“யூ நாட்டி” என்று அவளின் முகத்தோடு முகம் புதைத்தவன் அவளின் இதழ்களுக்கு தண்டனை குடுக்க அவளின் இதழ்கள் சுகமாய் வதை பட்டது அவனிடம்.
“பசிக்கிதுங்க” என்று சிணுங்கினாள். “கொஞ்ச நேரம்டி” என்று சொல்லி சொல்லியே அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவளிள் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்துப் போனான்.
சுவரோடு சாய்ந்து நின்றவளுக்கு தன்னிடம் அத்துமீறும் மன்னவனின் செயலில் முகம் சிவந்துப்போனது. “கடவுளே” என்று அவள் பக்கவாட்டில் முகம் திருப்பி இதழ்களை கடித்துக் கொண்டாள்.
அவளின் மார்பில் புதைந்தவன் தலையை அங்கும் இங்குமாய் திருப்ப அதில் எழுந்த கூச்சத்தில் உடலை குறுக்கினாள். “ப்ளீஸ்” என்று அவனது பின்னந்தலையை இறுக்கிப் பிடித்தாள். அவனது இதழ்கள் அவளின் கழுத்தில் புதைந்து சின்ன சின்ன முத்தம் வைக்க, அவன் செய்யும் மாயத்தில் மீண்டும் மீண்டும் உடல் சிலிர்த்தாள்.
“விட்டா நீங்க பொழுதுக்கும் இப்படியே தான் பண்ணுவீங்க. முதல்ல நகருங்க” என்று அவனின் தொடுகையில் மெழுகாய் உருகும் உடலை கட்டுப்படுத்திக் கொண்டு அவனை அதட்டியவள் கீழே சரிந்துக் கிடந்த முந்தானையை எடுத்துப் போட்டவள் அவனிடம் இருந்து விலகிக் கொண்டாள்.
“ப்ச் போகாதடி” என்று அவளின் முந்தானையை பிடித்து இழுத்தான் தாபமாய். “அடி விழும்” என்றவள் மாற்று உடையை பார்க்க அவன் கொண்டு வந்த பையில் ஒரு சேலை இருக்க அதை எடுத்தாள்.
“நோ... என் சட்டை தான் போடுற” என்று அவனது சட்டையை மட்டும் நீட்டினான் அடமாய்.
“அது அப்புறம் போடுறேன். இப்போ சேலை தான்” என்று சொன்னவள் பாவடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். அவளின் பின்னோடு இவனும் போக, “அடம் பண்றீங்கங்க நீங்க” சலித்துக் கொண்டாள். இன்னொரு பக்கம் ஏகத்துக்கும் கூச்சமாய் இருந்தது.
அவர்களுக்குள் எல்லாமே நடை பெற்றது தான். ஆனால் இப்பொழுது மீண்டும் புதிதாய் ஆரம்பிக்கும் பொழுது புது பெண்ணாய் அவளுள் வெட்கமும் கூச்சமும் அவளை படுத்தி எடுத்தது.
“பரவாயில்ல... என்னை குளிக்க வை” என்றவன் அவளை குளிக்க வைத்தான். அவளின் தேகமெங்கும் அவனது முரட்டு விரல்கள் பயணம் பண்ண உயிர் துடித்துப் போனாள் வராளி.
“ப்ச் மெதுவா ஏன் முரட்டு தனமா கையை வைக்கிறீங்க? அன்னைக்கு அப்படி தான் பிள்ளையை இவ்வளவு முரட்டு தனமா பிடிக்கிறீங்க. அவன் ஒரே அழுகை” முறைத்தாள்.
“இனி என் மகனை மெதுவா பிடிக்கிறேன். ஆனா உன்னை” என்று வில்லன் சிரிப்பு சிரித்தவன் அவளின் மீது தன் கைகளை முரட்டு தனமாகவே ஓட்டினான். “அடங்கவே மாட்டீங்கள்ள” என்று அலுத்துக் கொண்டவள் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். அதில் அவன் இன்னும் சலுகை எடுத்துக் கொள்ள திணறி திண்டாடிப் போனாள்.
“பசிக்கிதுங்க சாப்பிடனும்” என்றாள். அவனின் சேட்டை தாங்க முடியாமல். “நானும் உன்னை விடலாம்னு தான்டி பார்க்கிறேன். ஆனா உன்னை விட்டு ஒரு கணம் கூட விலக முடியலையே நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்டவன் அவள் மீது வன்மையாக ஒட்டிக் கொண்டான்.
“இப்படியே போனா நான் தண்ணியில ஊறியே போயிடுவேன். அப்புறம் நைட் எதுவும் இருக்காது. குளிர் காய்ச்சல்னு ஹாஸ்பிட்டல்க்கு தான் கூட்டிட்டு திரியணும்” என்று நக்கல் பண்ணினாள்.
“ப்ச்... அபசகுணமா பேசாதடி...” என்று முறைத்தான். “ப்பா பேசக்கூட கூடாதா?” நொடித்துக் கொண்டவள் அவனை விலக்கி விட்டுட்டு வெளியே போக, போனவளின் மீது நீரை சுண்டி விட்டவன், “ஆயிரம் நிலவே வா... ஓராயிரம் நிலவே வா...” என்று அவன் பாட்டு பாடினான்.
வராளி திரும்பி பார்த்தாள். “சட்டை போடுடி” என்றான் கடுமையாக. அவனை கெஞ்சலுடன் பார்த்தவள், “இப்ப இல்ல...” என்று இதழ்களை கடித்து சொன்னவள் சேலையை எடுத்து அணிய, அவளின் சேலையை பிடுங்கி கீழே போட்டான்.
“இதென்ன சின்ன பிள்ளை மாதிரி... ரொம்ப கூச்சமா இருக்குங்க... கொஞ்சம் பழக நேரம் குடுங்களேன்” என்றாள்.
“என்கிட்டே என்னடி தயக்கம்?” காதல் கொண்ட மனம் அவளின் கூச்சத்தை கண்டு வெம்பிப் போனது. அவனது வருத்தத்தை கண்டு துடித்துப் போனவள்,
“உங்கக்கிட்ட தயக்கம் இருந்து இருந்தா கொஞ்ச நேரத்துக்கு முன்னடி அப்படி இருந்து இருப்பனா? ஏன் இப்படி கண்டமாதிரி யோசிக்கிறீங்க. கண்டிப்பா இரவு நானே போடுவேன். இப்போ இந்த சேலை தான்” என்று அவன் பிடுங்கிப் போட்ட சேலையை எடுத்து அணிந்துக் கொண்டவள்,
அவனது தலையை துவட்டினாள். “ஒன்னும் தேவையில்ல போடி” என்று துண்டை வாங்கி வீசி அடிக்க, அவளின் முந்தானையால் அவனின் தலையை துடைக்க அமைதியாகிப் போனான்.
“உங்க மகனை கூட சமாளிச்சுடலாம் போல. ஆனா உங்களை சமாளிக்க தான் முடியல. பிடிவாதம்னா பிடிவாதம் அப்படி ஒரு பிடிவாதம்...” என்று சொன்னவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.
“என்னவாம்?” சிணுங்கலாக கேட்டாள். “உன் வாசம் உணரனும்டி” என்றான் தவிப்பாக. அவனது கழுத்தை வளைத்து அவனின் முகத்தை தன் கழுத்தில் புதைத்துக் கொண்டவள்,
“கொஞ்ச நேரம் தான்.. பசிக்கிது. சாப்பிடனும். இல்லன்னா உங்க மகனின் பசியை போக்க முடியாது” என்றாள். அவள் சொல்லும் காரணம் புரிய,
“அப்ப முதல்ல சாப்பிட்டுடுவோம். மத்தத பிறகு பார்த்துக்கலாம்” என்றவன் அவளின் இதழ்களில் முத்த கவிதை எழுதிய பிறகே விட்டான்.
கூடத்தில் ஊஞ்சல் போட்டு இருக்க அதில் அவளை தன் மடியில் அமர்த்தி அவளுக்கு உணவு ஊட்டி விட்டான். அவனது செயலில் அவளுக்கு கண்கள் கலங்கியது. அவள் தேடி தவித்த அன்பு அவன் இந்தா வச்சுக்கோன்னு தூக்கி குடுத்ததோடு அல்லாமல் வேணுங் வேணாங்கிற அளவுக்கு அல்லவா அவன் அன்பை பொழிகிறான்.
அவனின் அன்பில் உயிர் நெகிழ்ந்தாள். அவனுக்கு அவள் ஊட்டி விட, தேகம் சிலிர்த்தான். “தேங்க்ஸ்டி” என்றான். “இந்த லொள்ளு தானே வேணான்னு சொல்றது” என்று சொன்னவள் அவனுக்கு பார்த்து பார்த்து ஊட்டி விட்டாள். இருவரின் மனதோடு வயிறும் நிரம்பியது. சரியாக பிள்ளை முழித்துக் கொண்டு அழ,
அவனை கவனித்தாள். அவளின் முதுகோடு ஒன்றி அமர்ந்துக் கொண்டான் உதயாதிபன். வராளி அவனது வெற்று மார்பில் சாய்ந்துக்கொண்டாள். அவளோடு சேர்த்து பிள்ளையையும் தாங்கிக் கொண்டான்.
அதன் பிறகு குழந்தையின் “ஆ.. ஊ...” “இங்கா” “பா...” “ஆ” என்கிற சத்தம் மட்டுமே அந்த வீட்டை நிறைத்தது. இருவருக்குமே அந்த நேரம் பொன்னான நேரமாக தோன்றியது. படுக்கையில் அவன் படுத்து பெண்ணவளை கை வளைவுக்குள் இழுத்துக் கொண்டவன் அவனது நெஞ்சில் பிள்ளையை படுக்கப் போட்டுக்கொண்டான். எத்தனையோ நாள் அவன் இது மாதிரி கனவு கண்டான்.





