ரப்பர் நிப்பிளை வாயில் வைக்க சின்ன வாண்டு துப்பியது.
“கொழுப்பை பாரு” என்று பிள்ளையை திட்டியவள் திரும்பி கணவனை பார்த்தாள். அவனது கண்களில் லேசான குறும்பு தெரிந்தது. அதில் இவளுக்கு பத்திக் கொண்டு வந்தது.
“கண்ணை மூடுங்க” என்றாள்.
“முடியாதுடி” என்றான் அழுத்தமாய்...
“ப்ச்” என்று அலுத்துக் கொண்டவள் புடவையை சரிய விட்டு மகனை மூடிக் கொண்டாள். பெருமூச்சு விட்டவன் பிள்ளையின் காலை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அதில் பிள்ளை வீல் என்று கடித்து வைத்து அழுகவும் செய்ய, அதே நேரம் “அவுச்” என்று அவளின் சத்தமும் கேட்டது.
“ஏன் பாப்பா கடிச்சுட்டானா?” என்று பாட்டி விவஸ்த்தை இல்லாமல் விசாரிக்க சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல வந்தது அவளுக்கு.
“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னவள் அப்போது தான் மகனின் காலை இறுக்கி பிடித்து இருந்த கணவனின் கையை பார்த்தாள்.
“இப்படி இறுக்கி பிடித்து இருந்தா அவன் கத்தாம என்ன பண்ணுவான்...” என எண்ணியவள்,
“எப்போ பாரு இப்படி ஹார்ஷாவே ஹேண்டில் பண்ணா எப்படி? இவரோட தொடுகைக்கு நான் பழகிட்டேன். தாங்கிக்கிடேன். பிள்ளையும் தாங்குவான்னு எப்படி நினைக்கலாம்” முணகியவள்,
“எதுக்கு இவ்வளவு அழுத்தி பிடிச்சு இருக்கீங்க.. மெதுவா பிடிங்க. உங்க உடும்பு படியை அவன் தாங்க மாட்டான்” என்றாள். உடனே அவனின் பிடி மிக மிருதுவாக மாறியது.
“அப்போ நீ தாங்குவியா?” என்று கேட்டான்.
“ஹாங்” என்று அவள் அவனை பார்க்க,
“இல்ல அவன் என் பிடியை தாங்க மாட்டான். ஆனா நீ தான் ஏற்கனவே என் பிடியை தாங்கி இருக்கியே.. அது தான் மறுபடியும் தாங்குவியான்னு கேட்டேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
“காலையில நீங்கென்ன சொன்னீங்க? என் வாழ்க்கைக்குள்ள வர மாட்டேன்னு சொன்னீங்களா இல்லையா? இப்போ வந்து இப்படி பேசுறீங்க”
“நானா வரல மேடம் நீங்க தான் என் வாழ்க்கைக்குள்ள என்ட்ரி ஆகி இருக்கீங்க” என்றான் நக்கலாக உதயாதிபன்.
அதில் அவமானமாக உணர்ந்தவள்,
“காரை நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்”
“எப்போ பாரு பாதியில போவது தான் உன் வேலையா?” எரிச்சலுடன் கேட்டான்.
“யாரு பாதியில போனது... நீங்க தான் பாதியிலயே அடிச்சு துரத்தி விட்டீங்க” என்றாள் வெடுக்கென்று.
“பணம் வேணுமா டிவேஸ் வேணுமான்னு கேட்டதுக்கு பணம் தான் வேணும்னு கேட்டு கோடி கோடியா பணத்தை வாங்கி உன் பேர்ல சொத்து எல்லாம் வாங்கிக்கிட்டு டைவேர்ஸ் பேப்பர்ல சைன் போட்ட உத்தமியாச்சே நீங்க. உங்களுக்கு என்னை பார்த்தா அடிச்சு விரட்டுன மாதிரி தான் தோணும்” என்றான் அவனும் கோவமாக.
“ஆமா நான் கோடி கோடியா வாங்குனதுனால தான் இப்போ ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் நடிச்சுக்கிட்டு இருக்கேன் பாருங்க” என்றாள் கோவமாக.
சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் உதயாதிபன்.
“ஆமா நான் கோடி கோடியா வாங்குனதுனால தான் இப்போ ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் நடிச்சுக்கிட்டு இருக்கேன் பாருங்க” என்றாள் வராளி கோவமாக.
சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் உதயாதிபன்.
“என்னடி சொல்ற?”
“ஆமா சொல்றாங்க உப்புக்கு சொரக்காய் பத்தலைன்னு” என்றாள் வெடுக்கென்று.
“ப்ச் அது சொரக்கைக்கு உப்பு பத்தலடி”
“ஆமா இப்ப அது தான் ரொம்ப முக்கியம் பாருங்க. முதல்ல வண்டியை நிறுத்த சொல்லுங்க. நான் காரை விட்டு இறங்கணும்” என்றாள்.
“போய்க்கலாம்” என்றவன், “உங்க வீட்டுல என் கூட வாழ சொல்லி எதுவும் சொல்லையாடி” கேட்டான்.
“ஆமா அவங்க அப்படியே சொல்லிட்டாலும்...” என்று முணகினாள். அது அப்படியே அவனது காதில் தெளிவாக விழுந்தது.
“பீச் ஓரம் ஒரு ஹவுஸ் இருக்கே?” என்று இழுத்தான்.
“அது இருக்கு நிறைய.. இப்ப அதுல உங்களுக்கு என்ன சார் பிரச்சனை?” என்றாள் வெடுக்கென்று.
“ப்ச் முறைக்காதடி... கன்னம் மறுபடியும் சிவந்திடும்” என்று காலையில் அடித்ததை நினைவுப் படுத்தினான்.
“இங்க பாருங்க இன்னொரு முறை என் மேல உங்க கை பட்டது பிறகு நான் பொல்லாதவளா மாறிடுவேன் சொல்லிட்டேன். சும்மா சும்மா அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக் கூடாது ஆமாம். என்னவோ உங்க பொண்டாட்டி போல ரொம்ப தான் கை நீளுது” என்றாள் முறைப்புடன்.
“பொண்டாட்டி தான்... பொண்டாட்டி இல்லன்னா அந்த தாலியை கழட்டி என் கையில குடுத்துட்டு கிளம்பு” என்றான்.
“ஏதே...” என்று மார்பின் மீது இருந்த தாலியை இறுக்கி பிடித்துக் கொண்டாள். அதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் என்னவோ போல இருந்தது.
“அப்போ பொண்டாட்டின்னு ஒத்துக்கடி” என்றான் உல்லாசமாய்.
“அப்படி எல்லாம் ஒத்துக்க முடியாது” வீம்பு பண்ணினாள்.
“அப்போ தாலியை குடு” என்று விளையாடினான் அவளுடன். ஆனால் அது அவளுக்கு புரியாமல்,
“இது மட்டும் தான் என் மகனுக்கும் எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதையை இந்த சமூகத்துல குடுத்துட்டு இருக்கு. தயவு செஞ்சு இதை மட்டும் கேட்காதீங்க” என்றவளின் குரல் பிசிறடித்தது. அவள் கண் கலங்குகிறாள் என்று புரிந்தவன் அதன் பிறகு எதவும் பேசவில்லை.
அவனது மௌனத்தை பார்த்தவள், “இந்த தாலிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கோ அதுக்கு உண்டான காசை நான் கொடுத்துடுறேன். ப்ளீஸ் இதை கேட்காதீங்க” என்றாள். அவளின் ஒரு கை இன்னும் அவன் கட்டிய தாலியில் தான் இருந்தது. ஒரு கையால் பிள்ளையை பிடித்து இருந்தாள்.
அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். தங்கத்துக்காக தான் அதை கேட்கிறேன் என்பது போல எண்ணியவளை கண்டு பெருமூச்சு விட்டவன், “தேவையில்லை...” என்று மட்டும் முடித்துக் கொண்டான். அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. பிள்ளையின் சத்தம் மட்டுமே அந்த காரை நிறைத்து இருந்தது. பாட்டி ஒரு தூக்கமே போட்டு விட்டார்.
அதோடு இவர்களின் பேச்சு வார்த்தை மிக இரகசியமாக நடத்திக் கொண்டதால் டிரைவருக்கு கூட கேட்கவில்லை. கேட்காமல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.
“ஆமா என்னவோ பீச் ஹவுசை பத்தி கேட்டீங்களே என்ன அது...?” என்று கேட்டாள்.
“உனக்கு பீச் ஹவுஸ் இருக்கு தானே. அத ஷூட்டிங்க்கு விட்டு சம்பாத்தியம் பண்ணிட்டு இருக்கியே பிறகு எதுக்கு இப்படி ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் அலையணும். அதுல கிடைக்காததா இதுல கிடைக்கப் போகுது?” என்று கேட்டான்.
“எனக்கா?” என்று கேட்டவள், “அதுவும் அதை ஷூட்டிங்க்கு விட்டு சம்பாதிச்சுக்கிட்டு இருக்கனா? இது என்ன புதுபுரளி” என்று முழித்தாள்.
“சும்மா நடிக்காதடி... என் பார்வையில படணும்னு தானே இப்படி எல்லாம் செய்துக்கிட்டு இருக்க. ஒரு நாளைக்கு ஷூட்டிங் விட்டாலே நீ இப்படி அலைஞ்சி திரிஞ்சி ஒரு மாசம் சம்பாதிக்கிற சம்பாத்தியத்தை சம்பாரிச்சுடலம். பிறகு எதுக்கு நீ இவ்வளவு சீன் போட்டு வேலைக்கு போற. இதுக்கு பின்னணி வேற என்னவா இருக்கும்... என் கண்ணுல பட்டு என்னை மயக்கி என் வீட்டுக்கு மருமகளா இந்த ஊருக்கு பெருமை பீர்த்த தானே இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க” என்று அவள் மீது கூசாமல் பழியை போட்டான்.
அதை கேட்டவளுக்கு உள்ளுக்குள் சுறுக்கென்று ஆனது. கண்கள் எல்லாம் கலங்கி விடுமோ என்று பயந்துப் போனாள். அதுவும் அவன் முன்னாடி கலங்கி கண்ணீர் விட்டால் அதை விட வேறு என்ன கேவலம் இருந்து விடும்.
அவம் மனம் வெதும்பி விடும் கண்ணீரை கூட நாடகம் என்று அல்லவா சொல்லிவிடுவான். அதனால் இதழ்களை கடித்து தன் அழுகையை முயன்று அடக்கிக் கொண்டாள். ஆனால் அதையும் மீறி அவளது கண்களில் இருந்து கண்ணீர் பளபளக்க “கடவுளே... நான் தைரியமா இருக்கணும். அழ மட்டும் வச்சுடாத.. ப்ளீஸ்” என்று கடவுளிடம் கெஞ்சியவளின் இதழ்களில் வேதனையும் மீறி புன்னகை அரும்பியது.
வேதனையை புன்னகையாக மாற்றிக் கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் விழிகளில் இருந்த கண்ணீரின் மினுமினுப்பும் இதழ்களில் இருந்த புன்னகையும் கண்டு கொண்டான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,
“பதில் சொல்லுடி” என்று மேலும் அவளை காயப்படுத்தினான்.
“அது தான் நீங்களே சொல்லிட்டீங்களே சார்... உங்களை மயக்கன்னு. பிறகு நான் என்ன சொல்ல... எனக்கும் ஆடம்பரமா வாழ ஆசை வரும்ல. அது தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கேன். நான் அடிக்கடி உங்க பார்வையில பட்டு என் அழகை காட்டி மயக்கி போட்டு அமைச்சர் பொண்டாட்டியா வாழ ரொம்ப ஆசை வந்திடுச்சு..” என்று சொன்னவள்,
“வாந்தி வர்ற மாதிரி இருக்கு கொஞ்சம் வண்டியை நிறுத்துறீங்களா ப்ளீஸ்” என்று கேட்டாள்.





