“அச்சோ” என்று பதறி முந்தானையை இழுக்கப் பார்த்தாள். அவனது அரக்கத்தனமான காலடியில் இருந்து புடவையை அவளால் எடுக்கவே முடியவில்லை.
அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் சரமாக கொட்ட ஆரம்பித்தது.
அவளின் கண்ணீரை இரசித்துப் பார்த்தவன்,
“நீ இந்த மான அவமானத்துக்கு எல்லாம் அஞ்சுவியா என்ன? உன்னை மாதிரி தொழில் பண்றவங்களுக்கு அதெல்லாம் விலை பேசி வித்துட்டு தானே வந்து இருப்பீங்க. அதனால தானே என் மேல வந்து மோதுன... இப்ப என்னவோ புது பெண் போல முந்தானை மேல கை வச்சதுக்கே இப்படி சீன போடுற..” நக்கல் வழிய கேள்வி கேட்டான்.
அவனது தேள் கொடுக்கு போல வந்த பேச்சில் மனம் நொந்துப் போனவள்,
“உண்மையா நான் அந்த மாதிரி பெண் இல்ல சார். நான் கோயிலுக்கு தான் வந்தேன். ப்ளீஸ் என்னை விடுங்க...” என்று அவனிடம் கேட்டுக் கொண்டே தன் முந்தானையை இழுக்கப் பார்த்தாள்.
ம்ஹும் அவனது காட்டு தேக்கு தேகத் திடத்தின் முன்பு அவளின் மெல்லிய தேகத்தின் பலம் அடிப்பட்டுப் போனது..
உதவிக்கு யாராவது வருவாங்களா என்று சுற்றி முற்றிப் பார்க்க ஒரு ஈ காக்கா கூட இல்லை அந்த இடத்தில. கடவுளே என்று அவள் மனம் அரற்றியது.
“கோயிலுக்கு இப்படி தான் வருவியா?” என்று கேட்டவன் அவளை உச்சி முதல் பாதம் வரை அலசினான். அதுவும் அவனது கண்கள் கொஞ்சம் அதிகமாகவே படிந்தது அவளின் முன் அழகில்.
கூர்ந்து பார்த்தவன் ஏளனமாக இதழ் வளைத்தவன்,
“கோயிலுக்கு எப்படி போகணும்னு கூட தெரியல... என்னவோ ஆக்டர் போல கிளம்பி வந்து இருக்க... இதை நான் நம்பனுமா? ஒழுங்கா சொல்லு நீ எந்த ஏரியா ஐட்டம்...” என்று கேட்டான்.
“சார் ப்ளீஸ் நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை... நீங்க மறுபடி மறுபடி அதையே சொல்றீங்க. என்னை விடுங்க நான் போறேன்” என்றாள் பதறி.
“சரி உன்னை விடுறேன்” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து,
“நீ எந்த ஏரியா ஐட்டம் கேர்ல்... ஒரு நாளைக்கு உன்னோட எர்நிங்க்ஸ் எவ்வளவு... எத்தனை கஸ்ட்டமரை பிடிப்ப... அதுல நீ எத்தனை முறை புல்பில் ஆவ... நீ எத்தனை பேரை திருப்தி படுத்துவ” என்று அவன் அப்படியே கேட்டு வைக்க, காதில் அவன் சொன்னதை கேட்டு மின்சாரம் தாக்கியது போல விக்கித்து நின்றவளின் கண்களில் கண்ணீர் வற்றி இருந்தது.
அப்படியே கூனி குறுகி கால் மடிந்து அமர்ந்து விட்டாள் நடு வீதி என்று கூட பார்க்காமல். கால் விரலில் கூட தூசி படியாமல் வளர்ந்த பெண்ணவளை நடு வீதியில் கூனி குறுகி அமரவைத்து விட்டான் அரக்கன்.
“ஹோ இப்படி சீனை போட்டா நான் விட்டுடுவனா...? ஒழுங்கா நான் கேட்கிற கேள்விக்கு பதிலை சொல்லிட்டு நீ இந்த விடத்தை விட்டு விலகலாம். இல்லன்னா விடிஞ்ச பின்னாடியும் நீ இப்படியே என்னை பாரு என் அழகை பாருன்னு இருக்க வேண்டியது தான். இப்போ நான் மட்டும் தான் உன்னை இந்த கோலத்துல பார்த்துட்டு இருக்கேன். விடிஞ்சதுன்னா தெருவில போறவன் வர்றவன் எல்லாம் எங்கெங்கோ பார்ப்பான். எங்கெங்கோ தொடுவான். அப்புறம் நீ பப்ளிக் பிகர் ஆகிடுவ” என்று மேலும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினான்.
அவன் சொல்லுவதும் உண்மை தானே என்று அதிர்ந்தவள் மெல்ல விழிகள் சிவக்க அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
அவளது பார்வையில் இருந்த ரௌத்திரத்தை பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தவன்,
“இந்த பத்தினி லுக் எல்லாம் என்கிட்டே வேணாம்... ஒழுங்கா ஒத்துக்கோ நீ ஒரு கால் கேர்ல்ன்னு..” என்று சொன்னவன்,
“இங்லீஷ்ல சொல்றதை விட தமிழ்ல சொல்றது தான் செம்ம கிக்கா இருக்கும்... சோ நீ தமிழ்ல ஒத்துக்கோ” என்று அவளை மேலும் ரணப்படுதினான் ராசசிங்கன்.
இக்கட்டில் நிறுத்தி தன்னை தாசி என்று தன்னையே ஒத்துக்க வைத்தவனை விழிகள் கசிய ஏறிட்டுப் பார்த்தவள்,
“நான் .... தான். என்னால நிறைய பேர் .... பட்டு இருக்காங்க” என்று சொற்கள் தடுமாற கூறியவள், “நான் ஒரு நாளைக்கு .... முறை திருப்தி...” முடிக்கும் முன்பே கேவல் வெளிப்பட்டது.
இதழை அழுந்தக் கடித்து தன் கேவலை அடக்கப்பார்த்தாள். அதில் அவளின் இதழ்கள் ஆழாமான காயம் கண்டது. உதிர துளிகள் கசிய தீர்கமான விழிகளுடன் அவனை ஆழ்ந்துப் பார்த்தவள்,
அவன் சொல்ல சொன்ன எல்லாவற்றிற்கும் பதிலை சொன்னவள் தலையை குனிந்துக் கொண்டாள். அதை வெற்றி பெருமிதத்துடன் பார்த்தவன் அவளின் புடவையில் இருந்து தன் புழுதி படிந்த ஷூவை போட்டு இருந்த கால்களை எடுத்துக் கொண்டான். அவன் எடுக்கவும் வேகமாய் தன் முந்தானையை தோளில் எடுத்துப் போட்டுக் கொண்டவள், சிதறிப் போய் இருந்த பூசை கூடையை கூட எடுத்துக் கொள்ளாமல் கோயிலுக்கும் போகாமல் வீடு பக்கம் நோக்கி நடக்க ஆரம்பிக்க எங்கிருந்தோ மூன்று கருப்பு சட்டை போட்டவர்கள் அவளிடம் ஓடி வந்தார்கள்.
“மேடம்... என்ன ஆச்சு...? நீங்க எப்படி இந்த சார் கிட்ட” என்று கேட்டார்கள்.
ஏனெனில் ராசசிங்கனை தெரியாதவர்கள் யாரும் இல்லையே... அவ்வளவு பேமஸ் அவன். அவன் முன்னாடி அவர்களது மேடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து பதறி அடித்து ஓடி வந்தார்கள்.
இவர்களது டக்கில் ஏளனமாக சிரித்த சிங்கன்,
“புது டிராமா” என்று அவளுக்கு மட்டும் கேட்பது போல சொன்னவன் விருட்டென்று அவர்களை கடந்து போய் விட்டான்.
“நத்திங்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டாள். மனமெல்லாம் நெருப்பில் குளித்தது போல இருந்தது. மிகப்பெரும் அவமானம்...
அதுவும் அவன் இறுதியாக சொல்லி விட்டுப் போனதிலே அவளுக்கு குளிர் சுரம் வந்து இருந்தது.
“புது டிராமா” என்றவன், இன்னும் கொஞ்சம் குரலை தாழ்த்தி, அடிக்குரலில் சிம்மம் போல உறுமி விட்டுப் போன சொற்களை அவளால் கொஞ்சம் கூட மறக்கவே முடியவில்லை. நன்றாக ஆழ்ந்து தூங்கினால் கூட கனவில் வந்து அந்த குரல் அவளை அச்சுறுத்தியது.
அன்று நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு ஏந்திழையாளிடம் மிகப்பெரும் மாற்றம். புடவை கட்டுவதையே அரவோடு நிறுத்தி இருந்தாள். ஏற்கனவே அவள் அமைதி. அதிர்ந்து பேசாதவள்.
இப்பொழுது அவளின் பேச்சு மிகவும் குறைந்துப் போனது.. அவளை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் அவளை மகிழ்விக்க இயல்பாக ஆக்க உயிரையும் கொடுத்தார்கள். ஆனால் அவளால் அவன் பேசிய பேச்சில் இருந்து வெளிவரவே முடியவில்லை.
யாருக்கும் தெரியாது ராசசிங்கன் அவளிடம் நடந்துக்கொண்ட முறை. ஆனால் அவனை பார்த்தது காட்ஸ் மூலம் தெரிய வர பதறிப்போய் என்ன ஏது என்று விசாரித்தார்கள் குடும்பத்து ஆட்கள்.
இவர்களும் தோளில் துறையில் இருப்பதால் அவனை நன்கு இவர்களுக்கு அறிமுகமே... குறிப்பாக அவனது அரக்க குணம்... அதனாலே இவர்கள் அவனிடம் அதிக அளவு வைத்துக் கொள்ள மாட்டார்கள். டெண்டருக்கு அவன் வந்தாலே இவர்கள் ஒதுங்கிப் போய் விடுவார்கள்.
இவர்களை பொறுத்தவரை மன நிம்மதி தான் முக்கியம். குடும்பம் தான் முக்கியம். அதற்கு பிறகு தான் தொழில்.
அதனாலே அவனிடம் நெருங்கவே மாட்டார்கள். இவர்கள் ஒதுங்கிப்போவதை உணர்ந்தவனுக்கு இதழில் கேலி புன்னகை தான் உதித்தது. இவர்களை வம்பிழுக்க வேண்டுமே என்று மனதில் கறுவியவன்,
ஒரு முறை பிசினெஸ் மீட்டிங்கின் போது வசமாக நேருக்கு நேர் ஏந்திழையாளின் அப்பா அண்ணா மாமா பெரியப்பா என எல்லோரும் பிசினெஸ் மீட்டிங்கின் போது வந்து இருக்க அவர்களை எதிர்க்கொண்டு அழைத்தது என்னவோ ராசசிங்கன் தான்.





