Notifications
Clear all

அத்தியாயம் 9

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1004
Topic starter  

பிள்ளைக்கு பால் கொடுக்கும் நேரம் யாரிது இப்படி அத்துமீறி உள்ளே நுழைந்தது. யாரும் உள்ளே வரமாட்டார்களே... பாரதி சார் அதிலெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக் ஆச்சே... எண்ணியபடி படக்கென்று திரும்பி பார்த்தாள்.

உதயாதிபன் தான் நின்று இருந்தான். அவனை இங்கு எதிர் பாராதவளுக்கு இங்கயுமா வரணும்... என்று அலுப்பு தான் வந்தது அவளுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

அந்த முகம் திருப்புதலில் சுல்லேன்று வந்தது அவனுக்கு.

“ஹேய் என்னடி  ரொம்ப ஓவரா போற? என்ன திமிரா?” என்று முறைத்தான். அந்த நேரம் அவனுக்கு மேக்கப் போட்டு விட ஆட்கள் வர அவர்களை வெளியே இருக்க சொன்னவன் கதவை சாற்றி விட்டு அவளிடம் வந்து நின்றான் கோவத்துடன்.

“இங்க பாருங்க நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது.. சும்மா சும்மா எதுக்காக என்கிட்டே வம்பிழுத்துக் கிட்டு இருக்கீங்க. உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்லை” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே,

“அப்போ இவன் யாருடி?” என்று அவளின் மடியில் படுத்திருந்த ஆறு மாதத்து குழந்தையை காட்டி கர்ஜித்தான்.

“ஏதோ ஒரு ராத்திரில யாரோடவோ படுத்து” என்று அவள் முடிக்கும் முன்பே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தான் உதயாதிபன்.

அதில் விக்கித்துப் போனாள் வராளி. அவளின் ஒரு கை கன்னத்தை பொத்தி பிடித்து இருந்தது. அவ்வளவு வலி எடுத்தது... உள்ளுக்குள் சுறுசுறுவென்று முள்ளாய் குத்தியது வலி.

“தேவை இல்லாம பேசி புண்ணாகாதடி” என்று எச்சரித்தான்.

“உங்களுக்கு என்ன சார் என்ன பத்தி கவலை. என் மானத்தை பத்தி கவலை.. உங்க அக்கறை எனக்கு தேவையில்லை. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அன்றைக்கு நடந்தது எனக்கு அப்படிதான் படுது. அதோட உங்க கூட மட்டும் தான் படுத்தேன்னு உங்களுக்கு என்ன நம்பிக்கை.. உங்கக்கிட்ட காசு வாங்குன மாதிரி நான் இன்னும் பல பேர்கிட்ட காசு வாங்கி...” என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகை விக்கிக்கொண்டு வந்தது. அவளால் அந்த வார்த்தைகளை சொல்லக் கூட முடியவில்லை. ஆனால் தன்னை தானே அவள் மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்துக் கொள்வது நன்கு புரிய நெஞ்சிநோரம் சின்ன வலி எழுந்தது உதயாதிபனுக்கு.

அவள் கழுத்தில் கிடந்த தாலியே அவனுக்கு அவளின் தூய்மையை பறைசாற்றி விட வேறு என்ன வேண்டுமாம்... ஆனால் அவளின் ஆங்காரம் கோவம் ஏன் என்று புரியவில்லை.

அவளின் அழுகையை பார்க்க முடியாமல் தடுமாறியவன்,

“தேவை இல்லாம பேசாதடி..” என்றான் கரகரத்த குரலில்.

“நான் பேசுவேன்... நான் அப்படிதான் பேசுவேன்... இதுக்கு மேலையும் பேசுவேன்.. இதை விட அதிகமாக பேசுவேன்” என்றவள் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கக் கண்டு பெருமூச்சு விட்டவன், அவளை கோவப்படுத்த விருப்பம் இல்லாமல், “இப்போ என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் அவளிடம்.

“இனி என் வாழ்க்கையில உள்ள வராதீங்க... உங்களை கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். எனக்கு உங்களை பார்க்கவே பிடிக்கல” என்று சொன்னாள்.

“ஆர் யூ சுயர்?”

“ஹண்ட்ரட் பர்சென்ட் சுயர்” என்றாள் அழுத்தமாய்.

“ஓகே” என்று தோள் குலுக்கிக் கொண்டவன் மேக்கப் போட்டுவிட்டு வெளியே போய் விட்டான். சுவரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டவளுக்கு விழிகளில் நீர் கசிந்தது.

தன் ஒட்டு மொத்த வாழ்க்கையும் தலைகீழாக திருப்பி போட்டுவிட்டு ஒன்னரை வருடம் கழித்து வந்து ஒன்றுமே நடக்காதது போல வந்து பேசுபவனின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.

அதுவும் அவன் அவ்வளவு திமிராக எல்லா வேலையும் செய்யும் பொழுது அவளுக்கு ஏகத்துக்கும் பிரஷர் ஏறியது. காரில் தன்னை இறக்கி விடாதது. அதை தொடர்ந்து வீட்டில் கேட்ட கேள்விகள், இதோ இப்பொழுது தன்னிடம் வந்து ரொம்ப இயல்பாக பேசுவது என ஏகத்துக்கும் அவளின் பிளட்பிரஷரை ஏற்றி விட்டு இருந்தது.

அழுகை அழுகை அப்படியோரு அழுகை... இத்தனை நாள் யாரிடமும் வெளிப்படாத அழுகை. இந்த நிமிடம் அப்படியே கொட்டிவிட்டாள்.

மருத்துவமனைக்கு வயிற்று பிள்ளையோடு போனால் எங்க பிள்ளையோட அப்பா என்று கேட்டு இல்லை என்று தலை அசைத்த உடனே வெளிப்படும் நக்கலான பார்வைகளில் அப்படியே சுருண்டு போன கணங்கள் எல்லாம் கண் முன் வந்து.

பெற்றவள் கூட உடன் வரவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் உடன் வந்தார் கலாவதி. மருத்துவமனையில் கேட்கப்படும் கேள்விகளிலும், பார்க்கப்படும் ஏளனத்திலும், உதாசீனத்திலும் அன்றிலிருந்து கலவதியும் உடன் வருவது இல்லை. ஒற்றை ஆளாக அவ்வளவு அவமானத்திலும் வைராக்கியமாக பிள்ளைய பெற்று எடுத்து இருந்தா வராளி.

மருத்துவமனைக்கு வந்திருந்த அத்தனை மாசமான பெண்களின் உடனும் கணவனோ இல்லை அம்மாவோ மாமியாரோ என யாராவது வந்து இருப்பார்கள். வளைகாப்பு செய்து இருப்பதன் அடையாளமாக கைநிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்து இருந்தார்கள்.

ஆனால் வராளிக்கு அப்படி யாரும் உடன் வரவில்லை. வளைகாப்பும் செய்து வைக்கவில்லை கலா. அதையெல்லாம் எண்ணி பார்த்தவளுக்கு எத்தனையோ தான் இழந்து விட்டதை உணர்ந்து அத்தனைக்கும் சேர்த்து வைத்து அழுதாள்.

நொடிக்கு ஒருமுறை தண்ணீர் குடுத்து ஜூஸ் குடுத்து கீழே குனிந்து செருப்பு மாட்டி விடுவது முதற் கொண்டு ஹேன்ட் பேகை எடுத்துக்கொண்டு கை பிடியாக அழைத்து செல்ல உறவுகள் இன்றி கணவன் இன்றி அவள் தவித்த தவிப்புகள் அவளுக்கு தானே தெரியும்.

அவ்வளவு வலியையும் அவள் தாண்டி வந்து இருக்க, இப்பொழுது வந்து எதுவுமே இல்லாமல் செய்வது போல வந்து நின்ற கணவனின் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது. இதுநாள் வரை எங்கும் வெடிக்காத உணர்வுகள் அவனை கண்டவுடன் ஏன் வெடித்தது என்று அவள் யோசிக்கவேயில்லை.

அவளின் மொத்த வாழ்க்கையையும் வீணாக்கியது அவளின் தாய் தான். ஆனால் அவரிடம் கூட அவளது கோவத்தை இதுநாள் வரை வெளியிடவே இல்லை. கணவனை பார்த்த இரண்டாவது சந்திப்பிலே கோவத்தை கொட்டி விட்டோம் என்று தெரியாமல் அழுது கரைந்தாள். போட்ட மேக்கப் அத்தனையும் கலைந்துப் போனது.

அதைப்பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அவள் அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாலோ அவளுக்கே தெரியவில்லை. யாரோ வந்து உசுப்ப தலை நிமிர்ந்து பார்த்தாள். வேலம்மாள் தான் நின்று இருந்தார்.

“என்ன பாட்டி?” என்று கண்களை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“ஆத்தா அமைச்சருக்கு ஒரு போன் கால் வந்து இருக்காம்.. அறை மணிநேரம் மீட்டிங் இருக்காம். அதனால உன்னை ரூம்லயே ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. அவர் வந்த உடனே ஷூட்டிங் வச்சுக்கலாம்னு சொன்னாங்க” என்றார்.

“சரி” என்றவள் குழந்தையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு எழுந்து முன்பக்கம் வந்தாள்.

“ஏன் பாப்பா அழுதிருக்க?” என்று கேட்டார் பரிதவிப்பாய்.

“ஒண்ணுமில்ல பாட்டி. குழந்தையை பார்த்துக்கோங்க” என்றுவிட்டு கண்ணாடி முன்னாடி வந்து நின்றாள். கலைந்துப் போன மேக்கப்பை மீண்டும் சரி செய்துக் கொண்டவளின் பின்னாடி வந்து நின்றான் உதயாதிபன்.

அவனை மீண்டும் அங்கே காண எரிச்சலானவள் அவனை கண்ணாடி வழியாகவே முறைத்துப் பார்த்தாள்.

அவளின் பார்வையை சட்டை செய்யாமல்,

“இன்னுமெவ்வளவு நேரம் தான் வராத போன் காலில் பேசுற மாதிரியே நடிக்கிறது... சீக்கிரம் மேக்கப் போட்டுட்டு வாடி” என்று அவன் சொல்ல, அவனை இன்னும் முறைத்துப் பார்த்தாள். அவன் அறைந்த விரல் தடம் என்ன மேக்கப் போட்டும் போவேனா என்று இருந்தது.

அதை கண்டவன் “ப்ச்” என்று சலித்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்சம் பவுண்டேஷன் போட்டு கவர் பண்ணு” என்று விட்டு ஓரமாய் போய் அமர்ந்துக் கொண்டான். ஸ்க்ரீனுக்கு அந்தபக்கம் பாட்டி இருந்ததால் இவர்கள் இருவரின் பேச்சு வார்த்தையும் அவருக்கு தெரியவில்லை.

அவள் மேக்கப் போடுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் அமைச்சன். அவனது பார்வையில் கைகள் நடுங்கியது. ஐலைனர் சற்றே பிசிற,

“இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நான் எப்படி மேக்கப் போடுறது?” வெடுக்கென்று கேட்டாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top