“வெயிட்” என்ற நேரம் வேறொரு கார் வந்தது. அந்த காரில் பின்னாடி வராளியை அமரவைத்து தானும் அமர்ந்துக் கொண்டான். “இவன் என்னோட உயிர் நண்பன் குகன்” என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவனை அறிமுகம் செய்து வைத்தான்.
அதே போல “இவ தான் என்னோட மனைவி மிசெஸ் உதயாதிபன்.. இவன் என்னோட மகன் கர்ணன்” என்றான் கர்வமாய். “ரொம்ப சீக்கிரமா அறிமுகப் படுத்தி வச்சிட்டடா..” என்று பல்லைக் கடித்தான் குகன்.
“விடு மச்சான்... இப்பவாவது அறிமுகப்படுத்தி வச்சனேன்னு நீ பெருமை படனும்” என்று சொன்னவன் தன் மனைவி பக்கம் திரும்பினான். அவள் வியந்து போய் குகனை பார்த்தாள்.
“இவரு...” என்று அவள் தயக்கமாய் இழுத்தாள். “ம்ம்ம்... இவன் தான் எதிர்கட்சி தலைவரோட மகன். வருங்கால முதலமைச்சர்” என்றான் பெருமையாய். “ஹாங்” என்று வியந்துப் போனாள்.
“சும்மா சொல்றான் ம்மா. இவன் தான் அடுத்த முதலமைச்சர்.. நான் பலமான எதிர்க்கட்சி தலைவரா இருப்பேன். இவன் என்ன தவறு செஞ்சாலும் கேள்வி கேட்கிற முதல் ஆளு நான் தான்” என்றான்.
இருவரின் ஆரோக்கியமான போட்டியை பார்த்து கண்கள் விரித்தாள். “நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்னு எங்க வீட்டுக்கு கூட தெரியாது ம்மா. இதுநாள் வரை காட்டிக்கவும் இல்லை. இனிமேலும் காட்டிக்க மாட்டோம்” என்றான் குகன்.
“ஏன் அண்ணா அப்படி?” வராளி கேள்வி கேட்டாள். “ஏன்னா எங்க நட்பை பெரியவங்க தவறா பேசி அவங்க சுயநலத்துக்கும் பதவிக்கும் யூஸ் பண்ண பார்க்கிறாங்க. அதை தவிர்க்க தான்” என்றான் குகன்.
“ஓ..! இதுல இவ்வளவு இருக்கா?” “ம்ம் நிறைய இருக்கு... போக போக உனக்கே தெரியும் ம்மா. எங்களை சுற்றி எல்லோருமே சுயநல பேய்கள் தான். பதவிக்காக என்ன வேணாலும் செய்யும் கூட்டம். அதுல தப்ப தான் இப்படி மறைஞ்சி மறைஞ்சி நட்பு பாராட்டுறோம். நாங்க ரெண்டு பேரும் பழகுறது என் மனைவிக்கு மட்டும் தான் தெரியும். இப்போ உனக்கு தெரியும். வேற யாருக்கும் தெரியாது. நம்பிக்கையான உதவின்னா நான் நாடுவது இவனை தான். அதே போல இவனும் என்னை தான் நாடுவான். வேற யாரையும் நாங்கள் நம்புவதே இல்லை” என்றான்.
உதயாதிபன் அமைதியாக வந்தான். குகன் தான் இருவரது நட்பை பற்றியும் வளர்ந்த விதத்தையும் சொல்லிக் கொண்டு வந்தான். மிக குறுகிய பேருந்தே வராத ஒரு கிராமத்தில் கொண்டு போய் இருவரையும் விட்டான். தன் காரில் இருந்து எடுத்து வைத்த பைகளை மறக்காமல் எடுத்துக் கொண்டான் உதயாதிபன். அதோடு தான் கொண்டு வந்த பைகளையும் இறக்கி வைத்தான் குகன்.
“என்னடா இதெல்லாம்..?” உதயாதிபன் கேட்டான். “ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருள்கள், பழங்கள் எல்லாமே இருக்கு. இது தான் என் மனைவியோட உறவு காரங்க வீடு.. யாரும் இங்க இல்ல... எல்லோருமே வெளிநாட்டுல இருக்காங்க இங்க இருக்க பிடிக்காம.. அவங்க திரும்பி வரவும் போறதில்ல. சோ இடத்தை உன் பேருக்கு மாத்திக்கலாம். இப்போ நிம்மதியா மகிழ்ச்சியா இருடா” என்றான் குகன்.
“அவன் வாழ்க்கையில ரொம்ப மகிழ்ச்சியா இருந்த நாள்கள்னா அது உன்கூட இருந்த மூணு நாள் தான் மா. இனி அவனோட வாழ்க்கை நீ தான். எப்பவும் நீ மட்டும் தான். இனி அவனை விட்டு எப்பவும் போயிடாத ம்மா” என்றான் வேண்டுகோளாய்.
“சரிங்கண்ணா” என்றாள் ஒப்புதலாய். அதில் அகம் மகிழ்ந்தவன், “ஒரு வாரம் முடிந்த பிறகு என் மனைவியை கூட்டிட்டு வரேன்.. அப்போ நானும் ஒரு நாள் தங்குறேன்” என்று விடை பெற்றுக் கொண்டான் குகன். அவனை வழியணுப்பி வைத்து விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தனர் இருவரும்.
வீடு ரொம்ப சுத்தமாக இருந்தது. ஓட்டு வீடு தான். ரொம்ப சின்ன வீடு தான். ஒரு அறை. கூடம், சமையல் கட்டு, அதை தாண்டி எதுவும் இல்லை. வீட்டை சுற்றிலும் இடம் இருந்தது. எல்லாமே மரங்கள் தான். செடி கொடி எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் சுற்றுவேலி போடப்பட்டு இருந்தது. அதுவும் மறைவாக இருக்க தனித்து இருந்தது வீடு. கிணறு இருந்தது. சோலார் வசதி இருந்தது. மோட்டாரும் இருந்தது.. வீட்டை பார்க்கவே நிறைவாக இருந்தது வராளிக்கு.
“குழந்தைக்கு தொட்டில் கட்டணுமே.. புடவை வேண்டுமே...” சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள். அறையின் உள்ளே மேலே ஒரு சேலையை தூக்கிப் போட்டு சட்டத்தில் மாட்டியவன் கீழே அதன் நுனியை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தான்.
“சொல்லாமலே எல்லாம் செய்யிறீங்க?” அவனை மெச்சியவள், “பசிக்கிதுங்க” என்றாள்.
“இன்னைக்கு சாப்பாடு வெளியே வாங்கிட்டு வந்து இருக்கான். நாளையில இருந்து நான் சமைச்சி தரேன்டி” என்றான் புன்னகையுடன். “ம்ம்” என்றவள் தூங்கும் மகனின் அருகில் அமர்ந்தாள்.
“ஆமா இவன் என்னடி தூங்கிட்டே இருக்கான். பசிக்கு கூட அழல..?”
“பகல்ல இப்படி தான் இருப்பான். நைட்டு தான் வச்சு செய்வான். என்னைக்காவது தான் அசந்து தூங்குவான். மத்த நேரம் எல்லாம் விடிய விடிய முழிச்சுட்டு தான் இருப்பான்” என்றாள்.
“அவ்வளவு சேட்டை செய்வானா இவன்?” என்று தன் மகனை எண்ணி பெருமிதம் கொண்டவன், “தொட்டிலுக்கு அளவு பாருடி” என்றான். அவள் அளவு பார்த்து சொல்ல அவன் இறுக்கி முடிச்சு போட்டான். முடிச்சு போட்டவனின் வெற்று தோளில் முகம் புதைத்தாள் வராளி. அவன் அசையவில்லை. அப்படியே நின்றான்.
“வந்து இவ்வளவு நேரம் ஆச்சு ஒரு முத்தம் கூட குடுக்க தோணலையா?” அவனிடம் கேட்டாள்.
“என் ஆசையை நீ உணர்ந்தது இல்லையாடி?” அவளிடமே திருப்பி கேட்டான். அவனது வேகமும் ஆசையும் அவள் அறியாததா? நொடியில் முகம் சிவந்துப் போனது. “அப்போ ஏன்?”
“அப்போ ஏன்?” தாங்க முடியாமல் கேட்டாள் வராளி. “உன்னை தனியா கூட்டிட்டு வந்தது அதுக்குன்னு ஆகிடாதாடி?”
“ப்ச்...” என்று சலித்தவள், “எனக்கு உங்க காதல் புரிஞ்சுப் போச்சு. இங்க எங்களை கூட்டிட்டு வந்தது கூட என்னோடையும் மகனோடையும் இருக்கணும்னு தான். அதுக்காக நீங்க விரதம் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நீங்க எப்பொழுதும் போல இருங்க. ரொம்ப கட்டல் பட்டு தள்ளி இருக்க வேணாம். இயல்பா இருப்போம்” என்றாள். அதில் அவனது கண்களில் மின்னல் வந்துப் போக அதை பார்த்தவள்,
“இந்த கண்ணுல தான் உங்க மொத்த உணர்ச்சியையும் கொட்டி வச்சு இருக்கீங்க... ப்பா என்ன ஷார்ப்..” என்று சிலாகித்தவள் அவனிடம் இருந்து விலகி வெளியேப்போக பார்க்க தொட்டிலுக்கு போட்ட முடிச்சை ஒரு முறை மீண்டும் செக் செய்தவன் இடது கையால் பெண்ணவளின் கையை இருக்கப் பற்றி சுண்டி இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்துக்கு நச்சென்று அவனின் மார்போடு போய் விழுந்தாள். தின்னியை அவனது மார்பில் போய் விழுந்தவளுக்கு இவளின் நெஞ்சு தான் வலித்தது.
“ம்மா” என்று அவள் அலற, “ஐ கான்ட்” என்றவன் அவளை இடையோடு இறுக்கிப் பிடித்து தன்னோடு இன்னும் நெருக்கியவன் அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையில் தேகம் சிலிர்த்தவள்,
“விடுங்க போய் குளிக்கணும்” என்றாள். “ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” ஆசையில் கேட்டவனை ஏமாற்ற முடியாமல்,
“பாஸ் அவசரப் படாதீங்க... ரெண்டு நாள் போகட்டும். எனக்கும் டைம் குடுங்க... சின்ன பிள்ளை பயந்துடுவேன்” என்றாள்.





