Notifications
Clear all

அத்தியாயம் 19

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

“ஹாஹா... இதுக்கு தான் சொன்னேன் நீ தான்டி கேட்கல என் உயிர் கண்ணம்மா” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் பற்கள் பட கடித்தும் வைத்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் சிணுங்க, அவளின் சிணுங்களை இன்னும் அதிகப் படுத்தினான் உதயாதிபன். ஆனால் அவன் சொன்ன உயிர் கண்ணம்மா என்று சொல் அவளுக்கு கேட்காமலே போனது.

அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு வந்தவளை அப்படியே தூக்கி படுக்கையில் போட்டவன் அவளின் மீது கவிழ்ந்துக் கொண்டான் அதிரடியாக. “இதென்ன காலையிலையே..” என்று சிணுங்கினாள்.

“நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்குடி.. ஊருக்கு போகணும். வர மூணு நாள் ஆகும். நான் கண்டிப்பா போயே ஆகணும். இந்த சூழல்ல உன்னை கூட்டிட்டு போகவும் முடியாது. போனா அது வேற மாதிரி பேச்சு வரும்” என்றான் விளக்கமாய்.

“நாளைக்கு தானே... இன்னைக்கு ஒன்னும் இல்லையே... பிறகு என்னவாம்” என்று அவனை கொஞ்சினாள்.

“எனக்கு வேணுமே...” என்று அவளிடம் சலுகை எடுத்துக் கொண்டவன் அவளில் ஆளுகையுடன் இணைந்துக் கொண்டான்.

அந்தொரு பொழுதும் எப்படி போனது என்றே தெரியவில்லை. அடுத்த நாள் காலையில் உதயாதிபன் கிளம்பி நிற்க வராளியின் முகத்தில் கவலை தென்பட்டது. அவளின் விழிகள் நிறைந்து இருந்த நீரை சுண்டி விட்டவன்,

“எக்காரணத்தை கொண்டும் நீ இந்த அறையை விட்டு வெளியவே வரக்கூடாது... உனக்கு தேவையானது எல்லாம் உன்னை தேடி வர ஏற்பாடு செய்து இருக்கேன் வராளி. நான் வரும் வரை எது நடந்தாலும் பொறுமையா இருடி” என்று அறிவுறுத்தினான். ஏனெனில் அவனது வீட்டு ஆட்களை பற்றி தான் அவனுக்கு மிக நன்றாகவே தெரியுமே... அதனால் அவளை எச்சரித்தான்.

அவள் தலையை ஆட்டினாள். “அப்புறம்” என்று பெருமூச்சு விட்டவன், அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தான். “என்னை விட்டு போக மாட்டியே..” என்று கேட்டான். “ம்ஹும்” என்று தலையை ஆட்டினாள். அவளின் முகத்தோடு முகம் புதைத்தவன் “என்னை மறந்துடாதடி என் உயிரழகே கண்ணம்மா” என்று மனதோடு சொல்லிக் கொண்டவன்,

“நினைவு வச்சுக்கோ இந்த அறையை விட்டு எங்கும் போகாதடா.. நான் வந்திடுவேன். நான் வந்த பிறகு எதா இருந்தாலும் முடிவு எடுத்துக்கலாம் சரியா? அவசரமா எதையும் செய்யாதாடி கண்ணம்மா” என்றான்.

“என்ன முடிவு எடுக்கணும்?” என்று கேட்டாள் புரியாமல். “எந்த முடிவா இருந்தாலும்...” என்று அழுத்தி சொன்னான். “புரியலங்க” என்றாள் பாவமாய்.

“சில விசயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது வராளி... நீ ரொம்ப சின்ன பொண்ணு. சிலதை புரிந்துக் கொள்ளக் கூடிய பக்குவம் உனக்கு வரவில்லை. அதனால அறிவுறுத்துகிறேன். ஒரு முறை நீ என்னை விட்டு நீங்கினாலும் நீயும் நானும் சேர்வது மிக கடினம். அதை நினைவு வச்சு பொறுமையா எனக்காக காத்திரு. நான் கூடிய சீக்கிரம் வந்திடுறேன்டி” என்று அவளிடம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி விட்டு கிளம்பினான்.

அதன் பிறகு ஒரு நாள் நன்றாக சென்றது. உதயாதிபன் ஊரை விட்டு போகும் முன்பே வேலைக்காரர்களை எல்லாம் மீண்டும் பணிக்கு அமர்த்தி விட்டான். அவர்களிடமும் எச்சரித்து விட்டு சென்றிருந்தான்.

அறைக்கே எல்லாம் கொண்டு போய் குடுக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருந்தான். அதனால் வராளி எதற்கும் கீழே இறங்கவில்லை. அவன் சென்ற பிறகும் அவளின் உடை அவனது சட்டை மட்டுமே. ஏனோ வேறு உடை அவளுக்கு போட தோன்றவில்லை. பாவடையை உடுத்திக் கொண்டாள். ஐந்தாம் நாள் காலையில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தவளின் முடியை பிடித்து யாரோ இழுக்க,

“அச்சோ வலிக்கிது.. ஏன் இப்படி இழுக்குறீங்க? யாரது எதுக்காக இழுக்குறீங்க?” என்று தலையை பிடித்துக் கொண்டே அடித்து பிடித்து எழுந்தாள் வராளி.

அவளை படுக்கையில் இருந்து கீழே தள்ளி அவளின் இடுப்பிலே ஓங்கி ஒரு உதை விட்ட தேனாண்டாள்,

“எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுல வந்து உட்கார்ந்துக் கிட்டு என்னையவே வீட்டை விட்டு துரத்தி இருப்ப.. எங்கயோ கிடந்த எச்சகல நாயே... ...” மேலும் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசி அவளை அடித்து துன்புறுத்தி பேசக் கூடாத பேச்செல்லாம் பேசி அவளை குற்றுயிரும் குலை உயிருமாக மாற்றி போனார்கள்.

பல காகிதங்களில் கை எழுத்து வாங்கிக்கொண்டு அவளை நாயை விட கேவலமாக அடித்து விரட்டி விட்டார்கள். வாசலில் அவளது நின்ற அவளது குடும்பத்திடம் மேலும் சில இலட்ச்சங்களை தூக்கி வீசிய சிவசங்கரன்,

“இனி இவளுக்கும் என் மகனுக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக் கூடாது... அப்படி சம்மந்தம் வச்சுக்கிட்டா உன் பொண்ணை உயிரோட விடமாட்டோம்” என்று எச்சரித்து அனுப்பினார்கள் கலாவதியிடம்.

“ஏம்மா என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ண? உனக்கு நான் அப்படி என்ன கெடுதல் பண்ணிட்டேன்.. உன் வயித்துல வந்து பிறந்தது தான் தப்பா” என்று தாயை கேள்வி கேட்டவளை முறைத்துப் பார்த்த கலாவதி,

“இங்க பாருடி... நீ கனவுல நினைச்சா கூட இப்படி பட்ட சொத்து நமக்கு கைக்கு வராது... இந்த வீடு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா? ஒரு மாமாங்கம் உழைச்சாலும் நம்மளால இப்படி சொத்து சேர்க்க முடியாது... அதனால சும்மா புலம்பாம ஆக வேண்டிய காரியத்தை பாரு” என்று வீட்டுக்கு கூட்டி வந்ததோடு பெற்றவரின் கடமை தீர்ந்தது போல இருந்துக் கொண்டார் கலாவதி. ஒரு மாதம் தனக்கு என்ன நிகழ்ந்தது என்று கூட புரியாமல் தன் வேதனையில் உழன்று இருந்தவளுக்கு அவளின் வயிற்றில் கரு தரித்ததை உணர்ந்த பிறகு அவளால் முன்பு மாதிரி தன் வேதனையில் உழன்று போக முடியவில்லை.

உள்ளுக்குள் எழுந்த வேதனை எல்லாவற்றையும் துடைத்து மூட்டை கட்டி வைத்தவள் படிக்கலாம் என்று போக கலாவதி, “உனக்கு பீஸ் கட்டி வேஸ்ட். தெண்ட செலவு எல்லாம் செய்ய முடியாது. ஒழுங்கா வீட்டோட இரு.. இல்லன்னா வேலைக்கு போ” என்று அவளை விரட்டி அடித்தார்.

அதற்கு அவளின் உடன் பிறந்தவர்களும் துணை புரிய படிப்பு பாதியில் போனது. சேல்ஸ் கேளாக இருந்தாள் வயிற்று பிள்ளையோடு. ஸ்கேன் மெடிசன் என எல்லாவற்றையும் தன் செலவிலே பார்த்துக் கொண்டாள். எதற்காகவும் யாருடைய கையையும் எதிர் பார்த்து வாழவில்லை. சுயமாக வாழ்ந்தாள். பெற்றவளை விட்டு வெளியே போய் விடலாம் தான். ஆனால் அவளின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வி குறியாயிற்றே. அதனால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவள் இருக்கிறாள்.

தன்னை விற்று வந்த பணத்தில் ஒரு பைசா கூட அவள் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு முன்பு கலாவதி அதை குடுக்கவும் இல்லை. குடுத்து இருந்தாள் வாங்கி இருக்கவும் மாட்டாள். சண்டை கட்டி வாங்கி இருக்கலாம் தான். ஆனால் அவளுக்கு அதிலெல்லாம் விருப்பமே இல்லை.

அது எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவளுக்கு உதயாதிபன் மீது அவ்வளவு கோவம் வந்தது. இவள் தான் போய்விட்டாள். ஆனால் அவன் நினைத்து இருந்தால் அவளை தேடி வந்து இருக்கலாம் தானே.

அப்போ நான் வேணாம் என்பதால் தானே அவன் வரவில்லை. அவன் தான் தாலி கட்டும் பொழுதே சொன்னானே பத்து நாள் கூத்துன்னு.. பிறகு எப்படி தன்னை தேடி வருவான்... என்று உள்ளுக்குள் எரிமலை பொங்கியது. ஆனாலதை கூட அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை அவள்.

Loading spinner

This topic was modified 19 hours ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top