அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

“பைன்” என்றவன் ரிமோட்டை எடுத்து டிவியை போட்டான். ஒரு பக்க சுவர் முழுவதும் டிவி திரை தான். ஏதோ வித்தியாசமான சத்தமாக இருக்க இவனை பார்த்து அமர்ந்து இருந்தவள் பட்டென்று திரை பக்கம் திரும்பி பார்த்தாள்.

அங்கே சுரேஷுக்கு போய் கொண்டு இருந்த சுவாசக் குழலை யாரோ கத்தி வைத்து அறுத்துக் கொண்டு இருக்க பக்கென்று ஆனது. எழுந்தே விட்டாள்.

பெண்ணவளின் விழிகளில் உயிர் பயம் தெரிந்தது. விக்கித்துப் போனவள் விழிகள் கலங்க மறு பேச்சு பேசாமல் அவன் அமர்ந்து இருந்த மேசை நோக்கி நகர்ந்தாள்.

அவனை கொஞ்சம் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அருகில் இருந்த உடைக்கப்படாத உயர்வகை மது பாட்டிலை எப்படி திறப்பது என்று தட்டு தடுமாறி கைகள் நடுங்க ஒரே ஒரு மிடறு மட்டும் குடிக்கும் அளவுக்கு இருந்த விலை உயர்ந்த கிளாசில் ஊற்றினாள்.

சட்டென்று பேலன்ஸ் செய்ய முடியாமல் சிறிய கிளாஸ் நிரம்பி கீழே சிந்தி விட பயந்துப் போய் ராசசிங்கனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். கீழ சிந்தியதற்கு ஏதாவது சொல்லுவான் என்று அவள் பார்க்க அவனோ ஒன்றுமே சொல்லாமல் அவள் ஊற்றியதை எடுத்து குடித்தான். அவன் குடிக்க குடிக்க இவள் ஊற்றிக் கொண்டே இருந்தாள்.

ஒவ்வொரு ஸிப்புக்கும் தூக்கி தூக்கி ஊற்ற கை வலி எடுக்க ஆரம்பித்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இதழ்களை கடித்துக் கொண்டு மிகப் பொறுமையாக அவனுக்கு ஊற்றிக் கொண்டு இருந்தாள். அதன் ஸ்மெல் அவளுக்கு ஒவ்வாமையை கொடுத்தாலும் கடனே என்று ஊற்றிக் கொடுத்தாள்.

அவளுக்கு இதோடு இவனுடைய இம்சை முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே முகத்தை சுளிக்காமல் நிர்மலாக வைத்துக் கொண்டு வேலை செய்தாள்.

“என்ன இன்னைக்கு முழுக்க சரக்கு ஊத்திக் குடுத்தே பாஸ் பண்ணிடலாம்னு நினைச்சியா?” என்று திடுதிப்பென்று கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்து, “அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என்றாள்.

“அப்படி தான்னு எனக்கு நல்லாவே தெரியும்டி” என்றான் எகத்தாளமாக. தான் மனதில் நினைப்பதை கண்டு கொள்பவனிடம் எதையும் மறைக்க முடியாமல் தடுமாறினாள்.

“அப்படி தானேடி நினைச்ச” என்று அவன் அழுத்தம் திருத்தமாக கேட்க அவள் பதில் பேசாமல் தலையை கவிழ்ந்துக் கொண்டாள்.

“விவரம் தான்டி” என்று சொன்னவன், “போதும் நீ சரக்கை ஊத்தி கொடுத்தது. இந்த கண் கொள்ளா காட்சியை அப்படியே உன் பேமிலிக்கு அனுப்பி வைக்கலாமா?” என்று அடுத்த குண்டை போட்டான்.

தன் தலையில் இடி விழுந்தாள் கூட இந்த அளவுக்கு கலங்கி போய் இருக்க மாட்டாள். இவன் புது விதமாக ஒவ்வொரு முறையும் செய்யும் பொழுது எல்லாம் பெரிதாக கலங்கிப் போனாள்.

“ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க.. ப்ளீஸ்” என்று கண்ணீரோடு அவள் கெஞ்ச,

“என்னவோ உன்னை கட்டிக்க எனக்கு தகுதி இல்லன்னு குதிச்சானுங்களே... இப்போ அந்த குடும்ப குத்து விளக்கு எனக்கு சரக்கை ஊத்தி குடுக்குதே. இந்த கண் கொள்ளா காட்சியை அவனுங்க கிட்ட காட்டியே ஆகணும்னு என் மனசு போட்டு பிராண்டுதுடி. என்ன செய்யலாம்?” என்று இரக்கமே இல்லாமல் அவளிடமே கேட்டான்.

அவளால் பதிலே சொல்ல முடியவில்லை. வெறுமென கண்ணீர் வழிய அவனுக்கு முன்னாடி நின்றாள்.

“எனக்கு பதில் பேசணும். இல்லன்னா இதை இப்படியே கொஞ்சம் கூட எடிட் பண்ணாம ராவா அப்படியே அனுப்புவேன். உன் பேமிலிக்கு மட்டும் இல்ல சோஷியல் மீடியாவுக்கும் அனுப்புவேன்” என்று அவன் பூச்சாண்டி காட்ட பயந்துப் போனாள்.

“ப்ளீஸ் அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க..” என்று கலங்கியவள், “என்ன செய்யணும்?” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்டாள்.

“தட்ஸ் குட் பேபி” என்று அவளின் கன்னம் தடவினான். அதில் தீப்பட்டது போல துடித்துப் போனவள் சட்டென்று விலக பார்க்க,

“என் தொடுகையை பழகுடி. இன்னும் எத்தனை நாள் என்னை விட்டு விலகியே இருப்ப...” என்று அவளின் இடையை பற்றி வளைத்து பிடித்தவன் அவளின் காதோரம் சற்றே சரிந்து,

“ஆமா எங்க உன் ட்ரேட்மார்க் சேரிய காணோம்” என்று கேட்டான்.

“இல்ல அவசரத்துல...” என்று அவனது உரசலில் வாய் தந்தி அடிக்க ஆரம்பித்தது.

“எவ்வளவு நேரம் ஆனாலும் சரி நீ சேரியோடவே வாடி. அதுல தான் கிக்கு அதிகம்” என்று அவளின் டாப்க்குள் கையை விட்டு அவளின் வெற்று இடையை மிக இறுக்கமாக இறுக்கிப் பிடித்தான் ராசசிங்கன்.

அவனது அந்த இறுக்கமான பிடியில் விக்கித்துப் போனாள். விழிகளில் பயத்துக்கு அடையாளமாய் சிவந்துப் போனது. உடல் தனிச்சையாக விரைத்துக் கொண்டது. அவளின் தேய(க)த்தில் தன் கை பட்ட உடன் ஏற்படும் மாற்றங்களை கண்டு,

“என்ன கம்பளி பூச்சி ஊருற மாதிரி இருக்கா” என்று நக்கலாக கேட்டான். அவளுக்கு அது புரியாமல் போக “புரியல” என்றாள் பாவமாய்.

“இல்ல ஆஸ்யூசுவல்  எல்லா பொண்ணுங்களும் பிடிக்காதவன் கை பட்டா கம்பளி பூச்சி ஊருற மாதிரி இருக்குன்னு டைலாக் விடுவீங்களே.. அதை சொன்னேன்” என்றான்.

அவளுக்கு இதுக்கு என்ன ரியாக்ட் பண்ணுவது என்று கூட தெரியவில்லை. முன்ன பின்ன இது மாதிரி அனுபவம் இருந்தா ஏதாவது சொல்லி இருப்பாள். இவன் தொடுகையே ஏதோ பெரிய கல்லை வைத்து அழுத்துவது போல இருக்க இதில் எங்கிருந்து கம்பளி பூச்சி ஊறுதா, இல்லை மயிலிறகு மாதிரி இருக்கான்னு ஆராய்ச்சி பண்ண...

“ப்ளீஸ் இதெல்லாம் வேணாமே... முன்ன மாதிரி உங்களுக்கு நான் சரக்கே ஊத்தி குடுக்குறனே” என்று சொன்னாள்.. என்னெனில் ஏந்திழையாளின் கழுத்தோரம் ராசசிங்கனின் இதழ்கள் உரசி ஊறி தோய்ந்துப் போனது.

அந்த உணர்வுகளை தாங்க முடியாமல் அவள் தவித்துப் போய் அவனிடம் கேட்க,

“சரி சொல்லு உனக்கு அவனுங்க ரெண்டு பேத்துல யார ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டான். அவளின் வாசத்தை நாசியில் இழுத்து தனக்குள் சேகரிப்பது போல அவன் செய்ய, அவனது செயலில் அதிகம் அருவெருப்புக் கொண்டு தனக்குள் கூனி குறுகினாள்.

“சொல்லுடி யாரை ரொம்ப பிடிக்கும்” அவன் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் அவளை வதைக்கும் வேலையை செவ்வென செய்துக் கொண்டு இருந்தான்.

“சபேஷ்” என்று சொல்ல,

“அப்போ மற்றவனை போட்டுட சொல்லிடவா?” என்றான் அசால்ட்டாக. அதில் பதறிப் போனவளின் கண்களில் முணுக்கென்று கண்ணீர் நிறைந்து விட்டது. அது வழிந்து அவனது கன்னத்தில் பட,

“ப்ச்” என்று தன் கன்னத்தை துடைத்துக் கொண்டவன், இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி அவளின் வாசனையை இன்னும் கொஞ்சம் தேடினான்.

“ப்ளீஸ் அவனை விட்டுடுங்க” என்றாள் இயலாமையுடன்.

“அப்போ நான் உன்னை தொடலாம் தானே... இல்லை தடை போடுவியா?” என்று வக்கிரமாக கேட்டான். அதை சொல்லும் பொழுதே அவனது முகம் அப்படி சிவந்துப் போய் இருந்தது. அவனது கோவத்தை கண்டு அவளின் தலை தானாக ஆடியது.

“இல்லன்னா ஒரு உயிர் போயிடும் இல்ல.. அந்த பயம் இருக்கு போல இந்த நெஞ்சுல” என்று சொல்லி அவளின் நெஞ்சை தொட்டான். விதிர்விதிர்த்துப் போனாள்.

“என் தொடுகையை முழுமையா பழகிக்க.. இல்லன்னா உனக்கு தான் கட்டல்(கஷ்ட்டம்)” உதடு பிதுக்கியவன் அவளின் நெஞ்சில் அப்படியே தலை வைத்து சாய்ந்துக் கொண்டான். அவனது பாரத்தை தாங்க முடியாமல் அவள் தள்ளாட,

“ப்ச் என்னை சுமக்க கூட முடியலையாடி உனக்கு.. இல்ல நடிக்கிறியா?” என்று பாம்பாக கொத்தினான்.

“இல்லங்க” என்று அவள் தொண்டை வறண்டுப் போனாள்.

“ஒழுங்கா நின்னு தொலை... இந்நேரத்துக்கு உன் இடத்துல ரேஷ்மி இருந்து இருந்தா நடக்குறதே வேறயா இருந்து இருக்கும்” என்று அவளை அவமானம் செய்தவன் அவளிடம் இருந்து விலகிக் கொண்டவன்,

“மேல போய் வெயிட் பண்ணு” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:34 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top