“நாளைக்கு தான் என் புகுந்த வீட்டில் பேசி நாத்தனாரை வழிக்கு கொண்டு வரலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இந்த அண்ணன் இப்படி பண்ணுமா?” என்று சீதா தன் அக்கறையை காட்ட,
“அவன் எங்கும் போய் இருக்க மாட்டான்டி. இந்த ஊர்லதான் எங்கயாவது இருப்பான்” என்று தேனாண்டாள் சொல்ல,
“எனக்கு என்னவோ கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. இதுநாள் வரை அவனது பொண்டாட்டியை அவன் பார்க்கவில்லை. அதனால அவன் நாம சொல்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆடிட்டு இருந்தான். ஆனால் இப்போ அவன் பொண்டாட்டியை பார்த்துட்டான். பார்த்ததோட இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து போஸ் வேற குடுத்து இருக்காங்க. இதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது எனக்கென்னவோ அவன் நம்ம கையை விட்டு போயிட்டான்னு தான் தோணுது” என்றாள் லட்சுமி.
“வாயை வைக்காதடி... அப்படி ஒரு சம்பவம் நிகழ்வே கூடாது... அப்படி நடந்ததுன்னு தெரிய வந்தா நிச்சயமா அந்த வராளி குராளி அவ செத்தா...” என்று ஆவேசமாக சொன்னார் தேனாண்டாள்.
“ம்மா அவ தான் சொல்றான்னா நீயும்... அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. பார்த்துக்கலாம்” என்று சீதா அவரை சமாதனம் செய்தாள். ஆனால் லட்சுமிக்கு என்னவோ மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“அவன் தமிழ் நாட்டோட தொழில்துறை அமைச்சர்... அவன் பதவிக்கு ஏற்றார் போல அங்குமிங்குமா நாலு இடத்துக்கு போகணும், வரணும்... அதை எல்லாம் கண்டுக்க கூடாது” என்று சிவசங்கரன் சொன்னாலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. தங்களுக்குள் கலந்து ஆலோசித்து உதயாதிபனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
இங்கேயோ இரு வீட்டையும் கலங்கடித்து விட்டு நிம்மதியாக துயில் கொண்டார்கள் கணவனும் மனைவியும். நன்றாக தூங்கியவள் அதிகாலையில் எழுந்துக் கொண்டாள் வராளி. கணவனின் கையணைப்பிலே தூங்கி இருப்பது தெரிந்தது. கூடத்தில் இவள் மட்டும் பிள்ளையோடு தனித்து தூங்குவாள். கலாவதி கூட அவளின் உடன் படுக்க மாட்டார். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையில் படுத்துக் கொள்வார்கள். இவளுக்கு மட்டும் கூடம் தான்.
பிள்ளையை வைத்து இருக்கிறாளே என்கிற இரக்கமெல்லாம் எதுவும் காட்டவில்லை. அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை அவர்களிடம் இருந்து.
இன்று கணவன் தன்னை பொத்தி வைத்து தூங்க வைத்ததில் நெகிழ்ந்துப் போனவள் அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். பின் அவனது உறக்கம் கலையாது எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்தவள் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
குளித்து முடித்து வந்தவள் கணவனை பார்த்தாள். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிய, சத்தமில்லாது தன் மேனியை சுற்றி இருந்த துண்டை அவிழ்த்து விட்டு அவனது சட்டையை எடுத்து போட்டாள்.
பின் அவனின் அருகில் வந்து படுத்துக் கொண்டவள் முழுமையாக போர்வையை எடுத்து போத்திக் கொண்டாள். சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்தவன் போர்வையால் மூடிக்கொண்டு படுத்து இருப்பவளை பார்த்து உதடு பிதுக்கியவன் குளியல் அறைக்குள் நுழைந்து விட்டு படுக்கைக்கு வர என்னவோ அவளிடம் வித்யாசமாக இருப்பது போல தோன்றியது.
கழுத்து வரையா போர்த்துவாள். இல்ல இதுல என்னவோ இருக்கு... என்று சிந்தித்த படியே அவளின் அருகில் வந்து படுத்தவன், கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் போர்வையை விலக்கி விட்டு பார்க்க உதயாதிபனின் கண்கள் இரண்டும் தெரித்து விடும் அளவுக்கு ஆனது...
“ஏய் பிராடு... எனக்கு முன்னாடி எழுந்து ரெடி ஆகிட்டு தூங்கவா செய்யிற? எழுந்திரி கண்ணம்மா” என்று கெஞ்சியவன் அவளின் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தான். அவளின் செவ்விதழ் அதரங்களை வன்மையாக கடித்து இழுத்தான். அதில் அவளது தூக்கம் போயே போனது.
“ஹச்சோ... என்ன பண்றீங்க?” என்று அவள் திகைக்க, “ம்ம்ம் மேடம் இப்படி கும்முன்னு ரெடியாகிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டியேடி. அப்பவே எழுப்பி விட்டு இருக்கலாம் தானே” என்று அவளை புரட்டி போட்டவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.
தடையாய் இருந்த அவளின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாய் அவன் உதடுகளும் விரல்கலும் விடுவிக்க விக்கித்துப் போனாள் பெண்ணவள். குழந்தையை தூக்கி அவனது தூக்கம் கலையாது தொட்டிலில் போட்டவன் அடுத்த நொடி புயலாய் பெண்ணவளை சுருட்டிக் கொண்டான்.
அவனது வன்மையான தேடலில் அவன் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு விழியோரம் நீர் கசிந்தது. அதை அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவள் ஆணவனின் இதழ் தேடலுக்கு தன் தேகத்தை கொடுத்து விட்டு அவனின் பிடரியை பற்றிக் கொண்டாள்.
அவனது வேகத்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் அவள் திணறினாள். காட்டாற்று வெள்ளமாய் அவளை புரட்டி போட்டான். அவள் உடுத்தி இருந்த அவனது ஒற்றை சட்டையும் எங்கே போய் விழுந்தது என்று இருவருமே அறியவில்லை.
அவளின் மேனியில் இதழ்களால் அவன் ஊர்வலம் போக சிவந்துப் போனாள். அவனது கண் பார்வை செய்த காயங்களுக்கு கைகளால் மருந்துப் போட்டான் உதயாதிபன்.
“ப்ளீஸ்” என்று அவள் இதழ்கள் கதற, “இதுக்கேவா...” என்று அவன் பரிகாசம் பண்ண, “ரொம்ப பண்ண வேண்டாம்... எனக்கும் வன்முறை தெரியும். நானும் விட்டு வைப்பேன்னு நீங்க நினைக்க வேண்டாம்” என்று சிலிர்த்து எழுந்தாள்.
“ஓ... அப்போ அம்மணிக்கு வன்முறை தெரியும் இல்லையா?”“ஆமாம் அதுல என்ன இருக்கு இப்போ...” என்று அவள் கேள்வி கேட்டாள்.
“அப்போ நீயே வன்முறையில ஈடுபடு... நான் ஜஸ்ட் என்ஜாய் மட்டும் பண்றேன்” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தவள், பின் அவனது நெஞ்சில் ஒண்டிக் கொண்டாள் அவனது பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல்.
“இப்படி வந்து ஒட்டிக்கிட்டா நான் எப்படிடி இரசிக்கிறது?” அவளை வேண்டும் என்றே வம்பிளுத்தவன் தன்னை விட்டு விலகி இருக்க வைத்து அவளை முழுமையாக இரசிக்க, கூச்சம் கொண்டவள், “படுத்துறீங்க மாமா” என்று சிணுங்கினாள்.
“வாவ் மாமா ரொம்ப அழகா இருக்குடி” என்று அவன் சொல்ல, “ப்ச் கிண்டல் பண்ணாதீங்க மாமா” என்று அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“வாய்ப்பே இல்லடி... உன் மாமா அழைப்பு என்னை உச்சியில பறக்க வைக்கிற மாதிரி பீல் குடுக்குது” என்றவன் அவளில் மென்மையாக படர்ந்து வன்மையாக தேடலை தொடங்கினான்.
“மாமா ப்ளீஸ்” என்று அவள் மாமா போடும் போதெல்லாம் அவனுள் மிகப்பெரும் பிரளையம் வெடிப்பது போல உணர்ந்தவன் அதை அப்படியே பெண்ணவளிடம் காட்ட தவித்து திண்டாடிப் போனாள் அவனது வேகத்தை கண்டு.
அதுவும் விடாமல் அவளை நாடும் கணவனின் தேவையை தீர்த்து வைத்தாலும் அவனது ஆசை மட்டும் குறையவே இல்லை. வராளியின் தேகம் மன்னவனின் கை வண்ணத்திலும் இதழ்களின் வண்ணத்திலும் கன்றிப் போனது.





