அவன் ஜாகிங் போய்க்கொண்டு இருப்பான் போல... வெள்ளை நிற டீசெர்ட்... ப்ளாக் கலர் ட்ரக் பேன்ட்.. இறுக்கிப் பிடித்து இருந்த அவனது உடை அவனின் திடகாத்திரமான உடம்பை அப்படியே காட்டியது. வியர்வையில் அவன் நனைந்து இருந்ததால் அவனின் ஆண் வாடை அப்படியே முகத்தில் மோதியது.
அவன் மீது மோதி இருந்ததால் அவள் மீதும் அவனது வாடை வீசியது போன்ற ஒரு உணர்வு. பட்டென்று அவன் மீது இருந்து கையை எடுத்து விட்டாள். அவள் கையை எடுத்த நிமிடம் அவளை நெருப்பாக பார்த்தவன்,
“ஆம்பளைன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா? ” என்று அவளை மேலிருந்து கீழே ஒரு பார்வை பார்க்க, அமிலத்தை தொட்டது போல வெந்துப் போனது அவளின் நெஞ்சம்.
“ரொம்ப காஸ்ட்லியான பிகர் தான் போல” என்று அவள் அணிந்து இருந்த நகைகளை வைத்து அவன் சொல்ல,
“உங்க மேல மோதுனதுக்கு சாரி. பட் சொற்களை இப்படி வீசாதீங்க... அதுவும் குறிப்பா இப்படி முன்ன பின்ன தெரியாதவங்களை இப்படி மதிப்பு குறைத்து பேசாதீங்க சார் ரொம்ப ரொம்ப தவறான குணம்...” என்று அவள் தன்மையாகவே சொன்னாள்.
“ஹேய் நீ யாருடி எனக்கு லெசன் எடுக்க... லுக் என் குணத்தை ஜட்ஜ் பண்ண ஹூ ஆர் யூ... நான் அப்படி தான் பேசுவேன். நீ ஆம்பளைக்கு அலையிரவ தானே.. அதனால தானே இப்படி முந்தானையை ஒத்தையா விட்டுட்டு வந்து என்னை பாரு என் அழகை பாருன்னு வந்து இருக்க...” என்று மேலும் அவன் கருவேல முள்ளாய் பேச கண்கள் கலங்கிப் போனது.
ஏந்திழையாள் எப்பொழுது புடவை கட்ட ஆரம்பித்தாளோ அப்பொழுது இருந்தே அவள் ஒற்றையாய் தான் விடுவாள். வீட்டிலும் வெளியிலும் கூட யாரும் ஒற்றை சொல் சொன்னது இல்லை அவளை. குற்றமும் சுமத்தியது இல்லை.
அப்படி பட்டவளை ‘உன் உடையே சொல்லுதே நீ யார் என்பதை’ என்று அவன் சொல்ல மேலும் அழுகை தான் வந்தது. ஆனால் அவன் முன்பு தன் கண்ணீரை காட்டிக் கொள்ளாமல் அவனை விட்டு நகர்ந்து செல்லப்பார்க்க பட்டென்று தோளில் குத்தி இருந்த ஊக்கு தெறிக்க சேலை மாராப்பு நழுவியது அவளின் தோளில் இருந்தது.
பக்கென்று ஆனது அவளுக்கு.. உடம்பெல்லாம் ஆட்டம் கண்டு போனது ஒற்றை நொடியில். பட்டென்று சேலையை தன் நெஞ்சோடு பிடித்துக் கொண்டு அதிர்ந்து அவனை பார்த்தாள்.
அவனின் காலடியில் தான் அவளது முந்தானை அகப்பட்டு இருந்தது. மிக அழுத்தமாக அவளின் முந்தானையை தன் கால் ஷூவினால் மிதித்து நின்றிருந்தான். அதிலே அவன் வேண்டுமென்று தான் இந்த காரியத்தை செய்து இருக்கிறான் என்று புரிய அதிர்ச்சி அடைந்தாள்.
முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணிடம் எதுக்கு இவ்வளவு ஹாரஸ்மென்ட்டா நடந்துக்கணும் என்று கலங்கிப்போய் அவனை பார்த்தாள்.
அவனது முகத்தில் ஏளன புன்னகை உதித்தது. அது அவளுக்கு மிகப்பெரும் அவமானமாய் போனது. பட்டென்று கண்கள் கலங்கிப் போனது.
“என்னவோ நீ பெரிய உத்தமி பத்தினின்னு சொன்ன... இப்போ உன்னை இப்படி வெளிச்சம் போட்டு காட்டி என்னை படுக்க கூப்புடுறியே... இப்பவாவது ஒத்துக்குறியா நீ ஒரு ஐட்டம்ன்றதை” அவளிடம் சொன்னவன்,
“இப்போ ஏதோ நல்ல மூடுல இருக்கேன். அதனால தான் நீ எதிர்த்து பேசியும் இதோட விடுறேன்... இல்லன்னா மொத்தமா உருவிட்டு விட்டு இருப்பேன்” என்று அவளின் காதோரம் சரிந்து கர்ஜனையாக சொல்ல அவளின் ஐந்து உயிரும் செத்து மடிந்தது ஆணவம், திமிர், தன்னகங்காரம் கொண்ட ராசசிங்கனிடம்.
ராசசிங்கன் தே கிரேட் மல்டி மில்லினர்...
ராசசிங்கன் தே கிரேட் மல்டி மில்லினர்... அவன் கால் பதிக்காத இடமே இல்லை. செய்யாத பிசினெஸ் இல்லை. எதிலும் பணம் பார்க்கும் குணம்... அவனது கையில் இருந்து ஒரு விரல் அசைவது என்றால் கூட பணத்தை வைத்து தான். வணிக வட்டத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்...
எங்கும் எதற்கும் ஒரு விலை உண்டு என்று எண்ணுபவன்... அவனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அரக்க குணம் கொண்டவன் தான் இந்த ராசசிங்கன். பெயருக்கு ஏற்றார் போல ராஜ சிங்கமாய் முழங்குபவன். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் அவன் எப்பொழுதுமே முதலிடம் தான்.
அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான். அப்படியே அந்த இடத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக அதனால் பல ஆதாயம் அவனுக்கு கிடைக்கும். அதனாலே அவன் அதை விட்டு கொடுத்து இருப்பான். பணக்கணக்கு போட்டு வாழ்பவன் அவன்.
பணத்திலே புழங்குவதால் அவனுக்கு மனித உணர்வுகளை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. உணர்வுகள் எல்லாம் அவனை பொறுத்த வரை வெறும் துச்சம் மட்டும் தான்.
அவனை பொறுத்தவரை இரண்டே வகை தான். ஒன்னு பணம் இருப்பவன். இன்னொருவன் பணம் இல்லாதவன்... பணத்தை மட்டுமே அளவீடாக முன்வைக்கும் மனித மிருகம். பணம் மட்டும் பிரதானமாக நினைத்து இருந்தால் கூட பரவாயில்லை.
ஆனால் ராசசிங்கனுக்கு இதை விட ஒரு மோசமான குணம் இருக்கிறது... தன்னை எதிர்த்து பேசுகிறவர்கள், எதிர்பார்வை பார்க்கிறவர்கள், ஏன் தன்னை எதிர்க்க நினைப்பவர்களை கூட ஏன் வாழ்கிறோம் என்று எண்ணுமளவுக்கு அவர்களை கூனி குறுக வைத்து எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை அவமானப் படுத்தி அவர்கள் முகத்தில் வந்துப்போகும் உயிரற்ற தன்மையை ஆழ்ந்து இரசித்துப் பார்த்து எக்காளமாக சிரிக்கும் அரக்க குணம் கொண்டவன்.
இவ்வுலகில் தனக்கு ஈடு இணையே இல்லை என்று தன்னங்கங்காரம் கொண்டு எல்லோரையும் இழிவாக பார்க்கும் குணம் கொண்டவன். அப்படி பட்டவனிடம் தான் நம் தலைவி சிக்கி இருக்கிறாள்.
எப்படி சிக்கி சின்னாப் பின்னமாகி சீரழிய போகிறாளோ தெரியவில்லை.
தன் புடவையின் மீது காலை அழுத்தமாக ஊன்றி நின்றவனை கண்கள் கலங்க பார்த்தாள் ஏந்திழையாள்..
“காலை எடுங்க” என்றாள் ஈனஸ்வரத்தில். அவளால் குரலை கூட உயர்த்த முடியவில்லை. ஊர் பேர் தெரியாத யார் எவரென்றே தெரியாத ஆடவனிடம் அவள் கட்டி இருக்கும் புடவையின் நுனி சிக்கி இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அதோடு அவன் பேசும் எகத்தாள பேச்சை கேட்டு மனம் சுருண்டுப் போனாள்.
அவன் கொஞ்சமும் அசையாமல் அப்படியே இருக்கக்கண்டு,
“ப்ளீஸ் சார்... காலை எடுங்க... யாராவது பார்த்தா இன்னும் அசிங்கமாகப் போயிடும்” என்று அவள் கண்கள் கலங்க,
“ஓ...! அப்போ இப்போ வரை உனக்கு இது அசிங்கமப்படவில்லையா?” என்று அவளிடம் கேட்டுக் கொண்ட அவளின் புடவையின் மீது இன்னொரு காலையும் அழுத்தி ஊன்ற அவனது முழு பலத்தில் இவளின் கையில் இருந்த புடவை இன்னும் கொஞ்சம் நழுவி அவனது காலடியில் சிக்கிக் கொண்டது.
“அச்சோ” என்று பதறி முந்தானையை இழுக்கப் பார்த்தாள். அவனது அரக்கத்தனமான காலடியில் இருந்து புடவையை அவளால் எடுக்கவே முடியவில்லை.
அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் சரமாக கொட்ட ஆரம்பித்தது.
அவளின் கண்ணீரை இரசித்துப் பார்த்தவன்,
“நீ இந்த மான அவமானத்துக்கு எல்லாம் அஞ்சுவியா என்ன? உன்னை மாதிரி தொழில் பண்றவங்களுக்கு அதெல்லாம் விலை பேசி வித்துட்டு தானே வந்து இருப்பீங்க. அதனால தானே என் மேல வந்து மோதுன... இப்ப என்னவோ புது பெண் போல முந்தானை மேல கை வச்சதுக்கே இப்படி சீன போடுற..” நக்கல் வழிய கேள்வி கேட்டான்.





