Notifications
Clear all

அத்தியாயம் 18

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

அவனது பொறுமையிலும் நிதானத்திலும் அவளுக்கு பயம் முற்றிலும் தகர்ந்துப் போனது. அவனை முழுமையாக நினைக்க வைத்தான். வீட்டில் ஒருவரும் இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வசதியாக போய் விட நினைச்ச நேரம் நினைச்ச படி என இருந்தார்கள். கூடலை கண்டு பயந்து இருந்தவளுக்கு அது ஒரு கலை என்று அவளுக்கு உணர்த்தினான்.

இடைவிடாத இரண்டு நாட்களும் அவர்களுக்கு கூடலும் ஊடலும் என ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டே உராய்ந்து கொண்டே தான் போனது. முதல் நாளாவது பாவாடை போட்டு இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாளும் அவனின் வெள்ளை சட்டை மட்டும் தான் உடையாக அணிந்து இருந்தாள் வராளி.

“ரொம்ப கூச்சமா இருக்குங்க” என்று முட்டியை தொட்டுக் கொண்டு இருந்த அவனின் சட்டையை கீழே இழுத்து விட்டுக் கொண்டே இருந்தாள். அவளை அந்த அழகில் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவே இல்லை.

“பட் இதுல ரொம்ப அழகா இருக்கடி... யாரும் இல்லாததுனால தானே போட சொல்றேன்” என்றவன் அவளின் கூச்சத்தை கண்டு அவனுக்கு சீண்டி விட வேண்டும் போலவே தோன்றியது. ஆனால் சிறு பெண் பயந்து விடுவாள். தன்னை முழுமையாக அவள் ஏற்றுக் கொண்ட பிறகு தன் வேலையை காண்பிக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டவன் அவளின் தோள் வளைவிள் முகம் புதைத்துக் கொண்டான்.

தன் மேல் பாரம் போட்டு நின்றவனின் தலையை முதல் முறையாக தயக்கம் மீறி கோதி விட்டாள். என்னவோ அவனை தவறாகவே அவளால் பார்க்க முடியவில்லை. அதில் அவனது முகம் மலர்ந்தது.

“சுகமா இருக்குடி.. அப்படியே பண்ணு” என்று அவளிடம் இன்னும் சொகுசாக சாய்ந்துக் கொண்டான். அவனது செயலில் சிரிப்பு மலர்ந்தது அவளுக்கு. மென்மையாக தலையை கோதி விட்டாள்.

அப்படியே அவளை சோபாவில் அமர வைத்து அவளின் மடியில் படுத்துக்கொண்டான். அவளது கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கோதிவிட சொல்ல, அவளும் தலையை கோதி விட்டாள்.

பெரிதாக இருவரையும் பற்றி பேசிக்கொள்ளவில்லை. பேச தோன்றா தனிமையல்லவா இது... இளமை உணர்வுகள் அதிகமாக பேசியது. ஒருவரின் நலனை மற்றவர் நாடினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் யாருடைய இடையூறும் இல்லாமல்.

இங்கே ஹோட்டலில் இருந்த தேனாண்டாளோ ஆத்திரத்தின் உச்சியில் இருந்தார். வீட்டு மேனேஜர் மூலம் அவருக்கு விசயம் தெரிய வந்தது. அதோடு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக தன் மொபைலில் கனெக்ட் செய்து இருந்த கேமரா ஆக்சசை பார்க்க அது கருப்பு வெள்ளையாவர மேனேஜருக்கு போன் போட்டார்.

அவர் அனைத்து வேலையாட்களுக்கும் லீவு இருப்பதை சொல்ல கொதித்துப் போனார். “என்னை கேட்காம யார் லீவு கொடுத்தது?” கொந்தளித்தார்.

“அமைச்சர் சார் தான் மேம்” என்று அவர் பணிவாக சொல்ல, உடனடியாக மகனுக்கு போனை போட்டார். அவனோ மனைவியின் மடியில் சொகுசாக படுத்துக் கொண்டு, “யா மாம்” என்றான்.

“அங்க என்ன நடக்குது உதயா?” எடுத்த உடனே ஆத்திரத்தில் கேட்டார்.

“மாம் நீங்களே எங்களுக்கு ப்ரைவசி குடுக்க தான் ஹோட்டல் போய் இருக்கீங்க... அப்படி இருக்கும் பொழுது வேலையாட்களை மட்டும் எப்படி வச்சுக்குறது அது தான் ஒரு வாரத்துக்கு லீவ் குடுத்து அனுப்பி இருக்கேன். ரைட் தானே மாம்” என்று அவர் போட்ட பாலையே திருப்பி சிக்செர் அடித்தான் அவரது மகன்.

“அதுக்கு இல்ல உதயா... தனியா நீங்க ரெண்டு பேரும் மட்டும் எப்படி சமாளிப்பீங்க? அது தான்” என்றார். “அவளுக்கு சமைக்க தெரியும். அவ தான் சமைக்கிறா அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான்.

அப்பட்டமாய் போய் பேசும் கணவனை ஆவென்று பார்த்தாள் வராளி. சுடு தண்ணீர் கூட அவளை போட அனுமதிக்கவில்லை அவன். காலை காபியிலிருந்து இரவு டின்னெர் வரை அவனே தான்.. காய்கறி கூட அவளை கட் பண்ண அவன் அனுமதிக்கவில்லை. “நீ என்னை மட்டும் கவனிடி. மத்ததை எல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு அவளை தூக்கி சமையல் மேடையில் உட்காரவைத்து அவளோடு கதை பேசியபடி சின்ன சின்ன ஊடல் கொண்டு மொத்தமாக கூடல் கொண்டு உயிரை உருக்கும் அழுத்தமான இதழ் முத்தங்களும் கொடுத்து என வாழ்வின் சுவையான பக்கங்களை அவளுக்கு காட்டினான்.

அவனோடு இருந்த மூன்று நாட்களும் அவளுக்கு சுவர்கத்தில் இருந்தது போலவே இருந்தது. இதுவரை அவள் வாழ்நாளில் காண முடியாத மகிழ்ச்சியை எல்லாம் ஒட்டு மொத்தமாக காட்டினான். அவளை இன்பத்தால் திணறடித்தான். மூன்றாவது நாள் இரவில் “இன்னைக்கு என் பக்கத்துல வந்துடாதடி” என்று அவன் தள்ளிப் படுக்க,

“ஏங்க என்ன ஆச்சு? என் மேல எதுவும் கோவமா?” என்று பரிதவித்துப் போனாள்.

“உன் மேல கோவமா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நீ...” இழுத்தவன், “என்னோட உயிர்டி” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

“இல்ல அப்புறம் ஏன் விலகி இருக்கீங்க?” “இல்லடி இது வேற” என்றான். “அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க எப்பொழுதும் போல என் கிட்ட இருக்கணும்” என்று அவளே அவனது மார்பில் வந்து விழுந்தாள்.

“அப்போ உன் தலை எழுத்த யாரால மாத்த முடியும்” என்று கண் சிமிட்டியவன் அதற்கு பிறகு அவளை புயல் போல சுழட்டி எடுத்தான். சிறு பெண் என்று கூட பார்க்காமல் அவளை பிராண்டி எடுத்து விட்டான்.

அவனது இந்த பரிமாணத்தில் அவள் திகைத்துப் போனாள். மிரண்டு போய் விட்டாள். ஆனால் அவனது மூர்கத்திலும் ஏதோ ஒரு உணர்வு அவளுக்குள் பரவ அவனை தாங்கிக் கொண்டாள்.

“ஐ கான்ட்டி” என்றவன் அவளுள் மூர்க்கமாக புதைந்துப் போனான். அவனது புயல் பாய்ச்சலில் வெட்கம் கொண்டாள் பெண்ணவள். “ப்ளீஸ்” என்று அவள் சிணுங்க,

“உனக்காக இவ்வளவு நாளும் பொறுமையா ஹேண்டில் பண்ணேன்டி. ஆனா இன்னைக்கு என்னோட ஆசைக்கு இப்படி ஒரு முறை” என்று சொல்லியபடியே அவளிடம் புதைந்தான். வராளிக்கு அவனது ஆசையை தடை போட விருப்பம் இல்லாமல் அவனை தாங்கிக்கொள்ள அதன் பிறகு இன்னுமே மூர்க்கம் ஆனான் உதயாதிபன்.

“ப்ளீஸ்...ப்ளீஸ்..” என்று அவளை கெஞ்சி கொஞ்சியே அவனுக்கு விருப்பமானதை எல்லாம் கேட்டு கேட்டு நிறைவேற்றிக் கொண்டான். “நீங்க ரொம்ப மோசம்” என்று அவள் சொல்ல, “இன்னும் எதிர் பார்க்கிறேன்” என்று கண்ணடித்தான். அதிள் அவளது முகம் சிவந்துப் போனது.

காட்டாறு வெள்ளமாய் அவளை தனக்குள் சுருட்டிக் கொண்டான். அன்றைய இரவு அவனிடம் ஒரு பயர் தென்பட்டது.

“இதுக்கு பேசாம உங்களை தள்ளியே படுக்க விட்டு இருந்து இருக்கலாம். நானே வழிக்க வந்து மாட்டிக்கிட்டேன்” என்று அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ஹாஹா... இதுக்கு தான் சொன்னேன் நீ தான்டி கேட்கல என் உயிர் கண்ணம்மா” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் பற்கள் பட கடித்தும் வைத்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் சிணுங்க, அவளின் சிணுங்களை இன்னும் அதிகப் படுத்தினான் உதயாதிபன். ஆனால் அவன் சொன்ன உயிர் கண்ணம்மா என்று சொல் அவளுக்கு கேட்காமலே போனது.

Loading spinner

This topic was modified 10 hours ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top