“அப்பா தாத்தா நீங்க என்ன பேசுறீங்க எதை பத்தி பேசுறீங்கன்னே புரியல. எதா இருந்தாலும் உடைச்சு பேசுங்க. அப்போ தான் எங்களுக்கும் தெரியும்” என்று ஆதங்கமாய் கேட்டான் யுகேஷ்.
“இனி பேசி என்ன ஆகப் போகுது” என்று வேதனை பட்டார் வேல்முருகன்.
“அப்பா ப்ளீஸ்.. நீங்க மனதை மட்டும் விட்டுடாதீங்க.. தூண் மாதிரி நாங்க எல்லோரும் இருக்கிறோம் அப்படி எல்லாம் விட்டுட்ட மாட்டோம்” என்று அவரின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டார்கள் மகன்கள். பேரன்களுக்கு ஒன்னும் விளங்கவில்லை என்றாலும் ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அதுவும் அது ராசசிங்கனால் என்பது இன்னும் தெளிவாக புரிந்தது.
“சரியா ராசசிங்கன் நம்ம பாப்பாவை முதல்முறை சந்திச்ச ஒரு வாரத்துக்கு முன்னாடி ராசசிங்கன் நம்ம அலுவலகத்துக்கு வந்தான்” என்று சொன்னார் வேல்முருகன்.
“அவன் எதுக்கு தாத்தா நம்ம ஆபிஸ்க்கு வரணும்... அதுக்கு என்ன அவசியம்” என்று கூர் தீட்டியாய் கேட்டான் கார்த்திக்.
அவனை வேதனையுடன் ஒரு பார்வை பார்த்தவர்,
“நம்ம பங்குதாரரா வரணும்னு கேட்டான்” என்றார்.
“வாட்...?” என்று இளையவர்கள் எல்லோரும் அதிர்ந்தார்கள்.
“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவர்,
“இல்ல இது எங்க பேமிலி ஆட்களுக்கு மட்டும் தான். வெளில இருந்து வேற யாரையும் சேர்த்துக்குறதா இல்ல தம்பி நீங்க வேற கம்பெனி பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டேன். ஆனா ராசசிங்கன் அதோட விடல. தொடர்ந்து ஒரு நாளைக்கு மூணு நேரம் விடாம பேசிட்டே இருந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை போய் கத்தியே விட்டனர் உன் அப்பா கண்ணனும் உன் பெரிய மாமா மகேஸ்வரனும்” என்றார்.
அண்ணன் தம்பி இருவரின் மகன்களும் மருமகன்களும் தலையை குனிந்துக் கொண்டார்கள்.
“அடுத்த நாள் ராசசிங்கன் நம்ம நிறுவனத்துக்கு நேரடியாகவே வந்து விட்டான். வந்ததோடு இல்லாமல் நீங்க தந்தே ஆகணும் என்று பிடிவாதமாக கேட்டான். அதுக்கு, தம்பி உங்களுக்கு ஒரு முறை சொன்னா புரியாதா? இது குடும்பமா நடத்துற பிசினெஸ். இதுல நாங்க அந்நிய ஆட்கள் யாரையும் உள்ளே சேர்க்கிறதா இல்லை. அதனால நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க” என்றனர்.
“சரி வெளி ஆட்களா வேணாம். உங்க வீட்டு மருமகனா வந்தா உங்க கம்பெனியில பங்கு தருவீங்களா?” நயமாக கேட்டான் ராசசிங்கன். ஆனால் அவனது உடல் மொழியில் அந்த நயம் இருக்கவில்லை. முழுமையான ஆளுமையோடும் திமிரோடும் தான் அமர்ந்து இருந்தான்.
பட்டென்று அவன் இப்படி கேட்டுவிடுவான் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. எல்லோருமே விக்கித்துப் போனார்கள்.
“என்ன இப்படி ஷாக் ஆகிட்டீங்க...? அந்த காலத்துல நம்மோட அரசர்கள் அவங்க அரசாங்கத்தை காப்பாத்த செய்யாததையா இப்போ நான் செஞ்சிட்டேன்” என்று அசால்ட்டாக சொன்னவன்,
“இன்னும் நாலு நாள்ல நல்ல நாள் இருக்கு. பெண் பார்க்க வரேன். அடுத்த மாதம் எனக்கு உங்க வீட்டு பெண்ணுக்கும் கல்யாணம் ஆகி இருக்கணும்” என்று மிரட்டி விட்டு அவன் போக,
“ஏய் இந்தப்பா நில்லு... உனக்கு என்ன தகுதி இருக்குன்னு எங்க வீட்டு பொண்ணை கேட்டு வந்து இருக்க. எங்க வீட்டு வாசப்படி ஏறல்லாம் ஒரு தகுதி இருக்கணும். அந்த தகுதி உனக்கு இல்லை. நீ ராவெல்லாம் ஊர் மேஞ்சிட்டு வருவ... கண்டவளோட இணை போட்டுட்டு போவ... யார் கூட இரவெல்லாம் கூத்தடிச்சன்னு கூட தெரியாது. அப்படி பட்ட உனக்கு எங்க பொண்ணு விளக்கு பிடிப்பாளா? எங்க வீட்டு மண்ணையும் தரமாட்டோம். பொண்ணையும் தரமாட்டோம். வந்துட்டான் பெருசா பொண்ணை கேட்டு...” என்று கண்ணன் சொல்ல,
“அப்படி சொல்லுங்க மச்சான்... பிசினெஸ்க்காக எவ்வளவு கீழ வேணாலும் இறங்குற இவன் கிட்ட நமக்கு என்ன பேச்சு.. இவன் ஒருத்தி கூட படுத்தா அடுத்த நாள் அவளோட மொத்த பிசிநேசும் இவன் கண்ட்ரோலுக்கு வந்திடுமாமே.. அப்போ இவன் என்ன ஆம்பளை விபச்சாரனா” என்று மகேசுவரன் சொல்ல அனைத்தையும் ஒன்று விடாமல் முகம் மாறாமல் கேட்டுக் கொண்டு இருந்த ராசசிங்கனுக்குள் அடங்காத வெறி ஏறிக்கொண்டு இருந்தது. அப்படியே எதிரில் இருந்த அத்தனை பேரையும் தன் துப்பாக்கியால் சுட்டு சுட்டு விளையாட தோன்றியது.
அவனின் வீக்னேசை பிட்டு பிட்டு வைக்க பெரும் அவமானமாக இருந்தாலும் அவனது தோரணை கொஞ்சம் கூட மாறவில்லை.
“கண்ணன்.. மாப்பிள்ளை...” என்று வேல்முருகனும் அவரது தம்பியும் எவ்வளவோ தடுக்க பார்த்தனர். ஆனால் அதற்குள் இருவரும் சொற்களை ரொம்ப அதிகமாக வீசி இருந்தார்கள்.
“சாரி தம்பி நாங்க” என்று வேல்முருகன் ஆரம்பிக்கும் முன்பே சுந்தரம்,
“நீங்க ஏன்ப்பா இந்த மாதிரி ஆட்கள் கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கீங்க... இவனோட பேசுனாலே நமக்கு பாவம் ஒட்டிக்கும். மத்தவங்களோட இரத்தத்தை உறிஞ்சி குடிக்கிற அட்டை பூச்சி இவன். இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு. முதல்ல இந்த இடத்தை விட்டு போக சொல்லுங்கப்பா” என்று முகத்தில் அடிப்பது போல அவர் பேச ராசசிங்கன் எதற்கும் அலட்டிக் கொள்ளவே இல்லை.
இவன் காது படவே பலர் இந்த சொற்களை எல்லாம் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதை எப்பொழுதும் அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால் ஏங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்டு அவனின் ஒவ்வொரு செயலையும் தீப் அனாலிசிஸ் செய்து அதை வைத்து கேலி பண்ணியதோடு இல்லாமல் அவனின் கடின உழைப்பால் உண்டு பண்ணிய ஒட்டு மொத்த சாம்ராஜியத்தையும் இவன் மற்ற பெண்களுடன் படுத்து தான் நிறுவி இருக்கிறான் என்று சொல்வதை கேட்டு உச்சி முதல் பாதம் வரை அவ்வளவு ஒரு சினம் எழுந்தது.
ஆனால் அதை காட்டாமல் சின்ன சிரிப்போடு எழுந்து போய் விட்டான் அவன். அதற்கான பதிலடி தான் இப்பொழுது ஏந்திழையாளிடம் காட்டிக் கொண்டு இருக்கிறான் என்று தாத்தா சொல்ல பேரன்களுக்கு மூச்சு நின்றுப் போனது.
இந்தியாவின் நம்பர் ஒன் பிசினெஸ் மேன். ராசசிங்கன் தே கிரேட் மல்டி மில்லினர்... அவன் கால் பதிக்காத இடமே இல்லை. செய்யாத பிசினெஸ் இல்லை. எதிலும் பணம் பார்க்கும் குணம்... அவனது கையில் இருந்து ஒரு விரல் அசைவது என்றால் கூட பணத்தை வைத்து தான். வணிக வட்டத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்... அவனை போய் ஆண் விபச்சாரன் என்று சொல்லி இருக்கும் தங்களின் தந்தை மார்களை அதிர்ச்சியோடு பார்த்தார்கள் பிள்ளைகள்.
ராசசிங்கன் நினைத்தால் ஒரே நொடியில் தங்களை இல்லாது செய்துவிடும் அளவுக்கு பவர் உள்ளவன். அரசியல், தொழில்துறை, ஊடகத்துறை என எல்லாவற்றிலும் முன்னிலையில் இருப்பவன். இவன் சொல்லும் கட்சி தான் ஆட்சிக்கு வரும். சொல்கிற சட்டம் தான் சட்ட புத்தகத்தில் கூட ஏறும். இவன் சொல்வது தான் அன்றைய செய்தியாக இருக்கும். அந்த அளவுக்கு இந்தியாவில் அசைக்க முடியா வலுவான ஆள்.
அவனின் பின்னாடி தான் அரசாங்கமே இருக்கிறது என்றால் மிகையில்லை. அப்படி பட்டவனை பேசக்கூடாத சொற்களை எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று தொண்டை வறண்டுப் போனது. இவர்களும் தொழில் துறையில் முன்னணியில் இருப்பவர்கள் தான். ஆனால் இவர்களது வட்டம் சற்றே குறுகல். ஆனால் ராசிங்கனின் வட்டம் மிகப்பெரியது.
கால் பதிக்காத துறையே இல்லை. வணிகம் சார்ந்த அத்தனையும் அவனது கையில் தான் அடக்கம். இந்த நேரம் இது செய்வான் என்று யாராலும் கணிக்கவே இயலாது. அவன் ஒரு இடத்தில் இறங்கி போகிறான் எனில் அதன் பின்னணியில் அவன் அடையக் கூடியது மிக பெரிதாக இருக்கும் என்ற எண்ணம் மற்ற அனைவருக்குமே இருந்தது.





