அத்தியாயம் 16

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஏன் அன்னைக்கு உன் மவனும் மருமவனும் என்னை பேசல... அன்னைக்கு நீ சும்மா தானே நின்ன... இன்னைக்கு நான் பேசுறேன் மூடிட்டு கேளு” என்று அவருக்கு அவருடைய வயதுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல் எடுத்தெறிந்து பேசினான்.

அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார் வேல்முருகன். அவருக்கு பேச தெரியாமல் இல்லை. தன் பேத்தியின் பொருட்டே இந்த அமைதி. இல்லை என்றால் வேல்முருகனின் பாணியே வேறு விதமாக இருக்கும்.

“என்னா பெருசு வாயையே திறக்க மாட்டிக்கிற..? அதுக்குள்ளவா மௌன விரதத்துக்கு போயிட்ட” என்று வேல் முருகனின் அமைதியை நக்கல் பண்ணினான் ராசசிங்கன்.

“தம்பி என் பேத்தி” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க,

“இப்ப தானே உன்னை பேச வேணான்னு சொன்னேன். அதுக்குள்ள எதுக்கு நீ உன் வாயை திறந்த... அதனால எனக்கு உன்கூட பேச இருந்த மூட் போயிடுச்சு.. சோ நீ மூடிட்டு போனை வை” என்று இவன் வைத்து விட்டான்.

போனை வைத்து விட்டு எட்டி நின்று அவரின் பேத்தி நிலையை பார்த்தான்.

கீழே விழுந்து இரத்த காயங்களோடு எப்படி மயங்கி கிடந்தாளோ அதே போலவே இப்பவும் கிடந்தாள். ஒரு அசைவு அவளிடம் இல்லை. அவளை வெறுப்பு கக்கும் விழிகளால் பார்த்தவன்,

“உனக்காக தான்டி அவனுங்க என்னை பேசக் கூடாத பேச்செல்லாம் பேசினானுங்க... நான் யாரு தெரியுமா? என் உயரம் என்னன்னு தெரியுமா? என்னையவே நிக்க வச்சு ஆம்பளை விபச்சாரின்னு சொல்லிட்டானுங்க...”

“என் முன்னாடி அரசியல் கட்சி பயலுங்க கூட நிக்க பயப்படுவானுங்க. அப்படி பட்ட என்னை உன் குடும்பம் மொத்தமும் சேர்ந்து அவமானப் படுத்திட்டானுங்கடி.. அதை இப்ப நினைச்சாலும் என் உடம்பு மொத்தமும் எரியுது. பதிலுக்கு பதில் அவனுங்களுக்கு குடுக்காட்டி நான் என்னடி ஆம்பிள்ளை... என்கிட்டே அவனுங்க வாங்குவானுங்க.. உன்னை வச்சே அவனுங்க கண்ணை நோண்டுறேன்டி..” என்று வக்கிரமாக அவளை பார்த்து சொன்னவன் மீண்டும் அறைக்கு உள்ளே போய் கொக்கினை இழுக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவனுக்கு வேண்டிய போதை அதில் இல்லாமல் போக,

“டேய் பரதேசி” என்று அவனுடைய பியேவுக்கு போனை போட்டு திட்டு திட்டு என்று திட்டினான்.

“இதுக்கு மேல ஒரு அவுன்ஸ் கூட குடுக்க முடியாது பாஸ்” என்று அவன் சொல்ல,

“வந்தேன்னு வை செருப்பு பிஞ்சு போயிடும்டா” என்று இயலாமையில் கத்தினான்.

“இதோட பல செருப்பு பிஞ்சு போய் இருக்கு சார். அதோட இன்னொரு செருப்பு பிஞ்சாலும் ஒன்னும் மோசமில்லை” என்று அந்த பக்கமிருந்து குரல் வர,

“ஏன்டா என்கிட்டையே ஏகத்தாளமா பேசுறியா... இரு உன் சீட்டை இப்பவே கிழிக்கிறேன்” என்றான் இவன்.

“முதல்ல அதை செய்யுங்க சார்... நான் ஹனிமூனுக்கு ஊட்டிக்கு போயிட்டு வரேன். கல்யாணமாகி மூணு வருசம் ஆச்சு. இன்னவரை ஒரு நாள் கூட லீவே விட்டது இல்லை” என்றான்.

“ஓ... உனக்கு ஹனிமூன் கேக்குதா?” என்று கறுவியவன்,

“ஆமா இப்ப நீ எங்க இருக்க...?” என்று கேட்டான்.

“வெளில வாசல்ல தான் சார் இருக்கேன்...” என்றான் அவன் அவசரமாய்.

“அங்கயே கிடடா பரதேசி... ஹனிமூனு கேக்குதோ ஹனிமூனு.. பனியிலே கிடந்து சாவு. வீட்டுக்கு போன முதல் டெட் பாடி நீ தான்” என்று வைத்து விட அவன் “சார் சார் சார்...” என்று அலறினான்.

“இந்த சாருக்கு வாக்கப்பட்டு நிதமும் சீரழியிறேன்... என் பொண்டாட்டி வேற உனக்கெல்லாம் எதுக்கு ய்யா கல்யாணம். உன் பாஸை கட்டிக்கிட்டே அழுவ வேண்டியது தானேன்னு திட்டுறா..” புலம்பியவன் அவனுக்கு என்று கொடுத்து இருந்த காட்டேஜில் போய் படுத்து விட்டான்.

கொஞ்சம் நேரம் கூட ஆகி இருக்காது அவனுக்கு போன் பறந்தது.

“டேய்” என்று நிதானமாக ராசசிங்கன் அழைத்தான்.

“சார்” என்று பதறிப்போனான்.

“உண்மையாவே எனக்கு போதை ஏறலடா” என்று உள்ளடங்கிப் போன குரலில் அவன் சொல்ல,

“சார்... சார்... நீங்க ஒன்னும் யோசிக்க வேணாம்.. நான் இப்பவே கீர்த்தி மேடமை வர சொல்றேன்” என்று போனை வைத்தவன்,

கீர்த்திக்கு போனை போட்டு அபினை எடுத்து வர சொன்னான்.

அடுத்த சில நிமிடங்களிலே அவள் வந்து சேர்ந்தாள். அவளுக்கு கதவை திறந்து விட்டவன்,

“சார் மேல இருக்காங்க மேடம்” என்றான்.

“ஐ வில் டேக் கேர்” என்று அவள் மேலே போய் விட்டாள். கீழே படியில் ஒரு உயிர் குற்றுயிரும் குழை உயிருமா இருப்பதை அவள் கவனிக்கவே இல்லை. ஆனால் அவனது பியே பார்த்து விட்டான்.

அடித்து பிடித்துக் கொண்டு ஏந்திழையாளிடம் ஓடியவன் அவளுக்கு முதலுதவி செய்ய அருகே போக,

அவனது கையில் இருந்த முதலுதவி பெட்டியை காலால் எட்டி உதைத்து தூர வீசிய ராசசிங்கன் தீயாய் அவனை முறைத்தான்.

“சார்” என்று அவன் பதற்றமாக,

“அவ யாருன்னு தெரிஞ்சும் அவளுக்கு சேவை செய்ய போறியா?” என்று இரும்பென அவனது சொற்கள் வர,

“சார் பாவம் சார் அவங்க.. பிளட் ரொம்ப போய் மயக்கத்துல இருக்காங்க..” என்றான் அவன்.

“கதிர்...” என்று அவன் கர்ஜிக்க அமைதியாக வெளியே வந்து விட்டான். மனமெல்லாம் பாரமாகிப் போனது... தன் இடத்துக்கு வந்தவுடன் தன் மனைவிக்கு போனை போட்டு பேசி மனதை ஆறுதல் படுத்திக் கொண்டான் கதிர்.

நடு சாமத்துக்கு மேல் விழிப்பு வர கண்களை திறந்து பார்த்தாள் ஏந்திழையாள். எங்கே இருக்கிறோம் என்று ஒன்றுமே புரியவில்லை. சுற்றி முற்றி பார்த்தவளுக்கு மாலை நேரம் நடந்தது எல்லாம் நினைவுக்கு வர பெரும் அச்சம் எழுந்தது.

அவ்வளவு பெரிய வீட்டில் நேற்றைக்கு யாருமே இல்லாததை உணர்ந்தவள் இப்பொழுது ராசசிங்கனுமே இல்லாமல் இருப்பதை உணர்ந்து வேகமாய் வெளியே போக பார்த்தாள். ஆனால் கதவை அவளால் திறக்கவே முடியவில்லை. சுற்றி சுற்றி வந்தவளுக்கு வெளியே போகும் மார்க்கம் மட்டும் தென்படவே இல்லை.தலை வேறு வின் வின் என்று தெறிக்க அவளால் ஒன்றுமே முடியவில்லை.

அந்த நேரம் மேல இருந்து சத்தம் வந்தது...

“ம்ம்ம்”

“ஆஆ...”

“ஷ்ஷ்ஷ்” என்று மாற்றி மாற்றி சத்தம் வர என்ன இது என்று மேலே போய் பார்த்தாள். அங்கே ராசசிங்கனும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து போதை பொருளை உபயோகித்துக் கொண்டு இருப்பதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“ச்சீ இந்த ஹெபிட்டும் இருக்கா” என்று முணகியவள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு வீடு போய் சேர்ந்தால் என்ன என்று தோன்ற முன்பை விட அதி தீவிரமாக வெளியே போகும் வழியை தேடினாள்.

ஒரு இடம் கூட தென்படவில்லை. ராசக்கதவோ அழுந்த சாற்றி இருக்க வேறு வழி தான் தேடனும் என்று பார்த்தவளின் கண்களில் பெரிய கண்ணாடி கதவு தென்பட்டது.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:36 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top