அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

“மேல போய் வெயிட் பண்ணு” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.

அவன் போகவும் அப்பாடா என்று நிம்மதியானவள், பின் சுதாரித்து,

“ப்ளீஸ் எனக்கு அவனுங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். அவனுங்களை எதுவும் செஞ்சுடாதீங்க” என்று பதட்டத்துடன் சொன்னவளை நின்று இரசித்தவன்,

“ரைட்டு” என்று ஒரு கணம் இடைவெளி விட்டவன், “அப்போ மத்தவங்கள்ல யாரையாவது போட்டுடலாம் தானே” அவளிடமே ஒப்பினியன் கேட்டவனை வந்த ஆத்திரத்துக்கு கத்தி வைத்து அவனை குத்தி விடலாமா என்று யோசித்தாள்.

“என்ன பேசாம இவனை கொன்னுடலாம்னு பார்க்குறியா?” என்று அவளின் நாடியை பற்றினான்.

“அச்சோ இல்ல” என்று அரண்டவள் மேலே ஓடிப்போனாள். போனவளை வெறித்துப் பார்த்தவன், தனக்கு சரக்கு ஊற்றிக் கொடுத்த வீடியோவை அவர்களின் குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அனுப்பி விட்டான்.

“சாவுங்கடா” என்று கொக்கரித்தவனுக்கு இன்னும் போதை வேண்டும் போல இருக்க தன் பியேவுக்கு போனை போட்டு கொக்கினை வர செய்தான். வெளியே போன வேலையை முடித்துக் கொண்டு கொக்கினோடு வந்து அமர்ந்தவன்,

“ஏய்..” என்று ஒரு உருமு உறுமினான்.. அவனது அந்த சத்தத்தில் அடித்து பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் ஏந்திழையாள்.

வெளியே வந்தவள் முன்பு அமர்ந்து இருந்த இடத்திலே ராசசிங்கன் அமர்ந்து இருப்பதை பார்த்து தயக்கத்துடன் கீழே வந்தாள்.

அவள் மெதுவாக வருவதை பார்த்து “ஏன் அம்மணி க்கு காலுல சுளுக்கா... வேகமா வாடி” என்று இரைந்தான். வீட்டில் வேறு எந்த சத்தமும் இல்லாததால் ராசசிங்கனின் சத்தம் எல்லா மூலையிலும் பட்டு எதிரொலித்து அவளை மேலும் பயமுறுத்தியது.

பட்டென்று படியில் ஓடிவர கால் தடுமாறி மேல் படியில் இருந்து உருண்டு விழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு படியிலும் அவளது தலை இடித்துக் கொண்டு கீழே விழ ராசசிங்கன் கொஞ்சம் கூட அசையவே இல்லை. அப்படியே சோபாவில் அமர்ந்து இருந்தான். முன் நெற்றி லேசாக பிளந்து உதிரம் சொட்ட சொட்ட கடைசி படியில் படியில் வந்து விழுந்தவள் தன் எதிரில் கால் மேல் கால் போட்டு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் தான் விழுவதை பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தவனையே பார்த்தவள் அப்படியே மயக்கமாகிப் போனாள்.

அவளின் நிலையை பார்த்து இரசித்தவன் “நீயும் அவனுங்களோட சேர்ந்து செத்துப் போடி” என்று கருவியவன் அங்கு மண்டை பிளந்து உதிரம் கொட்ட மயக்கத்தில் விழுந்து சுய நினைவை இழந்தவளை பற்றி எந்த அக்கறையும் கொள்ளது தான் கொண்டு வந்து இருந்த வெள்ளை நிற பவுடரை புறங்கையில் கொட்டி மூக்கில் வைத்து இழுத்தான்.. மெல்ல மெல்ல போதை தலைக்கு ஏறியது.

தன்னை சுற்றி எல்லாம் பறப்பது போல இருக்க,

“ஐ லவ் திஸ் பீல்... இன்னும் இன்னும் வேணும்... பத்தல பத்தல” என்று அவன் வாய் குழறியது...

எடுத்துக் கொண்ட அளவு போதாமல் இன்னும் இன்னும் என்று சொல்லி மேலும் மேலும் எடுத்துக் கொண்டான். தன்னையே முற்றும் முழுதும் மறந்துப் போனான் போதையில்.

அதே நேரம் இங்கே சுரேஷ் சபேஷ் இருவருக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் வெளியே மனக்கவலையுடன் சொற்கலற்று போய் நின்று இருந்தார்கள்.

வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை செக் பண்ண சொல்லி சொல்லி இருந்தான் கார்த்திக். உள்ளே கேட்ட மருந்துக்களை எல்லாம் வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் யுகேஷும் வருணும். பெண்கள் எல்லோரும் கண்ணீரில் இருக்க ஆண்களுக்கு வெளியே சொல்ல முடியாத அளவுக்கு துக்கத்தில் இருந்தார்கள்.

வீட்டில் பெரும்பாலும் எந்த அசம்பாவிதங்களும் இதுவரை நிகழ்ந்ததே இல்லை. வெறும் காய்ச்சல் தலைவலி என்று தான் இருக்கும். முதல்முறை இரத்த வெள்ளத்தில் அதுவும் வீட்டுக்குள்ளே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருப்பதை யாராலும் அவ்வளவு எளிதாக சீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

சற்று முன்பு வரை கூடத்தில் எல்லோருடனும் சிறிது பேசிவிட்டு தான் இருவரும் மேலே சென்றார்கள். ஆனால் போய் கொஞ்ச நேரத்திலே இந்த நிகழ்வு நடந்து இருந்தது.

அதை எண்ணியவர்கள் இன்னும் வேதனையில் ஆழ்ந்தார்கள். வெளிநாட்டில் இருக்கும் தங்களின் மகன் மகன் மகளுக்கு தகவல் சொல்ல போனை எடுத்த சின்னப்பொண்ணு அதில் வந்த வீடியோவை பார்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

“என்னங்க” என்று அவர் கூப்பாடு போட அனைவரும் அவரை சூழ்ந்துக் கொண்டார்கள். என்ன ஏது என்று பார்க்க அவர்களின் குடும்ப வாட்சப் க்ரூப்பில் ராசசிங்கனுக்கு மதுவை ஊற்றிக் கொண்டு அமர்ந்து இருந்த அவர்கள் வீட்டு செல்ல பெண்ணை பார்த்தவுடன் அக்கினியை அள்ளி மேலே கொட்டியது போல துடிதுடித்துப் போனார்கள் அனைவரும்.

இது எப்படி நிகழ்ந்தது...? எங்க நிகழ்ந்தது? இழை எங்கே என்று அதன் பிறகே அவளை தேடினார்கள் அனைவரும். அவள் எங்குமே இல்லை. அவர்களது வீட்டில் இந்து இடுக்கு விடாமல் ஆட்களை விட்டு தேட சொல்ல அவளை எங்குமே காணவில்லை. நம்மோடு வந்தாளா இல்லையா என்று அதன் பிறகே அனைவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அடுத்து வந்த மணி துளிகள் எல்லாம் ஏந்திழையாளை தேடுவதிலே சென்றது. ராசிசிங்கனுக்கு இடைவிடாமல் எல்லோரும் போட்டு பார்க்க அவனும் எடுக்கவில்லை. அவளின் எண்ணுக்கு போன் போட்டால் அதுவும் எடுக்கப்பட வில்லை.

வேல்முருகனுக்கு காலுக்கு கீழ் நிலம் நழுவியது போல இருந்தது. எதெல்லாம் நடக்க கூடாது என்று ராசசிங்கனை தங்களை விட்டு தள்ளி வைக்க நினைத்தாரோ இப்பொழுது அதுவே நடந்துக் கொண்டு இருக்கிறதை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இத்தனை வருட வாழ்க்கையில் முதல்முறை அவரின் குடும்ப கௌரவம் கேலியாகிப் போனது போல இருந்தது.  கண்ணுக்குள் வைத்து வளர்த்த பேத்தியின் கண்களில் தெரிந்த கண்ணீர் அவரை மிகவும் அச்சுறுத்திப் பார்த்தது. ராசசிங்கன் கண்களில் தெரிந்த பலிவெறியில் இவருக்கு உயிர் சுருங்கிப் போனது. யாரும் அறியாமல் தனித்து எழுந்து வந்தவர்,

கைகள் நடுங்க ராசசிங்கனின் தனிப்பட்ட எண்ணுக்கு முதல்முறை போனை போட்டார்.

“என்ன கிழட்டு சிங்கம் இந்த ராசசிங்கனுக்கு போன் போடுது.. என்ன அதிசயம்” என்று அந்த பக்கம் இருந்து நக்கல் மொழியில் கேட்டான் அவன்.

“என் பேத்தியை விட்டுட்டு ப்பா” என்றார் குரல் கமற.

“விடணுமா... அப்படி எல்லாம் விட முடியாது பெருசு.. கட்டம் கட்டி அவளை தூக்கி இருக்கேன். ரொம்ப சுலபமா விட சொல்றியே” என்று இன்னும் நக்கல் செய்தவன்,

“ஆமா உன் பேரனுங்க உயிர் பிழைப்பானுங்களா இல்ல பாடை தானா? ஏன் கேக்குறேன்னா மலர் வளையாத்துக்கு சொல்லணும்ல அதுக்கு தான்” என்று அவரை உயிர்வதை செய்தான்.

“ஏன் ப்பா இப்படி எல்லாம் பேசுற?” என்று குரல் நடுங்கிப் போனார்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:35 pm
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top