“உண்மையா தான் பாட்டி... ரொம்ப டையர்டா இருக்கவும் அப்படியே பாத் டப்புல தூங்கிட்டேன். நான் பிரெஷ் ஆகிட்டு வரேன். நீங்க எல்லோரும் போங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு நிதானமாக குளிக்க ஆரம்பித்தாள்.
நீண்ட நேரம் தண்ணீரிலே இருக்கவும் அவளுக்கு என்னவோ போல் வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு குளித்து வெளியே வந்தாள்.
வந்தவளுக்கு சூடாக பானம் கொண்டு வந்து கொடுத்த தாயின் மடியிலே தலை வைத்து படுத்துக் கொண்டாள். என்னவோ தனியா இருக்கவே பயமாக இருந்தது.
அப்படியே மீண்டும் கண்கள் அசர கீழே ஒரே சத்தமாக இருந்தது. என்ன என்று ஓடிப்போய் பார்த்தாள். அங்கே இரத்த வெள்ளத்தில் அவளது சின்ன அத்தை மகனும் சபேஷ் பெரியப்பாவின் இன்னொரு மகன் சுரேஷும் கிடந்தார்கள்.
எப்படி விழுந்தார்கள், எங்கிருந்து விழுந்தார்கள், யார் தள்ளி விட்டார்கள் என எதுவும் புரியவில்லை. அதுவும் வீட்டுக்குள்ளயே... யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வீட்டின் மேல் தளத்தில் இருந்து நடு கூடத்தில் விழுந்து இருப்பது மட்டும் புரிந்தது அனைவருக்கும். விழுந்த வேகத்தில் தரையில் மோதி மண்டை பிளந்து உதிரம் கொட்ட ஆரம்பித்தது...
எல்லோருமே ஒரு கணம் விக்கித்துப் போய் விட்டார்கள். வேகமாய் செயல்பட அவர்களால் இயலவில்லை. மூச்சு திணறிப்போனது. இப்படி ஒரு நிகழ்வை கொஞ்சமும் யாரும் எதிர் பார்த்து இருக்கவே இல்லை.
ஏந்திழையாளுக்கு ராசசிங்கன் சொன்ன சொல் கண் முன் வர வாயை இறுகப் பொத்திக் கொண்டாள். இரண்டு உயிர் போனாலும் போகலாம் இல்ல மொத்த உயிரும் போகலாம் என்று எகத்தாளமாக சொன்ன அவனது சொற்கள் அவளது காதில் மீண்டும் மீண்டும் விழ வேகமாய் கடிகாரத்தை பார்த்தாள்.
அது ஐந்து மணி என்று காட்ட கால்கள் தடதடவென்று ஆடியது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே. அதற்குள் ஏன் இந்த அவசரம் என்று கலங்கிப் போனவள் ஓடி வந்து தன்னுடைய போனை பார்த்தாள்.
அதில் ஒரு மெசேஜ் மட்டும் வந்து இருந்தது. முகவரியாக. அதை பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர இதழ்கடித்து தன் வேதனையை போக்கிக்கொண்டவளின் காதில் வீட்டு ஆட்களின் அழுகை குரல் வந்து விழ அவளால் மேற்கொண்டு தாமதிக்கவே முடியவில்லை.
அதுவரை பாத் ரோப்பிப்லே இருந்தவள் வேகமாய் உடையை மாற்றினாள். அவசரத்துக்கு ஒரு சுடிதாரை எடுத்து போட்டவள் கீழே விரைந்தாள். அதற்குள் முதலுதவி செய்து இருவரையும் ஆளுக்கு ஒரு காரில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அவர்களின் பின்னோடு தன்னுடைய காரை செழுத்தியவள் இரண்டு காரும் மருத்துவமனைக்குள் நுழைவதை பார்த்த பிறகே அந்த முகவரியை நோக்கி வண்டியை செலுத்தினாள் ஏந்திழையாள்.
ஆறு மணி ஆவதற்கு கால்மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டாள். கண்ணு மண்ணு தெரியாத வேகம். வீட்டை விட்டு வெளியே போனால் தான் ராசசிங்கனால் தன் குடும்பத்தார்க்கு ஆபத்து வரும் என்று எண்ணி எல்லோரையும் வீட்டிலே இருக்க சொன்னாள்.
ஆனால் வீட்டில் இருந்த பொழுதே இருவருக்கும் இவ்வளவு அடிபட்டு இருக்கிறது என்றால் ராசசிங்கன் எல்லாவற்றிற்கும் துணிந்தவன் என்று உணர்ந்துக் கொண்டாள்.
வீட்டிலே இவ்வளவு தூரம் செய்தவன் இப்பொழுது மொத்த குடும்பமும் வீட்டை விட்டு மருத்துவமனையில் அல்லவா இருக்கிறது. அவனால் இப்பொழுது முன்பை விட எதுவும் எளிதாக செய்து விடலாமே... அப்படி என்றால் என்று கலங்கியவள் அவசர அவசரமாக வண்டியை ஓட்டிக் கொண்டு அவன் குறிப்பிட்டு இருந்த இடத்துக்கு வந்து இருந்தாள். கார் முழுவதும் அவ்வளவு புழுதி. அதுவே அவளின் வேகத்தை சொல்லி இருந்தது.
“தட்ஸ் குட்” என்று தன் முன்னாடி மூச்சு வாங்க வந்து நின்றவளை கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்துக் கொண்டே காக்டேயிலை ரசித்து ருசித்து சிப் பண்ணினான் ராசசிங்கன்.
அவனது அந்த நிதானத்தில் அடிவயிற்றில் பயம் சூழ்ந்தது. சற்று முன்பு வந்த கனவு அவளுக்கு நினைவுக்கு வர பயம் படர்ந்த விழிகளால் அவனை ஏறிட்டாள்.
பயந்த விழிகளுடனே தன் எதிரில் அமர்ந்து இருந்தவனை பார்த்தாள். பேச்சே வரவில்லை. எல்லாமே அடங்கிப் போனது போல இருந்தது. அனால் அவளின் கண்கள் மட்டும் ராசசிங்கனிடம் “ஏன் இப்படி செய்தாய்...” என்று கேட்டது. அந்த கண்களில் தெரிந்த பரிதவிப்பை ஆழ்ந்து இரசித்துப் பார்த்துக் கொண்டே உயர்தரம் வாய்ந்த கண்ணாடி கிளாசில் மிச்சம் இருந்த மதுவை பருகினான்.
அவனது பார்வையில் கண்கள் கலங்கியவளுக்கு மூச்சு இன்னுமே வாங்கியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவளை இன்னுமே ஆழ்ந்து இரசித்துப் பார்த்தான்.
வியர்வை அரும்ப தன் முன் வந்து நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன் எளியவர்கள் சட்டென்று விலை மதிக்க முடியாத தன் கைகடிகாரத்தை ஒரு பார்வை பார்த்தான்.
பின் இதழ்களை வளைத்து “நாட் பேட்” என்று புருவம் உயர்த்தினான்.
அதற்குள் தன்னை ஓரளவு சமன் செய்துக் கொண்டவள், “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று உதடுகள் நடுங்க கேட்டாள்.
“கேட்கல” என்று அவன் காதை குடைந்தான்.
“நான் தான் வரேன்னு சொன்னனே... பின்ன ஏன் இப்படி செய்தீங்க... அவனுங்க ரெண்டு பேரும் பாவம் இல்லையா? இரத்த வெள்ளத்துல அவனுங்களை பார்க்கவே முடியல..” என்று அவன் முன்னாடி நிற்க தெம்பு இல்லாமல் அப்படியே மண்டியிட்டு மடங்கி அமர்ந்தாள்.
அவனிடம் எதுவும் பேசக்கூடாது என்று தான் இருந்தாள். ஆனால் அவளால் எதையும் கேட்காமல் விட முடியவில்லை. வாய் திறந்து கேட்டு விட்டாள்.
“ம்ஹும்... அவனுங்க மேல ரொம்ப தான் பாசம் போல” என்று நக்கல் பண்ணினான் ராசசிங்கன்.
“ப்ளீஸ்... என்னை தண்டிக்கனும்னா என்னை மட்டும் தண்டிங்க.. என் குடும்பத்தை எதுவும் செய்யாதீங்க.. என்னால தாங்க முடியல” என்று அவனிடம் கைக்கூப்பி நின்றாள்.
அவளது அந்த ஸ்டேட்மென்டில் இதழ் வளைத்து நக்கலாக நகைத்தவன்,
“சோ உன்னை என்ன வேணாலும் செய்யலாம் இல்லையா?” என்று அவன் அவளை ஊடுருவினான்.
“நானே விலகினாலும் இனி நீங்க என்னை விட மாட்டீங்கன்னு நல்லா தெருஞ்சுக்கிட்டேன். சோ ப்ளீஸ் உங்க கோப தாபங்களை என்கிட்டே காட்டுங்க. உங்க வெறிக்கு என் குடும்பத்தை பலி ஆக்காதீங்க.. யாரும் தாங்க மாட்டோம்” என்று கெஞ்சினாள்.
“ஆர் யூ சுயர்?” மீண்டும் மீண்டும் அவளிடம் பதில் கேட்டு தன் வெறிக்கு அவளின் கண்ணிப்போகும் முகத்தை உணவாக்கிக் கொண்டான்.
“சுயர்...”
“ஹன்ரட் பெர்சென்ட் சுயர்” என்று மீண்டும் கேட்டான்.
“யா... ஹண்ட்ரட் பெர்சென்ட் சுயர்.. ப்ளீஸ் லீவ் மை பேமிலி” என்று கெஞ்சினாள்.
“தட்ஸ் ரைட்” என்றவன்,
“என்னோட கிளாஸ் காலி ஆகிடுச்சு... ஒரு ஸ்காட்ச் பாட்டில் ஓபன் பண்ணி பில் பண்ணு” என்றான்.
அவன் இப்படி கேட்பான் என்று தெரியாதவள் அதிர்ந்துப் போனாள்.
“ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல...” என்று கைகள் நடுங்கிப் போனது அவளுக்கு.
“இப்ப தான் உன் குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கோவத்தை காட்டு, தாபத்தை காட்டு நான் தாங்கிக்கிறேன் சொன்ன... ஆனா அதுக்குள்ள மறுக்குறியேம்மா” என்று நக்கல் செய்தான்.
“ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் ஹேண்டில் பண்ண தெரியாது. பழக்கமும் இல்லை. வேற ஏதாவது சொல்லுங்களேன்” என்று கலங்கினாள்.
“பைன்” என்றவன் ரிமோட்டை எடுத்து டிவியை போட்டான். ஒரு பக்க சுவர் முழுவதும் டிவி திரை தான். ஏதோ வித்தியாசமான சத்தமாக இருக்க இவனை பார்த்து அமர்ந்து இருந்தவள் பட்டென்று திரை பக்கம் திரும்பி பார்த்தாள்.
அங்கே சுரேஷுக்கு போய் கொண்டு இருந்த சுவாசக் குழலை யாரோ கத்தி வைத்து அறுத்துக் கொண்டு இருக்க பக்கென்று ஆனது. எழுந்தே விட்டாள்.





