க்க,
“என்னை மீறி ஒருத்தனும் அவகிட்டக்க நெருங்க முடியாதுடா” என்று அனல் அடித்தான் சிங்கன்.
“அதையும் பார்த்திடுவோம்டா” என்ற கார்த்திக் அவனது நெஞ்சில் எட்டி மிதிக்க ஒரு அசைவு கூட அவனிடம் இருக்கவில்லை.
கல்லு போல அப்படியே நின்றான். அதை பார்த்த நடாஷ், “நீ நகருண்ணா” என்று சொல்லி சிங்கனின் முகத்திலே ஓங்கி ஒரு குத்து விட்டான். அதற்கும் அவன் அசையவே இல்லை. ஆனால் ஒவ்வொரு அடிக்கும் சிங்கனின் கண்கள் அகோரமாக சிவந்து போய் இருப்பதை பார்த்த ஏந்திழையாளுக்கு அடிவயிற்றில் பயம் தொற்றிக் கொண்டது.
சிங்கனின் முழு அவதாரத்தை அவள் மட்டும் தானே பார்த்து இருக்கிறாள். அதனால் தானாகவே அவளுக்கு பயம் வந்தது.
“அண்ணா ப்ளீஸ்... அவரை அடிக்காதீங்க” என்று இருவருக்கும் இடையில் வந்து நின்றாள். சட்டென்று சிங்கன் திரும்பி பெண்ணவளை ஒரு பார்வை பார்த்தான்.
அது அவன் மேல் கருணை கொண்டு சொல்லவில்லை என்று அவனுக்கு மிக நன்றாகவே தெரியும். தன் மீது இருந்த பயத்தில் தான் சொல்கிறாள் என்று அறிந்தவனுக்கு இதழ் கடையோரம் சிறு புன்னகை முகிழ்த்தது.





