அடுத்த நாள் காலையில் அடுப்படியில் பரபரப்பாக நின்று சமைத்துக் கொண்டு இருந்தான் பரசுராம். எரிந்த கண்களை தேய்த்துக் கொண்டே அவனை தேடி வந்தான் செஞ்சன்.
“என்ன மச்சான்.. வேலை முடிச்சுட்டியா?” கேட்டபடியே கெட்டிலில் இருந்த தேநீரை கண்ணாடி கப்பில் ஊற்றிக் கொண்டான்.
“அல்மோஸ்ட் பினிஷ்டு... எப்பொழுதும் பன்னிரண்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுவா. இன்னைக்கு என்னாச்சுடா மூணு மணிக்கு எழுந்து பார்த்தப்ப கூட உன்னை ஆளக் காணோம்” அவனை பார்த்து கேட்டான் பரசு.
“சும்மா அப்படியே ஏரிக்கரையில படுத்துட்டேன் டா”
“அது சரி...” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “ஏன்டா நீயெல்லாம் ஒரு ஆர்ஜேவா.. வெளில சொல்லாத. எல்லோரும் காரி மூஞ்சிலையே துப்புவாங்க. இப்படியாடா கிறுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்குவ”
“ப்ச் அதை விடுடா..” என்றவன், ஆழ்ந்து நுகர்ந்து, “சேப்பக்கிழங்கு வறுவல் தானே... ஸ்மெல் சூப்பரா இருக்குடா” என்று வெளியே போய் விட்டான். போகும் அவனை பெருமூச்சு விட்டு பார்த்த பரசுவுக்கு செஞ்சனை இதுநாள் வரை கணிக்கவே முடியவில்லையே வருந்தியவனுக்கு அவன் கணிக்க முடியாத உயரத்தில் இருக்கிறான் என்று மட்டும் புரிந்துப் போனது.
நடப்பது நடக்கட்டும் என்று எண்ணியவன் இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தான். எப்பொழுதும் செஞ்சனும் சமையலுக்கு உதவுவான். பல நேரம் செஞ்சனே முழு சமையலும் செய்து விடுவான். ஆனால் இன்றைக்கு தான் இவ்வளவு தாமதமாக எழுந்து வந்து இருக்கிறான்.
அவனின் மனதில் என்னவோ இருக்கிறது என்று மட்டும் உறுதியாக தெரிந்தது. அதை என்னவென்று கேட்க மனம் தடுமாற எதுவும் ஆராயவில்லை பரசு.
நிதானமாக தேநீரை குடித்துக் கொண்டு இருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் அறைக்குள் நுழைந்து ரேடியோ ஸ்டேஷன் செல்வதற்கு கிளம்ப ஆரம்பித்தான்.
செஞ்சன் பரசுக்கு அறிமுகமாகி இரண்டு வருடங்கள் கடந்து இருந்தது. மெரீனா கடற்கரையில் மக்கள் நடமாட்டமே இல்லாத சமாதிகளுக்கு பின்னாடி போடப்பட்டு இருந்த கற்களில் அமர்ந்து இருந்தான் செஞ்சன். அந்த நேரம் தான் தற்கொலை செய்வதற்காக பிரவாசு வந்து இருந்தான்.
அவன் வந்த நோக்கத்தை புரிந்துக் கொண்ட செஞ்சன், கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் பேச்சு குடுத்துக் கொண்டே அவனின் மனநிலையை மாற்ற ஆரம்பித்தான்.
பரவாசுக்கு வறுமை தான் காரணம் என்று புரிந்தது. சொந்த ஊரை விட்டு மதராசுக்கு வேலை தேடி வந்தவன் ஒவ்வொரு சினிமா நிறுவனமாக அலைந்தான். ஆனால் யாரும் வாய்ப்பு குடுக்கவில்லை.
பெற்றவர்கள் ஒரு பக்கம் அவனை நெருக்க அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தலைக்கு மேல் பாரம் அதிகமாகி இருக்க நொந்துப் போனவனுக்கு சரியான கைடன்ஸ் இல்லாமல் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை வேண்டும் என்று எண்ணி தன் முடிவை தானே மாய்த்துக் கொள்ள எண்ணி இங்கே வந்து இருந்தான்.
எல்லாவற்றையும் கேட்ட செஞ்சன், “தான் ஒரு வேலை வாங்கி தருவதாக சொல்லி தன்னுடைய பிளாட்டுக்கு கூட்டிட்டு வந்தான்.
“நீங்க மட்டும் தான் இருக்கீங்களா சார்” என்று வீட்டை சுற்றி பார்த்து விட்டு கேட்டான்.
“இந்த சார் மோரு எல்லாம் வேணாம். செஞ்சன்னு கூப்பிடு..” என்று சொன்னவன்,
“இப்போதைக்கு நான் மட்டும் தான்.. இனி நீயும் நானும்” என்றான். அவனது இயல்பான தோழமை பிடித்து போக அவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான். செஞ்சன் தான் வேலை பார்த்த வானொலி நிலையத்திலே இவனையும் க்ரியேடிவ் டீமில் சேர்த்து விட்டான்.
சினிமாவுக்காக சேர்த்து வைத்து இருந்த ஸ்க்ரிப்ட் எல்லாவற்றையும் சேர்த்து புது புது நிகழ்ச்சிகளை சொன்னான். அது மக்களிடையே நிறைய வரவேற்பை பெற, அதில் எல்லோருமே மகிழ்ந்து போக அவனுக்கு ஒரே மாதத்தில் இன்க்ரிமென்ட் கூடியது.
முதல் மாத சம்பளத்தை கொண்டு போய் அப்படியே செஞ்சனிடம் நீட்டினான் பரவாசு.
“டேய் நெஞ்சை நக்காத.. போய் ஊருக்கு பணத்தை அனுப்பிட்டு, இங்க இருக்க எல்லோருக்கும் ட்ரீட் வை. இல்லன்னா உன்னை விட மாட்டாங்க” என்றான் செஞ்சன்.
“செஞ்சா வாடகை பணமாவது எடுத்துக்கலாம் இல்லையா?” பரிதவித்து போய் கேட்டான்.
“உன்னை நண்பனா தான்டா பார்க்கிறேன். ஆனா நீ என்னை ஹவுஸ் ஓனர் போல பார்க்கிற போல.. சரி குடு” என்று அவனது கையில் இருந்த பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்ள வர,
“எது உனக்கு வாடகை பணம் குடுக்கணுமா? அதுக்கு வேற ஆளை பாரு... இது அப்படியே எங்க அப்பா அம்மாவுக்கு தான் அனுப்ப போறேன். ட்ரீட்க்கு நீ தான் ஸ்பான்செர் பண்ணும் மாப்பள.. வரட்டா” என்று ஓடி விட்டான்.
அவனி சொல்லிவிட்டு ஓடி போய் விட சிரிப்புடன் நகர்ந்தான் செஞ்சன். பரவாசு மறைவில் இருந்து எட்டி பார்த்தான் செஞ்சனை.
அவனது அன்பில் இவனுக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
“உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப செஞ்சா...” என்று அன்று வாழ்த்த தொடங்கியவன் இன்று வரையும் வாழ்த்திக் கொண்டு தான் இருக்கிறான் மனதுக்குள்.
“நான் கட்டல் படுவதை பார்த்து நான் சொல்லாமலே என் துயரத்தை எல்லாம் கலைந்தவன் நீ.. ஆனா உன் மனசை அரிச்கிக்கிட்டு இருக்குற விசயத்தை என்னன்னு கூட என்னால தெரிஞ்சுக்க முடியல செஞ்சா” என்று குளித்துக் கொண்டே நண்பனுக்காக மறுகினான் பரவாசு.
அவன் குளித்து வெளியே வரும் பொழுது செஞ்சனும் வந்து அமர்ந்து இருந்தான் உணவு மேசையில்.
“உன் டைமிங்கை யாராலும் அடிச்சுக்க முடியாது மச்சான்” என்று உணவை அவனுக்கு எடுத்து பரிமாறிவிட்டு தானும் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
“டேய் ஒன்னு மாப்பிள்ளைன்னு கூப்பிடு, இல்லையா மச்சான்னு கூப்பிடு அதை விட்டுட்டு ஏன்டா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி கூப்பிட்டு தொலையிர” கடுப்படித்தான் செஞ்சன்.
“அந்த சமயம் வாயில என்ன வருதோ அதை கூப்பிடுறேன். உனக்கு என்னடா போச்சு?” என்றவனை, “உன்னை எல்லாம் திருத்த முடியாதுடா” சொல்லி விட்டு உணவில் கவனம் வைத்தான்.
“இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் செஞ்சா?” அலுவலகம் கிளம்பி வெளியே வந்தார்கள்.
“ஒரு ஸ்பான்செர போய் பார்க்க வேண்டி இருக்கு. அதோட இப்ப புதுசா லாஞ்ச் பண்ண இருக்க சில்டர்ன்ஸ் பார்க்க போகணும். இன்பர்மேஷன் கேதார் பண்ணிட்டு பன்னிரண்டு மணி ஷோக்கு டீட்டையில் குடுக்கணும். சோ உன்னை ஆபிஸ்ல ட்ராப் பண்ணிட்டு அப்படியே லொக்கேஷனுக்கு போக வேண்டியது தான்” என்றான் செஞ்சன்.
“ஏன்டா இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா? நாம என்ன கார்ல இல்ல பைக்லயா போறோம் என்னை ட்ராப் பண்ண.. போறதே அரசு பேருந்துல. இதுல நீ என்னை ட்ராப் பண்ணனுமாக்கும். அநியாயம் பண்றடா” புலம்பியவனை கண்டு கொள்ளாமல் எப்பொழுதும் போகும் பேருந்து வர காத்திருந்தான்.
இரண்டு மூன்று பேருந்து போன பிறகே நான்காவது பேருந்தில் ஏறினான் செஞ்சன். தலையில் அடித்துக் கொண்டு பின்னாடியே ஏறினான் பரவாசு.
“உன் தொல்லை தாங்க முடியல மச்சான்” என்று அவனது புலம்பல்களை காதிலே வாங்கிக் கொள்ளாமல் குனிந்து அடுத்தடுத்த நிறுத்தங்களை பார்வை இட ஆரம்பித்தான்.
அவன் எதிர்பார்த்த படியே இளநீல நிற நூலில் அங்கும் இங்குமாய் வெண்மை கலந்தார் போல சுங்குடி காட்டன் சேரியில் பெண்மைக்கு உரிய அத்தனை குணங்களோடு நின்றிருந்தாள் சங்கவை. பேருந்தில் இருந்து சிலர் இறங்கவும், ஏறுவதற்காக வெளியில் இருந்தவர்கள் சற்றே காத்திருந்தார்கள்.
அதில் தான் அவளை முழுமையாக பார்வையிட்டான். இன்றைக்கும் விரித்து விட்டு இருந்தாள் கூந்தலை. காதோரம் சிமிக்கி ஆடியது.
காற்றில் சில முடி கற்றைகள் பறக்க, மொத்த கூந்தலையும் வலது பக்கம் மார்பின் மீது எடுத்து போட்டுக் கொண்டவள், பேருந்தில் ஏற வழி கிடைக்கவும் இடது கையால் கொசுவத்தை நளினமாக ஏற்றி பிடித்துக் கொண்டு உள்ளே ஏறினாள்.
சரியாக இவள் காலடி எடுத்து வைத்த நேரம்,
“நீரோட்டம் போலோடும்..
ஆசைகள் கனவுகள் ஊர்கோலம்..
ஆகாகா ஆனந்தம் ஆடும்
நினைவுகள் பூவாகும்” பாடல் ஓடியது...
செஞ்சன் வாய் தானாகவே முணகியது பாடலை. விழிகள் அவளிடம் தான் நிலைத்து இருந்தது.
“உன் முந்தானை வேண்டாம் பெண்ணே..
உன் கைகேகுட்டையை யாயவது தந்து விட்டு போ...
என் குளிரை விரட்டிக் கொள்கிறேன்...!” பெருமூச்சு விட்டவன் இடைவேளை இல்லாமல் சங்கவையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனது பார்வை வீரியத்தில் சட்டென்று திரும்பி பார்த்தாள் சங்கவை. ஆனால் இவன் கூட்டத்தில் மறைந்துக் கொண்டான். சுற்றிலும் அவளது கயல்கள் நர்த்தனமாடி தேடி திரிந்தது. பின் எதுவும் சிக்காமல் போக உதட்டை பிதுக்கிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் பார்வை திரும்பிய உடன் நிமிர்ந்துக் கொண்டவன் மீண்டும் விழிகளால் அவளை சிறை எடுக்க ஆரம்பிக்க,
“டேய் கண்ணு வலிக்க போகுதுடா.. ஏன்டா இப்படி பண்ற... முதல்ல கண்ணை சிமிட்டுடா. இன்னும் எத்தனை நேரம் கண்ண சிமிட்டாம பார்த்துக்கிட்டே இருக்க போற” பரவாசு அவனை உலுக்க,
“இமைகள் சுமையாகுதே அவளை காணும் நேரம்” என்று மட்டும் சொன்னவன் மீண்டும் அவளையே பார்வையிட்டான்.
அவளின் பக்காவட்டு தோற்றத்திலே மடிந்து கீழே விழுந்து விடுவான் போல... கிறங்கி போய் நின்றான். அவளின் விரல்கள் கம்பியை பற்றி இருக்கும் அழகுக்கே இவனுக்கு மூச்சுக் காற்று நின்றுப் போனது.
“இப்படி தூரமா இருந்து பார்க்கிறத விட பக்கத்துல போய் தான் பேசி பாரேன்டா” ஐடியா குடுத்தான்.
செஞ்சனோ தலையை இருபக்கமும் ஆட்டி விட்டு அவளையே பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தான். “இந்த மேய்ச்சல் பார்வையை மட்டும் யாராவது மொழி பெயர்த்தா அம்புட்டும் பதினெட்டு கூட்டல் தான் கேட்டகரி தருவாங்க தெரியுமா?” இன்னும் அவன் பேச, அவனது பேச்சில் கவனம் கலந்தவன்,
“அதென்னடா பதினெட்டு கூட்டல்?” நெற்றி சுருக்கினான் செஞ்சன்.
“அது தான் ஆங்கிலத்துல எயிட்டீன் ப்ளஸ் சொல்லுவாங்களே அதை தான் தூய தமிழ்ல சொன்னேன்” என்றான்.
“உன் மொழி பெயர்ப்புல தீயை வைக்க” முறைத்தவன் சங்கவையை பார்த்தான். அவள் இறங்கும் நேரம் வந்து விட்டது. இருக்கும் இடத்தை விட்டு அவள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வாசற்படி பக்கம் போய் நின்றாள்.
“பரசு நீ ஸ்டேஷன் போ... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் இறங்கிக்கிறேன்” என்று இவன் பின் பக்கம் இருக்கும் படிக்கட்டு பக்கம் நகர்ந்துக் கொண்டான்.
“சரி மச்சான்” என்றான்.
பேருந்தை விட்டு தனி தனியாக இருவரும் கீழே இறங்குவதை பார்த்த பரவாசு பெருமூச்சு விட்டான்.
இருவருக்கும் என்ன சம்மந்தம் இருக்கும் ஒன்னும் புரியலையே... எண்ணியவன் தன் வேலையை பார்க்க அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.
சங்கவை போன பாதையிலே செஞ்சனும் போனான். அவளின் பின் அழகை பார்த்துக் கொண்டே நடந்தான். அவள் நுழைந்த அதே கட்டிடத்தின் உள்ளே செஞ்சனும் நுழைந்தான்.
நெஞ்சமிடை விரிந்த காதல்
கண்களில் தெரியும் காதல்
காதலில் காணும் கனாக்கள்
கனவில் ஒளிரும் பெண்ணே
பெண்ணின் மனதை தொடரும் ஏக்கம்
ஏக்கத்தில் தவிக்கும் இதயம்
இதயத்தில் என்றும்
நீயடி கண்ணே...
பரசு நல்ல ப்ரெண்ட்🥰
சஞ்சு அவளை பார்க்கறது அவளுக்கு இன்னும் தெரியல போலவே ரைட்டர்🤔🤔🤔🤔
ரெண்டு பேரும் முன்னாடியே லவ் பண்ணி இருப்பாங்க போல....
இப்ப அவன் அவளை ஃபாலோ பண்றது தெரியாது போலவே
செஞ்சன் பரசு நல்ல பான்டிங் ❤️
அவன் ஆளை பார்க்க உன்னை ட்ராப் பண்ண வரான் 😛
இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி ஒளிஞ்சு கண்ணாமூச்சி விளையாடுவான் 🤷♀️🤷♀️🤷♀️
இந்த கவிதை எப்பொழுதும் போல சூப்பரா இருந்தது மா நாம தான் காதல்னு சொல்றோம் அவன் காதல் ஒத்துக்கவே மாட்டேங்கிறானே பார்ப்போம் அவ எப்போ ஈகோ விட்டு ஒத்துக்கிறான்னு பார்ப்போம்நெஞ்சமிடை விரிந்த காதல்
கண்களில் தெரியும் காதல்
காதலில் காணும் கனாக்கள்
கனவில் ஒளிரும் பெண்ணே
பெண்ணின் மனதை தொடரும் ஏக்கம்
ஏக்கத்தில் தவிக்கும் இதயம்
இதயத்தில் என்றும்
நீயடி கண்ணே...
இப்படி எல்லாம் கேட்டா நான் எப்படி பதில் சொல்றது 😳கதை போகிற போக்கில்அதை பார்க்கலாம். அவளுக்கு தெரியுமா தெரியாதா அப்படின்றத நம்ம பொறுத்திருந்து தாண்டா பாக்கணும் எஸ் பரசு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்பரசு நல்ல ப்ரெண்ட்🥰
சஞ்சு அவளை பார்க்கறது அவளுக்கு இன்னும் தெரியல போலவே ரைட்டர்🤔🤔🤔🤔
ரெண்டு பேரும் முன்னாடியே லவ் பண்ணி இருப்பாங்க போல....
இப்ப அவன் அவளை ஃபாலோ பண்றது தெரியாது போலவே
ஆமாமா சரசு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் அவனுக்கு அது தெரியலையே 😂😂 இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு சீக்கிரமே ஒரு எண்டு கார்டு போட்டுடலாம்செஞ்சன் பரசு நல்ல பான்டிங் ❤️
அவன் ஆளை பார்க்க உன்னை ட்ராப் பண்ண வரான் 😛
இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி ஒளிஞ்சு கண்ணாமூச்சி விளையாடுவான் 🤷♀️🤷♀️🤷♀️